நல்லவருக்கு நல்லவன்

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெரும் களிறு போல

இனியை பெரும, எமக்கே! மற்று அதன்

துன் அரும் கடாஅம்போல

இன்னாய் பெரும, நின் ஒன்னாதோர்க்கே!

நூல்: புறநானூறு (#94)

பாடியவர்: ஔவையார்

சூழல்: வாகைத் திணை : அரசவாகைத் துறை : அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடுகிறார் ஔவையார்

அரசனே,

உன் ஊர் ஆற்றில் சிறு பிள்ளைகள் தண்ணீரில் குதித்து விளையாடுவார்கள். அப்போது அங்கே உன்னுடைய பெரிய யானையும் குளிக்க வரும். வெள்ளையான அதன் தந்தங்களைப் பாகர்கள் தேய்த்துக் கழுவிக் குளிக்கவைப்பார்கள்.

ஆற்றங்கரையில் யானையைப் பார்த்ததும், அந்தக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. அதன்மீது ஏறிக் குதித்து விளையாடுவார்கள். அந்தப் பெரிய யானையும் அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக விளையாடும்.

ஆனால் அதே யானை, போர்க்களத்துக்குச் சென்றால், அங்கே உள்ள எதிரிப்படை வீரர்களோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்காது. மோதி மிதித்துவிடும்.

அதியமானே, நீயும் அந்த யானையைப்போல்தான். என் போன்ற புலவர்கள்முன்னால் எளியவனாக, பழகுவதற்கு இனிமையானவனாக இருக்கிறாய். எதிரிகள் முன்னால் கெட்டவனாகி அவர்களை அழிக்கிறாய். நீ வாழ்க!

துக்கடா

  • தமிழின் முதல் ’பஞ்ச் டயலாக்’? பாட்டி பின்னுகிறார் :>

284/365

Advertisements
This entry was posted in ஔவையார், புறநானூறு, புறம், வீரம், Uncategorized. Bookmark the permalink.

One Response to நல்லவருக்கு நல்லவன்

  1. குளிர்ச்சி ஒரு கண்ணில், வெப்பம் மறு கண்ணில்! சூரிய சந்திரனை இறைவன் இரு கண்ணில் வைத்திருப்பது போல அதியமானும் அறிஞர் முன் பவ்யமாகவும் எதிரியின் முன் ஆக்ரோஷத்துடன் நிற்கும் திறன் படைத்தவன் என்று ஔவை மூதாட்டியிடமே நற்பெயரை தட்டி சென்று விட்டார்!

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s