தனியே வந்தவன்

எவன்கொல்? வாழி, தோழி! மயங்குபிசிர்

மல்கு திரை உழந்த ஒல்குநிலைப் புன்னை

வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப

மணம்கமழ் இளமணல் எக்கர்க் காண்வரக்

கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடக்

கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி

தாரன், கண்ணியன், சேரவந்து ஒருவன்

வரிமனை புகழ்ந்த கிளவியன், யாவதும்

மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன், அதற்கொண்டு

அரும்படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய்

அவ்வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி

வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி

இறைவளை நெகிழ்த்த நம்மொடு

துறையும் துஞ்சாது, கங்குலானே!

நூல்: அகநானூறு (#250)

பாடியவர்: செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதக்கொற்றனார்

சூழல்: நெய்தல் திணை, காதலன் காதலியை மணக்க விரும்பினான், அதுபற்றித் தோழியிடம் பேசினான், மகிழ்ச்சியடைந்த அவள் தன்னுடைய சிநேகிதி(அவனுடைய காதலி)யிடம் மறைமுகமாக அதனைச் சொல்கிறாள்

தோழி, நீ வாழ்க!

நெருங்கிய துளிகள் நிறைந்த அலைகள் கடற்கரையின்மீது மோதுகின்றன. அங்குள்ள புன்னை மரம் காற்றில் அசைகிறது, அதன் பூங்கொத்துகளில் வண்டுகள் சத்தமிடுகின்றன, அந்தப் பூக்களில் இருந்து உதிர்ந்த மகரந்தத் தூள்கள் மணல் மேட்டில் விழுகின்றன, அதனை அலங்கரிக்கின்றன.

சில நாள்களுக்கு முன்னால், நீயும் நானும் மற்ற தோழிகளுடன் அந்த மணல் மேட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம். ஈர மணலைக் குவித்து அழகான வீடு ஒன்றைக் கட்டினோம்.

அப்போது, மலர் மாலை அணிந்த ஓர் இளைஞன் அங்கே வந்தான். அவனுடைய தேர் மிகப் பெரியது, அதில் அவனுடன் பலரும் வந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் தேரை ஓரமாக நிறுத்தினான். மற்றவர்களை அங்கேயே விட்டுவிட்டு அவன்மட்டும் நம்மை நெருங்கினான். நாம் கட்டிய மணல் வீட்டை ஆவலுடன் பார்த்தான். ‘ரொம்ப அழகா இருக்கே’ என்று பாராட்டினான். அதற்குப் பதில்கூட எதிர்பார்க்காமல் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டான்.

அவ்வளவுதான். அந்த விநாடிமுதல், அவனுடைய ஞாபகம் உன்னை வாட்டுகிறது, உனது பெரிய தோள்கள் மெலிந்துவிட்டன, முன்கையில் இருந்த வளையல்கள் நெகிழ்ந்து கீழே விழுந்துவிட்டன.

அழகான வலையை உடைய மீனவர்களுடைய கிராமம் இது. இங்கே உள்ள பெண்கள் தங்களுடைய கொடிய வாயினால் உன்னைப் பற்றிப் புரளி பேசுகிறார்கள். அதைக் கேட்டு நம் நெஞ்சம் கலங்குகிறது. ராத்திரியில் தூக்கம் வருவதில்லை.

அது சரி, உனக்குதான் காதல் அவஸ்தை, ஊர் இப்படிப் பேசுகிறதே என்று கவலை, தூங்காமல் தவிக்கிறாய், இந்தக் கடலுக்கு என்ன பிரச்னை? அதுவும் இரவுமுழுக்கத் தூங்காமல் உனக்குத் துணையாக விழித்திருக்கிறதே!

துக்கடா

 • இந்தப் பாடலின் சூழலுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் தோன்றலாம். அதுதான் தோழியின் புத்திசாலித்தனம். ‘அவன் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்பறான்’ என்று நேரடியாகச் சொல்லாமல், ‘அந்தப் பயலை நினைச்சு நீ வேதனைப்படறது எனக்குத் தெரியும், ஊரும் உங்களைப் பத்தி நாலுவிதமாப் பேசுது’ என்றெல்லாம் சொல்கிறாள், அதன்மூலம் அவளைத் திடீர்த் திருமணத்துக்குத் தயார்படுத்துகிறாள்
 • தோழிமட்டுமில்லை, மணலில் வீடு கட்டி விளையாடும் பெண்ணைப் ’பார்த்த’ அந்த இளைஞனும் வெவரமானவன்தான். அவளுடைய அழகைப் பாராட்டாமல், அவள் கட்டிய வீட்டைமட்டும் பாராட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான், மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்கிற நம்பிக்கை :>

258/365

This entry was posted in அகநானூறு, அகம், கடற்கரை, காதல், தோழி, நாடகம், நெய்தல், பிரிவு. Bookmark the permalink.

18 Responses to தனியே வந்தவன்

 1. anonymous says:

  ரொம்பக் க’ஷ்’டமான பாட்டாப் போட்டு இருக்கீங்களே சொக்கரே?:)
  ஒன்னுமில்ல! என் க’ஷ்’டத்தைச் சொன்னேன்:))
  கொஞ்ச நாளுக்கு முன்னாடித் தான், ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன்:

  * Latop wallpaper-இல் அந்தப் புகைப்படம்; அதைப் பாத்துக்கிட்டே தூங்குவேன்; அப்போ bubbles screensaver வந்து முகத்தை லேசா மறைக்கும்…அதைக் கூட என்னால பொறுத்துக்க முடியாது
  = பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தன்ன..

  * Alarm Clock டொக்டொக்-ன்னு பக்கத்தில் சத்தம் கேட்கும்; ஒருக்களித்துப் படுக்கும் எனக்குத் தூக்கமே வராது
  = கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே

  அந்தப் பின்னூட்டத்தை ஞாபகம் வச்சிக்கிட்டு, சொக்கரு இப்படியா என்னைப் பழி வாங்குவது?:)
  = துறையும் துஞ்சாது, கங்குலானே!
  (கடலும் இரவுமுழுக்கத் தூங்காமல் உனக்குத் துணையாக விழித்திருக்கிறதே)
  ——

  தூக்கத்தைப் பறிக்கும் பாடல்களைப் போடாதீங்க சொக்கரே – வேண்டுகோள்:))

 2. anonymous says:

  பாட்டும் க’ஷ்’டம் (கடினம்) தான்!

  *மயங்கு பிசிர்
  *திரை உழந்த
  *வண்டு இமிர்
  *மணல் எக்கர்
  *கொடுஞ்சி நெடுந்தேர்
  *அரும்படர் எவ்வம்
  *கொடுஞ்சி நெடுந்தேர்
  *திரை உழந்த
  *வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை

  – இதெல்லாம் என்ன?
  அருஞ்சொற் பொருள்-ன்னு ஒன்னு முன்னெல்லாம் போட்டீங்க! ஆனா இப்போ இல்ல! Why?
  இதெல்லாம் Bookஆ போடப் போறீகளா? அதான் இங்கிட்டு கொடுக்கறதில்லையா?:)

  • anonymous says:

   *மயங்கு பிசிர் = கலங்கிய துளி (கடல் அலைத் துளி)

   கடல் அலையின் துளி, பட்டுத் தெறிச்சித் தெறிச்சி, ஒரு நுரையோட இருக்கும்! அந்தத் துளிக்குப் பேரு = பிசிர்
   பிசிராந்தையார் = பிசிர் என்னும் ஊரு (கடற்கரை ஊரு); அங்கு வாழ்ந்த ஆந்தையார்

   துளி=drop
   திவலை=spray(ed) drop
   பிசிர்=foam(ed) drop
   ———-

   *திரை உழந்த = அலை வந்து வருத்திய
   *வண்டு இமிர் = வண்டின் சத்தம் (வண்டு முரலும்=மெல்லொலி; வண்டு இமிரும்=வல்லொலி)

   *மணல் எக்கர் = Sand Dune
   (மணற் குன்று-ன்னு சொல்லுறோம்; எக்கர் = நல்ல தமிழ்ச்சொல்; எக்கர்->ஏக்கர் ஆகாம இருந்தாச் சரி:)
   ———-

   *கொடுஞ்சி நெடுந்தேர் = தேரின் உச்சிக் கலசம் = கொடுஞ்சி என்பது தமிழ்ப் பெயர்
   (கலயம் என்ற தமிழ்ச்சொல்லே கலஸம் என்று ஆனது; ஓம் தங்க கலஸ காந்தாய கிருஷ்யே நமஹ:))
   கலயம் = சிறுசு; குடம் = பெருசு

   *அரும்படர் எவ்வம் = எவ்வம் ன்னா துன்பம்

   *வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை = கவ்வை ன்னா Curse/Rumor;
   அலர்=Light Rumor கவ்வை=Curseful Rumor
   அந்தப் பெண்களுக்கு வெவ்வாயாம் = Acid Tongue = வெ + வாய் = வேகும் வாய்; சிலர் வாயிலேயே வேக வச்சிருவாங்க:((

  • anonymous says:

   Hope this helps to read the “Paa” by yourself;

   You can pick two two lines at a time
   Get the jist of it
   Next two lines & the jist
   Now read all 4 lines together – Dissolve yourself in sanga tamizh density

   சங்கத் தமிழ் = காபி உறிஞ்சுறாப் போலத் தான்!
   விட்டு விட்டு உறிஞ்சும் போது தான், அந்தச் சுகம் தெரியும்:))

  • ஆனந்தன் says:

   பதவுரை தந்து உதவுமாறு முன்பு ஒருமுறை கேட்டிருந்தேன். இவ்வகையான பாடல்களை நாமாகவே விளங்கிக் கொள்ள அது மிகவும் பயன்படும். இல்லாவிடில், பல்லில்லாதவன் முன் முறுக்கு ஒரு ‘ப்ளேட்’ வைத்த மாதிரி இருக்கும்! ஆனால், இந்தப்பாடல்களை அழகான உரையுடன் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதே சிரமமான புண்ணியச் செயல். இன்னும் வேண்டும் என்று கேட்பது தவறென்பதால் விட்டுவிட்டேன்! Everyone has time constraints. முன்பு KRS என்றொருவர் அதைச் சிறப்பாகச் செய்துவிட்டு அஞ்ஞாதவாசம் சென்றுவிட்டார்!இப்போது ‘அண்ணாநீமவுசு’ அந்த இடத்தை எடுத்திருப்பது எமக்கெல்லம் ஒரு வரப்பிரசாதமே!

 3. anonymous says:

  இந்தப் பாட்டுல, பெருசா அப்பிடி என்ன இருக்கு?
  அட, “கைக்கிளை”-ன்னு கூட இதைச் சொல்லீறலாம்:)) சொல்லியும் இருக்காங்க!

  Shez singing & playing near the sand dunes
  A car passes by, revelry of friends…
  ya-s & yo-s, beer & jeer and some rocking tunes!

  Screeching brakes….A Guy leaps out..
  Just him – all others having nice fun about
  (they thought hez getting down to piss in the route)

  He runs at her group & stops in her front
  One deep breath….”hey, your murugan song too good” – he gasps
  Thatz it! – No sudden kiss, No touch, Nothing – She became a wasp!

  Hez back to the car – it flies so pasttttt
  Her heart follows the car very very fast!
  She pines for him; Her life changes….Ppl make fun of her
  But one soul understands her….The Sea which leaps!
  The Sea is her love. It pats till she sleeps!
  ——-

  அது மணல் வீடோ, முருகன் பாட்டோ….
  ஒத்த ரசனை, ஒத்த தமிழ், ஒத்த முருகன்
  அவன் எதுனா சொன்னானா? இவளா எப்படிக் குடுக்கலாம்?
  குடுத்தாள் – குறை நயப்பு = முருகா!

  • anonymous says:

   “குறை நயப்பு” – அதுக்காகச் சொல்ல வந்தேன்! இந்தப் பாட்டின் திணை=நெய்தல்; துறை=குறைநயப்பு!

   அதாச்சும், மணல்வீடு = சின்னப் பசங்க விளையாட்டு! (சிற்றில் சிதைத்தல்=பிள்ளைத் தமிழ்)
   இங்கோ, பெரியவள் ஆகியும், இவ மணல் வீடு கட்டுறா; அந்த “ரசனை” அவனுக்கும் பிடிச்சிருக்கு!

   அந்த ஒத்த “ரசனை” தான் இந்தக் காதலை…இறுக்கிடுச்சி!
   Not Physical Attraction or Lust! If u see, therez no description of his/her bodily features in the paa!
   அவன் சொன்னது = நிறை!
   அவன் மீண்டும் வராதது = குறை?

   ஆனா அந்தக் குறையும், இவ குறையாக் காணலை! பாவம், அவன் என்ன பண்ணுவான்?
   குறையையும் நயக்கிறாள் = “குறை நயப்பு! கைக்கிளை அல்ல!

   குறையே ஆனாலும், அதை நயம் என்றே மனசில் எடுத்துக் கொள்ளுதல்…
   தோழியும், குறையால் நொந்தவளை, அதே குறை நயப்பால் ஆற்றுப்படுத்துறா!
   —–

   அவன் வருவானா?
   வந்து, இவளைப் புரிஞ்சாச்சும் கொள்வானா?
   யாருக்குத் தெரியும்? நமக்கென்ன தெரியும்?

   முருகனுக்கே தெரியும்!
   முருகால் துவங்கியது முருகால் முடியும்!
   சொக்கர் சொன்ன பதிவின் கடைசி வரி = “நம்பிக்கை”

  • ஆனந்தன் says:

   Very good English interpretation!

 4. anonymous says:

  Ooops, just saw….
  Sorry, I didnt mean to “teach” you all, by that two two line approach! Pardon me if it sounded like that;
  Itz just my way of reading sanga tamizh; Even 2000 yr old lines can be easily grasped; Thatz why “shared ” that feeling of ரசித்துப் படித்தல்:)

 5. anonymous says:

  சும்மா வாங்க! தைரியமா, பாட்டையே directஆ வாசிச்சிப் பாக்கலாமா?
  Read Chokkar’s prelude,
  But DONT read Chokkar’s meaning & thukkada for now:)))

  ——

  * எவன்கொல்? வாழி, தோழி! = யாருடீ அவன்? தோழி, நீ நல்லா இருக்கணும்!
  * மயங்கு பிசிர், மல்கு திரை உழந்த, ஒல்குநிலைப் புன்னை
  = பிசிர்த் துளிகள் (foam drops) பட்டு, அலை பெருசா வந்து வந்து அடிக்குது! எது மேல? புன்னை மரம் மேல!

  ——-

  * வண்டு இமிர் இணர, நுண் தாது வரிப்ப = வண்டுகள் சத்தம் போடுதுங்க! பூவின் நுண்-தாது (Fine Pollen Dust); கீழே வரி வரியா விழுது!
  * மணம்கமழ் இளமணல், எக்கர்க் காண் வர = இள மண்ணு வாசனையாவும் இருக்கு! அட, அந்த எக்கர் (Sand Dune)க்கு ஒரு அழகான காட்சியே வந்துருச்சே!

  ——-

  Thatz it! Now all 4 lines together! dissolve yourself! காபி உறிஞ்சுங்க:)

  புன்னை மரம் (கிருஷ்ண ஜெயந்திக்கு கண்ணன் பின்னாடி வைப்பாங்களே, அது)
  கடலோரமா இருக்கும் புன்னை மரம்!
  அது மேலே நுரையும் அலையும் வந்து சுழிக்க…..
  வண்டுகள் கூட்டமா வந்து, பெரும் சத்தம் போடுதுங்க! ஏன்?
  பொதுவா, வண்டு முரலும் (ங்கொய்ய்ங் – Hum); ஆனா இங்கே இணருது(Loud)!

  ஏன்னா….கடல் காற்று;
  புன்னை மரப் பூவில் உட்கார வந்தா, ஒல்லியான வண்டைக் காத்து தள்ளி விடுது:))
  அதனால் மெதுவா உறிஞ்சிக் குடிக்காம, பெருசா சத்தம் போட்டு, அந்தப் பூ மேல மோதுதுங்க! மோதி மோதிக் குடிக்குதுங்க!

  இப்படி மோதுவதால், பூவில் இருக்கும் மகரந்தமெல்லாம் கீழே வரி வரியாச் சிந்த…
  அந்த ஈரம் சூழ்ந்த எக்கர் (Sand Dune) மேல், தண்ணி தெளிச்சிக் கோலம் போட்டாப் போல இருக்கு!
  இந்த மகரந்தப் பொடிக் கோலத்தால், அந்த Fine Sand = இள மணலும், வாசனை மண்ணா ஆயிருச்சி! ஒரு அழகான காட்சியே வந்துருச்சி!

  End of coffee sip:)

 6. anonymous says:

  Next two two lines…

  * கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட = கூட்டமா (கணம்), ஆயத்தில் (Yard) குழுமி விளையாட
  * கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி = கலசம் வச்ச பெரிய தேர்; அதிலுள்ள இளையவர்களை நீங்கி

  ——-

  * தாரன், கண்ணியன், சேரவந்து ஒருவன் = தார் (கழுத்து மாலை), கண்ணி (தலை மாலை) சூடிய ஒருவன்…கிட்டக்க வந்தான்
  * வரிமனை புகழ்ந்த கிளவியன் = உன் மணல் வீட்டைப் புகழ்ந்தான்! பல கிளவி=சொல் சொன்னான்
  * யாவதும் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் = ஒரு மறுமொழியும் பெறவில்லை! அதுக்குள்ள கிளம்பிட்டான்
  ——-

  Again Coffee uRinjing:)

  பசங்க எல்லாம் கூட்டமா வந்திருக்கானுங்க தேரில்! அப்பவே Holiday Trip போல:)
  Driver மட்டும் இல்லாம நிறைய பேரு உட்காரலாம் போல!
  அந்தத் தேரின் மேல் கொடுஞ்சி (கலசம்) எல்லாம் இருக்கு! அப்படீன்னா Covered Chariot or Convertible:)

  பொதுவா குழுவில் பசங்க வந்தா, பொண்ணுங்கள பாத்து சத்தம் தான் போடுவானுங்க! விசில் பறக்கும்!
  ஆனா, அவனுங்க எல்லாம் களித்து இருக்க, இவன் மட்டும் நம்ம கிட்டக்க ஓடியாறானே? என்னவா இருக்கும்?

  கண்ணி = தலை மாலை! வட்டமா! Hawaii round bunch!
  தார் = தொங்கல் மாலை! கழுத்தில் இருந்து கீழாக்க தொங்கும்! (வாழைத் தார் தொங்குது-ல்ல? அது போல)
  பொதுவா ஆண்கள் தான் இப்படி அணிவது வழக்கம்!

  ஆனா பெண்ணுரிமை நாயகிகள் = அன்னை மீனாட்சி, தோழி கோதை:)) மரபுக்கு மாறாக, “தார்” அணிந்து கொண்டார்கள்!
  ஒங்க வீட்டுல சிதம்பரமா? மதுரையா?:) சொக்கர் வீட்டுல = மதுரை தான்! அதான் சொக்கன்-ன்னு பேருலயே இருக்கே! No power :))))
  ——-——-

 7. anonymous says:

  3rd & last round of coffee sipping:)

  * அதற்கொண்டு, அரும்படர் எவ்வமொடு, பெரும் தோள் சாஅய் = அன்னியில் இருந்து, உனக்கு ரொம்ப துன்பம்டீ (எவ்வம்)! உன் தோளும் சாஞ்சிப் போச்சி
  *அவ் வலைப் பரதவர், கானல் அம் சிறுகுடி = வலைகள் கொண்ட பரதவர் (மீனவர்), அவங்களின் கானல்=மணல் நிலம், சிறு குடி (Neighborhood)

  ——-

  * வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி = வெம்மை வாய் (acid tongue) உடைய பெண்கள், அவங்க பேசுற வதந்தியில், நீ ரொம்ப கலங்கிப் போயிட்ட
  * இறை வளை நெகிழ்த்த = சிறிய வளையல் கூட கழல அளவுக்கு மெலிஞ்சிட்டியே,

  இறைவளை: இறைவன்-இறைவள்-ன்னு எடுத்துக்க கூடாது!:))
  இறை=சிறிய; அகலகில்லேன் ’இறை’யும் என்று அலர்மேல்மங்கை உறை மார்பா;
  இறையும்=கொஞ்சம் கூட அகலமாட்டேன்-ன்னு திருமகள் வாழும் மார்பு-ன்னு மாறன் சடகோபன் பாடுறான்(ர்)
  ——-

  * நம்மொடு, துறையும் துஞ்சாது, கங்குலானே = நம்ம கூட, இந்தக் கடலும் (துறை=குமரித்துறை,படகுத்துறை) தூங்கலை பாரு, ரா (கங்குல்) முழுக்க!

  Back to 1st line…
  * எவன்கொல்? வாழி, தோழி
  = யாருடீ அவன்? என் தோழியே….நீ நல்லா இருக்கணும் டீ!
  ——-

 8. anonymous says:

  End of coffee, tata 🙂

  May be, Chokkar can post a Paa, with just Prelude & அருஞ்சொற்பொருள் one time!
  Regular readers can do this “Coffee uRinjum technique”
  Each reader can take 4 lines each & write the meaning in #365Paa – Just an Idea:))
  Vaazhga Sanga Tamizh!

  • anonymous says:

   இந்தப் பா படிக்கத் துவங்கும் போதே, மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி!
   Her Unknown Fate…in Murugan’s Hands!
   அதான் ஆரம்பத்திலேயே சொன்னேன், தூக்கமே வரல! Maybe thatz why talked too much! Sorry! Time 5:30 am; Gotto sleep!

   Muruga, letz go away!

   • உங்களால் எப்படி இவ்வளவு அருமையா ஆசையா எழுத முடியுது! ரொம்ப நன்றி அனானிமஸ் 🙂

 9. ரொம்ப அடர்த்தியான பாடல். அனானிமஸ் இவ்வளவு விளக்கம் அளித்தமையால் நன்றாகப் புரிந்தது. ஒரு சொல் அல்லது ஒரு பார்வை போதும் ஒரு பெண்ணுக்கு மனதை பறிகொடுப்பதற்கு. மணல் வீட்டை அழகாக இருக்கு என்று சொல்லி மனதை கொள்ளைக் கொண்டு விடுகிறான் தேரில் வந்த ஒரு அனானிமஸ் 🙂

  தோழிகளுக்கு தான் எத்தனை பொறுப்புகள், அதனால் எத்தனை நுண்ணறிவுடன் செயல்படவேண்டியிருக்கிறது!

  காதலியின் தவிப்பை கடலின் அமைதியின்றி இருக்கும் தன்மையுடன் ஒப்பிடுவது நல்ல உவமை!

  amas32

 10. ஆனந்தன் says:

  அண்ணாநீமவுசு,
  உங்கள் உரைக்குக் கோடி நன்றிகள்! இப்படிச்சிரமமான் ஒரு 10 பாடல்களுக்கு உரை எழுதினீர்கள் என்றால், பின்னர் நாமாகவே மற்றப்பாடல்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல தமிழாசிரியராக இருக்கும் அண்ணா, உங்கள் ‘மவுசு’ பெருகட்டும்!

  • anonymous says:

   :))
   Tamizh isn’t that harddddd
   All we need to do is give good food as fast food;) Then ppl will crave the taste of tamizh!

   Thanks for your wishes; I only accept them on behalf of Ragavan, as he is my intrinsic inspiration!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s