ஊடல் நாடகம்

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்

தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்

ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்

சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்

நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், பூக்கொய் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: ராமனுக்குத் திருமணம், அதில் கலந்துகொள்வதற்காகத் தசரதனும் அவனது படைகளும் மிதிலையை நோக்கிப் பயணம் செல்கின்றன. வழியில் எல்லாரும் ஒரு பூஞ்சோலையில் தங்குகிறார்கள். அங்கே நடக்கும் ஒரு காதல் காட்சி

யாழ் இசை போன்ற இனிமையான சொற்களைப் பேசுகிற தங்கம் போன்ற பெண் ஒருத்தி. அவளுடைய காதலன் வலிமை வாய்ந்த அரசன்.

அன்றைக்கு, அவர்களுக்கிடையே ஏதோ ஊடல். அவனைக் கண்டும் காணாமலும் போகிறாள் அவள்.

உடனே, அந்தக் காதலன் இறங்கி வருகிறான். ’என்னை மன்னித்துவிடு’ என்று அவளிடம் கெஞ்சுகிறான்.

ஆனால் அவள் மனம் இரங்கவில்லை. அவனை விட்டு வேறு எங்கோ சென்றுவிடுகிறாள்.

சிறிது நேரம் கழித்து, அவளுடைய கோபம் தணிகிறது. மீண்டும் அவன்மேல் காதல் துளிர்க்கிறது. ‘அவனை உடனே பார்க்கணுமே’ என்று ஏங்குகிறாள்.

ஆனால், இவ்வளவு நேரம் அவன் கெஞ்சியபோதெல்லாம் அதை ஏற்காமல் பிடிவாதம் காட்டிவிட்டு, இப்போது இவளே அவனைத் தேடிச் சென்றால் நன்றாக இருக்குமா? தயங்குகிறாள். அவளுக்கு ஒரு குறும்பான யோசனை தோன்றுகிறது.

தன் கையில் இருந்த கிளியை அவன் இருக்கும் திசை நோக்கிப் பறக்க விடுகிறாள். ‘ஏய், ஓடாதே, ஓடாதே’ என்று சத்தமிட்டபடி அந்தக் கிளியைத் துரத்துகிறவள்போல் அவனை நோக்கிச் செல்கிறாள்.

279/365

Advertisements
This entry was posted in ஊடல், கம்ப ராமாயணம், கம்பர், காதல், நாடகம். Bookmark the permalink.

14 Responses to ஊடல் நாடகம்

 1. அருமை. கம்பனை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன ஒரு அழகான காட்சி. எப்படி எல்லாம் காதலை நம் முன்னோர்கள் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் !!!

 2. anonymous says:

  கம்பன் கவியே கவி!

  = இது முக”ஸ்”துதி தானே?
  அப்படியென்ன பெருசாக் கம்பன் கிழிச்சிட்டான்?

  எல்லாரும் பாடுறது போலத் தான் அவனும் பாடுறான்! அதே வர்ணனை, அதே சந்தம், அதே விருத்தப்பா…
  எல்லாரும், கம்பராமாயணம், கம்பராமாயணம்-ன்னு பேசிப்பேசியே ரொம்ப ஏத்தி விட்டுட்டாங்களோ?:)))

  • anonymous says:

   * சங்கத் தமிழ் = உணர்ச்சிகளை அடர்த்தியாக் குடுக்கும்
   * கம்பன் தமிழ் = உணர்ச்சிகளை விரிச்சிக் குடுக்கும்

   ஆனா, ரெண்டுமே, உணர்ச்சிகளின் ஆஆஅஆழம்!…நம் மனசில் நம்மையே பலவாறு விரிக்க வைக்கும்!
   அதனால் தான், சங்கத் தமிழுக்கு ஈடா, கம்பன் கவி மட்டும் அத்துணை புகழ் பெற்றது!
   ——–

   If someone has good taste in cocktails, they can relish this:))

   * Bacardi என்று ஒரு Rum வகை;
   அதுக்கு Green Lime Soda கலந்து குடிக்கணும்! அப்போ தான் ஒரு விறுவிறு கிடைக்கும்

   * Malibu என்று ஒரு Rum வகை;
   அது Coconut based; இளநீர் போலப் போதையுள்ள கள்:)) அதுக்கு எலுமிச்சை கலக்கக் கூடாது! அதுவே அடர்த்தி தான்!

   Malibu = சங்கத் தமிழ்
   Bacardi = கம்பன் தமிழ்
   :)))

  • anonymous says:

   டேய் முருகா, என்னை எதுக்குடா அடிக்கற?… :))
   * சங்கத் தமிழ் = சொல் அடர்த்தி
   * கம்பன் தமிழ் = சொல் பயணம்
   ன்னு தான் சொல்ல வந்தேன்…

   எல்லாருக்கும் புரியட்டுமே-ன்னு, இப்படிச் சொல்லிட்டேன்
   * Malibu = சங்கத் தமிழ்
   * Bacardi = கம்பன் தமிழ் :))

 3. anonymous says:

  சங்கத் தமிழுக்குப் பிறகு…..ஏன் கம்பன் கவி மட்டும், தமிழ் இலக்கியத்தில் தனித்து தெரியுது?
  இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க…
  ஊடல் என்பது, பலரும் பாடுறது தான்! ஆனா அதையே கம்பன் அணுகும் விதம்???
  —————–

  தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்
  = இந்த வரியைப் பாருங்க!

  தாழ்ந்த குணம், தாழ்ந்த மனம் = “கீழ்மையான” ன்னு தான் பலரும் சொல்வாங்க!
  ஆனா கம்பன் என்ன செய்யறான்?
  “தாழ்ந்த” என்பதைக் கொண்டே விளையாடுறான்; தாழ்ந்த மனத்தாள் = கீழ்மையான மனத்தாளா?:)))

  இல்லை!
  ஆனா, உச்சக் கட்ட ஊடலில் நாம என்ன சொல்லுவோம்? = திட்டுவோம்!:)
  ஆனா, இந்தத் திட்டு = மெய்யாலுமே திட்டா?
  இல்ல…சும்மா லூலூலாயி:))

  முருகவனை = பொற்க்கீ-ன்னு அப்பப்போ திட்டுவேன்! ஆனா note the spelling!:)
  பொறுக்கி = வசை
  பொற்க்கீ = ஊடல்
  :))
  —————–

  கள்ளம் நினைப்பாள்
  தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்!

 4. anonymous says:

  தாழத் தாழாள் =
  அவன் தாழ்கிறானாம்; முட்டிக்கால் போட்டுக் கெஞ்சறான்:)
  ஆனா அவ தாழலை!:((

  பொதுவா, ஊடலில்…முறைப்போம், வக்கணம் காட்டுவோம் (my dear friend knows this)
  குவளையோ, வேற பொருளையோ…தொம்-ன்னு சத்தமா வைப்போம்; இன்னும் என்னென்னமோ பண்ணுவோம்!

  ஆனா, அவன்…”ஏய்”-ன்னு ஏக்கமாப் பார்த்து….நம் முன்னே திடீர்-ன்னு காலில் குனிஞ்சா? முட்டிக்கால் போட்டா???

  ஐயோ…நீங்க ஏன் குனியறீங்க?-ன்னு நாமும் குனிவோம்-ல்ல?
  ஆனா இவ அப்படிக் குனியலை!
  = தாழத் தாழாள் ….. ஒரே சொற்றொடர்….அதான் கம்பன்!
  ——————–

  • anonymous says:

   * தாழத் தாழாள் = அவன் தாழ, அவள் தாழலை
   * தாழ்ந்த மனத்தாள் = அதனால் அவள் “தாழ்ந்த” மனம் கொண்டவள்! -ன்னு ஒரு லுக்கு விட்டுட்டு போயீடறான்:)
   ———

   * தாழத் தாழாள் = அப்போ தாழாதவள்
   * தாழ்ந்த மனத்தாள் = இப்போ, அவ மனம் தாழுத….meaning…இறங்குது:))
   மனம் இறங்குது + இரங்குது
   ———

   தாழத் தாழாள் – தாழ்ந்த மனத்தாள் – தளர்கின்றாள்
   = எப்படி, கம்பன் ஒரே வரியில் record செய்யும் youtube video?:))

 5. anonymous says:

  அடுத்து….
  = ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்! = “கள்ளம் நினைப்பவளா”? 🙂

  சில பேதையுள்ளம் கொண்டவர்களுக்கு, பொய் கூடத் திறம்படச் சொல்ல வராது:)
  ஆனா, ஒரு சாதாரண பொய் சொல்லி விட்டாலே, அதை ஏதோ பெரிய சாதனை போல் மனசுக்குள்ள நினைச்சிக்குவாங்க:)))

  இவ அப்படிப்பட்ட ஆளு!
  = அவன் நிற்கும் சூழற்கே தன் கிள்ளையை ஏவி….
  = தன் கிளியை அங்கே தூக்கிப் போட்டு….அதைப் பிடிக்க அவ ஓடுறாளாம்! அவனைப் பாக்க இல்லீயாம்!

  அடேயப்பா! என்னவொரு சாதனை, என்னவொரு உள்ள உறுதி இந்தப் பொண்ணுக்கு!
  என்னமா, இந்திரா காந்தி, ஹிலாரி கிளின்டன் போல யோசிச்சி இருக்கா?:))) = ஆஆஆழத்து உள்ளும் “கள்ள்ள்ளம்” நினைக்கும் அறிவுக் கொழுந்து:))

  • anonymous says:

   அவன் மட்டும் என்னவாம்? = பெரிய மானஸ்தன்:)

   “தாழ்ந்த” மனத்தாள்-ன்னு லுக்கு வுட்டுட்டு போனவன், போக வேண்டியது தானே!

   ஆனா கொஞ்சம் தள்ளி, அங்கேயே நிக்குறானாம்! = அவன் “நிற்கும்” சூழற்கே!
   நிற்கும் என்பது இங்கே முக்கியமான சொல்! ஏன் நிக்கணும்? = ஏன்னா, அவன் “இகல்” வேந்தன்!
   இகல் = வலிமை! அடா அடா அடா…..என்னா வலிமை இவனுக்கு? நிக்குறான் டோய்:)))
   ————

   நீங்களே….பாட்டை மறுகா, வாசிங்க!
   தாழ்ந்த, கள்ளம், இகல் -ன்னு வரும் போதெல்லாம் அழுத்தி வாசிங்க! ஏன்னா அது கம்பனின் கிண்டல்!:))

   தாழத் தாழாள்,
   “தாழ்ந்த” மனத்தாள்

   தாழ்ந்த மனத்தாள்
   தளர்கின்றாள்
   ஆழத்து உள்ளும் “கள்ளம்” நினைப்பாள்;

   அவன் ஓர் “இகல்” மன்னன்
   நிற்கும்

   அவன் சூழற்கே
   தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்….
   ————

  • anonymous says:

   இப்போ தெரியுதா கம்பன் யாரு-ன்னு?:)

   ரெண்டே வரியில் அவன் சொன்னான்
   ஆனா, நான் இத்தனை பின்னூட்டத்தில் சொன்னேன்…..
   Shame:))

   ஆனா….மனசுக்குள்ளாற, விரிச்சி விரிச்சிச் சொன்னேன்:)) = கம்பன் கவியே கவி!

 6. பெண்ணுக்கே உள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகியவற்றால் அவளால் ஊடலுக்குப் பின் நேராகப் போய் காதலனிடம் பேச முடியாது. ஆதலால் பாவம் அவளுக்குத் தெரிந்த முறையில் கிளியின் துணைக் கொண்டுக் காதலனைத் தேடிப் போகிறாள்.

  கம்பனின் கற்பனா சக்தியை எண்ணி வியந்து நிற்கிறேன்.

  amas32

 7. anonymous says:

  சரீ…இப்போ நீங்க பேசணும்-ல்ல?….., ஒங்களுக்கு ரெண்டு கேள்வி!:)

  1. எதுக்கு, “யாழ் ஒக்கும் சொல்” & “பொன் அனையாள்” ன்னு உவமை சொன்னாரு கம்பர்?
  அமுது ஒக்கும் சொல், அன்ன மயில் அனையாள்-ன்னும் சொல்லி இருக்கலாம்-ல்ல?
  எதுக்கு, இந்த ஊடல் நேரத்தில் குறிப்பா, யாழ் & பொன்-னைக் காட்டணும்? சொல்லுங்க பார்ப்போம்:)
  ——–

  2. நடக்கப் போவதோ = திருமணம்; எதுக்கு ஊடலை இங்கிட்டு பேசணும்? கூடல் அல்லவோ பேசணும்?:)
  சரி, பேசறது தான் பேசறாரு….அதை இராமனை முன் வச்சிப் பேசறதை விட்டுட்டு, போற வழியில்….எதுக்கு தசரதனை முன் வச்சிப் பேசுகிறான் கம்பன்?

  ஹேய் பொற்க்கீ முருகா….உனக்கு ஏதாச்சும் புரியுதா?:) புரியலீன்னா….ராகவனைப் போய்க் கேளு…சொல்லுவான்(ரு):)))))

  • எனக்கும் இதே சந்தேகம் தான் படித்ததும் வந்தது. ஏதோ உள்ளர்த்தம் இருக்கும், நமக்குப் புரியல போலன்னு விட்டுட்டேன் 🙂

   amas32

  • ஆனந்தன் says:

   ஐயா, இந்த கேள்விக்கு விடை தேடி இரவெல்லாம் தூக்கம் போச்சு. தயவுசெய்து பதிலையும் சொல்லிவிடுங்கள்! அத்துடன், இந்தச் சொல்லுக்கு அரும்பத விளக்கம் தேவை: ‘லூலூலாயி’.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s