சிறந்தவை

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

*

மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை

*

வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை

*

நலனுடைமையின் நாணுச் சிறந்தன்று

*

கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

*

செறாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று

நூல்: முதுமொழிக் காஞ்சி (’சிறந்த பத்து’ வரிசையில் #1, #3, #4, #6, #8 & #9)

பாடியவர்: மதுரைக் கூடலூர் கிழார்

நல்ல நூல்களைப் படிப்பதைவிட, நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறப்பு.

*

நிறையப் படித்து ‘மேதை’ என்று பெயர் வாங்குவதைவிட, குறைவாகப் படித்தாலும் அதை மறக்காமல் பயன்படுத்துவதுதான் சிறப்பு.

*

வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதைவிட, உண்மை பேசுவதுதான் சிறப்பு.

*

உடல் அழகைவிட, தவறான செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படும் குணம்தான் சிறப்பு.

*

நூல்களைக் கற்பதைவிட, ஏற்கெனவே நன்கு படித்த அறிஞர்களை வணங்கி வழிபட்டு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் சிறப்பு.

*

நம்முடைய விரோதிகளைத் தண்டிப்பதைவிட, அவர்கள் முன்னால் பெரிதாக வாழ்ந்து காட்டுவதுதான் சிறப்பு.

240/365

Advertisements
This entry was posted in அறிவுரை, பட்டியல். Bookmark the permalink.

5 Responses to சிறந்தவை

  1. Karthik says:

    நலனுடைமையின் = உடல் அழகைவிட…
    இவ்வாறு பொருள் கொள்வதற்கு பதிலாக ” ஒருவன் தன் நலன் கருதி தவறான செயல்கள் செய்யாமல், அவ்வாறான தவறான செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படும் குணம்தான் சிறப்பு”
    நலன் என்பது அழகை குறிப்பதற்காக வேறு எந்த பாடலிலாவது பயன்படுத்தபட்டுள்ளதா?

    • என். சொக்கன் says:

      நலன் என்பது பொதுவான சொல், ‘குண நலன்’, ‘உறுப்பு நலன்’ என்று பல அர்த்தங்களில் வரும், இங்கே அது உடல் அழகைக் குறிப்பதாக நான் நினைக்கிறேன், நீங்கள் சொல்லும் பொருளும் சரியானதாக இருக்கலாம்

  2. amas32 says:

    இதை நடத்திக் காட்டுவது தான் மிகவும் கடினமானது //நம்முடைய விரோதிகளைத் தண்டிப்பதைவிட, அவர்கள் முன்னால் பெரிதாக வாழ்ந்து காட்டுவதுதான் சிறப்பு.//

    நம்முடைய சக்தியை ஆக்கப்பூர்வமாக நம் முன்னேற்றத்திற்கு செலவிடுவதில் பயனுண்டு. அந்த நேரத்தையையும் சக்தியையும் நம்மை இகழ்வோரை தாக்குவதிலேயோ அழிப்பதிலேயோ செலவிட்டு என்ன பயன்? அப்படியே செய்தாலும் அதனால் கிடைக்கும் வெற்றி தாற்காலிகமானது. மேலும்அது தொடர் வன்முறையை வேறு தூண்டிவிடும். ஆனால் அந்த பகுத்தறிவும் மன்னிக்கும் தன்மையும் விவேகம் உள்ள ஒருவருக்கே வரும்.

    //உடல் அழகைவிட, தவறான செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படும் குணம்தான் சிறப்பு.// இது அறிவுரை கொஞ்சம் விநோதமாக உள்ளது. உடல் அழகு தானாகத் தானே ஒருவருக்கு அமைகிறது. உடல் அழகை பெருமையாக நினைப்பதை விட தவறான செயல்களைச் செய்வதற்கு வெட்கப்படும் குணம் பெரிது என்று கொள்ள வேண்டுமா?

    வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்து, உண்மை பேசுவபவராகவும் இருந்தால் Double சிறப்பு 🙂

    amas32

  3. சுப. இராமனாதன் says:

    இருமல் அதிகமானால் நாம் குடிக்கும் டானிக்கின் பெயர் சிறப்பு.
    டானிக்கினால் இருமல் அறவே நின்றால், அது சிறப்பின் சிறப்பு. 🙂

    – சியாட்டில் கிழார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s