அழகு!

மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,

உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பு அல்ல, நூற்கு இயைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

நூல்: சிறுபஞ்சமூலம் (#35)

பாடியவர்: காரியாசான்

கூந்தல் அழகும், கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், காதின் அழகும், குற்றம் இல்லாத பல்லின் அழகும் உண்மையான அழகுகள் அல்ல, இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நல்ல நூல்களைப் படித்து, அதன்மூலம் நல்ல விஷயங்களைச் சொல்கின்ற திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள், அதுதான் என்றைக்கும் நிலைத்திருக்கும் நிஜமான அழகு.

துக்கடா

 • எனக்கு நிஜமாகவே ஒரு பெரிய சந்தேகம், இந்தப் பாட்டு ஆணுக்கு எழுதப்பட்டதா? அல்லது பெண்ணுக்கா? அல்லது இருவருக்குமா? எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ‘அழகு’தான் :>
 • ’சிறுபஞ்சமூலம்’ என்பது ஐந்து மூலிகைகளைக் கொண்ட ஓர் இயற்கை மருந்து, அதுபோல் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகளைத் தொகுத்துத் தருவதால் இந்த நூலுக்கும் அதே பெயர் அமைந்தது
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்
 • மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
 • உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
 • பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
 • சொல்லின் வனப்பே வனப்பு

259/365

Advertisements
This entry was posted in அறிவுரை, சிறுபஞ்சமூலம், வெண்பா. Bookmark the permalink.

4 Responses to அழகு!

 1. Simple song, thank you Chokkare 🙂

  நீங்கள் கூறியிருப்பது போல இந்த அழகுக் குறிப்பு இரு பாலாருக்கும் பொருந்துவது போல் தான் உள்ளது 🙂 இந்தப் பாடலை நான் பள்ளியில் படித்திருக்கிறேன்.

  நல்ல நூல்களை படித்தால் மட்டும் போதாது, அதன் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் காரியாசான். நல்ல கருத்துக்களை உள் வாங்கிக் கொண்டால் தான் பிறருக்கு எடுத்துச் சொல்லும் திறன் வரும்.

  வயது ஏற ஏற தலை முடி உதிர்ந்துவிடும், அது வரை முடியில்லாத காது மடல்களில் உதிர்ந்த அவை வந்து உட்கார்ந்து கொள்ளும். பற்கள் விழுந்துவிடும், நகங்களும் மார்பும் பொலிவிழக்கும். ஆனால் உண்மையில் சொல்லின் வனப்பே என்றும் நிலைத்திருக்கும் அழகு. அது வயதினால் மாசு படாது, பொலிவிழக்காது.

  amas32

 2. இதைப் போன்ற இன்னொரு அழகான நாலடியார் பா:

  குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
  மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
  நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
  கல்வி யழகே அழகு.

 3. Brema Kumarie Murali Krishnan says:

  Very very nice statement. this is my office net so no tamil fornt. So that i am type in english sorry.
  i am know only Tamil.
  thank you
  brema

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s