நதிபோல் பெரியோர்

உறுபுனல் தந்து உலகு ஊட்டி அறும் இடத்தும்

கல் ஊற்று உழியும் ஆறேபோல், செல்வம்

பலர்க்கு ஆற்றிக் கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கு ஆற்றிச்

செய்வர் செயற்பாலவை

நூல்: நாலடியார் #185 (பொருட்பால், துறவற இயல், பெருமை அதிகாரம்)

பாடியவர்: சமண முனிவர்கள்

மழைக்காலத்தின்போது, ஆற்றில் நிறைய வெள்ளம் வரும். பல ஆயிரம் பேர் அதைக் குடித்துத் தாகம் தணிவார்கள். இதன்மூலம், உலகத்துக்கே உயிர் ஊட்டும் அந்த நதி.

கோடைக்காலத்தில், நதியில் தண்ணீர் வற்றிவிடும். ஆனாலும், ஆற்றின் மனம் வற்றுவதில்லை, அந்த மணலில் குழி தோண்டினால் ஊற்றாகக் கொஞ்சமேனும் நீரைத் தரும்.

அதுபோல, பெரியவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தை எல்லாருக்கும் வாரி வாரி வழங்குவார்கள். ஒருவேளை அந்தச் செல்வம் தீர்ந்து அவர்கள் வறுமை நிலைக்குச் சென்றுவிட்டாலும்கூட, பிறருக்கு உதவி செய்வதைமட்டும் நிறுத்திவிடமாட்டார்கள். பலருக்கு முடியாவிட்டாலும் சிலருக்காவது உதவுவார்கள்.

துக்கடா

 • கொடை என்பது பெரும் பணக்காரர்களுடைய குணம் அல்ல, பெரும் மனக்காரர்களுடையது என்று அழகான உதாரணத்துடன் சொல்கிறது இந்தப் பாடல். அவரவர் தங்களால் இயன்ற அளவில் மற்றவர்களுக்கு உதவலாம், அள்ளிக்கொடுக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கிள்ளித்தரலாம்
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
 • கல்லூற் றுழியும் ஆறேபோல் செல்வம்
 • பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
 • செய்வர் செயற்பா லவை

268/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், கொடை, நாலடியார், வெண்பா. Bookmark the permalink.

2 Responses to நதிபோல் பெரியோர்

 1. நிறைய பணம் இருந்தாலே பணக்காரர் ஆகி விட முடியாது பெரிய மனம் வேண்டும் என்கிற கருத்தினைச் சொல்ல உவமையாக ஆற்று நீரைச் சொல்வது அருமை.

  புதைந்து போன வைரங்களைத் தோண்டி எடுத்து எளிய தமிழில் பகிரும் உங்கள் தமிழ்ப்பணி தொடர்க

  நன்றி

 2. பில் கேட்ஸ் போல ஒரு சிலர் உள்ளனர். தன் வாழ்நாளில் தான் சம்பாதித்த பொருளை நற்காரியங்களுக்கு செலவழித்து உலகத்தாருக்கு உதாரணமாக விளங்குகின்றனர். ஆனால் பொருளனைத்தும் இழந்தும் நல்ல மனதுடன் இயன்றதை கொடுக்கும் நல்ல உள்ளத்துக்கு முன் இவர்களின் ஈகை குணம் கூட சற்றே குறைவானது தான்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s