பொருள் வரும் வழி

’மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது

அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே

பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை

தெருள் வரும் அறிவு உளார், திருத்துவார்’ என்பான்.

நூல்: தேம்பாவணி

பாடியவர்: வீரமாமுனிவர்

பொருள் சேர்க்கும் வழி என்ன தெரியுமா?

மற்றவர்கள் பொருள்மீது விருப்பம் வைக்காதீர்கள், அந்த ஆசை உங்களுக்கு மயக்கத்தைத் தந்துவிடும்.

உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடுங்கள், அப்படித் தரும்போது சும்மா கடமைக்குச் செய்யாதீர்கள், முகத்தில் நிஜமான கருணையுடன் தாருங்கள். அதுதான் உங்களுடைய செல்வம் இன்னும் பல மடங்கு வளர்வதற்கான வழி.

இதைப் புரிந்துகொண்ட அறிவுடையோர், மேகத்தைப்போல் வாரி வழங்குவார்கள், கொடையைத் திருத்தமாகச் செய்வார்கள்!

துக்கடா

 • இன்று ‘புனித வெள்ளி’யை முன்னிட்டு தேம்பாவணியிலிருந்து இந்தப் பாடல்
 • இயேசுநாதரை வளர்த்த தந்தையாகிய சூசையைக் கதைநாயகனாகக் கொண்ட காப்பியம் தேம்பாவணி. அதனை முழுமையாகவும் நல்ல உரையுடனும் வாசிக்க இங்கே செல்லலாம் : http://www.tamilvu.org/library/l4310/html/l4310fir.htm
275/365
Advertisements
This entry was posted in அறிவுரை, இயேசு, கொடை, தேம்பாவணி, பக்தி, வீரமாமுனிவர். Bookmark the permalink.

14 Responses to பொருள் வரும் வழி

 1. Naanjilpeter says:

  தேம்பாவணிக்கு முழு உரை எழுதிய மறைந்த பேராசிரியர் வி. மரிய அந்தோனி எனது பெரியப்பா.
  அன்புடன்
  நாஞ்சில் இ.பீற்றர்
  http://www.fetna.org

 2. anonymous says:

  இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!

  மனித வெள்ளிகளில் இது புனித வெள்ளி!
  Passion of the Christ!
  மிகவும் கொடூரமான நாள்! = கொண்ட கருத்துக்காக இப்படியும் எதிர்ப்பார்களா? முருகா!

  பள்ளியில் சொல்லிய அதே பிரார்த்தனையை இன்றும் இங்கே சொல்கிறேன்:
  Our Father in Heaven
  Holy be Your Name
  Your Kingdom come
  Your Will be done
  On Earth as in Heaven

  Give us today our daily bread
  Forgive us our sins
  As we forgive those who sin against us
  Do not bring us to the test
  But deliver us from evil

  Seat of Wisdom – Pray for us
  Our Lady of immaculate conception – Pray for us
  Amen!

 3. anonymous says:

  சொக்கர், இயேசுவின் “பழம்”பாடல்களுக்கு ரொம்பத் தேடினாரா-ன்னு தெரியாது!
  ஆனா, தமிழில்…சற்று அரிது தான்! (இடைக்காலத் தமிழில் கூட)

  சிலுவையில் அறைதல், உயிர்த்தெழுதல் = இவையெல்லாம் வீரமாமுனிவர், கிருஷ்ணப் பிள்ளை நூல்களில் கூட ரொம்ப இருக்காது!
  ஏன்னா, அவற்றின் பேசுபொருள் வேறு! இயேசு பிரானின் வரலாறு அல்ல!

  இயேசு பிரானின் வரலாறு-ன்னா…அது நம்ம கவிஞர் செஞ்சது தான்! = கண்ணதாசன் தமிழ்!
  அண்மைக் காவியம் = இயேசு காவியம்!

  365paa வில் அண்மைப் பாடல்கள் இடம் பெறாது, பழம் பாடல்கள் மட்டுமே-ங்கிற விதி – Section 365:))
  என்ன சொக்கரே, சரி தானே?

  • anonymous says:

   அதனால் என்ன? புதுப்பாடலைப் பின்னூட்டத்தில் சொல்லிட்டாப் போச்சு…

   என்னை மிகவும் உருக்கும் கண்ணதாசன் வரிகள் இவை: இயேசு காவியம் – இன்றைய நாளுக்குப் பொருத்தமான பாட்டும் கூட…
   (Some words may not be original, Pardon, just quoting from memory)

   அன்னை மரியாள் மடியினிலே
   – அன்பின் வடிவம் தேவமகன்
   பொன்னை மணியை மெல்லியனை
   – பொய்யாய் போன உடல்தன்னை
   தன்னந் தனியே வைத்தார்கள்
   – தாயும் மகனைப் பார்த்தபடி
   கன்னம் கரைய நீர்பெருகிக்
   – கடவுள் பேரைச் சொன்னாளே

   சுற்றி அழுவோர் கிடையாது
   – சொந்தம் என்போர் அங்கேது?
   பற்றும் பாசமும் அலைமோத
   – பசுவும் கன்றும் ஒன்றாக!

 4. anonymous says:

  தேம்பாவணி = தேம்பா + அணி (வாடாத மாலை) -ன்னு வீரமாமுனிவர் பேர் வைத்தார்!
  தேம் + பா + அணி (சுவையான பாமாலை) என்றும் சிலர் பிரிப்பார்கள்!

  இது = St Joesph பற்றியது!
  (தமிழில் Joseph = சூசை)

  * சூசையின் பிறப்பு, கல்வி, கல்யாணம்,
  * தேவ குமாரன் கருவில் தோன்றுதல், குழந்தை பிறப்பு,
  * மன்னனால் பல குழந்தைகள் கொலை…
  * பெத்லகேமை விட்டு எகிப்து தப்பிச் செல்லல்…
  * குழந்தை இயேசு வளரல்
  * சூசை மரணம்
  அத்தோட நின்னுரும்….

  கடைசியில், இயேசு உயிர்த்தெழும் போது, சூசையும் அவரோடே விண்ணுலகம் செல்வதை மட்டும் காட்டும்!
  ————–

  வீரமாமுனிவர் = A man of great adventure!
  செம ஜாலி மனிதர்….பரமார்த்த குருவின் கதைகள் படிச்சிப் பார்த்தாத் தெரியும்:)))

  நமக்கெல்லாம் புதுசா ஒன்னைக் கத்துக்கணும்-ன்னாலே பல நாட்கள் ஆகுது! ஆனா இத்தாலி நாட்டுக்காரரான இவரு…தமிழ் மொழி – இலக்கியம் – இலக்கணம் ன்னு, அந்த வயதில் கத்துக்கிட்டு, என்னமாக் கலக்கி இருக்காரு!

  • anonymous says:

   ஆர்வம் இருந்தா….எதுவும் எப்பவும் கற்கலாம், கலக்கலாம் என்பதற்கு வீரமாமுனிவரே example!
   என்ன, நாஞ் சொல்லுறது சரி தானே?:))

  • வீரமாமுனிவர் ரொம்ப திறமையானவர்!! பரமார்த்த குரு கதைகளை எவ்வளவு முறை படித்து மகிழ்ந்ததுண்டு. இன்றைய தினத்தில் அவரை நினைவு கூர்ந்ததற்க்கும், பாட்டுக்கும், விளக்கத்திற்க்கும் நன்றி.

 5. anonymous says:

  வீரமாமுனிவர் பற்றி, அவர் நினைவு நாளின் போது #VeeraMaaMunivar ன்னு ட்விட்டரில் இட்டிருந்த ட்வீட்களில் பார்க்கவும்!
  சுருக்கமா…..

  * திருக்குறள் – இன்னிக்கு வெளிநாடுகளில் பரவி இருக்குன்னா, அதுக்கு இவர் உரையே முதல் காரணம்
  * தமிழில் முதல் அகராதி = சதுரகராதி பதிப்பிச்சவரு இவரே!
  * அன்னை மரியாளுக்கு புடைவை உடுத்தி, வழிபட்ட முதல் மனிதரும் இவரே = எனக்கு மிகவும் பிடிச்ச பூண்டி மாதா கோயில் (காவிரிக் கரை ஓரம் – திருவையாறு பக்கம்)

  * பரமார்த்த குருவின் கதை – இன்னிக்கும் சிரிக்கலாம்!
  * தமிழ் உரைநடையின் தந்தை-ன்னு கூடச் சொல்லலாம்!

  Generally foreigners come & learn tamil; They translate our books but have never written great epics in tamil itself! You have to have that fluency & acceptability…
  VeeraMaaMuni had that “passion for Tamizh” – He wrote in Tamizh itself!

  Passion can bring to you anything – including Murugan (kothai is an example) :)))

  • anonymous says:

   யோவ் வீரமாமுனி – பச்சைத் தமிழன்-ன்னா அது நானா? நீயா? – நீ தான்யா:)))
   365paa வில் பின்னூட்டம் போடவே, எனக்குத் தமிழ் சரியா வரமாட்டேங்குது!:)
   Compared to ppl like VeeraMaaMuni, nchokkan etc…I am one total waste:)

 6. anonymous says:

  கடைசியாப் பாட்டுக்கு வருவோம்! 🙂

  //மேகத்தைப்போல் வாரி வழங்குவார்கள், கொடையைத் திருத்தமாகச் செய்வார்கள்//

  பொருள் வரும் வழி-ன்னு சொல்லிட்டு, பொருள் போகும் வழியைச் சொல்றீங்க?:)))
  ————

  //தரும்போது சும்மா கடமைக்குச் செய்யாதீர்கள், முகத்தில் நிஜமான கருணையுடன் தாருங்கள்//

  உம்……Social Media காலம், வீரமாமுனிவரே!
  நிஜமான கருணையோ, போலியான கருணையோ…..தந்தால் போதும்-ன்னு இருக்கு இப்பல்லாம், தொண்டு நிறுவனங்களுக்கு!:(
  Tax Benefit, 80 CCA, Social Prestige ன்னு பார்த்துப் பார்த்துக் குடுக்கறாங்க:))

  ஆனால் நான் சார்ந்த சில தொண்டு நிறுவனங்கள், இப்படிப்பட்டவர்களிடம் வாங்குவதே இல்லை!
  அந்தக் குழந்தைக்குப் பணம் குடுத்து விட்டால் மட்டும் போதாது….மூனு மாசத்துக்கு ஒரு முறை, நேரிலோ/ தொலைபேசியிலோ Counselling, Progress Monitor செய்ய ஒப்புக் கொள்வோரிடமே, நன்கொடை பெறுவார்கள்!

  இல்லார்க்கு…..
  * முதல் தேவை = பணம்
  * முற்றும் தேவை = அன்பு உணர்ச்சி

  மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே
  எங்களுக்கோர் அன்பு செய்ய யாரும் இல்லையே
  இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ?

 7. anonymous says:

  அருஞ்சொற்பொருள்:

  மருள்=Confusion, மருட்சி
  நசை=ஆசை
  புயல்=மழை
  தெருள்=Clear, தெருட்சி; தெருள் x மருள்

 8. ஆனந்தன் says:

  மனமுவந்து கொடுத்தல், கொடுப்பவர்க்கும், பெறுபவர்க்கும் இன்பத்தையே விளைவிக்கும். இதைச் சிறு குழந்தைகளிடம் காணலாம். ஒரு குழந்தை தனக்கு விருப்பமான இன்னொருவருக்குத் தன்னிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுக்கும்போது அதன் முகத்தில் அன்பு பரிமளிக்கும்! ஆனால், ‘கொடுக்கமாட்டேன்’ என்று மறுக்கும்போது அந்த முகத்தில் கடுமை ஒரு கடுமை தெரியும்! உணர்ச்சிகளை மறைக்காது வெளிப்படுத்துவதால் குழந்தகளைச் சொன்னேன். பெரியவர்களுக்கும் இதே உணர்வுகள்தான் என்றாலும், சில சமயங்களில் அதை மறைத்து விடுவர்.

 9. ஆனந்தன் says:

  தூய்மையான இதயம் அன்பினால் நிறைந்திருக்கும். அது தனக்கென எதையும் கேளாது. என்பையும் பிறருக்கே கொடுக்க விரும்பும்.
  “அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
  என்பும் உரியர் பிறர்க்கு”
  இயேசுநாதர் தன்னிடமிருந்த ஆத்மஞானத்தை அள்ளி வழங்கினார். இறுதியில், இந்தப் புனித வெள்ளியில், தன்னையே வழங்கினார் பிறருக்காக!

 10. நேற்று மகாவீரர், இன்று ஏசுபிரான். ஒன்று பிறப்பு, மற்றொன்று உயிர்நீத்தல். ஆனால் இருவருக்கும் பொதுவானது அன்பு. அளப்பரியா அன்பு!

  அனானிமஸ், நீங்கள் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள பிரார்த்தனையை நானும் பள்ளிக் காலம் முழுக்கச் சொல்லியிருக்கிறேன். ஏசுவின அறிவுறுத்தலில் நான் காண்பது அன்பு மட்டுமே. அவரின் பிறப்பிலிருந்து ஒவ்வொரு செயலுமே அன்பின் வெளிப்பாடு தான்.

  வீரமாமுனிவர் வேறு நாட்டுக்கு வந்து அந்த மொழியையும் கலாச்சாரத்தையும் கற்று காப்பியமே இயற்றியுள்ளார்! கண்ணதாசனோ வேறு மதத்தவர் ஆயினும் தன் எளிய நடையில் அந்நாளில் நடந்ததை எசுகாவியத்தில் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்!

  கேணியில் இறைக்க இறைக்க நீருறும் என்பதுபோல செல்வமும் கொடுக்கக் கொடுக்கப் பெருகும், அதுவும் அன்போடு கொடுக்கும்போது!

  அனானிமஸ் குறிப்பிட்டிருப்பது போலே பணம் ஈந்தால் மட்டும் போதாது, நம்முடைய ஈடுபாடும் அந்தச் செயலில் இருக்க வேண்டும். நிறைய பேர் அவர்களின் பிறந்த நாள், அல்லது திருமண நாளுக்கு முதியோர் இல்லத்திலோ குழந்தைகள் காப்பகத்திலோ விருந்து படைக்க பணம் கொடுத்துவிடுவார்கள். அனால் அன்று அங்கு செல்ல வேண்டும். அவர்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும். கலந்து உரையாட வேண்டும். அது தான் உண்மையான அன்பு. அதுதான் உண்மையான ஈகை.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s