பார்த்துத் தெளிக

தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை

அம்மா பெரிது என்று அகம் மகிழ்க, தம்மினும்

கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்

எற்றே இவர்க்கு நாம் என்று

நூல்: நீதிநெறி விளக்கம் (#14)

பாடியவர்: குமர குருபரர்

ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து மன வருத்தம் ஏற்படும்போது, நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்க்கவேண்டும். ‘அவங்களோட ஒப்பிட்டா நம்ம நிலைமை எவ்வளவோ பரவாயில்லை’ என்று நினைத்து மனம் மகிழவேண்டும்.

ஆனால் படிப்பு விஷயத்தில்மட்டும், நம்மைவிட அதிகம் படித்தவர்களைமட்டுமே அண்ணாந்து பார்க்கவேண்டும். ‘அவங்களுக்கு முன்னால நாம படிச்சதெல்லாம் ஒண்ணுமே இல்லை’ என்று நினைத்துக் கர்வம் அழியவேண்டும். இன்னும் இன்னும் படிக்கவேண்டும்.

துக்கடா

  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
  • தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
  • அம்மா பெரிதென் றகமகிழ்க, தம்மினும்
  • கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
  • எற்றே இவர்க்குநாம் என்று

252/365

Advertisements
This entry was posted in அறிவுரை, குமரகுருபரர், நீதிநெறி விளக்கம், வெண்பா. Bookmark the permalink.

3 Responses to பார்த்துத் தெளிக

  1. amas32 says:

    நான் தினம் தினம் நினைப்பதை நீங்கள் இந்தப் பாடல் மூலம் சொல்லியிருக்கீங்க. நன்றி சொக்கரே. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களைப் பார்க்கும் போது எனக்கு அவர்கள் மேல் மதிப்பும் மரியாதையும் எழும். அவர்களின் அறிவுத் திறன், உழைப்பு என்னை வியக்க வைக்கும். உண்மையாகவே கற்றது கையளவு கல்லாதது உலகளவு தான். அதுவும் இந்த வலைத்தளத்துக்கு வந்து எழுதும் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. உங்கள் அனைவரிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொள்கிறேன் நன்றி 🙂

    சிலர் பல விதமான துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் இருப்பதை பார்த்தால் மலைப்பாக இருக்கும். அவர்களிடம் இருந்து பொறுமையையும் விவேகத்தையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம் இதிகாசங்களிலேயே சீதா தேவி, த்ரௌபதி, காந்தாரி, தமயந்தி என்று பல அரசிளங்குமரிகள் பின்னாளில் பட்டத் துன்பங்களை படித்திருக்கிறோம். இப்பொழுதும் நிஜ வாழ்வில் அவர்களே மறு பிறவி எடுத்தது போல நிறைய பேர்களை பார்க்கவும் முடியும். மன உறுதியைப் பெற்று போராட நம்மைவிட அதிகம் துன்பப் படுவோரை பார்த்து ஆறுதல் பெறவேண்டும்.

    amas32

  2. GiRa ஜிரா says:

    குமரகுருபரர். இவர் பிறந்த ஊர் திருவைகுண்டம். பிறப்பில் வாய்ப்பேச்சு இல்லை. திருச்செந்தூர் முருகன் அருளால் பேசினார். இல்லை. இல்லை. பாடினார். 

    மதுரை மீனாட்சியம்மன் அருளால் முத்துமாலை சூட்டப்பட்டவர்.

    இவரும் திருமலை நாயக்கரும் வீரமாமுனிவரும் சுப்ரதீபக்கவிராயரும் ஒரு காலத்தவர்கள்.

  3. GiRa ஜிரா says:

    ரொம்பப் படிச்சோம்னு நெனைக்கிறவங்களுக்குச் சவுக்கடி போல ஒரு பாடலைக் குமரகுருபரர் கொடுத்திருக்கிறார்.

    நாம் கற்றது குறைவுதான் என்ற உணர்வு இருக்கும் வரைதான் கல்வி நம்மோடு இருக்கும்.

    கற்றது கைமண் அளவு
    கல்லாதது உலகளவு
    என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்

    இப்படியும் ஒரு பாட்டுண்டு. கற்றது கைமண்ணளவு என்று உற்ற கலைமடைந்தை (கலைமகள்) ஓதுகிறாளாம்!

    கலைவாணிக்கே இந்த நிலையென்றால் நாமெல்லாம்?

    கல்வியில் செருக்கு கூடாது. கல்விச் செருக்கிருந்தால் நல்லறிவு நம்மோடு கூடவே கூடாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s