மனிதரில் மூன்று வகைகள்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்

சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல

குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்

பலா, மாவைப் பாதிரியைப் பார்

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: ஔவையார்

அசைகின்ற அழகிய மாலையைச் சூடியவளே, வேல் போன்ற கண்களை உடையவளே,

மனிதர்களில் மூன்று வகை.

சிலர், நல்ல விஷயங்களைச் சொல்லாமலே செய்வார்கள்.

வேறு சிலர், சொல்லிவிட்டுச் செய்வார்கள்.

இன்னும் சிலர், சொல்வார்கள், ஆனால் செய்யமாட்டார்கள்.

இவர்களைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் பலா, மா, பாதிரியைப் பார்.

பலா மரம், பூக்காது, ஆனால் காய்க்கும், இனிமையான சுளைகளைக் கொண்ட பழங்களைத் தரும். சொல்லாமலே செய்கிற முதல் வகை மனிதர்களுக்கு உவமை இது.

மா மரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும், எதையும் சொல்லிவிட்டுச் செய்கிற இரண்டாவது வகை மனிதர்களுக்கு உவமை இது.

பாதிரி மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, பழுக்காது, எந்தப் பலனும் தராது, பந்தாவாகச் சொல்லிவிட்டு எதுவுமே செய்யாமல் இருக்கிற மூன்றாவது வகை மனிதர்களுக்கு உவமை இது.

துக்கடா

 • ஔவையார் இந்தப் பாடலை எழுதிப் பல நூறு வருடங்களாகிவிட்டன. ஆனாலும் பலா, மா, பாதிரி மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள், இப்போதும் இந்த வரிகள் அதே பொருளை, அனுபவத்தைத் தருகின்றன, ‘க்ளாசிக்’ கவிதையின் இலக்கணம் இதுதானே?!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
 • சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல
 • குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
 • பலாமாவைப் பாதிரியைப் பார்

249/365

Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், ஔவையார், தனிப்பாடல், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to மனிதரில் மூன்று வகைகள்

 1. amas32 says:

  சொக்கரே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இன்றும் இந்தப் பாடல் இந்தக் காலத்திற்கு நூறு சதவிகிதம் பொறுந்துகிறது. மூன்றாவது வகைப் பட்ட மனிதர்கள் தான் இன்று அரசியலில் கொடி கட்டிப் பறக்கின்றனர். அவர்களின் எத்தனை வாக்குறுதிகள் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன!

  நல்ல விஷயங்களை சொல்லாமலே செய்கின்றவர்கள் அரிதாகிவிட்டாலும் இன்றும் உள்ளனர். அவர்களால் தான் இன்னும் நல்ல மழை நாட்டில் பெய்துகொண்டிருக்கிறது. எத்தனையோ தர்ம காரியங்கள் இவர்களால் நடத்தப்பட்டு ஏழை எளியவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

  ஒரு டியூப் லைட்டில் கூட உபயம் இன்னார் என்று எழுதி கோவிலுக்குச் செய்யும் தானத்தையும் சொல்லி செய்பவர்களும் இருக்கின்றனர். ஆனால் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் கழுத்தறுப்பவரை விட இவர்கள் மேலோர்.

  ஒளவையார் பலா, மா, பாதிரி மரங்களோடு மனிதனின் குணத்தை ஒப்பிட்டுக் கூறுவதால், நமக்கு அவர் சொல்ல வந்தது நன்றாகப் புரிகிறது.

  amas32

 2. Samudra says:

  சில பேர் செய்து விட்டு சொல்லுவார்கள். நான் இதை செய்தேன் அதை செய்தேன்
  என்று. அவர்களும் இரண்டாம் வகையில் அடக்கம் என்று நினைக்கிறேன்.

 3. psankar says:

  இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது. தண்ணீர் விட்டு பாதுகாப்பாய் வளர்த்தால்தான் தென்னை மரம் காய்க்கும். பனை மரம் தானாகவே வளர்ந்து நுங்கு தரும். இன்னும் ஏதோ ஒரு மரம் (ஒதிய ? ) என்ன செய்தாலும் காய்க்காது. அது என்ன பாடல் என்று தெரியுமா ?

 4. Pingback: மனிதரில் மூன்று வகைகள் | Rammalar's Weblog

 5. johan paris says:

  இப்பாடல் தெரியும், இன்றே மிகத் தெளீவான பொருலளறீந்தேன். மன்னிக்கவும்- ஈகலப்பையும் வின்டோ 10 ம்- பொருந்தவில்லை. தவறுகள் நேர்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s