விருந்தினர் பட்டியல்

கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர், கோசலர், பாஞ்சாலர்,

வங்கர், சோனகர், சீனர்கள், சாளுவர், மாளவர், காம்போசர்,

அங்கர், மாகதர், ஆரியர், நேரியர், அவந்தியர், வைதர்ப்பர்,

கங்கர், கொங்கணர், விராடர், கண் மராடர்கள், கருநடர், குருநாடர்,

*

கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர்கள், காந்தாரர்,

குலிங்கர், கேகயர், விதேகர்கள், பௌரவர், கொல்லர்கள், கல்யாணர்,

தெலுங்கர், கூர்ச்சரர், மச்சர்கள், மிலேச்சர்கள், செஞ்சையர் முதல் ஏனை

புலம் கொள் மன்னரும் துறைதொறும் இடைந்து பார் புதைபட வருகின்றார்

நூல்: திருவிளையாடல் புராணம் (திருமணப் படலம்)

பாடியவர்: பரஞ்சோதி முனிவர்

சூழல்: மதுரையில் சொக்கனாதருக்கும் மீனாட்சிக்கும் திருமணம். அதில் பங்கேற்றுச் சிறப்பிப்பதற்காக வந்த பல நாட்டு மக்களின் பட்டியல் இது

கொங்கு நாடு, சிங்கள நாடு, பல்லவ நாடு, சேர நாடு, கோசல நாடு, பாஞ்சால நாடு, வங்க நாடு, சோனக நாடு, சீன நாடு, சாளுவ நாடு, மாளவ நாடு, காம்போச நாடு, அங்க நாடு, மகத நாடு, ஆரிய நாடு, சோழ நாடு, அவந்தி நாடு, விதர்ப்ப நாடு, கங்க நாடு, கொங்கண நாடு, விராட நாடு, மராட நாடு, கருநட நாடு, குரு நாடு, கலிங்க நாடு, சாவக நாடு, கூவிள நாடு, ஒட்டிய நாடு, கடார நாடு, காந்தார நாடு, குலிங்க நாடு, கேகய நாடு, விதேக நாடு, பூரு மரபு, கொல்ல நாடு, கல்யாண நாடு, தெலுங்கு நாடு, கூர்ச்சர நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, செஞ்சை நாடு உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் மக்களும் சிவபெருமான், பார்வதியின் திருமணத்தைப் பார்க்க வருகிறார்கள். பல வழிகளில் நெருக்கியடித்தபடி அவர்கள் வருவதால், பூமியே கீழே அழுந்திப் போய்விடும்போலிருக்கிறது!

துக்கடா

 • கவிதை என்ற அளவில் இந்தப் பாடலில் விசேஷமாக எதுவும் இல்லை. ஆனால் இத்தனை தேசங்களும் இப்போது எங்கே உள்ளன என்று Geography அலசல் செய்தால் சுவாரஸ்யம் கூடும்
 • உதாரணமாக, தெலுங்கு நாடு = ஆந்திரம், மற்றவை?
 • அது சரி, ஒரே நேரத்தில் இத்தனை பேர் வந்து ஒரு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்தால் பூமி என்ன ஆகும்? வடக்கே ஒரு கல்யாணத்தின்போது அப்படிதான் ஏதோ வம்பாகி அகத்தியரைக் கூப்பிட்டார்களாம், அது தனிக்கதை :>
266/365
Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சிவன், பக்தி, பட்டியல். Bookmark the permalink.

20 Responses to விருந்தினர் பட்டியல்

 1. R.sezhiyan says:

  குடைசாஞ்ச பூமிய,அகத்தியர் ஒருத்தரை வச்சே பேலன்ஸ் பண்ணிடாங்களே..!!!

 2. anonymous says:

  //சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம்//

  சொக்கரே, இது உங்களுக்கே அடுக்குமா? மாப்பிள்ளை-பொண்ணையே மாத்திட்டீங்களே:))
  இது சொக்கரின் கல்யாணம்…I mean, not you, but “that chokkan” kalyanam:)

  கொக்கன்-மீனாட்சி திருமணம்
  நடப்பது=மதுரையில்

  //அகத்தியரைக் கேளுங்கள், அல்லது கூகுளை//
  அகத்தியர் வடக்குல நடந்த கல்யாணத்தின் போது தான் உபயோகப்படுவார்! இது தெக்கத்திச் சீமை!
  மதுரை-க்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு:)))

  • என். சொக்கன் says:

   ஓய்,

   //அகத்தியர் வடக்குல நடந்த கல்யாணத்தின் போது தான் உபயோகப்படுவார்! இது தெக்கத்திச் சீமை!//

   அதனாலதான் அகத்தியர் கதையை இங்கே சொல்லாம சும்மா கோடிமட்டும் காட்டினேன், இல்லாட்டி மொழ நீளத்துக்குத் துக்கடா ஓடியிருக்கும்ல? 😉

   சொக்கன் : மீனாட்சி / சிவபெருமான் : பார்வதி : அம்சம் வேறானாலும் ஆதாரம் ஒண்ணுதானே? என்ன சொல்றீங்க? (மேலே ’சூழல்’ல இந்தப் பெயர்களை மாத்தறதுதான் சரின்னா மாத்திடலாம், சொல்லுங்க 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

   • anonymous says:

    :))))))))))))))
    just kidding around!
    ——–

    //இந்தப் பெயர்களை மாத்தறதுதான் சரின்னா மாத்திடலாம், சொல்லுங்க//

    மாத்தியே ஆகணும்!
    அப்போ தானே மாப்பிள்ளை=சொக்கன் ன்னு வரும்? என்ன நாஞ் சொல்லுறது?:))

   • anonymous says:

    ச்சும்மா:)
    மாத்தணும்-ன்னு அவசியம் இல்லை சொக்கரே! சிவ-சக்தியின் பல வடிவங்கள் தானே, இந்தப் பெயர்கள்!

    பொதுவா…
    பார்வதி=இமவான் புதல்வி (பர்வத குமாரி=பார்வதி)
    மீனாட்சி=பாண்டியன் புதல்வி
    நம்மூரு பொண்ணு!:) அதான் சொன்னேன்!

 3. anonymous says:

  எல்லா நாட்டின் பேரையும் படிச்சிப் பார்த்தேன்!
  சேர, சோழ, பல்லவரைச் சொல்லுறாரு! ஆனா பாண்டிய நாட்டை மட்டும் சொல்லலை பாருங்க! என்னா ஆணவம்? :)))

  ஏன் பாண்டிய நாடு missing on the list?
  = ஏன்னா கண்ணாலமே அங்கே தானே நடக்குது! அதான்:))

 4. anonymous says:

  ஒக்க சின்ன கரெக்சன்லு:)

  //உதாரணமாக, கூர்க்க நாடு = நேபாளம்? மற்றவை?//
  கூர்ச்சர நாடு என்று பாடலில் வருவது = நேபாளம் அல்ல!
  கூர்ச்சரம்=Gujarat

  • anonymous says:

   Ppl who know, please fill in the blanks:)

   கொங்கர் = Coimbatore & areas
   சிங்களர் = No comments (Sri Lanka)
   பல்லவர் = Madras nalla Madras:) & kanchi
   வில்லவர் = Chera (Malayalam)

   கோசலர் = Kosala kingdom of Rama (Ayodhya)
   பாஞ்சாலர் = Panchala kingdom of Durupadan-(Panchali (Kannauj, UP)
   வங்கர் = Bengal
   சோனகர் = ?

   சீனர்கள் = China
   சாளுவர் = Karnataka-Andhra (May be vijayanagar, chaluva narasimha deva raya)
   மாளவர் = ?
   காம்போசர் = Bihar (Kambhoja)

   அங்கர் = Bihar (Anga naattu arasan = Karna)
   மாகதர் = Magadha (Bihar – Chandragupta Maurya, King Asokha)
   ஆரியர் = Aryans??

   நேரியர் = ?
   அவந்தியர் = Avanti (Ujjain, MP)
   வைதர்ப்பர் = Vidharba (Nagpur, Maharashtra) – Rukmini, Dhamayanthi all from vidharba desam only

  • anonymous says:

   கங்கர் = கங்க தேசம் (kolar, close to chalukyas)
   கொங்கணர் = ??
   விராடர் = விராட தேசம் (pandavas in exile, rajasthan)

   கண் மராடர்கள் = Marathi?
   கருநடர் = Karnataka
   குருநாடர் = ?
   கலிங்கர் = kalinga (kalingathu parani, orissa)

   சாவகர் = Java/Sumatra
   கூவிளர் = ?
   ஒட்டியர் =?
   கடாரர்கள் = Malaysia (கடாரம் வென்றான்)

   காந்தாரர் = Gandhara (land of shakuni/gandhari = Peshawar)
   குலிங்கர் = ?
   கேகயர் = Land of Kaigeyi
   விதேகர்கள் = Land of Seetha (Videha-Vaidehi, Nepal)

   பௌரவர் = Pauravas (King Porus who fought Alexander, by Indus River)
   கொல்லர்கள் = ?
   கல்யாணர் = ?

   தெலுங்கர் = manavaadu neighbours:)
   கூர்ச்சரர் = Gujarat
   மச்சர்கள் = ?
   மிலேச்சர்கள் = Muslims? (Arabs)
   செஞ்சையர் = ?
   ———

   அவ்ளோ தான் தெரிஞ்சுது….
   மீதியெல்லாம் pl google & fill in the blanks:) I dont have continuous net here! tata:)

 5. It is so much fun to come here 🙂 I am addicted to #365paa!

  நன்றி சொக்கரே (இறைவனும், தாங்களும்), நன்றி அனானிமஸ் 🙂

  இப்பாடலில் வரும் சீனர்கள், சிங்களர், காந்தாரர், கேகயர், ஆகியோர் இப்பொழுது வேறு தேசங்களாக உள்ளன. அக்காலத்தில் சிவபெருமானின் திருமணத்தை தரிசிக்க அந்நாடுகளில் இருந்து வந்தனர் என்றால் அங்கெல்லாம் அப்பொழுது சைவம் தழைத்திருந்தது என்று கொள்ளலாமா? ஏனென்றால் இப்பொழுது அங்கெல்லாம் வேறு மதங்கள் தான் கிளைத்தெழுந்திருக்கின்றன!

  கூடியிருந்த அனைவருக்கும் கண்கொள்ளாக் காட்சியான இறைவன் இறைவியின் திருமணம் நல்ல உயர்ந்த மண்டபத்தில் வைத்து தான் நடந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் எல்லாராலும் பார்த்து இன்புற்றிருக்க முடியும் 🙂

  amas32

  • anonymous says:

   //ஏனென்றால் இப்பொழுது அங்கெல்லாம் வேறு மதங்கள் தான் கிளைத்தெழுந்திருக்கின்றன!//

   he he,,,yaarai venumnaalum nambunga, but not this author = paranjothi of thiruvilayaadal puranam:))
   he even goes to the extent of writing that sanga tamizh poets like nakkeerar, kabilar, paranar going to kailash yatra for their “sins”:) this is all his karpanai, but poruntha cholla therila:)

   all the more, he will tell that my murugan = rudra sharma:)
   rudra sharma sat in the sangam as tamizh kadavul:) en murugan-kku pErE oru maathiriyaa irukku:)

 6. surya says:

  kambojam = current assam!!!

 7. என். சொக்கன் says:

  நண்பர் அனானிமஸ் சுட்டிக்காட்டிய தவறுகளையும் அகஸ்தியர் விஷயத்தில் நேர்ந்த குழப்பத்தையும் பதிவில் திருத்தியுள்ளேன். அவருக்கு என் நன்றிகள் 🙂

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 8. சோனக நாடு – Persia
  காம்போச நாடு – Cambodia
  அங்க நாடு, மகத நாடு, ஆரிய நாடு, காந்தார நாடு – 16 colonies of Aryans in north india
  கருநட நாடு, – Karnataka?
  கடார நாடு – Malaysia
  தெலுங்கு நாடு, – Andra
  என்று நினைக்கின்றேன்

  • anonymous says:

   அபராஜிதன், ஆனந்தன்
   thanks for filling up
   சோனகம்=Persia என்று இன்றே அறிந்தேன்!
   காம்போஜம்=கம்பூசியா(Cambodia) என்று சிலர் கொள்கிறார்கள்; சிலர் இந்திய மன்னர்கள் (Kambojas) என்றும் கொள்கிறார்கள்!

   ஒட்டியர்=வெளி தேசத் துருக்கர் என்று திருவிளையாடற் புராணம் பேசும்! மதுரை ஒட்டியர் கலகம்!
   நேரி மலை, சோழ நாட்டிலா? எங்கே இருக்கு-ன்னு அறிய ஆவல்!

   கலிங்கத்துப் பரணி பாட்டுக்கும் நன்றி!

 9. அதுசரி, சக்தியின்றி சிவமில்லை என்றும் உயிர்களின் படைப்புக்கு சக்தியே காரணம் எனவும் சொல்கிறார்களே? அப்படியானால் சிவன் பார்வதி கல்யாணத்துக்குப் பிறகல்லவா உயிர்களின் படைப்பு தொடங்கியிருக்க வேண்டும்?

 10. ஆனந்தன் says:

  ஒட்டியர் – ORISSA?
  காம்போஜம் என்றது கம்போடியாவை இல்லையா?
  காந்தாரம் – தற்போதைய KANDAHAR in AFGHANISTAN என்று கேள்விப்பட்டுள்ளேன்
  நேரியர் என்பது சோழநாடு என்பது போல, மேலே பாடலின் உரையில், சொக்கர் பொருள்கொண்டிருக்கிறார். நேரி மலையை உடைய சோழநாடு என்று TVU இல் உள்ளது.
  சோனகர் என்பது தற்போதைய பாக்கிஸ்தானைக் குறிக்குமோ?
  கூவிளம் (விலவம்) – திருகொளம்புதூர் – முன்பு சிற்றரசாக இருந்திருக்குமோ?

 11. ஆனந்தன் says:

  கலிங்கத்துப் பரணியிலும் இப்படியொரு பாடல் வருகிறது:

  கூடியிருந்த அரசர்கள்:
  329 தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
  கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே
  330 கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
  வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே.
  331 சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே
  கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே.
  332 வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களே
  குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே.
  333 எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிடச்
  சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே

 12. மாளவர் = People from Maldvis ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s