இகழாதே!

ஆற்றார் இவர் என்று அடைந்த தமரையும்

தோற்றத்தாம் எள்ளி நலியற்க, போற்றான்

கடை அடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்

உடையானைக் கவ்வி விடும்

நூல்: பழமொழி நானூறு (#45)

பாடியவர்: முன்றுரையரையனார்

வீட்டில் வளர்கின்ற ஒரு நாய். அதற்கு ஒழுங்காகச் சாப்பாடு போட்டுக் காப்பாற்றாமல் கதவை அடைத்துவைத்து அடித்தால், கோபத்தில் அது வளர்ப்பவனையே கடித்துவிடும்.

அதுபோல, வேறு கதியில்லாமல் உங்களிடம் வந்து நிற்கும் சுற்றத்தார்களைக்கூட இழிவாகப் பேசாதீர்கள். ‘இவர்களால் இனிமேல் எதையும் செய்யமுடியாது’ என்று எண்ணிக் கேலி செய்யாதீர்கள்.

துக்கடா

 • இன்றைய பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் நண்பர் ரெக்ஸ் அருள் (https://twitter.com/#!/rexarul) அவருக்கு நம் நன்றி
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும்
 • தோற்றத்தா மெள்ளி நலியற்க, போற்றான்
 • கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
 • உடையானைக் கவ்வி விடும்

278/365

Advertisements
This entry was posted in அறிவுரை, நண்பர் விருப்பம், பழமொழி நானூறு, வெண்பா. Bookmark the permalink.

3 Responses to இகழாதே!

 1. நாய் “கவ்வக் கூடாது” என்பதுக்காகத்தான் அதை துன்புறுத்தக் கூடாதா?
  அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூட திடீர்னு கை நீட்டி விடலாம், “அதனாலதான்” அவங்ககிட்ட பம்மி நடந்துக்கனுமா?
  இது “நீதி” மாதிரியில்லை, கொஞ்சம் இயல்பான எச்சரிக்கையாகத்தான் தெரியுது. அதனால என்ன , சான்றோருக்கு மட்டும் பொருந்தறாப்போல அப்பழுக்கற்ற நீதியா சொல்லிட்டிருந்த பத்தாது தான். மற்றவர்களுக்கும் அது போய் சேருவதற்கு ஒரு நடைமுறை எச்சரிக்கையோ/பொருளாதார அடிப்படை incentive-ஓ தேவைதான் .

 2. இந்த அருமையான பாடலை, என் வேண்டுகோளுக்கு இணங்கி தெளிவுரை ஆற்றியமைக்கு முதலில் எனது பணிவன்பான நன்றிகள், சொக்கரே!

  “சாதுமிரண்டால் காடு கொள்ளாது” என்னும் அர்த்தத்தில் இப்பாடலை பார்க்கலாம். “அவன் ஒன்னும் செய்யமாட்டான். அவன் சத்தம் பண்ணுவான். அப்புறம் பம்மிடுவான்” என்றெல்லாம் அநியாயத்துக்கு நீர்பாய்ச்சி, பாத்தி கட்டி abuse செய்பவர்கள் யோசிக்கணும். “பம்மிட்டு” இருக்கற மாதிரி இருக்கிற இவனும், பற்பல காரணங்களுக்காக அடங்கியிருப்பான்; அல்லது அடங்கியதுபோல இருப்பான். ஆற்றாமையினால் அவ்வாறு இருக்கின்றான் என்று அத்துமீறி அவனை மனதளவிலும், உடலளவிலும் பலாத்காரம் செய்துகொண்டிருக்கும்போது, அவன் துடித்து எழுந்து விடுவதோடு மட்டுமல்லாமல் abuser(s)ஐ அவன் “கடித்தும்” விடுகின்றான். Labor movementsல் இருந்து, Freedom movementsவரை இப்படி “உடையானை கவ்விய” “நன்றியுள்ள நாய்களால்” தான், மப்பும் மந்தாரமுமாக இருக்கும் சாதாரண மக்களாலும் கூட மரியாதையோடு வலம் வரமுடிகிறது.

  பாவேந்தர் பாரதிதாசனின், “ஒடப்பராய் இருக்கும் ஏழையப்பர், உதையப்பராகிவிட்டால் ஒர் நொடிக்குள் ஒடப்பர், உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவர் . உணரப்பா நீ” என்ற பாடல் வரிகள் கூட இக்கருத்தினை பிரதிபலிப்பதை உணரலாம்.

 3. பூங்கோதை மற்றும் Rex Arul (@rexarul) விளக்கங்கள் அருமை! Even a worm will turn என்று ஆங்கிலத்திலும் பழமொழி உண்டு. எவரையும் தொடர்ந்து இம்சித்துக் கொண்டு வந்தால் ஒரு உடையும் தருணம் வந்து வெகுண்டு எழுவர். இது நாம் உலக சரித்திரத்தில் தொடர்ந்து பார்த்து வரும் ஒரு நிகழ்வு. அதைப் பார்த்தாவது நாம் பாடம் கற்க வேண்டும்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s