தாரகன் செய்த தவம்

முழுமதி அன்ன ஆறு முகங்களும், முந்நான்கு ஆகும்

விழிகளின் அருளும் வேலும் வேறு உள படையின் சீரும்

அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்

செழுமலர் அடியும் கண்டான் அவன் தவம் செப்பல்பாற்றோ

நூல்: கந்தபுராணம்

பாடியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார்

சூழல்: தாரகனுடன் யுத்தம். முருகன் போர்க்களத்துக்கு வரும் காட்சி

முழு நிலவைப் போன்ற ஆறு முகங்கள், பன்னிரண்டு கண்களில் பொங்கும் அருள், கையில் வேல், மற்ற படைக்கருவிகள், பன்னிரண்டு கைகள், அழகான ரத்தினத் தண்டை ஒலிக்கும் மலர் போன்ற திருவடிகள்…

முருகனின் இத்தனை அழகையும் தாரகன் நேரில் பார்த்தான், அதற்கு அவன் என்ன தவம் செய்தானோ!

துக்கடா

 • இந்தப் பாடலின் சூழலைக் கவனிக்காமல் படிக்கிறவர்கள் யாரும் இது போர்க்களத்தின் வர்ணனை என்று நம்பமாட்டார்கள்!
 • பின்னே, எதிரியுடன் சண்டை போட வரும் முருகன் முகத்தில் வீரமும் ஆவேசமும் அல்லவா பொழியவேண்டும்? அருள் எதற்கு?
 • மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு பொருத்தமில்லாத காட்சிபோல் தோன்றினாலும், இதற்கு ஒரு பின்னணிக் காரணம் உள்ளது, ’தன்னை வீழ்த்த வருகிற பகைவனுக்குக்கூட அருள் செய்யும் அவன், வணங்கும் பக்தர்களுக்கு என்னவெல்லாம் செய்வான்? நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்’ என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்

250/365

Advertisements
This entry was posted in கந்த புராணம், பக்தி, முருகன், வர்ணனை. Bookmark the permalink.

22 Responses to தாரகன் செய்த தவம்

 1. amas32 says:

  I hope anonymous will visit #365paa today!

  பொதுவாகவே அசுரர்களாக பிறப்பெடுத்தவர்கள் முன்னொரு காலத்தில் உத்தமர்களாகவோ தேவர்களாகவோ இருந்து ஏதோ சாபத்தினால் பூலோகத்தில் இவ்வாறு பிறக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. அவர்களை வதம் செய்ய தெய்வங்கள் அவதாரம் எடுக்கின்றன. அதனால் தானோ என்னமோ அவர்களுக்கு இறைவனின் திவ்ய தரிசனம் நன்றாகக் கிடைக்கிறது. முனிவர்களும் பிற நல்லவர்களும் பல காலம் தவம் செய்தும் கிடைக்காத இறைவனின் தரிசனம் தீயவனான அசுரனுக்குக் எளிதாகக் கிடைத்து விடுகிறது. எல்லாம் முன்பே சேர்த்து வைத்திருந்த புண்ணியத்தின் பலன் போலும்!

  இங்கே தாரகன் அழகே உருவான முருகனை காணப் பெறுகிறான். அதுவும் முருகனே அவனைத் தேடி வருகிறான். அவனால் மோக்ஷத்தையும் பெறுகிறான். என்ன கொடுப்பினை இது!

  //அழகான ரத்தினத் தண்டை ஒலிக்கும் மலர் போன்ற திருவடிகள்…// இந்த வரிகளை படிக்கும்போதே முருகனின் அழகிய திருவடிகள் கண் முன்னே விரிகின்றது. முருகனின் ஒவ்வொரு பாகமும் சொல்லொண்ணாத அழுகு.

  கருணாமூர்த்தியான அவன் கருணை அனைவருக்கும் பொதுவானது. கேட்பவர்க்கும் கிடைக்கிறது, கேட்காதவர்களுக்கும் கிடைக்கிறது.

  வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!

  amas32

 2. anonymous says:

  * இந்தப் பாடலை முன்னால் இருந்து படித்தால் = புற நானூறு!
  * இந்தப் பாடலைப் பின்னால் இருந்து படித்தால் = அக நானூறு!
  ——

  அணிமணித் தண்டை ஆர்க்கும் செழுமலர் அடியும்
  அழகிய கரம் ஈராறும்
  அதில் வேலும் வேறுள படையின் சீரும்
  முந்நான்கு ஆகும் விழிகளின் அருளும்
  முழுமதி அன்ன ஆறு முகங்களும்….கண்டாள்!
  அவள் தவம் செப்பல்பாற்றோ?

  பெண்ணுள்ளம், அவன் முகத்தை எடுத்த எடுப்பிலேயே நேராப் பாக்காது….கொஞ்சம் வெட்கம்!!
  வெட்கத்தில் நிலத்தை நோக்கி இருக்கும் போது…அவனோட காலே முதலில் பட்டு…அப்படியே படிப்படியா மேலேறி, ஒவ்வொன்னாப் பட்டு, முகம் கிட்டக்க்க்க வரும் போது……………”அத்தான்”!
  —–

  வீரர்கள் வழி-விழி வேறு!
  முகம் தான் முதலில்! தாரகனுக்கும் அப்படியே!

  அவளுக்கும் சில சமயம் அவன் முகமே முதலில் படும்! கோபத்தில்-ஊடலில்! அவன் கன்னத்தில் அறைய! முருகன் கன்னத்தில் அறைய…
  —–

  * இந்தப் பாடலை முன்னால் இருந்து படித்தால் = கேசாதி பாதம் = புறம்!
  * இந்தப் பாடலைப் பின்னால் இருந்து படித்தால் = பாதாதி கேசம் = அகம்!

  • anonymous says:

   //முழுமதி அன்ன ஆறு முகங்களும்//

   ஒரே மதி, ஆனா ஆறு முகம் என்று உவமித்து வருவது, பன்மை மயக்கத்துப் புறத்துப் பிறந்த உவம வழுவமைதி!

   கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
   கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?
   -ன்னு அருணகிரி…பன்மை மயங்காமல்…ஆறு முகங்கள்=சந்திர நிறங்கள்-ன்னு பன்மையே காட்டுவார்!

   என்னென்ன “சந்திர நிறங்கள்”-ன்னு முன்பு இட்ட பின்னூட்டம் தன்னில் பார்த்துக் கொள்ளவும்!

   முருகா, வேறிடம் மாறணும்; போய் விடலாம், வா…

   • amas32 says:

    நன்றி, நன்றி! உங்களை இங்கு அனுப்பிய முருகனுக்கு நன்றி. 🙂
    amas32

 3. ஆனந்தன் says:

  நன்றி, உருவமற்றவரே! ஆறுமுகனைக் கண்டால், ஆபிரிக்கக் காய்ச்சலும் வேறுபுறம் ஓடிவிடும் போலும்! மகிழ்ச்சி.

  • anonymous says:

   🙂
   மிக்க நன்றி, தங்கள் மின்னஞ்சலுக்கு! மாத்திரைகள் இங்கேயே ஒரு வழியாக் கிடைத்து விட்டது; இப்போ பரவாயில்ல.
   Cudnt reply; Sorry; Internet is difficult here; One US Govt Aid personnel makes his iphone, as internet tethering for wireless. So will quickly check email & 365paa
   Will write my comments offline & post when wireless avl again in the night

 4. GiRa ஜிரா says:

  முதலில் நாகாவுக்கு எனது உளமார்ந்த நன்றி பல. 🙂

  என்னுடைய மனதுக்கும் உணர்வுக்கும் மிகமிக நெருங்கிய பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி. 🙂

  கச்சியப்பரின் கந்தபுராணத்திற்கும் சங்க இலக்கிய வழியான முருக செய்திகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் எப்படிக் கம்பராமாயணத்தின் கவிச்சுவையை ஏலாக்கருத்தையும் மீறிச்சுவைக்கிறோமோ, அப்படியே கந்தபுராணத்திலும் சுவைக்கிறோம். அதற்குக் காரணம் அழகு தமிழ்.

 5. GiRa ஜிரா says:

  நாம தெருவுல போறப்போ ரெண்டு நாய்கள் அடிச்சிக்கிட்டா அந்தப் பக்கம் போவோமா? உறுதியா ஒதுங்கிப் போவோம். 🙂

  அப்ப அந்த நாய்களக் கொஞ்சம் உத்துப் பாத்தா நெறைய தகவல்கள் புரியும்.

  ஒன்னு கர்ர்ர். இன்னொன்னு வள்ள்.

  வாலு வெடச்சிக்கிட்டு வாய நல்லாத் தொறந்து கூர்மையான பல்லெல்லாம் காட்டிக்கிட்டு…. அப்பப்பா பாக்கவே பக்குன்னு இருக்கும்.

  நாய்கள். நம்மை விடச் சின்ன விலங்கு. அது சண்டை போடுறப்பவே நமக்கு அடிவயிறு கலங்குது. இதுவே ரெண்டு ஆளுங்க சண்டை போட்டா? அதுவும் கத்தி துப்பாக்கி எடுத்துச் சண்டை போட்டா? அதுவுமில்லாம ரெண்டு பக்கமும் ஆட்களச் சேத்துக்கிட்டு சண்டை போட்டா… அந்தத் தெசைக்கே கும்புடு போடுவோம் நம்ம.

  இந்தப் பாட்டுலயும் அதே காட்சி. பெரிய சண்டை. கடாபுடான்னு கத்திக்கிட்டு வர்ரான் தாரகாசுரன். ஆனா எதுக்க வந்தவனப் பாத்தா அமைதி + அழகு + குளுமை + அருள்.

  இப்படியொரு காட்சியைப் பாத்தா எப்படிச் சண்டை போடத் தோன்றும்?!

  கதைப்படி தாரகன் நல்லவன். கும்பகர்ணன் மாதிரி. சூரனுக்கு எடுத்துச் சொல்றான். கேக்கலைன்னதும் முடிவு தெரிஞ்சே போருக்கு வாரான்.

  போருக்கு வந்தவன் மொதல்ல முருகனின் திருமுகங்களைப் பாக்குறான். குளுகுளுன்னு நெலா மாதிரி இருக்கு. ஆறுமுகத்துல ஒரு முகத்தையாவது பாக்க மாட்டோமான்னு நம்மெல்லாம் தவிக்கிறோம். தாரகனோ ஆறுமுகத்தையும்… முழுமதி அன்ன ஆறுமுகங்களையும் பார்க்கிறான்.

  இதுல முழுமதின்னு ஒருமையைச் சொல்லி ஆறுமுகங்கள்னு பன்மையில் சொன்னதுக்கு எனக்கு ஒரு கருத்து தோன்றுது.

  ஆறுமுகங்களைப் பாத்தாலும் அவனுக்கு எல்லாம் ஒன்றாகத்தான் தெரிகின்றன.

  அதெப்படி?

  ஒரு பூவில் நிறைய இதழ்கள் இருந்தாலும் அது ஒரு பூதான். எல்லா இதழ்களும் சேந்து ஒரு பூவாத் தெரியுற மாதிரி ஆறுமுகங்களும் சேர்ந்து ஒரு திரு நிலவாத் தெரியது.

 6. GiRa ஜிரா says:

  பொதுவாச் சண்டைக்குப் போனா எதிரி என்ன ஆயுதம் கொண்டு வந்திருக்கான்னு பாப்பாங்க.

  தாரகனோ குளிர்முகங்களைப் பார்க்கிறான். அந்த முகங்களில் இருக்கும் பன்னிரு விழிகளையும் பாக்குறான். அருள் பொங்கும் விழிகள். அப்பயே தாரகனுக்கு அருள் கிடைச்சாச்சு. அதுக்கப்புறம் நடக்குற சண்டையெல்லாம் சும்மா ஒப்புக்கு.

  அருள் கிடைச்சதும் ஒருவனுக்குத் தோன்றுவது ஞானம்/அறிவு. அதுனாலதான் அடுத்து வேலைப் பாக்குறான். வேல் அறிவின் வடிவம். கூர்மையானது. ஆழமானது. அகலமானது.

  அருளும் அறிவும் கெடைச்சதும் முருகன் கையிலிருக்கும் மற்ற படைக்கருவிகள்ளாம் ஒரு பொருட்டாவே தெரியலை. அதான் கச்சியப்பர் வேறுள படையின் சீரும்னு சுருக்கமா முடிச்சிட்டாரு.

  அருளும் அறிவும் வந்ததும் ஆண்டவனைச் சரணடைவதுதானே வழி! அதுக்கு என்ன வழி?

  காக்கும் கைகளும் அடைக்கலம் அருளும் அடிகளும்.

  அதுதான் தாரகனுக்குத் தெரியுது.

  அழகிய கரம் ஈராறும்
  அணி மணி தண்டை ஆர்க்கும் செழுமலரடியும் கண்டான்!

  எவ்வளவு கொடுத்து வெச்சவன்!

  தாரகன் கரும மலத்தின் உருவகம். கருமத்தைத் தொலைக்கனும். அதுனாலதான் அண்ணன் தன்னுடைய சொற்பேச்சு கேளாத போதும் அவனுக்காக சண்டையிட்டு உயிர் கொடுத்து தன்னுடைய கருமத்தைத் தொலைக்கிறான்.

  செஞ்சோற்றுக்கடன். தம்பிகளைப் பொருத்த வரையில் இராமனை விட இராவணனை விட தருமனை விட சூரன் கொடுத்து வைத்தவன்.

 7. ஆனந்தன் says:

  ஜிரா-அருமையான பார்வை.
  தனக்காகவோ, பிறருக்காகவோ அல்லாமல் தர்மத்துக்காகப் போரிடும் வீரனின் முகத்தில் வெறியும், குரூரமும் இருக்கமுடியாது; அமைதியும் சாந்தமுமே இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இப்பாடலில் முருகன்.

  நினைவுக்கு வருகிற, ஆனால் கொஞ்சம் distant ஆன சினிமாக் காட்சி:
  அன்பே சிவம் படத்தில், மாதவன் கடும் கோபத்துடன் கமலின் கன்னத்தில் அடித்துத் திட்டுவார். அப்போது சிரிப்புடன் நின்ற கமல், பின்னர் சாவகாசமாக ஒரு ரயில் நிலையத்தில், மாதவன் கன்னத்தில் பலமாக அடித்துவிட்டு “பார்த்தியா, எவ்வளவு நிதானமா அடிச்சேன்?” என்று சிரித்துக் கொண்டே கூறுவார்!

  • anonymous says:

   // தர்மத்துக்காகப் போரிடும் வீரனின் முகத்தில் வெறியும், குரூரமும் இருக்கமுடியாது; அமைதியும் சாந்தமுமே இருக்கும்//

   :))
   இந்த அமைதியை/புன்னகையை…
   “சிரிச்சிக்கிட்டே கழுத்து அறுக்கிறான்”-ன்னு சிலர் தவறாகப் புரிந்து கொள்வதும் உண்டு!:((

   “நகை ஏவிய நாதர்” என்பது அருணகிரியின் சொல்லாட்சி!
   ஒரு புன்னகையை ஏவுகணையாக ஏவ முடியுமா என்ன?

   * சாதாரண மாற்றுக் கருத்துக்கே மனம் குமறும்/சீறும் = நாம்!
   * ஆனா, ஆயுதமேந்தி எதிரே இருப்பவனிடம் சிரிக்கும் = முருகன்!

   எப்படி இவர்களால், “சிரிக்க” முடிகிறது?

  • anonymous says:

   எப்படிக் கமலால், மாதவனிடம் சிரிக்க முடிந்தது?
   படத்தை இன்னோரு முறை பார்த்து விட்டுச் சொல்லுங்கள்:)

  • anonymous says:

   இந்த பளார் அடி….ஏதோ ஒரு “கொள்கை” Discussionஇல் விழும் ன்னு நினைக்கிறேன்:) – ருஷ்யா உடைஞ்சாலும் கொள்கை உடையாது-ன்னு சொல்ல…அப்போ விழும் அடி:)

   எத்தனையோ முறை அந்த அரஸ் (அதானே மாதவன் பேரு?), கமலை மறுதலித்து, வலிக்க வைப்பான்…
   தான் முதலில் அடிச்சதனால் தானே, வலி-ன்னா என்ன-ன்னு தெரிய அடிச்சிக் காட்டினாரு என்பதை வசதியா மறந்துடுவான்…

   ரயிலில் தாழ்ப்பாள் வேறு போட்டுருவான்….கமலால் அந்தக் காலை வச்சிக்கிட்டு ஓடக் கூட முடியாது…
   அப்பவும் கமல் அவனை வெறுக்க மாட்டாரு! சிரிப்பாரு = ஏன்?
   —-
   (ரயில் வண்டியில், “ஒத்த கொள்கை” உடைய இன்னோரு ஆள் கிட்ட ஏமாந்து போவான் மாதவன்; அது வேற கதை)

  • GiRa ஜிரா says:

   அழகாகச் சொன்னீர்கள். அன்பே சிவம் படத்தினை நானும் ரசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் காட்சி உட்பட. எனக்கு மிகவும் பிடித்தது இறுதிக்காட்சி. கடவுள் நம்பிக்கை பற்றி சந்தானபாரதியிடம் பேசும் காட்சி. கொல்லனும்னு வந்துட்டு…. அது வசனம். அது காட்சியமைப்பு.

 8. anonymous says:

  காலை, ஊர் மாறும் பயணத்தில், முக்கியமான ஒன்னு சொல்ல விடுபட்டுப் போய் விட்டது….
  —-

  முருகனின் முகத்தில் மட்டும் தான் அருளா?
  இல்லை!
  தாரகன் முகத்திலும் தான்!

  என்னாது? தாரகாசுரனின் முகத்திலா?

  ஏன் இப்படி?
  போர்-ன்னா, ஆக்ரோ’ஷ’ம், அவரவர் ரோ’ஷ’ம்…..குத்து, கொல்லு தானே?
  எப்படி, இப்படிச் சிரிச்ச முகமா இருக்க முடியும்?

  இது சும்மா “புனித பிம்பத்தனமா”? இல்லை மெய்யாலுமேவா?

 9. anonymous says:

  முருகனுக்கு வாய்த்த எதிரிகள்
  = முருகனைப் போன்றே நல்லவர்கள்!

  தன் எதிராளியின் பலத்தில் பாதி, தனக்கு வந்துவிட வேண்டும் என்ற புத்தியோ,
  எவ்வளவு வீரமாக அம்பு விட்டாலும், தன் உயிர் போகாது; ஒரு மறைமுக இடத்தில் அது ஒளிந்து இருக்கும் என்றோ….
  இப்படியான திருட்டு வரங்களில் ஒளிந்து கொள்ளாத சுத்த வீரர்கள்!

  *தாருகனும், தன் சுய லாபத்துக்காகப் போருக்கு வரலை!
  *முருகனும், தன் சுய லாபத்துக்காகப் போருக்கு வரலை!

  கற்பனை செஞ்சிப் பாருங்க…
  போரில் வெகு விரைவில் தோற்கும் நிலை வந்துருது! பின் வாங்கி அண்ணனையே அனுப்பி இருக்கலாம்! …இல்லீன்னா இந்திரசித்து போல மாயமா மறைஞ்சி சண்டை போட்டிருக்கலாம்!

  ஆனா இப்படி எதுவுமே பண்ணாம, அப்படியே “மலை ஆகி”, மலைத்துப் போய் நிற்கிறான் தாருகன்!

  வெள்ளிடை மலை!
  அத்தனை பேருக்கு நடுவில், மலை போல நின்னா, கண்ணுக்கு நல்லாத் தெரியுமே….சும்மா விட்டுருவாங்களா? போர்-ன்னு வந்துட்டு இப்படியா நிக்குறது?
  சின்னப் புள்ளைத்தனமா-ல்ல இருக்கு?:)

 10. anonymous says:

  சின்ன வயசில், என்னை இன்னோருத்தர் முன்னாடித் திட்டிட்டாங்க-ன்னா….தாராகாசுரன் போலத் தான் நானும்:)))
  —-

  எங்க வீட்டில், கண்ணாடி வச்ச Godrej Bureau இருக்கும்! பக்கத்துல மர மேசை!
  அப்போ வாடகை வீடு…கிராமம் போல் இல்லாமல், சென்னை வீட்டில் இடம் ரொம்ப கம்மி!
  அந்த Godrej Bureau & மேசை – இடுக்குல போயி நான் உக்காந்துப்பேன்!:)

  அந்த இடுக்கு உசரம் இல்லாதது; நானோ கொஞ்சம் ஒசரம்! அங்க ஒளிஞ்சிக்கிட்டா, என் தலை நல்லாத் தெரிஞ்சிடும்!
  ஆனா வேற இடம் இல்ல! கோச்சிக்கிட்டு, அங்கனயே ஒக்காந்துப்பேன்….சாப்பிடச் சொல்லிக் குரல் வரும்…வரமாட்டேன்….

  தாருகன், அப்படித் தான் பண்ணுறான்! 🙂
  அத்தனை பேரும் கண்டுபுடிக்கிறா மாதிரி, வெட்ட வெளியில், மலையா மாறி நிக்குறான்!
  முருகன் மேல் ஒரு ஆக்ரோஷமோ, மாயம் பண்ணுவோம்-ன்னு திருட்டுப் புத்தியோ இல்லாமல் “மலைச்சிப்” போயி நின்னுடறான்!
  —–

  சிலர் நம்மை எவ்வளவு வருத்தினாலும், அவங்க மேல கோபமோ/வெறுப்போ வராது…
  இப்படி நாமளே “மலைச்சிப்” போயி நின்னுடத் தான் தோனும்! = ஏன்?
  —–

 11. anonymous says:

  அம்மாக்கு நல்லாத் தெரியும், என்னையப் பத்தி; எது-ன்னாலும் அவங்க கிட்ட வந்து சொல்லுவேன்-ன்னு!
  எனக்கும் நல்லாத் தெரியும் அம்மா பத்தி; ஆனா இன்னிக்கி ஏனோ, இன்னொருத்தர் முன்னாடி என்னைத் திட்டி, “அசிங்கப்”படுத்திட்டாங்க

  அந்த பீரோ ரூம்-ல்ல, அம்மா, அப்படியும் இப்படியும் நடப்பாங்க! ஆனா என்னைப் பாக்காத மாதிரி போவாங்க, நமுட்டுச் சிரிப்புடன்!:)

  நானும் அவங்க நடக்கும் போதெல்லாம், அந்த பீரோ இடுக்கில் எக்கி எக்கிப் பார்ப்பேன்…எனக்குள்ளும் சிரிப்பு வரும்;
  ஆனாலும் அந்த இடுக்கில் இருந்து வர மாட்டேன்!:)

  * முருகனின் அமைதியான முகமும் அப்படியே!
  * தாருகனின் அமைதியான முகமும் அப்படியே!

  என்ன தான் சண்டை-ன்னாலும், முருகனுக்குத் தாருகனைப் பற்றித் தெரியும்; அவன் கடைஞ்செடுத்த அயோக்கியன் அல்ல! கடமையின் பொருட்டு வந்திருக்கான்-ன்னு!
  தாருகனுக்கும் தெரியும், முருகன் எதுக்கு வந்திருக்கான்-ன்னு!

  = இந்தத் தெரிதல்/ புரிதல்
  = இது இருந்தா, ஒரு நாளும் ஒருவரை அசிங்கப்படுத்திப் பார்க்காது!

  அதான் போரிலும் = “கருணை கூர்” முகங்கள் ஆறும்!
  —-

  எதிரே நிற்பவன் = “எதிரியா?”
  = இந்தப் புரிதல்
  = இந்தப் புரிதல் உள்ளத்தில் ஊறினால், மருள் செய்யும் போதும், அருள் சுரக்கும்!

  தாருகன், “மலை”த்துப் போய் நின்றான்!
  வேல் தொட்டது!
  = தொளைப்பட்டு உருவத் “தொடு” வேலவனே!
  தாருகன், முருகனுக்கு ஆடு வாகனமாய் ஆகிப் போனான்!

 12. anonymous says:

  பீரோ இடுக்கில் இருந்து வெளியே வந்தேனா?-ன்னு சொல்லலியே:)

  திடீர்-ன்னு, வெளியில் இருந்து குரல் வரும்; – “எவ்ளோ நேரம் தான் சாப்பிடாம இருக்குறது? பசி பொறுக்கலை!”-ன்னு அம்மா தானாப் பேசிக்குவாங்க…

  நான் இடுக்கை விட்டு மெல்ல வெளியே வருவேன்…
  நீங்க பண்ணது தப்பு-ன்னு, அதையும் அவங்க கிட்டயே போய்ச் சொல்லுவேன்:)

  சரி, சாப்பிடலாமா?-ம்பாங்க!
  கொஞ்சமாப் போடுங்க! இன்னிக்கி திட்டியதால் தொட்டுக்க வேணாம்-ம்பேன்!
  அவங்களும் கொஞ்சமா, கொஞ்சமா-ன்னு தெரியாமப் போட்டுக்கிட்டே இருப்பாங்க!:)
  சுபம்:)

 13. anonymous says:

  படத்திலும், இதே கதை தான்!
  மாதவன், கமலை அடிக்கும் போதும், கமல் சிரிப்பாரு!

  ஏன்-னா, படம் ஆரம்பிக்கும் போதே தெரிந்து விடும்….
  மாதவன் வெள்ளரிக்காயை வெடிகுண்டாக எண்ணிப் பயப்படும் ஒரு அப்பாவித் துடுக்குப் பையன்-ன்னு:))
  = இந்தப் “புரிதல்”!

  அதான், மாதவன் எவ்வளவு மாட்டி விட்டாலும், பதிலுக்கு கமல் “வெறுப்பை” உமிழ மாட்டாரு!
  = “அன்பே” சிவம்!:)
  = அந்த அன்பைப் “புரிதல்” சிவம்!
  —-

  சிலர் நம்மை எவ்வளவு வருத்தினாலும், அவங்க மேல கோபமோ/வெறுப்போ வராது…
  ஏன்-ன்னா அவங்களைப் பத்தி நம் அந்தரங்க மனசுக்குத் தெரியும்! அந்தப் “புரிதல்” உண்டு!
  —-

  * சாதாரண மாற்றுக் கருத்துக்கே மனம் குமறும்/சீறும் = நாம்!
  * ஆனா, ஆயுதமேந்தி எதிரே இருப்பவனிடம் சிரிக்கும் = முருகன்!

  “எதிரே” நிற்பதால் “எதிரி” அல்ல! = இதுவே, முருகன் காட்டிய வழி!

 14. anonymous says:

  கந்த புராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார்
  = இவர் மேல் எனக்குத் தனிப்பட்ட சில வருத்தங்கள் உண்டு!

  *தமிழ் குறித்த இவரது பார்வை/ வடமொழி இலக்கணத்தை வலிந்து தமிழுக்குள் நுழைத்து விட்டது
  *தன் சமய/கோத்திரப் “பெருமை”க்காக, சிறுபான்மைச் சமயங்களைக் காய்வது
  *என் முருகனின் அடிப்படையே = “கருணை”….ஆனா போர் முடிந்து, சூரனின் மொத்த ஊரையும் உயிர்களையும் முருகன் கடலுக்குள் மூழ்கடித்ததாக எழுதியது:((

  இதை எங்கோ படித்து விட்டு, ஒரு தம்பி, என்னிடம் வந்து அப்படியா அப்படியா?-ன்னு சீறு சீறு-ன்னு சீறினான்;
  ஏதோ முருகனும்-நானும் அதைக் கூட்டுச் சேர்ந்து செய்தாற் போலவும், தவறான ஒருவனை நான் பிடிச்சிக்கிட்டு வாழறேன்-ன்னும்:)))
  முருகன் அவ்வாறு செய்யவில்லை என்பதை எப்படி உணர்த்த?:( முருகா!!

  கச்சியப்ப சிவாச்சாரியார் மேல் இப்படி வருத்தங்கள் இருப்பினும்….
  அவர் எடுத்துக் கொண்ட கலம் = முருகன்!
  அதனால், (என்னளவில்) அந்த முருகக் கலத்தில் விஷமே ஊற்றித் தந்தாலும், அதை ஜீரணிப்பதே என் வாழ்வாதாரம்! = என் கதியாய் விதியாய் வருவாய் குகனே!

 15. anonymous says:

  சற்று முன்..http://srilanka.channel4.com/ 2ஆம் வீடியோ பார்த்தேன்:(((
  இறந்தவர்களைக் கூடக் காலால் எத்தி உதைத்துச் சிரிக்கிறார்கள்:((
  என்னவொரு வெறுப்பு!
  என்னவொரு உள்ளம்!

  இந்தப் பதிவு தான் ஞாபகம் வந்துச்சி!
  போர்…
  *துவங்கும் முன் = எதிரே இருப்பவனைக் கண்டு அருள் பார்வை
  *முடிந்த பின் = மரியாதை கலந்த வருத்தம்
  – இது என்றோ முருகன் செய்தது!
  —-

  போர்…
  *துவங்கும் முன் = எதிரே இருப்பவனைக் கண்டு பயம்
  *முடிந்த பின் = இறந்த குழந்தையையும் காலால் எத்துவது
  – இது “நாகரீக”, “அறிவியல்” உலகில் நாம் செய்வது (அ) பார்த்தும் பார்க்காதது போல் போவது:(

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s