யார் அவள்?

அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன் துறை

இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர்வாய்,

அரம்போழ் அவ்வளைக் குறுமகள்

நரம்பு ஆர்த்து அன்ன தீம்கிளவியளே!

நூல்: ஐங்குறுநூறு (#185)

பாடியவர்: அம்மூவனார்

சூழல்: நெய்தல் திணை. மற்ற விவரங்கள் ‘முன் கதை’யில் காண்க

முன் கதை

தோழிகள் பலர் கூட்டமாக வந்தார்கள். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே ஓர் இளைஞன் வந்தான். ஓரமாகத் தயங்கி நின்றான். அந்தப் பெண்கள் கூட்டத்தையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இதைக் கவனித்த ஒரு பெண் கூட்டத்திலிருந்து விலகி வந்தாள். அவனை நெருங்கினாள். ‘யாருய்யா நீ? என்ன பார்வை இங்கே?’ என்று அதட்டினாள்.

‘அங்கே என்னுடைய காதலி இருக்கிறாள், அவளைப் பார்க்கிறேன்’ என்றான் அவன்.

‘உன்னோட காதலியா? யார் அது?’ என்று கேட்டாள் அவள். ‘இத்தனை பெண்கள் இருக்காங்க, அதுல உன் காதலி யாருன்னு சரியாச் சொல்லு!’

இதற்கு அவன் சொன்ன பதில்தான் இன்றைய பா.

உரை

அசைகின்ற இதழ்களைக் கொண்ட நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கை நகரத்தின் கடற்கரை. அங்கே கிடைக்கும் முத்துகளைப் போன்றவை என் காதலியின் பற்கள். அந்த அழகிய பற்கள் பொருந்திய அவளுடைய வாய், செக்கச் சிவந்திருகும். அரத்தால் அராவிச் செய்ததுபோன்ற அழகான வளையல்களை அவள் அணிந்திருப்பாள். யாழ் நரம்பு ஒலிப்பதுபோன்ற இனிய சொற்களைப் பேசுவாள்.

251/365

Advertisements
This entry was posted in அகம், ஆண்மொழி, ஐங்குறுநூறு, கடற்கரை, காதல், தோழி, நாடகம், நெய்தல், வர்ணனை. Bookmark the permalink.

2 Responses to யார் அவள்?

  1. amas32 says:

    இது ஒரு confusing description! அந்தக் கூட்டத்தில் முத்துப் போன்ற பற்கள் பலருக்கு இருக்காதா? 🙂 காதலனுக்கு அதெல்லாம் தெரியாது போலிருக்கு.

    காதலனுக்கு அவன் காதலி மட்டுமே அழகி, யாழிசையின் இனிமையை அவள் குரலில் கேட்கிறான்! அவளின் முக்கியமான அம்சங்களை கவனித்துக் கருத்தில் வைத்திருக்கிறான். இந்த மாதிரி காதலன் கிடைக்கக் காதலி கொடுத்து தான் வைத்திருக்கிறாள்.

    amas32

  2. GiRa ஜிரா says:

    இந்தப்பாடலைப் படிக்கையில் புன்னகை தானாக விரிகிறது 🙂 பழநியில் மொட்டையைத் தேடிய கதை.

    அருச்சுனனும் கர்ணனும் குறி வைத்தால் அந்தக் குறியைத் தவிர எதுவும் தெரியாதாம். அந்த மாதிரி இந்தக் காதலுனுக்கு அவன் காதலியை மட்டும் தெரிகின்றது போல.

    காதல் கண்ணை மறைப்பது என்பது இதுதான். காதலி மட்டும்தான் தெரிகிறாள். வேறு யாரையும் அவனுக்குத் தெரியவில்லையே!

    கொற்கை பாண்டிய நாட்டின் சிறந்த துறைமுகம். அத்தோடு கொற்கை முத்துகளின் சிறப்பையும் நாம் அறிவோம்.

    சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையில் இருந்த போது, அவனுடைய இளவல் வெற்றிவேல் செழியன் கொற்கையில் இருந்து சிறப்பதிகாரம் செய்து அண்ணன் நெடுஞ்செழியனுக்கு உதவினான்.

    ஏனென்றால் கொற்கையின் வணிகச் சிறப்பும், முத்துச் சிறப்பும் அப்படி. அந்த அளவிற்குப் பாதுகாப்பும் தனி நிர்வாகமும் தேவைப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s