தடுக்கும் தூது

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால் யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப்பவர்

நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி

தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்

அரிதே, காதலர்ப் பிரிதல்! இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே

நூல்: நற்றிணை (#5)

பாடியவர்: பெருஞ்குன்றூர் கிழார்

சூழல்: குறிஞ்சித் திணை. காதலியைப் பிரிந்து வெளியூர் செல்லத் திட்டமிடுகிறான் காதலன். இதை அறிந்த அவள் மிகவும் வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள் தோழி

என் தோழி,

நிலமெங்கும் தண்ணீர் நிரம்புகிறது, அதனால் நம்முடைய குன்றம் முழுவதும் மரம் செடி கொடிகள் நன்கு செழித்து வளர்கின்றன. அகன்ற வாயைக் கொண்ட பசுமையான சுனைக்குப் பக்கத்தில் பயிர்கள் முளைத்து வெளியே வருகின்றன. நல்ல வைரம் பொருந்திய சந்தன மரங்களைச் சுற்றிலும் வாசனைக் கொடிகள் படர்கின்றன. குறவர்கள் அந்தக் கொடிகளை வெட்டிக் கீழே தள்ளுகிறார்கள்.

இத்தனை வளத்துக்கும் காரணமான மேகங்கள், பெரிய மழையைப் பொழிந்து முடித்துவிட்டுத் தெற்கு திசையில் எழுந்து சென்றன. முன்பனிக் காலம் தொடங்கியது.

இப்படிப்பட்ட இனிமையான காலத்தில், காதலரைப் பிரிந்து வாழ்வது சிரமம்தான். அது உன் காதலனுக்குப் புரியவில்லை, உன்னை விட்டு எங்கோ செல்லத் தீர்மானித்துவிட்டான்.

ஆனால் தோழி, நீ கவலைப்படவேண்டாம். வாடைக் காற்றினால் வருந்திய இமைகளை உடைய உன் கண்களில் சிந்தும் நீர்த் துளிகள் இருக்கின்றனவே, அவற்றின் பலம் உனக்குத் தெரியாது. அதைப் பார்த்தால் உன் காதலன் எங்கேயும் போகமாட்டான், பயணத்தைக் கைவிட்டு உன்னுடனே தங்கிவிடுவான்!

துக்கடா

  • தண்ணீரைத் தடுக்க அணை கட்டுவார்கள், இங்கே ஒருத்தி கண்ணீரால் அணை கட்டிக் காதலனைத் தேக்கிவைக்கப் பார்க்கிறாள், ஜெயிக்கப்போவது யாரு? காதலா? கடமையா? :>

276/365

Advertisements
This entry was posted in அகம், காதல், குறிஞ்சி, தோழி, நற்றிணை, பெண்மொழி, வர்ணனை. Bookmark the permalink.

One Response to தடுக்கும் தூது

  1. கண் மழைக்கு பயந்து காதலன் காதலியோடு தங்கிவிடுவான் என்கிறாள் காதலி! பெண்ணின் கண்ணீருக்கு அவ்வளவு சக்தி!

    முதல் பாகத்தில் தோழி, நல்ல மழையின் காரணமாக வரும் நீரினால் நாட்டின் செழிப்பை அழகாகச் சொல்கிறாள். அடுத்து, மழை நீரினால் வரும் நன்மையை போல் கண்ணீரினால் தலைவிக்கும் நன்மை வரும், நினைத்தது நடக்கும், காதலன் அவள் கண்ணீருக்குக் கட்டுண்டு விடுவான் என்று நம்பிக்கைத் தருகிறாள்!

    மற்ற உபாயங்கள் எல்லாம் பொய்த்தப் பின் பெண்ணுக்குக் கடைசி ஆயுதம் கண்ணீர். அதை எல்லா சமயங்களிலும் பயன்படுத்திவிட்டால் அதன் வசீகரமும் ஆளுமைத் தன்மையும் குறைந்துவிடும். எதிலுமே உண்மை நேர்மையும் இருந்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும். அவள் கோரிக்கையில் நியாயம் இருக்க வேண்டும்.

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s