குறையிலேன்

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும், குன்றம் ஒன்று ஏந்தியதும்,

உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உள்பட மற்றும்பல

அரவில் பள்ளிப்பிரான்தன் மாய வினைகளையே அலற்றி

இரவும் நன்பகலும் தவிர்கிலம், என்ன குறைவு எனக்கே?

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்

பாடியவர்: நம்மாழ்வார்

ஆதிசேஷனாகிய பாம்பில் துயில் கொள்ளும் எம்பிரான், கண்ணனாக அவதாரம் செய்தான், ஆயர்குலப் பெண்களோடு குரவைக் கூத்து ஆடினான், மழையிலிருந்து உலகத்தைக் காப்பதற்காக மலை ஒன்றைக் குடையாக ஏந்தினான், யமுனையின் நல்ல நீரைப் பாழாக்கிய காளிங்கன் என்கிற பாம்பை அழித்து நடனமாடினான், இப்படி இன்னும் பல மாயக் குறும்புகள், நன்மைகள், லீலைகள்…

இரவும் பகலும் அவனுடைய செய்கைகளைப் பாடிக்கொண்டிருப்பதிலேயே நேரம் செல்கிறது. எனக்கு என்ன குறைவு?

282/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், கண்ணன், திருமால், நம்மாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to குறையிலேன்

  1. anonymous says:

    //என்ன குறைவு எனக்கே?//
    குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா – போலவே இருக்கே!
    எம்.எஸ்.அம்மா பாடுற பாட்டெல்லாம், அப்பவே நம்மாழ்வார் எழுதி இருக்காரோ?:)

    Btw, சொக்கருக்கும் – நம்மாழ்வார் (எ) மாறன் பையனுக்கும் ஏதோவொரு குடுக்குல் வாங்கல் இருக்கு போல:)
    அதான், எப்ப ஆழ்வார் பாட்டு போட்டாலும், நம்மாழ்வார் பாட்டாவே போடுறாரு சொக்கரு:)))

  2. இறை அனுபவத்தில் லயித்திருக்கும் போது உலக வாழ்வு மறந்துவிடுகிறது. பிறகு குறையோன்றுமில்லையே! 🙂

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s