இசை கேட்டுப் பசி மறக்கும்

வண்ணக் குவளை மலர் வௌவி வண்டு எடுத்த

பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது

அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும்

இரும் கடா யானை இவன்

நூல்: நளவெண்பா (சுயம்வர காண்டம்)

பாடியவர்: புகழேந்தி

சூழல்: தமயந்திக்குச் சுயம்வரம். அதற்காக வந்திருக்கும் அரசர்களையெல்லாம் தமயந்தியின் தோழி அறிமுகப்படுத்துகிறாள். அதில் அவந்தி நாட்டு அரசனை அறிமுகப்படுத்தும் வெண்பா இது

ஓர் அருமையான எருமைக் கடா. அதற்குப் பசி. பசுமையான குவளை மலர்களைச் சாப்பிட எண்ணிக் கவ்வியது.

அப்போது அந்தக் குவளை மலரில் சில வண்டுகள் அமர்ந்திருந்தன. அவை இந்த எருமையைப் பார்த்தவுடன் சட்டென்று விலகி ஓடிச் சங்கீதம் பாடின.

அவ்வளவுதான், அந்த எருமைக்குத் தன்னுடைய பசிகூட மறந்துவிட்டது. கவ்விய குவளை மலரைச் சாப்பிடாமல் இசையைக் கேட்டு மயங்கி நின்றது.

அப்படி ஒரு சாதாரண எருமைக்குக்கூட இசை ரசனை உள்ள அவந்தி நாட்டை ஆளுகிறவன் இந்த அரசன், பெரிய யானைக் கடாவைப்போல் வலிமையானவன்.

துக்கடா

 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த
 • பண்ணில் செவிவைத்துப் பைங்குவளை உண்ணா
 • தருங்கடா நிற்கும் அவந்திநா டாளும்
 • இருங்கடா யானை இவன்

265/365

Advertisements
This entry was posted in நளவெண்பா, நாடகம், வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

15 Responses to இசை கேட்டுப் பசி மறக்கும்

 1. anonymous says:

  //இருங்கடா யானை இவன்//
  டேய் பசங்களா…இருங்கடா-ன்னு கவிஞரு சொல்லுறாரோ?:)
  நல்ல வேளை சொக்கர் பதம் பிரிச்சி எழுதறாரு:) = இரும் கடா

  கடா
  = பலி கடா, வளர்த்த கடா, ஆட்டுக் கடா, மாட்டுக் கடா, எருமைக் கடா

  அன்னைக்கு அலவன்-நள்ளி = ஆண் நண்டு-பெண் நண்டு பாத்தது, இன்னிக்கும் தொடருது பாருங்க:)
  கடா = ஆடு ன்னு இன்னிக்கி ஆகிப் போச்சு; கடா-கிடா வெட்டல்!

  ஆனா கடா என்பது ஆண் விலங்கைக் குறிக்கும் பொதுச் சொல்! (ஆட்டுக் கடா, எருமைக் கடா, யானைக் கடா)
  உடனே பூனைக் கடா-ன்னு சொல்லலாமா?-ன்னு கேட்கக் கூடாது:))
  வாழ்த்துக்கள் ன்னு சொல்லலாம்-ன்னு சொன்னா, உடனே யானைக்கள், பூனைக்கள்-ன்னு சொல்லலாமா?-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்:))

  குதிரைக்கு குர்ரம் ன்னா யானைக்கு யர்ரம் ன்னு ஆயிடாது! Can=Cans, Man=Mans ன்னு கேட்போமா?:) Man=Men
  இதுக்குப் பேரு தான் = “மரபியல்”

  (தொல்காப்பிய மரபியல் ஒரு நல்ல வாசிப்பு; வாசித்துப் பாருங்க)
  ———-

 2. anonymous says:

  இந்த “க்கள்” பன்மை விகுதி பத்தி, இன்னோரு நாள் விரிவா, தொல்காப்பியம் / நன்னூலில் இருந்து சொல்லுறேன்!
  இணையத்தில் அவசரக் கோலத்தில் இதை அணுகி விட்டார்கள்!

  புழுக்கள், பசுக்கள், குருக்கள், உடுக்கள், வாழ்த்துக்கள், எழுத்துக்கள்
  = புழுகள், பசுகள், குருகள்-ன்னு சொல்லிப் பாருங்க:)
  அதுக்காக வீடுக்கள்-ன்னு சொல்லலாமா?-ன்னு கேக்கக் கூடாது:)) வீடுகள் தான்!
  Can=Cans; Man=Mans?:) Man=Men
  இதுக்குப் பேரு தான் = “மரபியல்”

  வீடு=நெடில் ஒட்டி வந்த உ; அதனால் வீடுகள்
  புழு=குறில் ஒட்டி வந்த உ; அதனால் புழுக்கள்
  முத்து, வாழ்த்து, எழுத்து = மெய் ஒட்டி வந்த உ; அதனால் முத்துக்கள், வாழ்த்துக்கள், எழுத்துக்கள்

  புழு-க்-கள் = புழுவின் கள் = சைனீஸ் சூப்-ன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்:))
  விளையாட்டுக்கு வேணும்-ன்னா உதுவுமே தவிர, “தமிழ் மரபியலுக்கு” அல்ல!:))
  ————-

  நச்சினார்க்கினியர் உரையை எடுத்துப் பார்த்தால் தெரியும்; வாழ்த்துக்கள், எழுத்துக்கள் -ன்னு சரளமாப் புழங்குவாரு!
  தொல்காப்பிய உரையாசிரியர்கள் நச்சினார்க்கினியர், இளம்பூரணர், இவங்கெல்லாம் “எழுத்துக்கள்”-ன்னே பல இடங்களில் எழுதறாங்க!
  http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

  ஆனானப்பட்ட தொல்காப்பிய உரையாசிரியர் இலக்கணப் பிழை பண்ணிட்டாரு-ன்னு சொல்வோமா?:)))
  “மொழி மரபியலை”, நம் விருப்பத்துக்கேற்ப அணுகாமல், பொறுமையோடு அணுகிப் பார்த்தா, புலப்படும்!

 3. anonymous says:

  “மரபியல்” பேச்சு வந்ததால், வேறெங்கோ சென்று விட்டோம்! சொக்கரின் “இருங்கடா”-வுக்கு வருவோம்!:)
  இரும் + கடா = இருங்கடா! கொஞ்சம் இருங்கடா!:))))

  தொல்காப்பிய மரபியல்…
  விலங்குகளில்…ஆண்-பெண் பெயர்கள் எவை எவை, பொதுப் பெயர்கள் எவை எவை, எந்த context இல் பயன்படுத்தலாம்-ன்னு பேசும்! Context is important!

  கடா, ஏறு போன்றவை பொதுப்பெயர்கள் = பொதுவான ஆண் பெயர்கள்!
  * ஆட்டுக் கடா, எருமைக் கடா, யானைக் கடா = all male
  * அடல் ஏறு (எருது), அரி ஏறு (சிங்கம்), ஏறு மயில் = all male

  அதே போல் சேவல்!
  இன்னிக்கு கோழி-சேவல் ன்னு ஆகிப் போச்சு! ஆனா கருடச் சேவல், அன்னச் சேவல்-ன்னு பல பாடல்கள்! சேவல் = ஆண் பறவை
  கானங் கோழிக் கவர் குரல் சேவல்-ன்னு பாட்டு பாத்தோம்-ல்ல?
  = காட்டுக் கோழி இனத்தைச் சேர்ந்த, கவர்த்த குரலை உடைய ஆண் பறவை!
  —————

  நண்டு = அலவன்-நள்ளி
  குரங்கு = கடுவன்-மந்தி
  யானை = களிறு-பிடி
  மான் = கலை-பிணை
  மாடு = காளை – பசு
  எருமை = கண்டி-நாகு
  etc etc….

  சங்கரன்-சங்கரி
  அதே போல் என் முருகன் = வள்ளல்-வள்ளி:)))

 4. அன்பு அனானிமஸ்,

  நல்லதோர் அசரீரி போல உங்கள் குரல் ஆழ்ந்த தமிழை வழங்கிக்கொண்டே இருக்கிறது. “யார் யார் யார் அவர் யாரோ? என்று உங்கள் ஊர், பேர் தான் தெரியாது, இந்தக் குரல் யாருடையது என்று என்மனம் குடைந்துகொண்டே இருக்கிறது. பெயரை ஒருமுறை வெளிப்படுத்தக்கூடாதா?

  இல்லையெனில், பெயரும் உருவமும் தெரியாத தமிழ்க் கடவுள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதானா?

  • anonymous says:

   பழ.கந்தசாமி அவர்கட்கு வணக்கம்
   சில தனிப்பட்ட காரணங்களால், பெயர் இன்றி ஒதுங்கி இருக்கும் சூழல்! தமிழ்=365paa என்பதால் வருகிறேன்; வேறெங்கும் செல்ல முடிவதில்லை!
   நட்புறவின் புரிதல் மேம்படும் போது, மீண்டும் பெயருடன் வருவேன், முருகனருள்! – அது வரை என்னை மன்னிக்க!

   (எழுத்து நடையை வைத்துச் சிலர் எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார்கள் என்பது வேறு கதை:)))

   • நன்றி. வாசிக்க வாசிக்கப் புரிதல் மேம்பட்டு, ஒரு நாள் நட்பும் விரியும் என்று நம்புகிறேன்.

    விக்சனரிப் பங்களிப்பாளன் என்ற முறையில் இங்கிருந்து காட்டுகள் பெறுவதோடு, தெளிவும் நிறைவும் அடைகிறேன். மிக்க நன்றி.

   • anonymous says:

    அச்சச்சோ…இப்போது தான் இதைப் பார்த்தேன்…மன்னிக்கவும்!
    “நட்புறவின் புரிதல் மேம்படும் போது” -ன்னு சொன்னது, தங்களை அல்ல! தாங்கள் தான் நன்கு உரையாடுகிறீர்களே:)

    இன்னொரு நெருங்கிய நட்பு, முன்பு இதே 365paa வில் என்னிடம் கோபித்துக் கொண்டது!
    அந்த நட்பு-உறவின் புரிதல் மேம்படும் வரை, பெயரின்றிக் காத்திருந்து, அவர் இசைவோடு, பெயரோடு வருவேன்-ன்னு சொல்ல வந்தேன்!

    தமிழ் விக்சனரிப் பங்களிப்பு – அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்லும் சீரிய பணி; மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 5. anonymous says:

  இலக்கணம் போதும்; பாட்டுக்கு வருவோமா? 🙂

  சுயம்வரத்தில் எப்படி ஒவ்வொரு ராசாவும் அறிமுகம் ஆகுறாரு பாருங்க! ஒவ்வொரு மன்னனுக்கும் ஒவ்வொரு வெண்பா = short & sweet :))

  நம்ம சொக்கர், இதே சுயம்வரத்துக்குப் போயிருந்தா, அவரைப் பத்தி என்ன பாடி இருப்பாய்ங்க?:)

  ட்விட்டர் கீச்சுகளில் துள்ளும் சொக்கநாதப்
  பட்டர் பான்மையதைச் சொல்லக்கேள் – லிட்டர்
  லிட்டராய்த் தமிழ்-ஊற்றி, ரீங்காரப் பா-அதனில்
  மிட்டராம் மிராசு இவன்! :)))))))))))))

  • anonymous says:

   வண்ணக் குவளைமலர், வௌவி வண்டு எடுத்த
   பண்ணில் செவிவைத்துப் பைங்குவளை – உண்ணாது
   அரும் கடா நிற்கும், அவந்தி நாடு ஆளும்
   இரும் கடா யானை இவன்
   – கலக்கிட்டடா புகழேந்தி! வெண்பா-ன்னா அது நீ தான்! புகழேந்தி = ஒரு புகழ்-ஏந்தி!

 6. anonymous says:

  வண்ணக் குவளைமலர் = Violet Lily (My favorite color)
  வௌவி = கவ்வி
  வண்டு எடுத்த பண்ணில் = வண்டு பண் “எடுக்குதாம்”! வண்டுரைத்த பண்ணில்-ன்னும் பாடி இருக்கலாம்! வெண்பா கெடாது! அது என்ன “எடுப்பு”?

  வண்டின் ஆரம்ப ரீங்காரம் இறங்காது! ஏற்றலாத் தான் இருக்கும்!
  க்கொய்ங்ங்ங்ங்ங்ங்ங்
  ன்னு ஏறிக்கிட்டே தான் போகும்! = ஆரோகணம்! அவரோகணம் அல்ல!

  * பல்லவி = எடுப்பு
  * அனுபல்லவி = தொடுப்பு
  * சரணம் = முடிப்பு
  – இசையில், இவை நல்ல தமிழ்ச் சொற்கள்
  ————-

  வண்டு பல்லவி பாடுதாம்! = எடுப்பு
  அப்படீன்னா என்ன பொருள்? அப்போ தான் வண்டு ஆரம்பிக்கவே ஆரம்பிச்சி இருக்கு!
  அதுக்குள்ளாற இந்த எருமை மாடு, குளத்தில் இறங்கி…தின்னத் துவங்கிருச்சு! எதை? = குவளை இலையும் பூவும்!

  மாடு, பூ திங்குமா-ன்னு கேட்கக் கூடாது!:) குடுத்துப் பாருங்க, தெரியும்:)
  இங்கே = எருமை மாடு!
  எருமைக்கே உரிய “மிதப்பு”:) கிராமத்தில் இருந்தாத் தெரிஞ்சி இருக்கும்! குளத்தில் மிதக்கும் போது அசையவே அசையாதுங்க! கல்லெறிஞ்சாக் கூட:) = சோம்பேறி!

  அதுனால என்ன பண்ணும்-ன்னா, குளத்தில் இறங்கும் முன்னரே, வாயில் வைக்கோலை அசை போட்டுக்கும்!
  இல்லீன்னா. குளத்தில் உள்ள இலை, தண்டுகளைப் பறிச்சி, வாயில் வச்சிக்கும்!
  அதை அசை போட்டுக்கிட்டே…..மிதக்கும் சுகம்!:))
  What we do in Spa = sip some wine or amsterdam cheese & float in heaven! Same as எருமை மாடு:)))

 7. பொதுவாக மான் தான் இசைக்கு மயங்கி குத்திட்டு ஒரே இடத்தில் நின்றுவிடும் என்று கேள்விப்பட்டிருக்கேன். இங்கே கடா மாடே வண்டின் ரீங்காரத்திற்கு மயங்கி பசியை மறந்து குவளை மலர்களை உண்ணாமல் நின்று விடுகின்றதே!! என்ன ஒரு அழகான கற்பனை!

  நாம் எருமை மாட்டை சொரணை கேட்டது என்ற அளவில் தான் கொள்வோம். ஆனால் அவந்தி நாட்டில் இத்தனை ரசனையுடன் எருதுகளே இருந்திருக்கின்றன, அப்பொழுது அந்த நாட்டு மக்கள் எவ்வளவு அறிவுடன் இருந்திருப்பார்கள் 🙂 அவர்களை ஆளும் அரசனோ அதிமேதாவியாக இருந்திருப்பான். மேலும் யானை பலம் வேறு!

  தோழி சுயம்வரத்திற்கு வந்திருக்கும் அரசர்களின் பெருமையை வரிசையாக சொல்லிக் கொண்டு வருகிறாள் போலும். என்ன தான் தோழி அவந்தி அரசனின் பெருமையை எடுத்துரைத்தாலும் தமயந்தியை அவன் கவரவில்லை என்பதே உண்மை!

  amas32

  • ஆனந்தன் says:

   .அவந்தி நாட்டு எருமை இப்படி. அயோத்தி நாட்டு எருமையோ அன்னக் குஞ்சுக்குப் பால் கொடுக்குது! எருமைகள் கூட சந்தோஷமாக வாழ்ந்த காலம் அது. இப்போது மனிதர்களே எருமைகளாக மாறிவிட்ட காலம்!

 8. anonymous says:

  அப்படி தின்னுக்கிட்டே மிதக்கும் ஆசையில், எருமை வாய் வைக்குது, குவளைத் தண்டின் மீது….
  அப்போ கேட்கும் எடுப்பு = தமிழிசை = வண்டிசை!

  பண்ணில் செவிவைத்து = வாய் வைக்க வேண்டிய எருமை, செவி வைக்குது!
  எருமைக்கே தெரியுது, தமிழிசை மாண்பு! நமக்கு?:)

  பைங்குவளை உண்ணாது = அந்த மிதப்பு ஆசையும் மீறி, இசை-ஆசை!
  திங்கறதை மறந்து போச்சு!
  (கல்லூரி படிக்கும் போது ஒரு இளையராஜா கச்சேரி; என் பக்கத்தில் இருந்தவன் கொர்க்-கொர்க் ன்னு பாப் கார்ன் தின்னுக்கிட்டு இருந்தான்; அவனை நான் பார்த்த பார்வை இருக்கே, முருகா:))))
  ————-

  அரும் கடா நிற்கும் = இசைக்காக எருமையே திங்குறதை மறக்குது!
  அப்படீன்னா மனுசன்?
  அப்படியாப்பட்ட மனுசங்க வாழும் அவந்தி நாடு = உஜ்ஜயினி-ன்னு படிச்சிருக்கோமே, அந்த ஊரு! Land of Arts!
  சிவபெருமான் 12 சோதிலிங்கத்தில் மகா காளராக இருக்கும் ஊரு!

  ஆளும், இரும் கடா யானை இவன் = அந்த அவந்தி நாட்டை ஆளும் ஆண் யானை இவன்!
  (ஆனாலும் தமயந்தி தேடுவது என்னவோ நளனைத் தான்)
  ————-

  • anonymous says:

   (இப்படி அழகு-இசை-கலை ன்னு ஆயிரம் இருந்தாலும், தமயந்தி புற அழகில் மயங்கி….
   Instant காதல் = கண்டவுடன் காதல் கொள்ளவில்லை!
   நளனின் குணத்தை முன்பே அன்னம் சொன்னதால், நளன் எப்படி இருப்பான்-smartஆ? ன்னு கூடப் பார்க்காமல், குணத்தைக் கேட்டே காதல்…..

   நளனே சொல்லியும், தேவர்கள் சொல்லியும் கூட….
   அவனை….அவளால்…மனத்தில் இருந்து கடைசி வரை இறக்கவே முடியவில்லை
   – குணத்தால் இறுகியது, முருக குணத்தால் இறுகியதை ஏனோ வாழ்வில் இறக்கவே முடிவதில்லை:(((

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s