நெடுவெண்ணிலவே

கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்

இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டு இடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

நூல்: குறுந்தொகை (#47)

பாடியவர்: நெடுவெண்ணிலவினார்

சூழல்: குறிஞ்சித் திணை : காதலியைச் சந்திப்பதற்காக இரவில் வருகிறான் காதலன். அப்போது நிலாவிடம் பேசுவதுபோல் அவனுக்கு ஒரு சேதி சொல்கிறாள் தோழி

நீண்ட நேரமாக வானில் காயும் வெண்ணிலவே,

யாருக்கும் தெரியாமல் என் தோழியை சந்திப்பதற்காக அவளுடைய காதலன் ராத்திரி நேரத்தில் காட்டுப் பாதையைக் கடந்து வருகிறான். அவன் வரும் பாதை முழுவதும் நீ இப்படிப் பளிச்சென்று வெளிச்சம் தருகிறாய். அந்த ஒளியில் ஊரார் அவனைப் பார்த்துவிட்டால் இவர்களுடைய ரகசியக் காதல் என்ன ஆகும்?

அதுமட்டுமா? அவன் வரும் வழியில் கரிய அடிப்பாகத்தைக் கொண்ட வேங்கை மரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து உதிரும் பூக்கள் கீழே உள்ள குண்டுக் கல்லின்மீது விழுந்து மூடுகின்றன. உன்னுடைய வெளிச்சத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது அது ஒரு பெரிய புலிக்குட்டியைப்போலத் தோன்றுகிறது. அவன் பயந்துவிடமாட்டானா?

ம்ஹூம், காதலர்களுக்கு நீ எந்தவிதத்திலும் உதவமாட்டாய்போலிருக்கிறது!

துக்கடா

  • தோழி பேசுவதென்னவோ நிலாவிடம்தான். ஆனால் செய்தி அந்தக் காதலனுக்கு ‘அட வெண்ணெய்ப்பயலே, இப்படிக் கஷ்டப்பட்டு ராத்திரி வேளையில காட்டைத் தாண்டி வந்து ரிஸ்க் எடுக்கறதைவிட, ஒழுங்கா அவளைக் கல்யாணம் செஞ்சுக்கலாம்ல?’
  • பொதுவாக நிலாவைக் காதலர்களின் தோழி / தோழன் என்றுதான் சொல்வார்கள், இந்தப் பாட்டுதான் கொஞ்சம் வித்தியாசமாக ‘நல்லை அல்லை’ என்று திட்டுகிறது
  • அதனால் என்ன? இதெல்லாம் சும்மா பொய்க்கோபம், திருமணமாகிவிட்டபிறகு ஜன்னல்வழியே இதே நிலாவைப் பார்த்தபடி இருவரும் அதை வாழ்த்துவார்கள் 😉
  • இந்தப் பாடலை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. ஆகவே அவர் எழுதிய ஒரு வரியையே (நெடுவெண்ணிலவே) பெயராகச் சூட்டிவிட்டார்கள்

283/365

Advertisements
This entry was posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நெடுவெண்ணிலவே

  1. நிலவுக்கு மட்டும் வாய் இருந்தால் எத்தனை கதைகளைச் சொல்லும்! நிலவே காதலியாய், நிலவே தூதுவனாய், நிலவே சாட்சியாய், நிலவே எவலாளியாய், நிலவே குழந்தைக்கு விளையாட்டுப் பொருளாய், நிலவுக்குத் தான் எத்தனை எத்தனை கதாப் பாத்திரங்கள்! கவிஞர்கள் கற்பனைக்குத் தீனி போடும் நிலவுக்கு அவர்கள் தான் எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!

    amas32

  2. ஆனந்தன் says:

    இத்திக்காய் காயாதே, அத்திக்காய் காய் வெண்ணிலவே என்கிறர் புலவர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s