வண் திருவையாறு

கட்டுவடம் எட்டும் உறு வட்ட முழவத்தில்

கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு

இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர்

வட்டமதில் உள் திகழும் வண் திருவையாறே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

எட்டு வடங்களைச் சேர்த்துக் கட்டிய வட்ட வடிவ முரசு. அதனை நந்தி தேவர் தன்னுடைய கரங்களால் கொட்டுகிறார்.

நந்திக்குச் சிவனின் நடனம் மிகவும் பிடிக்கும். ஆகவே, அவர் இசைக்கிற முரசின் ஒலிக்கும் தாளத்துக்கும் ஏற்பச் சிவபெருமான் ஆடுகிறார்.

அப்படிப்பட்ட சிவனுக்கு விருப்பமான இடம், அழகான வட்ட வடிவ மதில்களுக்குள் திகழ்கின்ற, வள்ளல்தன்மை கொண்டவர்கள் வாழுகின்ற திருவையாறு!

துக்கடா

  • இந்தப் பாடலின் சிறப்பு, அதன் தாளம்தான். உரக்கப் படித்துப் பாருங்கள், நந்தி தேவர் வாசிக்கும் முரசு ஒலி நம் காதில் கேட்கும், அதற்காகவே வார்த்தைக்கு வார்த்தை வல்லினத்தை, குறிப்பாக ‘ட’கர வரிசையை நிரப்பி அழகுபடுத்தியிருக்கிறார் ஞானசம்பந்தர்!
  • பக்திப் பாடலில்மட்டுமல்ல, திரை இசையிலும் வல்லினத்தை / ‘ட’கர வரிசையைக் கொஞ்சம் தூக்கலாகச் சேர்த்தால் உடனடி ஹிட் என்று வைரமுத்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அதற்கு உதாரணமாக அவர் சொன்ன பாட்டு, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்டப் பொட்டுக்காரி’, இந்தப் பாடலிலும் அழகாக முரசு ஒலி கேட்கும், பாடாமல் வெறுமனே வாசித்தாலும்கூட 🙂

288/365

Advertisements
This entry was posted in சினிமா, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

One Response to வண் திருவையாறு

  1. பாடலை படிக்கும் பொழுதே கொட்டு முரசின் சங்க நாதம் காதில் ஒலிக்கிறது. நட்டுவாங்கமும் காதில் கேட்கிறது! எட்டு வடங்களை இழுத்துக் கட்டிய முரசை நந்தி தேவர் கொட்டும் போது சிவபெருமான் எப்படி நடனம் ஆடாமல் இருக்க முடியும்?

    வட்டமான முரசைப் போல திருவையாற்றின் கோவில் மதில்களும் வட்ட வடிவம் என்கிறார் ஞானசம்பந்தர்!

    //கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு// ஒலி நயத்துக்காக இந்த வரி எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s