நல்லவர்களின் கொள்கைகள்

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்; செரு வாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்பு உடைமை, செய்தப்

பல நாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள்

நூல்: திரிகடுகம் (#22)

பாடியவர்: நல்லாதனார்

சிறந்த குணங்களைக் கொண்ட நல்லவர்களின் கொள்கைகள் மூன்று:

1. தங்களுடைய வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ்வது

2. போரில் வெற்றி கிடைப்பதற்காகத் தாங்கள் செய்த சாதனைகளைத் தம்பட்டம் அடிக்காமல் / அதற்குப் பலன் எதிர்பார்க்காமல் இருப்பது

3. பல விஷயங்களை ஆராய்ந்து அவற்றில் சிறந்தவற்றைமட்டும் படிப்பது

துக்கடா

 • இந்தக் காலத்தில் #3 ஓகே, #1கூடக் கொஞ்சம் ஓகே, கால்வாசி என்று இல்லாவிட்டாலும், வருவாயில் ஒரு பகுதியை நலச் செயல்களுக்காகப் பயன்படுத்துவது சாத்தியம்தான், ஆனால் அந்த #2? Performance Appraisalன்போது செய்த ‘சாதனை’களை எடுத்துச் சொல்லிக் கேட்காவிட்டால் சம்பளம் உயராத காலமாச்சுதே, Self Promotion என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான குணம் என்று அறியப்படும் Social Media யுகமாச்சுதே, என்ன செய்யலாம் மிஸ்டர் நல்லாதனாரே? :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்; செருவாய்ப்பச்
 • செய்தவை நாடாச் சிறப்புடைமை; எய்தப்
 • பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும்
 • நலமாட்சி நல்லவர் கோள்

263/365

This entry was posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா. Bookmark the permalink.

2 Responses to நல்லவர்களின் கொள்கைகள்

 1. வருவாயில் பத்து சதவிகிதம் தானம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நல்லாதனார் கால் பங்கு என்கிறார். செய்ய முடிந்தால் நல்லதுதான்.

  பிறருக்குச் செய்த நன்மைகளை வேண்டுமானால் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் வேலையில் செய்த சாதனைகளை, திரு. சொக்கன் கூறியது போல தம்பட்டம் அடிக்காமல் இன்றைய வேலைச் சூழலில் முன்னேற முடியாது தான். இதுவும் மேற்கத்திய நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வந்த கலாச்சாரமே!

  முன்பு நம் மேலதிகாரிகள் நமக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் அனுபவத்தின் அடிப்படையில் கொடுத்து வந்தனர். ஆனால் இன்று பதவி உயர்வோ சம்பள உயர்வோ அனுபவத்தின் அடிப்படையில் வருவதில்லை, நம் உழைப்பின் தரத்தைக் கொண்டே நிர்ணயிக்கப் படுகிறது. அதனால் நம் பங்களிப்பை மேலதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டியது நம் பொறுப்பாகிறது.

  நம் கலாச்சாரப்படி எதையும் பிறர் கவனித்து மெச்ச்வேண்டுமே தவிர நம் பெருமையை நாமே பரைசாற்றிக் கொள்ளகூடாது. கிழக்காசிய நாடுகளில் பரவலாக இருந்த இந்த கலாச்சாரம் இப்பொழுது globalisationஆல் மாறிவிட்டது!

  amas32

 2. ஆனந்தன் says:

  ஒரு போராளி போர்க்களத்தில் செய்வது பொதுநலத்துக்கான தியாகம். போர்முடிந்த பிற்பாடு அதை எல்லோருக்கும் தம்பட்டம் அடிக்கும்போது அது சுயநலத்துக்கான செயல். அதனாற்றான் அது தவறாகிறது. பல அரசியல்வாதிகளில் இத்தன்மை மேலோங்கி நிற்பதைப் பார்க்கலாம்!

  ஆனால், Performance Appraisal இல் தான் திறம்படச் செய்துமுடித்த வேலைகளத் தனது மேலாளருக்கு அறியத்தருவது ஒரு தொழிலாளியின் கடமைகளில் ஒன்றாகும். அது ‘தம்பட்டம்’ ஆகாது என்பது எனது கருத்து.

  இங்கு கருத்துக்கு எடுக்கப்படவேண்டியவற்றுள் சொல்பவரின் மனோநிலையும் ஒன்றாகும். (ie. the mental attitude of the person saying it) ஆணவம் அல்லது இறுமாப்பு அங்கே இருக்குமாயின் அதுதான் தவறு. அந்த இறுமாப்பு தம்பட்டத்தில் இருக்கும். Performance Appraisal இல் இருக்காது (இருக்கக் கூடாது).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s