இருவராய்த் திரியும் ஒருவர்

பொன் திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும்

நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்

இருவர் அங்கத்தான் திரிவரேனும் ஒருவன்

ஒருவர் அங்கத்து என்றும் உளன்

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார்கள் அருளிச் செயல்

பாடியவர்: பொய்கையாழ்வார்

பொன் போன்ற மேனியும், பின்னிவிட்ட சடையுமாக நிற்கும் புண்ணியர், சிவபெருமான்.

நின்றபடியே உலகத்தை அளந்தவர், திருமால்.

இவர்கள் இருவரும், இரண்டு வெவ்வேறு உடல்களில் வலம் வருவார்கள், ஆனால் உண்மையில் இருவரும் ஒருவர்தான், இவருக்குள் அவரையும், அவருக்குள் இவரையும் எப்போதும் பார்க்கலாம்.

துக்கடா

 • ’அரியும் சிவனும் ஒண்ணு’ என்று பழமொழியாகக் கேட்ட விஷயம், அழகான வெண்பாவில் அதுவும் ஓர் ஆழ்வாரே சொல்லக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • பொன்திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும்
 • நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
 • இருவரங்கத் தான்திரிவ ரேனும் ஒருவன்
 • ஒருவரங்கத்துள் என்றும் உளன்

260/365

This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், சிவன், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு, வெண்பா. Bookmark the permalink.

5 Responses to இருவராய்த் திரியும் ஒருவர்

 1. anonymous says:

  இந்தப் பாட்டை இட்ட சொக்கருக்கு நனிமிகு நன்றி:)

  One 365paa thukkada which i will never forget is this
  //அரியும் சிவனும் ஒண்ணு’ என்று பழமொழியாகக் கேட்ட விஷயம், அதை ஓர் ஆழ்வாரே சொல்லக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது!//
  Just one line says it all 🙂

 2. anonymous says:

  பொதுவா, “நாலாயிர திவ்யப் பிரபந்தம்”-ன்னு பேரிட்டு அழைப்பது இன்னிக்கி வழக்கமா இருக்கு!
  ஆனா ஆழ்வார்கள் பாடியதோ ஈரத்தமிழ்! அதற்கு எப்படி ‘திவ்ய ப்ரபந்தம்’-ன்னு வடமொழிப் பேரு வந்துச்சி?

  அதைத் தொகுத்த நாதமுனிகள், அதற்கு வைத்த தூய தமிழ்ப் பெயர் = “அருளிச் செயல்”

  ஆழ்வார்கள் வாழி, **அருளிச்செயல்** வாழி
  தாழ்வாதும் இல்குரவர் தாம்வாழி – ஏழ்பாரும்
  உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
  செய்ய மறை தன்னுடனே சேர்ந்து!
  ——-

  * கம்பன் வச்ச பேரு = இராமவதாரம்! ஆனா, அது எப்படிக் கம்ப இராமாயணம்-ன்னு பின்னாளில் ஆயிருச்சோ, அதே போலத் தான்….
  * அப்பர் பெருமான் பாடியது மட்டுமே = தேவாரம்! ஆனா மொத்த திருமுறைக்கும் அதே பேரே பரவி, தேவாரப் பயிற்சிப் பள்ளி-ன்னு ஆயிருச்சோ…அதே போலத் தான்!

  ஏன் “திவ்யப் பிரபந்தம்”-ன்னு பேரு பரவிச்சு?

  சொல்லப் போனா, சைவத் திருமுறைக்கு உள்ளேயே ஒரு “பிரபந்தம்” இருக்கு! – யாருக்காச்சும் தெரியுமா? 🙂

  • anonymous says:

   சைவத் திருமுறை – 11ஆம் திருமுறைக்கு = பிரபந்தம்-ன்னு தான் பேரு!:)
   ——
   ஏன் “திவ்யப் பிரபந்தம்”-ன்னு பேரு பரவிச்சு?

   ஆயிரம் ஆண்டுக்கு முன்பு ஆலயங்களில் கோலோச்சியது சம்ஸ்கிருதம் மட்டுமே!
   ஆனா, பொதுமக்கள் கூடும் ஆலயத்தில், பொதுமக்களின் மொழி இருந்தால் தான் நல்லது-ன்னு கருதியவர்கள் நாதமுனிகள், இராமானுசர் போன்றவர்கள்!

   பண்ணிசையோடு கூடிய ஆழ்வார் பாசுரங்களை, எப்படி ஆலயத்துக்குள் நுழைப்பது?
   அத்தினி சீக்கிரம் விட்டுருவாளா?:))

   இன்னிக்கே, தமிழ் வழிபாட்டுக்கு ஆயிரம் தடங்கல்! – ஓதுவார்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் ஓதலாம், அதுவும் அபிஷேகம்/ மந்திரம் எல்லாம் ஆன பின்பு, ஒரு ஓரமா இருந்து தான் ஓதணும், கருவறைக்குள்ள எல்லாம் தமிழ் தப்பித் தவறிக் கூட நுழைஞ்சீறக் கூடாது!

   இன்னிக்கே இப்படின்னா, 1000 ஆண்டுக்கு முன்பு?
   ——

 3. anonymous says:

  What happ to 365paa suddenly? Itz taking all my comments in Bold; How bold it can do that?:)

 4. //அரியும் சிவனும் ஒண்ணு’ என்று பழமொழியாகக் கேட்ட விஷயம், அழகான வெண்பாவில் அதுவும் ஓர் ஆழ்வாரே சொல்லக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது!//
  anonymous சொல்வதையே தான் நான் திரும்ப சொல்வது போல இருக்கும். ஆனால் அது தான் என் எண்ணமும், அதனால் மிக்க நன்றி சொக்கரே, இந்தப் பாடலை இட்டதற்கு, மிக்க மகிழ்ச்சி நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டுச் சொன்னதற்கு 🙂

  நான் எப்பொழுதும் பாட்டை மட்டும் இருமுறை படிப்பேன், உங்கள் விளக்கங்கள் இல்லாமல், உங்கள் உதவியில்லாமல் எனக்கு ஏதாவது புரிகிறதா என்று பார்ப்பதற்கு. 🙂 படித்தவுடன் பிரபந்தம் என்று தெரிந்தது. ஆனால் முதல் வரியிலேயே சிவனை கொண்டாடி இருக்கிறாரே ஆழ்வார், எப்படி என்று நினைத்து மறுமுறை படித்தேன். சின்னப் பாடல், ஆனால் ஒவ்வொரு எழுத்துக்கும் லட்ச ரூபாய் கொடுக்கலாம்.

  சிவனுக்கு என்று ஒரு குறிப்பு எல்லாராலும் கையாளப்படுகிறது, படித்தவுடன் அவர் சிவனைத் தான் குறிப்பிடுகிறார் என்று எந்த ஒரு எளியவனும் தெரிந்துக் கொள்ளலாம். அதுவே பொன் போன்ற திருமேனி, சடாமுடி தரித்தவன். அதேதான் ஆழ்வார் இங்கே குறிப்பிடுகிறார்.

  திருமால் பல அவதாரங்கள் எடுத்தாலும் அவர் வாமன அவதாரம் எடுத்து பின் உலகளந்த பெருமாளாகக் காட்சி கொடுத்தது மற்ற அவதாரங்களை விட கொஞ்சம் ஸ்பெஷல் தான். இந்தப் பாடலில் திருமாலைக் குறிப்பிடுகையில் பாற்கடலில் பள்ளிக்கொண்டவன் என்றோ கம்சனை வதம் செய்தவன் என்றோ ஹிரண்யகசிபுவை அழித்தவன் என்றோ கூறாமல் உலகளந்த பெருமாளாகக் குறிப்பிடுவது ஆழ்வாரின் பெருமையை காட்டுகிறது. இந்த அவதார மகிமையை அனானிமஸ் அழகாக எடுத்துரைப்பார் என்று நினைக்கிறேன் 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s