மாதோட்ட மாதேவன்

கரை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள்

சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சரத்தானை

மறை ஆர் புகழ் ஊரன் அடித் தொண்டன் உரை செய்த

குறையாத் தமிழ் பத்தும் சொலக், கூடா கொடுவினையே!

நூல்: தேவாரம்

பாடியவர்: சுந்தரமூர்த்தி நாயனார்

சூழல்: இலங்கை மாதோட்டம் நகரில் உள்ள சிவபெருமானைப் பாடியது

கருப்பு நிறம் பொருந்திய கடல் சூழ்ந்த, கடற்கரையை உடைய மாதோட்டம் என்ற நல்ல நகரம். சிறகுகளைக் கொண்ட வண்டுகள் யாழ் போன்ற இசையை எழுப்புகின்ற சோலைகளை உடைய திருக்கேதீச்சரம் என்ற திருத்தலம். அங்கே எழுந்தருளியிருக்கும் சிவனின் தொண்டன், வேதத்தைச் சொல்லுவதால் புகழ் அடைந்த இந்த நம்பி ஆரூரன்.

அத்தகைய நம்பி ஆரூரன் பாடிய இந்தப் பத்து தமிழ்ப் பாடல்களையும் பாடுகிறவர்களைக் கொடிய வினைகள் துன்புறுத்தாது.

துக்கடா

 • ’பத்துப் பாடல்களா? ஒண்ணுதானே இருக்கு?’ என்று குழம்பவேண்டாம், திருக்கேதீச்சரத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய முழுத் தொகுப்பு இங்கே தொடங்குகிறது: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=1116
 • நம்பி ஆரூரர் மாறிச் சுந்தர மூர்த்தி நாயனார் ஆன கதையை ஏற்கெனவே #365paa வரிசையில் பார்த்திருக்கிறோம் : https://365paa.wordpress.com/2011/09/18/075/

261/365

This entry was posted in சிவன், சுந்தரர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

7 Responses to மாதோட்ட மாதேவன்

 1. ஆனந்தன் says:

  இலங்கையில் தொன்மையான திருத்தலங்கள் பல இருப்பினும், தேவாரமுதலிகளால் பாடப்பெற்ற திருத்தலங்கள் இரண்டு மட்டுமே. அவை திருக்கேதீச்சரமும், திருக்கோணேச்சரமும் ஆகும். தேவாரமுதலிகள் இராமேசுவரத்தை வழிபட வந்தபோது, அங்கிருந்து கிழக்குத்திசையை நோக்கி வணங்கி இத்தேவாரங்களைப் பாடியருளியதாகக் கூறுவர். திருக்கோணேச்சரப் பதிகத்திலிருந்தும் ஒரு பாடலை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  அருணகிரிநாதரின் திருப்புகழில் ஈழத்திருத்தலமான கதிர்காமம் பலமுறை இடம்பெறுகிறது.

 2. anonymous says:

  இந்தப் பாடலை, இன்று இட்ட சொக்கருக்கு, என் தனிப்பட்ட முறையில் மிகவும் நன்றி!
  (இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைக் குழுவின் தீர்மான நாளிலே)

  இது, ஈழ மக்களின் நல் வாழ்வுக்கான பிரார்த்தனை – வேண்டுதல்!
  = குறையாத் தமிழ் பத்தும் சொல்லக், கூடா கொடுவினையே!
  ———

  சில துயரங்கள் = தீராத் துயரங்கள்!
  துயரத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம்!
  ஆனா, துயர காலத்தில், கண் துடைக்க ஒருவரும் இன்றி இருப்பது, பெரும் கொடுமை!

  ஒரு வண்டியை வேகமாக ஓட்டினாலே, காவல் துறை கண்ணில் பட்டு, தண்டனையோ/ லஞ்சமோ அழவேண்டி இருக்கு – உலகின் எந்த மூலையிலும்!
  ஆனா, ஒட்டுமொத்த உலகின் கண்ணில் பட்டும், வேடிக்கை பார்ப்பதே வாடிக்கை என்பது என்ன சாபமோ தெரியல!
  – நல்லூர் முருகா, நியாயமா?….

  ஒரு தலைமுறைக்கே வாழ்க்கை அமையணும்!
  – இதை மனசுக்குள் சொல்லிக்கிட்டு, இந்த ஈழப் பாடலை, மனம் விட்டு படிங்க! = குறையாத் தமிழ் பத்தும் சொல்லக், கூடா கொடுவினையே!

 3. இலங்கையில் நிறைய சிவாலயங்கள் உள்ளன என்று தெரியும். அதில் ஒன்று திருக்கேதீச்சரம் என்ற இந்த தொன்மையான திருத்தலம் என்று தெரிகிறது.

  இறைவன் மேல் பாடுகிறவர் தூய்மையான சான்றோராக இருப்பின் அவர் பாடும் எந்தப் பாடலும் வலிமை மிக்கதாக ஆகிறது. அதை அவர்கள் இறைவனுக்கு தான் அற்பணித்தாலும் அவை நாம் உய்வதற்காக்த் தான் பாடப்பட்டவை. ஆகவே சுந்தர மூர்த்தி நாயனாரை போற்றுவோம். அவர் வழங்கிய பாடல்களை பாடி நம் கொடிய வினைகளில் இருந்து விடுபடுவோம்.

  amas32

 4. anonymous says:

  மாதோட்டம்:
  பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்குத் தெரியும்;

  இங்கிருந்து மாதோட்டம் எவ்ளோ தூரம்?-ன்னு வந்தியத்தேவன் பூங்குழலியைக் கேட்பான்; பூதத்/நாகத் தீவில் இறக்கி விடுவா!
  இதே மாதோட்டத்தில் தான் வந்தியை ஒற்றன்-ன்னு பிடிச்சி வைப்பாங்க!

  மாதோட்டம் துறைமுகப் பட்டினம்! = இந்தியாவுக்கு மிக அருகில்!
  இராமேஸ்வரம்-தனுஷ்கோடியில் இருந்து ஈழத்துக்குச் சென்றால், முதலில் வரும் திட்டு=தலைமன்னார்; சற்றே உள்ளே நகர வருவது=மன்னார், மாதோட்டம்!

  மாந்தோட்டம் = மாதோட்டம் என்று ஆகி இருக்கலாம்! மா மரங்களின் அடர்த்தியைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன!
  ————

  இலங்கையின் நான்கு முனையிலும் நான்கு ஈச்வரங்கள்
  கிழக்கே= கேதீச்சரம் (மாதோட்டம்)
  வடக்கே= நகுலேச்சரம்
  மேற்கே= கோணேச்சரம் (திரிகோணமலை)
  தெற்கே= தொண்டேச்சரம்
  இதில்லாமல், முன்னேச்சரம் என்று ஒன்றும் சேர்ந்து. மொத்தம் 5 ஈச்வரங்கள்!

  சம்பந்தர் & சுந்தரர், இராமேஸ்வரக் கரையில் இருந்தே, கேதீச்சரம் & கோணேச்சரம் தலங்களைப் பாடினார்கள்! – இவை இரண்டு மட்டுமே ஈழத் தேவாரத் தலங்கள்!

  • anonymous says:

   ஈழத்து முருகன் ஆலயங்கள் செல்ல வேண்டும் என்பது என் நெடுநாள் அடிமனசு ஆசை!
   குறிப்பா….கதிர்காமம், தந்தமலை, செல்வர் சன்னிதி!

   ஏன்-ன்னா, இங்கு முருகன்….பண்டைத் தமிழ் வடிவமாக இருக்கான்;
   = வேலாகவோ, கந்துழியாகவோ, திரை வடிவிலோ!
   அதிலும், கதிர்காம பாத யாத்திரை….அந்த மலைகள், சிற்றாறுகளினூடே…

   முருகா, இந்த ஆசையை என்னைக்கு நிறைவேத்தி வைப்பியோ?

  • anonymous says:

   ஈழத்தின் சிறந்த திருமால் ஆலயங்கள் = பொன்னாலை & வள்ளிபுர ஆழ்வார்
   இந்த வள்ளிபுர ஆழ்வார் = வள்ளியின் தாய்வீடாகவே கருதுவதுண்டு! இங்கிருந்து மாப்பிள்ளை முருகனுக்குச் சீர்வரிசைகளும் உண்டு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s