புண்ணியம் செய்தோம்

புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்

கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்

நண்ணி இங்கே வந்து தம் அடியார் நடு இருக்கப்

பண்ணி, நம் சென்னியின்மேல் பத்ம பாதம் பதிந்திடவே!

நூல்: அபிராமி அந்தாதி (#41)

பாடியவர்: அபிராமி பட்டர்

மனமே, நீயும் நானும் பெரிய புண்ணியம்தான் செய்திருக்கிறோம்.

ஏன் தெரியுமா?

புதிதாக மலர்ந்த குவளை மலர்களைப் போன்ற கண்களை உடைய அபிராமி அன்னை, அவளது கணவர், சிவந்த திருமேனியை உடைய சிவபெருமான் இருவரும் நம்மைப் போன்ற அடியவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள், நமக்காக இங்கே வந்து குடிகொண்டிருக்கிறார்கள். நமது தலைகளின்மீது தங்களுடைய தாமரைப் பாதங்களைப் பதித்து அருள் புரிந்திருக்கிறார்கள்.

272/365

Advertisements
This entry was posted in அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், பக்தி, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to புண்ணியம் செய்தோம்

 1. Rex Arul says:

  என்ன அருமையான பாடல்! இப்பாடல் எனக்கு 21 வருடங்களுக்கு முன்னமே பரிச்சயம் :). Thanks to கமலஹாசன் — சந்தானபாரதி — பாலகுமாரன் — இசைஞானி இளையராஜா கூட்டணியில் வெளிவந்த “குணா”(1991) திரைப்படம். அதில் “அபிராமி பித்தனாக” வரும் கமல், கடைசி காட்சியில், காதல் மனைவியின் குருதி சிந்தும் உடலை தாங்கிக்கொண்டே, கன்னங்களைத் தட்டிக்கொண்டே, அழுதுகொண்டே இப்பாடலை பாடுவதாக அமைத்திருப்பார்கள். 

  மீண்டும் நினைவில் இப்பாடலை நிறுத்தியமைக்காக, மிக்க நன்றி, சொக்கன்!

 2. anonymous says:

  கமலுக்கும், இளையராஜாவுக்கும், யேசுதாசுக்கும்
  – எத்தனை நன்றியும் சொல்லலாம்!
  – அபிராமி அந்தாதி என்னும் இப்பாடல் வரிகளை, பொது மக்களிடத்தில் உயிர் ஊட்டியமைக்கு!
  – அதுவும் ராஜா இசையில்….

  கமல், கோயில் தூணில் சாய்ந்து இருக்கும் போது ஆரவாரம்….
  கமலின் ஆர்வத்தில், அத்தனையும் அடங்கிப் போய்,
  புல்லாங்குழல்+வீணை மட்டும்…
  மனசு அலை பாயுறா மாதிரி அலைய விடுவாரு ராஜா!
  கமல், அவளைப் பார்த்துருவாரு!

  ஓடியாரும் போது, வீணையும் ஓடியாரும்!
  அப்போ ஒரு sign board பட்டு, டக்…அந்த இசையும் குடுப்பாரு ராஜா!
  அந்த sign board = அவள் இருக்கும் திசையைக் காட்டும்!
  நாயகி, நான்முகி….நாராயணி….
  சரணம் சரணம், சரணம் சரணம்!

  ஒரு துக்கடாவில் துவங்கி = அதுவும் அபிராமி அந்தாதி தான் (நாயகி, நான்முகி..)
  நீண்ட சங்கு ஊதும்!
  பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…

  இனிப்பு (லட்டு) அவனுக்கு இல்லீயா? அவன் வரும் நேரம் பார்த்தா தீர்ந்து போகணும்?

  இடங் கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி…முத்து
  வடங் கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
  நடங் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி….. நல் அரவின்
  படம் கொண்ட அல்குல்…..பனி மொழி….வேதப் பரிபுரையே

  சிவ தாண்டவம்!
  Hi Tempo சிவ தாண்டவத்தை, மெல்லிய வீணை இசையில் முடிச்சவரு, இளையராஜாவாத் தான் இருப்பாரு-ன்னு நினைக்கிறேன்!

 3. anonymous says:

  பொதுவா,
  நாயகி பாவம் மிக்குப் பாடுவது ஆழ்வார்கள்!
  ஆனா நாயகன் பாவம்?:)

  அதாச்சும் தன்னை = பெண்ணாக, இறைவனை = ஆணாக/ தலைவனாக வரிப்பதே வழக்கம்!
  ஆனா, தன்னை ஆணாகவும், இறைவன்/இறைவியைத் தனக்குரிய பெண்ணாகவும் வரித்துள்ளார்களா?:))

  அபிராமி அந்தாதி அப்படியோ?-ன்னு கூடச் சிலருக்குச் சந்தேகம் வரலாம்! ஏன்னா பாட்டின் சொற்கள் அப்படி இருக்கும்:)
  ஆனால், அபிராமி பட்டர் அப்படி வரிக்கவில்லை! ஆனால் சினிமாவில் குணா வரிப்பான்:)
  ————-

  பிரேமத்தில் பெண் பேச்சு, ஞானத்தில் ஆண் பேச்சு -ன்னே மாறன் சடகோபனைச் (நம்மாழ்வார்) சொல்வதுண்டு!
  ஞானம் கீழ்ப்படி, பிரேமம் தான் மேல்படி…
  வேதங்கள் = ஞானம்; தமிழ் = பிரேமம்!
  எனவே என் பாசுரங்கள் மீசையுடையோர்க்கு அல்ல, முலை உடையோர்க்கு -ன்னு சொல்ல அந்தத் துக்கடாப் பையனுக்கு என்னமாத் தைரியம்?:))

  கொஞ்சம் அணுகிப் பார்த்தா, அந்த மாறன் பையனின் அந்தரங்க உணர்ச்சிகள் – ஒரு பெண் கூட இப்படி நுணுக்கமா உணர்வாளா?-ன்னு இருக்கும்!
  ஒரு வேளை, மாறனே பெண் தானோ?-ன்னு சந்தேகம் வந்துரும்!:))

  அதே சந்தேகம், அபிராமி அந்தாதி வாசிக்கும் போதும் வரும்! ஆனா in opposite direction!
  இறைவியை ஆளும் ஆண்மகன் போல பேச்சு இருக்கே-ன்னு நினைக்கத் தோனும்! ஆனா மாறன் அளவுக்குப் போக மாட்டாரு! லேசா, அங்கொன்னும் இங்கொன்னுமாத் தான்!:)

  ஆனா குணா அதை முழுக்க நிறைவேத்திட்டாரு! – சினிமாவில்:))

 4. anonymous says:

  //தம் அடியார் நடு இருக்கப் பண்ணி//
  என்பது பாட்டின் மிக முக்கியமான வரி!

  நாம தனியா மனசுல ஆயிரம் நினைச்சிக்கலாம் – கடவுளைப் பத்தி!
  ஆனா, ஒரு அடியவர் குழாமில் இருந்தாத் தான் தெரியும், நாம கடவுள் மேல அன்பு வச்சிருக்குறதா நாமளே நினைச்சிக்கறோமே, அது எத்தனை தூரம் உண்மை, எவ்ளோ தூரம் தாக்குப் பிடிக்கும்?-ன்னு…..

  நம்மிலும் மேலானவர்கள், உறுதியானவர்கள், பண்புள்ளவர்கள்….அவனிடம் எப்படி ஒரு அந்தரங்கத் தோழன் போல, குடும்பம் போல உறவு பாராட்டுகிறார்கள்….
  நாம வெறுமனே ஒரு முழம் பூவும், ஊதுவத்தியும் கொளுத்திட்டு, ஒரு மைல் நீளத்துக்கு அவனிடம் எதிர்பார்க்கிறோம் என்பதெல்லாம் சக அடியவர்களைப் பார்க்கும் போது தான் தெரிய வரும்!
  ———–

  * நாம் இறைவனிடம் அன்பு செலுத்துவது ஒரு இன்பம்-ன்னா
  * சக அடியார்கள் இறைவனிடம் செலுத்தும் அன்பைப் பார்ப்பதும் ஒரு இன்பம்!

  அவர்களோடு உரையாடி இருப்பது ஒரு இன்பம், ஒரு புண்ணியம் = 365paa போல-ன்னு கூட வச்சிக்கலாம்!
  அதான் “புண்ணியம் செய்தனமே மனமே” என்று துவங்குகிறார்! என்ன கிடைக்க புண்ணியம் செஞ்சோமாம்?

  • anonymous says:

   பாட்டை, வரிசை மாத்திப் பாருங்க! ஒங்களுக்கே தெரீஞ்சிரும்!

   புண்ணியம் செய்தனமே மனமே,
   புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி,
   நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து
   *** தம் அடியார் நடு இருக்கப் பண்ணி ***
   ** நம் சென்னியின்மேல் பத்ம பாதம் பதிந்திடவே **

   அவனும் அவளும் நம் பொருட்டு வராங்க!
   எதுக்கு வராங்க?
   வரம் குடுக்கவா? துட்டு குடுக்கவா? சுக போகமா இரு-ன்னு ஆசி குடுக்குவா?
   ———-

   இல்லை!
   தம் அடியார் நடு இருக்கப் பண்ணி = அடியார் நடுவே என்னை வைப்பதற்காக வராங்க!
   பள்ளியில் சக மாணவ மாணவிகளோடு சேர்த்து விட, அம்மா அப்பா வராப் போல வராங்க!

   எதுக்கு, தம் அடியார் நடு இருக்கப் பண்ணனும்?
   அப்போ தான் = நம் சென்னியில் பத்ம பாதம் பதியும்!

   மற்ற அடியார்களைப் பார்த்தாத் தான்….இறையன்பில் “தான்” ஒழியும்! ‘தன்’ பக்தி-ன்னு, ‘தன்’ சமயம்-ன்னு பெருமை பட்டுக்கறது ஒழியும்!
   அது ஒழிஞ்சாத் தான் = பத்ம பாதம் பதியும்!

   Now read again…
   அவனும் அவளும் வராங்க
   தம் அடியார் நடு இருக்கப் பண்ணி
   நம் சென்னியின்மேல் பத்ம பாதம் பதிந்திடவே!!

  • anonymous says:

   அதனால் தான் ஆழ்வாரும், இறைவன் என்னென்ன தருவான்-ன்னு சொல்லும் போது….
   முதலில் “குலம் தரும்” ன்னு சொன்னாரு! = தொண்டர் குலம்!
   அப்பறம் தான் மத்ததெல்லாம்!

   குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படு துயர் ஆயின எல்லாம்
   நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்……
   பெற்ற தாயினும் ஆயின செய்யும்…
   நாராயணா என்னும் நாமம்!
   ———

   இதை ஒட்டித் தான், பின்னாளில் அபிராமி பட்டரும், அதே போல் “தரும் தரும்” -ன்னு பாடலைச் செய்தார்

   தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
   மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
   இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
   கனம் தரும்….பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!

  • anonymous says:

   //தம் அடியார் நடு இருக்கப் பண்ணி//

   அதான்….
   முருகன் கோயிலுக்குப் போகும் போது கூட, நேரா கருவறைக்குப் போய் அவனைப் பார்க்கத் தோனாது…

   அதான் தினமும் உன் கூட குடும்பம் நடத்துறேனேடா….
   கொஞ்சம் இரு….வள்ளலார், அருணகிரி, நாயன்மார்கள்-ன்னு ஒரு ரவுண்டு வந்துட்டு, அப்பறம் உன் கிட்டே வரேன்-ன்னு சொல்லீருவேன்:))

   ஆனா, இதையும், அவனைப் பாத்து தான் சொல்லுவேன்!
   தொலைவில் இருந்தே அவனை ஒரு பார்வை பார்த்துச் சொல்லிட்டு, ரவுண்டு வருவேன்!:) அப்பறமாத் தான் உள்ளயே நுழைவேன்;

   அவனைக் கண்குளிரப் பார்த்தாலும், நடுநடுவே, சக அடியார்கள் அவனை எப்படிப் பாக்குறாங்க-ன்னு லுக்கு விடுவேன்!
   நாம சைட் அடிப்பது ஒரு இன்பம்-ன்னா
   அடுத்தவர்கள் எப்படியெல்லாம் சைட் அடிக்கிறார்கள்-ன்னு பார்ப்பது இன்பமோ இன்பம்:)))))

   • anonymous says:

    Friends call me “loosu” for this:)
    But some friends say, I sight “selective people” around:))

    Whtever…..He is my honey!
    – I am yours, and mine become yours – ours – muruga!

 5. ஆனந்தன் says:

  //தம் அடியார் நடு இருக்கப் பண்ணி//
  அருளாளர்கள் எல்லோரும் இந்த நிலையையே வேண்டுகிறார்கள். மணிவாசகர் திருவாசகம்:
  “உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
  அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன்
  அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம்
  முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே”

 6. தனியா ஒருவர் ஆசிர்வதிக்கும்போது அது ஒரு மாதிரி, தம்பதி சமேதராய் ஆசிர்வதிக்கும்போது அது வேறு மாதிரி. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆசிர்வதிக்கும் போது மகிழ்ச்சியும் பலனும் பல மடங்காகிறது.

  இங்கே அபிராமி அன்னை, அவளது கணவர், சிவபெருமான் இருவரும் சேர்ந்து நம்மை ஆசிர்வதிக்கிரார்கள். இதைப் பெற நாம் என்ன புண்ணியம் செய்தோமோ! இறைவனும் இறைவியும் சிவசக்தியாக அவர்களின் பொற்பாதங்கள் நம் சிரசின் மேல் பட அருள் செய்யும் பொழுது நமக்குள் மின்சாரம் பாய்கிறது. அந்த சக்தி நம்மை தூய்மை படுத்துகிறது. நல்வழிப் படுத்துகிறது.

  அடியவர் குழாத்துடன் சேர்வதால் தான் பூவோடு சேர்ந்து நாராகிய நாமும் மணக்க ஆரம்பிக்கிறோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல், அம்பாள் ஈசன் அருளாலே அடியவர் நடுவில் நம்மை வைத்து நல்ல சிந்தனைகள் வளரச் செய்கிறார்கள். அவர்கள் திருப்பாதங்கள் போற்றி!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s