சராசரிகளின் உலகம்

ஒருவன் அறிவானும் எல்லாம், யாது ஒன்றும்

ஒருவன் அறியாதவனும், ஒருவன்

குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல்

நூல்: சிறுபஞ்சமூலம் (#29)

பாடியவர்: காரியாசான்

இந்த உலகத்தில், எல்லாம் தெரிந்தவன் என்று யாரும் இல்லை, எதுவுமே தெரியாதவன் என்று யாரும் இல்லை, நாம் எல்லாரும் இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளவர்கள்தான்.

அதேபோல், இந்த உலகத்தில் நல்ல குணங்களே இல்லாத முழுக் கெட்டவன் என்று யாரும் இல்லை, கெட்ட குணங்களே இல்லாத முழு நல்லவன் என்றும் யாரும் இல்லை, நாம் எல்லாரும் இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ளவர்கள்தான்.

முக்கியமாக, எல்லா நூல்களையும் கற்றவன் என்று யாரும் இங்கே இல்லை. ஆகவே, மிகையான கர்வமும் வேண்டாம், மிகையான கழிவிரக்கமும் வேண்டாம், இயல்பாக இருப்போம்!

துக்கடா

 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • ஒருவன் அறிவானும் எல்லாம்யா தொன்றும்
 • ஒருவன் அறியா தவனும், ஒருவன்
 • குணனடங்கக் குற்றம் இலானும், ஒருவன்
 • கணனடங்கக் கற்றானும் இல்

281/365

Advertisements
This entry was posted in அறிவுரை, சிறுபஞ்சமூலம், வெண்பா, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to சராசரிகளின் உலகம்

 1. anonymous says:

  egg-jactly:))

  இதைத் தான் என்னோட குரு = அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனும் சொல்லிக் குடுத்தாரு:)
  தில்லு முல்லு படத்துல!

  உலகத்தில் உன்னை விடப் பெரியவன் யாரும் இல்ல! = அதனால் யாருக்கும் பயப்படாதே!
  உலகத்தில் உன்னை விடச் சின்னவன் யாரும் இல்ல! = அதனால் யாரையும் தாழ்வா நினைக்காத!
  :)))

 2. anonymous says:

  //கணன் அடங்கக் கற்றானும் இல்//

  chokkare, what is the meaning of கணன் (கணம்)?

 3. anonymous says:

  //ஆகவே, மிகையான கர்வமும் வேண்டாம், மிகையான கழிவிரக்கமும் வேண்டாம்//

  மிகையான கர்வம் வேணாம்-ன்னா, அப்போ பாதி கர்வம் ஓக்கேவா? ன்னு கேட்டுருவாங்க பய புள்ளைக!
  அதுக்குத் தான் சொக்கர் “இயல்பாக இருப்போம்!” ன்னு சொல்லி முடிச்சிட்டாரு!:)
  சொக்கர், இங்கே தான் நின்னு அடிக்கறாரு!:) Disci Man; I like chokkar’s approach:))

  • anonymous says:

   See this Chokkar’s Disci in 365paa
   https://365paa.wordpress.com/about/

   //■வேறு முன்னெச்சரிக்கைகள் அவ்வப்போது சேர்க்கப்படும், ஜாக்கிரதை :>

   பின்னெச்சரிக்கை ஒன்று:
   ■’எதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை?’ என்று யோசித்தீர்களானால் உங்களுக்குத் தமிழ் இணையம் புதுசு என்று அர்த்தம்//

   Ithu enakku romba pidikkum; ennamaa yosikkaraaru:))

 4. //இயல்பாக இருப்போம்// வாழ்வின் தத்துவத்தை இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள் சொக்கரே 🙂 நம் இயல்பு தான் நம் தர்மம். அதன்படி வாழ்வதே நாம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் செய்யும் நன்மையாகும். ரெண்டு நிலைகளுக்கும் செல்லாமல் நடுவாக இருப்பதே சிறப்பு.

  நாம் பழகும் ஒவ்வொருவருடனும் இந்தப் பாடல் சொல்படி பழகினோம் என்றால் இப்புவியே சொர்க்கம் தான் 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s