காலையும் நீயே, மாலையும் நீயே

பகல்குறி, இரவுக்குறி எனும் பான்மைய

புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே,

இல்வரை இகந்தது பகல்குறி, இரவுக்குறி

இல்வரை இகவா இயல்பிற்றாகும்

நூல்: நம்பியகப்பொருள் (#37, #38)

பாடியவர்: நாற்கவிராச நம்பி

காதலர்களுக்கிடையே அன்பு பெருகுவதால், அவர்கள் அடிக்கடி சந்திக்க விரும்புவார்கள். இப்படி அவர்கள் சந்திக்கும் இடங்கள் இரண்டு வகைப்படும்: பகல்குறி, இரவுக்குறி.

பகல்குறி என்பது, காலை நேரத்தில் அவர்கள் சந்திக்கும் இடம். இது அந்தக் காதலியின் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும்.

இரவுக்குறி என்பது, ராத்திரி நேரத்தில் அவர்கள் சந்திக்கும் இடம். இது அந்தக் காதலியின் வீட்டிற்குள்ளேயே ஓர் ஓரத்தில் இருக்கும்.

பகலோ, இரவோ, மற்றவர்கள் கண்ணில் படாதபடி அவர்கள் சந்தித்துக்கொள்ளவேண்டும், அதுதான் முக்கியம்!

257/365

Advertisements
This entry was posted in அகம், இலக்கணம், காதல். Bookmark the permalink.

11 Responses to காலையும் நீயே, மாலையும் நீயே

 1. anonymous says:

  பகற்குறி = Farm house
  இரவுக் குறி = Own House
  அந்தக் காலப் பெண்கள் ரொம்ப உ’ஷா’ரானவங்க போல!:))
  —-

  பகலில் எவ்வளவு தூரமும் செல்லும் பெண்கள்…
  இரவில் வீடு திரும்பணும் என்பது அந்தக் காலத்திலேயே “விதி”யோ?
  I dont like this vithi:))

 2. பகலில் யார் கண்ணிலும் படாமல் இருக்கத் தொலை தூரம் போகிறாள் காதலி. இரவில், இருட்டானதால் யார் கண்ணிலும் படாமல் வீட்டின் உள்ளேயோ அருகிலேயே காதலனை தைரியமாகச் சந்தித்துக் கொள்கிறாள்.

  பகலில் எங்கு சந்தித்தாலும் வெளிச்சம் பெண்ணுக்குக் காவல். ஆனால் இரவில் இருட்டு காதலுக்குக் காவல் ஆனால் பெண்ணுக்குக் காவல் இல்லை. அதனால் தான் தற்காப்புக்காக வீட்டின் உள்ளேயோ வெகு அருகிலேயோ சந்தித்துக் கொள்கிறாள்.

  எந்த காலத்திலும், எந்த சமுதாயத்திலும் பெண் தன்னைக் காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. பெண்ணை சட்டென்று குறை கூறும் சமூகம் ஆணை அவ்வளவு எளிதாக வசை பாடுவதில்லை.

  amas32

  • anonymous says:

   மிகவும் உண்மை-ம்மா!
   பெரும்பாலும்…..பெண் = “பொறுத்துக் கொள்பவள்”
   யாரு adjust பண்றாங்களோ, அவங்களைத் தான் ஒலகம் மீண்டும் மீண்டும் adjust பண்ணச் சொல்லி “எதிர்பார்க்கும்”!:)

   முதலில் adjust பண்ணிட்டு, அடுத்த முறை பண்லீன்னா, அவளே = கெட்டவள்!:))))
   இதுக்கு முதலிலேயே Stiffஆக இருந்து விடலாம்! காலங் கடந்த ஞானம்:))
   ———–

   ஆனா, நீங்க சொக்கர் சொன்ன முக்கியமான Pointஐ விட்டுட்டீங்களே!

   //பகலோ, இரவோ, மற்றவர்கள் கண்ணில் படாதபடி அவர்கள் சந்தித்துக்கொள்ளவேண்டும், அதுதான் முக்கியம்!//
   = இது எவ்ளோ நல்லா இருக்கு? யார் கண்ணிலும் படாதபடி:)))

 3. anonymous says:

  நம்பி அகப் பொருள் = தமிழில் முக்கியமான இலக்கண நூல்!
  ஆனால் அகப்பொருளை (Love) மட்டுமே பேசும்; புறப்பொருள் (War) பேசாது!

  இதை எழுதியவர் = நாற்கவிராச நம்பி
  சமணர்கள், தமிழ் இலக்கண/ இலக்கியத்துக்கு செய்த பெருந்தொண்டு, எத்தனை மறைப்பினும் மறையாது!
  தத்தம் சமய நெறிகளை மூலநூலில் கலவாது, தமிழைத் தமிழாக அணுகியதில், சமணருக்குப் பெரும் பங்கு உண்டு!
  ——

  • anonymous says:

   நம்பி அகப் பொருள்!
   = இதற்கு முன்பு இறையனார் அகப் பொருள் என்று ஒன்றும் உண்டு!

   ஆனால், அதில் “சற்றே” சமயக் கலப்புகள்!
   சிவபெருமானே இதை எழுதியதாகச் சொல்லுவார்கள்!:)
   சிவபெருமான் எழுதிய நூலுக்கு, நக்கீரர் உரை எழுதியதாகவும் சொல்வதுண்டு!

   பல புலவர்களும் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுத,
   உருத்திர சன்மன் (இவன் தான் முருகனாம் = I dunno how my murugan can be Rudra Sarma:))
   எல்லாரும் தத்தம் உரைகளை வாசித்துக் காட்ட, நக்கீரர் உரைக்கு மட்டுமே முருகன் (எ) உருத்திர சன்மனுக்கு வியர்த்ததாம்!
   அதனால் நக்கீரர் உரையே The Best என்ற “கதையும்” உண்டு:)

   இதுல வேடிக்கை என்ன-ன்னா, நக்கீரர் உரையில், பாண்டிக் கோவை என்னும் நூலின் வரிகள் எல்லாம் எடுத்தாண்டு வரும்!
   பாண்டிக்கோவையோ 8th CE; நக்கீரரோ கடைச் சங்க காலம்! = எப்படி இந்த இடைச்செருகல்?:)))
   ————–

   இன்னும் இருக்கு….
   பின்பு நக்கீரன், கொங்கு தேர் வாழ்க்கை என்னும் இறையனார் கவிதையையே எதிர்த்து மீள, அவன் சாபம் மட்டும் நீங்கவே இல்லியாம்!
   பின்னே, எவராயினும் தமிழே உயர்ந்தது, குற்றம் குற்றமே-ன்னு இறைவனையே எதிர்த்துப் பேசினான் அல்லவா?:)

   கடைசியில், நக்கீரன் கயிலை யாத்திரை சென்று, ’கயிலை பாதி, காளத்தி பாதி’ என்ற நூலைப் பாடிச் சாபம் நீங்கப் பெற்றான் (பரஞ்சோதி – திருவிளையாடற் புராணம்)!
   கயிலை பாதி, காளத்தி பாதி – திருமுறையிலும் வைக்கப்பட்டு விட்டது!
   ————-

   முருகா! இவனுங்க கிட்ட தமிழ் இலக்கியம் பட்ட பாடு இருக்கே:((

   நல்ல வேளை, இப்போது நம்பி அகப் பொருள் என்பதே, தொல்காப்பிய அகப்பொருளுக்கு – சிறந்த இலக்கணமாகக் கருதப்படுகிறது!

   • anonymous says:

    எங்கம்மா இந்தப் பின்னூட்டத்தைப் படிச்சாங்க, என்னைக் கொன்டே புடுவாங்க:))
    ஏன்டா, நம்ம சனத்தையே திட்டுற?-ன்னு அட்வைஸ் மழை வேற பொழியும்!:)
    ஆனா, நான் சார்ந்த ஒன்றே ஆனாலும், உண்மை உண்மை தான்! சொல்லித் தான் ஆகோணும்:)

    சமயப் பெரும்பான்மைத்தனம் தந்த அதிகாரத்தால்….
    அமைப்பு ரீதியாக….பண்டைத் தமிழ் இலக்கியத்தில் எல்லாம் கைவைத்து…

    சிறுபான்மையினர், தங்கள் மரபுச் சிறப்பை அதிகம் பேசவும் கூடாது, தங்களுக்கு அடக்கி வாசித்தே இருக்கணும்…களப்பிரர் நீதிநூல் காலமெல்லாம் இருண்ட காலம்-ன்னு எழுதி வைத்து…
    ——

    முருகா….தமிழ் இலக்கியம் போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப் பாடு எடுத்ததில்லை!:(
    இதுக்குத் தான் சொல்லுறது, சங்கத் தமிழை அணுகும் போது, சமய நோக்கில் அணுகாமல்…….தமிழைத் தமிழாகவே அணுக வேணும்!

    மொழிஞாயிறு, தேவநேயப் பாவாணர் இதற்கு பெரும் ஊக்கம்! நற்சான்று!

 4. anonymous says:

  நாம, நம்பி அகப் பொருளுக்கு வருவோம்!
  = இது அகப்பொருள் இலக்கணத்துக்கு, மிகவும் நல்ல நூல்! (Love)
  = ஆனா புறப்பொருள் பேசாது! (War)

  தமிழில் இலக்கண நூல்கள் = 3 பொருள்களில் அமையும்!
  * எழுத்து அதிகாரம் = Letters, Pronunciation etc
  * சொல் அதிகாரம் = Words, how they join, poetry etc
  * பொருள் அதிகாரம் (அகப் பொருள்/ புறப் பொருள்) = Love/War, Ppl & Society etc

  தொல்காப்பியம் = தமிழில் கிடைக்கும் ஆதி இலக்கணம்!
  இன்று கிடைக்கும் நூல்களிலேயே, மிகப் பழமையான தமிழ் நூல்
  —–

  அதற்கு அப்புறம் பல இலக்கண நூல்கள் வந்து விட்டன! (காலம் மாறுகிறது அல்லவா, இலக்கணமும் மாறும் தானே!)
  ஆனால்…..பின்னால் வந்த பல நூல்களும்….இந்த மூன்றையும் ஒருசேர விவரித்தது இல்லை!
  சில சொல் மட்டும் பேசும்! சில அகப்பொருள், சில புறப்பொருள் மட்டும் பேசும்!

  * காக்கைப் பாடினியம் = சொல் மட்டுமே
  * இறையனார் அகப் பொருள் = பொருள் (அதிலும் அகப்பொருள் மட்டுமே)
  * புறப் பொருள் வெண்பா மாலை = பொருள் (புறப்பொருள் மட்டுமே)
  * நம்பி அகப் பொருள் = பொருள் (அகம் மட்டுமே)
  * நன்னூல் = எழுத்து/ சொல் மட்டுமே
  * யாப்பு அருங்கலக் காரிகை = சொல் மட்டுமே
  * தண்டி அலங்காரம் = சொல் (அதுவும் அணி இலக்கணம் மட்டுமே)

  (* வீரசோழியம் = வேணவே வேணாம்! வடமொழி இலக்கணத்தையும் புகுத்தியது இதுவே! தமிழுக்கே உரிய ழ கரத்தை ட கரம் ஆக்கலாம்-ன்னு சொன்னது)
  ——-

  இப்போ தெரியுதுங்களா, தொல்காப்பியத்தின் பெருமை?

  பின்னாளில் வசதி வந்த போது கூட, யாரும் எழுத்து-சொல்-பொருள் ன்னு மூனும் தொடவில்லை!
  ஆனால் 2000+ ஆண்டுகளுக்கு முன்பே, தொல்காப்பியர், தெள்ளத் தெளிவாத் தொட்டுச் சென்றுள்ளார்!

  ஆயிரம் சொல்லுங்க….தொல்காப்பியர், தொல்காப்பியர் தான்!
  அவரை அடிச்சிக்க, தமிழில் ஆளே இல்ல!!

  • ஆனந்தன் says:

   தொல்காப்பியம், காக்கைப்பாடினியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் – இவைகளுக்கிடையில் எதுபற்றியாவது கருத்து வேறுபாடுகளுண்டா (contradictions)? அப்படி இருந்தால் எதைப் பின்பற்றுவது?

   • anonymous says:

    எப்படி இப்பிடி ஐயமெல்லாம் வருது ஒங்களுக்கு?:))
    Conflict of Interest – Conflict of Grammar – அருமையான ஐயம்!
    —-
    தொல்காப்பியம் is very democratic
    மாற்றுக் கருத்தை வைக்கக் கூடக் கூடாது-ன்னுல்லாம் சொல்லவே சொல்லாது!
    தான் சொல்வதே சாசனம் (சாசனாத் இதி சாஸ்திர-ஹ) வேறு பண்பாடு:))

    காலம் மாற மாற, சில விதிகளும் மாறும்!
    எ.கா:
    தொல்காப்பியத்தில் புறத்திணைகள் = 7 தான்!
    ஆனா, புறப்பொருள் வெண்பா மாலையில் = 12 ஆகி விட்டது!

    1.வெட்சி, 2.வஞ்சி, 3.உழிஞை, 4.தும்பை, 5.வாகை, 6.காஞ்சி, 7.பாடாண் திணை = இவையே தொல்காப்பியம் காட்டியவை
    ஆனா, பிற்காலத்தில், போரை எதிர்த்து நிற்கும் படைகளும், மலர் சூடி, தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்!

    அதனால் கரந்தை, நொச்சி-ன்னு இரண்டு புதுத் திணைகள் சேர்க்கப்பட்டன! பொதுவியல் திணையும் சேர்க்கப்பட்டது!
    ——

    இப்படிப் புதிதாகச் சேர்க்கும் போது, பல தமிழ் அறிஞர்களின் இசைவைப் பெற்றே சேர்ப்பது வழக்கம்!
    அவர்களின் இசைவை நூற்பா பாயிரத்தில் தெரியப்படுத்துவார்கள்!

    ஆனா, புதியன வந்ததே தவிர, Conflict of Interest வந்ததில்லை!
    அதாச்சும், தொல்காப்பியர் சொன்னது தப்பு, அதைத் திருத்தறேன்-ன்னு யாரும் கிளம்பியதில்லை! = அதான் தொல்காப்பியத்தின் வீச்சு!

    * புணர்ச்சி விதிகள், எழுத்து, சொல் = இதெல்லாம் அதிக மாற்றம் இல்லை!
    * பொருள் அதிகாரம் = Ppl lives & Society = அகம்/புறம் – இது மட்டுமே மாற்றம்!

    நன்னூல், தண்டியலங்காரம் = இதெல்லாம் புதுப்புது அணி இலக்கணம், யாப்பு (புதுவகைச் செய்யுள்) – இவற்றைப் புதிதாய்ப் பதியும்!
    ஆனால் அடிப்படைத் தொல்காப்பியத்தை அப்படியே எடுத்தியம்பும் – இன்னும் சற்று எளிய நடையில்! அவ்வளவு தான்!

 5. Samudra says:

  ஒருமாதிரியான பாட்டா இருக்கே?

 6. balaraman says:

  அந்தக் காலத்தில் நடந்த எல்லாத்தையும் பாடல்களாக குறித்து வைத்துள்ளனர். சில ‘பண்பாடு’கள் மாறவேயில்லை. 😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s