இரண்டு வரிகள், பத்து அவதாரங்கள்

மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என்

இச்சையில்உன் சென்மம் எடுக்கவா, மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

(கற்பனை கலந்த) முன்கதை

ஒருமுறை காளமேகத்திடம் யாரோ கேட்டார்கள். ‘திருமால் எத்தனை அவதாரங்கள் எடுத்தார்?’

‘பத்து.’

‘அந்தப் பத்து அவதாரங்களையும் ஒரே பாட்டுக்குள் அமைத்துப் பாடமுடியுமா?’

’ஓ, செய்யலாமே!’

‘ஆனால் ஒரு நிபந்தனை.’

‘என்னது?’

‘நாலே நாலு வரிகளுக்குள் திருமாலின் பத்து அவதாரங்களையும் சொல்லிவிடவேண்டும். உங்களால் முடியுமா?’

காளமேகம் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘எனக்கே சவாலா?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். ‘நாலு வரி எதற்கு? அதில் பாதி போதும், வெறும் இரண்டே வரிகளில் பத்து அவதாரங்களையும் சொல்லிவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் இது.

உரை

உலகமே மெச்சுகின்ற புகழைக் கொண்ட பெருமாளே, ஒரு வெண்பாவில் பாதிக்குள் (அதாவது இரண்டு வரிகளில்) உன்னுடைய அனைத்து அவதாரங்களையும் சொல்லிவிட ஆசை கொண்டேன்.

மச்சா = மச்சாவதாரம்

கூர்மா = கூர்மாவதாரம்

கோலா = கோலம், அதாவது பன்றி அல்லது வராக அவதாரம்

சிங்கா = நரசிம்ம அவதாரம்

வாமா = வாமன அவதாரம்

ராமா, ராமா, ராமா = மூன்று ராமர்கள், அதாவது, பரசுராம அவதாரம், தசரதனின் மகனான ராமாவதாரம், பலராம அவதாரம்

கோபாலா = கிருஷ்ணாவதாரம்

மா ஆவாய் = தமிழில் ‘மா’ என்றால் குதிரை, இனி வரப்போகும் கல்கி அவதாரத்தைக் குறிக்கிறது

270/365

Advertisements
This entry was posted in காளமேகம், திருமால், நாடகம், பக்தி, பட்டியல், விஷ்ணு, வெண்பா. Bookmark the permalink.

15 Responses to இரண்டு வரிகள், பத்து அவதாரங்கள்

 1. anonymous says:

  bingo! this kalamegam is one guy of terribles!:))

  //இச்சையில்உன் சென்மம் எடுக்கவா?//
  this is kalamegam touch!
  கடவுளாவது, ஒன்னாவது? இச்சையில் உன் சென்மம் இயம்பவா-ன்னு கேட்டிருக்கலாம்!
  சென்மம் எடுக்கவா?-ன்னு கேக்குறாரு!:) ஏன்டா உயிரை எடுக்குற-ன்னு சொல்வோம்-ல்ல! அது மாதிரி!

  பெருமாளே, பார்த்து இருந்துக்கோ! உன் சென்மத்தையே எடுக்கப் போறாராம் காளமேகம்:)
  நல்லவேளை, காளமேகம் என் முருகனைப் பத்திப் பாடலை-ன்னு நினைக்கிறேன்; இல்லீன்னா, அவனையும் ஒரு கை பாத்து இருப்பாரு:)) பாவம் அவன்!
  ————-

  பதம் பிரிச்சிப் படிச்சா….
  மச்சா-கூர்மா
  கோலா-சிங்கா-வாமா-ராமா-ராமா
  ராமா-கோபாலா-மா ஆவாய்

  சேர்த்துப் படிச்சா…
  மச்சாகூர்-மாகோலா-சிங்காவா-மாராமா
  ராமாரா-மாகோபா-லாமாவா :))

  மாகோலா-சிங்காவா = ஏதோ சிங்கப்பூர்-மலேசியாவில் சைனீஸ் மொழி கேட்டாப்புல இருக்கு!:))
  எம்.எஸ்.வி இப்படி நடுவுல சைனீஸ் வரா மாதிரி ஒரு சிங்கப்பூர் பாட்டு போட்டு இருப்பாரு! ராகவன் இருந்தா இந்நேரம் சொல்லீருவான்(ர்)

  • ஆனந்தன் says:

   படம்: நினைத்தாலே இனிக்கும்.
   பாடல்: யாதும் ஊரே யாவரும் கேளிர்

   • anonymous says:

    மிக்க நன்றி!:)
    இராகவன் வந்து சொல்லுவான்-ன்னு எதிர்பார்த்தேன்!

    இதிகூகா சம்கே மலேசியா
    சாயா ஆனா சிங்கப்பூரா
    சாயா குகா மலேசியா
    -ன்னு இன்னும் என்னென்னமோ வரும்; மறந்துருச்சி! ஆனா இந்தச் சாயா குகா மலேசியா மட்டும் மறக்கல!
    ஏன்-ன்னா “குகா”-ன்னு வருது! மலேசிய முருகனோ?:)

 2. surya says:

  srinivasa avadharam ??
  and thought Balarama was Adiseshan??

 3. ஏன் பெரும்பாலும் பலராமன் அவதாரத்தைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை? எனக்குக் கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் என்றே தெரியும்.. ஏன் அந்த அவதாரம்?? அதன் நோக்கம் என்ன? பலராமன் அவதாரத்தைப் பற்றி ஆழமாக யாரும் சொல்வதில்லையே? ஏன்..?

  • anonymous says:

   @bala & @surya
   அவதாரங்கள் கணக்கில் அடங்கா! அதில் சிறப்பானவை=24 அவதாரங்கள்!
   அதில் இன்னும் சிறப்பானவை = 10
   இதைத் தான் “தசாவதாரம்” என்று குறிக்கிறார்கள்!

   அவதாரம்= அவ -> தாரஹ -> இதி அவதாரஹ
   *அவ=கீழே,
   *தார (தாரை)=நீர் போல ஓடுதல்/இறங்குதல்
   தான் கடவுள் என்ற இறுமாப்பு இல்லாது, நமக்காக, தஹ்ன்னிலையில் இருந்து “கீழே இறங்கி வருதல்” = அவதாரம்
   ————

   திருமலை ஸ்ரீநிவாசன், தசாவதாரக் கணக்கில் சேர்ப்பதில்லை!

   தசாவதாரம் உயிர்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும்;
   * நீர் வாழ்வன = மீனம்
   * நீரிலும் நிலத்திலும் வாழ்வன = ஆமை
   * நிலத்தில் வாழ்வன = பன்றி
   * விலங்கு மனிதன் = ஆளரி (நரசிம்மம்)
   * குள்ள மனிதன் = வாமனன்
   * வெறி ஆதி மனிதன் = பரசுராமன்
   * வளர்ச்சி பெற்ற குடும்ப மனிதன் = இராமன் / பலராமன்
   * குடும்பம் தாண்டி அரசியல் சூது மனிதன் = கண்ணன்
   * கல்கி
   ———-

   இதில் பூர்ணாவதாரம் என்று கருதப்படுவது = இராமனும் கண்ணனும் மட்டுமே!
   அதாச்சும் பாதியில் வந்து சென்று விடாமல், உலக உயிர்கள் போலவே, கர்ப்பம் துவங்கி – மரணம் வரை, வாழ்ந்து காட்டுவது!
   ———

   பலராம அவதாரம் = ஒரு நாடக அவதாரம்!
   அது ஆதி சேடன்!
   ஆதி சேடன் எப்படி இறைவன் ஆவான்? அதை அவதாரம் என்று எப்படிச் சொல்லலாம்?

  • anonymous says:

   பலராமன் = ஆதிசேடன்!
   (இறைவனின் அணுக்கத் தொண்டன்!)
   சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நின்றால் மரவடியாம்…என்னும்படிக்கு, எம்பெருமான் தொண்டுக்கு என்றே ஆட்பட்டவன்!

   இவன் இலக்குவனாய்ப் பிறந்த போது, இவன் தன் சுகபோகத்தையும் பார்க்காது, இராகவனுக்கே இருந்தபடியால்….
   இவனுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தவித்த இராமன்…

   இதே போல், இலக்குவன் அண்ணனாகவும், தான் தம்பியாகவும் பிறந்து, கைம்மாறு செய்வதாக உறுதி கொண்டான்!
   அதான் அடுத்த அவதாரத்தில்; ஆதிசேடன் (எ) பலராமன் = அண்ணன்! கண்ணன் = தம்பி!
   பலராமன் பாதங்கள் பிடித்து விடுவது முதல்….பலராமன் பேச்சைக் கண்ணன் மீறுவதே இல்லை!
   ———-

   ஆனால் இறைவன் அல்லாத பலராமனை எப்படி அவதாரக் கணக்கில் வைத்தார்கள்?

   பலராமன் = கர்ப்பம் மாறியவன்
   தேவகியின் கர்ப்பம் கலைந்தது போல் கலைந்து, ரோகிணிக்கு மாறியவன்!
   * தேவகியின் கர்ப்பத்தில் இருக்கும் வரை = சேடனுடன் இறைவன் தங்கி
   * ரோகிணிக்கு மாறும் போது = சேடன் மற்றும் மாற்றப்படுகிறான்
   ஏழாவது குழந்தை கலைந்து, கம்சனுக்கு மாயமாகிறது!

   இப்படி இறைவனும் சேர்ந்தே தங்கியமையால் = பலராமனும் ஒரு அவதாரம்!
   அதே சமயம், கர்ப்பம் மாறிய பின், தொண்டுக்குப் பெருமை செய்ய, பலராமனை அவதரிப்பித்து, பின்னர் கண்ணன் அவதரிக்கிறான்!
   ————–

   = தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! இதற்காகவே பலராம அவதாரம்!
   (இவை ஸ்ரீமத் பாகவதத்தின் படி)

   • anonymous says:

    தமிழில் இந்தக் கதைகள் கிடையாது!
    மாயோன் (கண்ணன்), வாலியோன் (பலராமன்) – இவர்கள் சமயம் சாராத பூர்வ குடிகள் வழிபாடு!

    சேயோன் (முருகனும்) அவ்வாறே!
    முருகனுக்கான “புராணக் கதைகள்” பின்னாளையவே!

    சமயம் சாராத இனக்குழு! – அவர்களின் தொல் வழிபாடு!

 4. மெச்சுப் புகழ் வேங்கடவா என்ற ஆரம்ப வரியே அபாரமாக உள்ளது.

  பரசுராம, ஸ்ரீராம, பலராம என்ற மூன்று அவதாரங்களையும் சுருக்கமாக, ஆனால் சாமர்த்தியமாகக் கூறிவிட்டார். சேர்த்துப் படிக்கும் போது வால்மீகிக்கு ராம என்ற மந்திரத்தை உச்சரிக்க வராமல் மாரா மாரா என்ற உபதேசத்தைப் பெற்று பின் ராம நாமத்தை ஜபித்து ராமாயணமே எழுதும் ஆற்றலைப் பெற்றது போல எனக்கு இந்த சொல் பிரயோகம் தோன்றுகிறது. // -மாராமா
  ராமாரா-மாகோபா//

  amas32

 5. ஆனந்தன் says:

  பலராமரும் கிருஷ்ணரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். அவ்வாறிருக்க, எப்படி இருவரும் திருமாலின் அவதாரமாகக் கருதப்படுகிறர்கள்?

  பல வட இந்திய சம்பிரதாயங்களில் புத்தரை 9 வது அவதாரமாகக் கருதுகின்றனர் (http://vedabase.net/sb/1/3/24/). ஸ்ரீமத் பாகவதம் திருமாலுக்கு 25 அவதாரங்களைக் குறிப்பிடுகின்றது.

  • ஆனந்தன் says:

   //இப்படி இறைவனும் சேர்ந்தே தங்கியமையால்..//
   பலராமர் 7 வது கரு. அதை ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றிய பின்னர்தானே 8 வது கருவாகக் கிருஷ்ணர் கர்ப்பத்துக்கு வந்தார்?
   பலராமரை அவதாரமாகக் கொள்வது ஒரு மரியாதைக்காகத் தானா? (out of respect)

   • anonymous says:

    என்ன, ஒரே கேள்வி மயமா இருக்கே?:)
    நான் ஐயங்கார் பையனும் அல்லன்! எனக்கு விசிஷ்டாத்வைதமும் தெரியாது!::))))

    ஆனா உங்கள் கேள்விக்கு விடை அது தான்
    = விசிஷ்ட-அத்வைதம்; சேஷன்-சேஷி என்ற சேஷத்வம்; சங்கர்ஷண ரூபம்!
    In simple terms..

    //பலராமர் 7 வது கரு. அதை ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றிய பின்னர்தானே 8 வது கருவாகக் கிருஷ்ணர் கர்ப்பத்துக்கு வந்தார்?//

    * ஏழாம் கருவில் = எம்பெருமான் சிறிதே தங்கி, சேஷனும் தங்கியது!
    * எட்டாம் கருவில் = எம்பெருமான் பூர்ணமாகத் தங்கியது!

    நீங்க குடுத்த அதே சுட்டியிலேயே இருக்கே!
    http://vedabase.net/sb/10/2/9/en
    * Within the womb of Devakī is “My partial plenary expansion” known as Sańkarṣaṇa or Śeṣa. Without difficulty, transfer Him into the womb of Rohiṇī.
    * O all-auspicious Yogamāyā, I shall then appear with “My full six opulences” as the son of Devakī, and you will appear as the daughter of mother Yaśodā, the queen of Mahārāja Nanda

    பலராமன் = ஒரு தொண்டனையும் அவதாரம் ஆக்கியது! (தன் சக்தியை உடன் சேர்த்து)
    ————-

    //பலராமரை அவதாரமாகக் கொள்வது ஒரு மரியாதைக்காகத் தானா//

    இல்லை!
    பலராமன் = சங்கர்ஷண ரூபம்!
    கிருஷ்ணன் = பூர்ணாவதாரம்!
    இரண்டுமே, அவதாரங்கள் தான்!

    Bangalore Iskconஇல் இருவருக்குமே மிக்க மரியாதையும், வழிபாடும் உண்டு!:)

   • ஆனந்தன் says:

    மீண்டும் சளைக்காமல் தெளிவான பதிலைத் தந்தமைக்கு நன்றிகள்.
    //என்ன, ஒரே கேள்வி மயமா இருக்கே?:)//
    ஏன்னா, ‘எ..எனக்குக் கேட்கத்தான் தெரியும்!’
    இன்றுதான் உங்களிடம் ‘சேஷன் பற்றிய சேதி கேட்டு’ அறிந்து கொண்டேன், மிக்க நன்றி! (http://vedabase.net/sb/10/2/8/en)
    “Such truths cannot be understood, however, unless one is a pure devotee”.- Bhagavad-gītā (18.55)
    கேட்பதற்காக என்னையும் பதில் சொல்வதற்காக உங்களையும் இணையத்தில் இறைவன் இணைத்திருக்கிறான் போலிருக்கிறது!

   • anonymous says:

    //Such truths cannot be understood, however, unless one is a pure devotee”.- Bhagavad-gītā (18.55)
    கேட்பதற்காக என்னையும் பதில் சொல்வதற்காக உங்களையும் இணையத்தில் இறைவன் இணைத்திருக்கிறான் போலிருக்கிறது!//

    ஆகா! ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீக:)
    தெரியலீன்னா தெரியல-ன்னு சொல்லீருவேன்- எம்.எஸ்.வி பாட்டு போல
    தெரிஞ்சா, தெரிஞ்சதைப் பகிர்ந்துப்பேன்- அம்புட்டு தான்:)

    உங்கள் ஆசியோ, வாழ்த்தோ எதுவாயினும், தோழன் இராகவனைச் சென்றடையக் கடவது! முருகா!

 6. siva ramaman says:

  நீஙகள் இருவரும் உரையாடியதில் எனது சந்தேகமும் தீர்ந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s