ஆடல் மகளிர்

ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்

தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை

கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ

கருங்கோட்டிச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப…

நூல்: நெடுநல்வாடை (வரிகள் 67 முதல் 70வரை)

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்

சூழல்: வாகைத் திணை, கூதிர்ப் பாசறை, அதாவது ஐப்பசி, கார்த்திகை மாதக் குளிரில் நிகழும் காட்சிகளில் ஒன்று

ஆடிப் பாடுகின்ற தொழிலை உடைய பெண்கள் அங்கே வந்தார்கள். தங்களுடைய பாடலுக்குத் துணையாகச் சீறியாழ் என்ற இசைக் கருவியை மீட்ட முயன்றார்கள்.

ஆனால், குளிரினால் அந்த யாழின் நரம்புகள் நிலைகுலைந்துபோயிருந்தன. அதிலிருந்து எழுந்த இசை இனிமையாக இல்லை.

ஆகவே, அந்தப் பெண்கள் தங்களுடைய பெரிய மார்பகங்களில் படுமாறு யாழைத் தழுவினார்கள். அந்த வெப்பத்தில் யாழின் நரம்புகளை ஒற்றிச் சூடாக்கிச் சரி செய்து பண்ணுக்கு ஏற்ற முறையில் நிறுத்தினார்கள்.

துக்கடா

 • குளிரில் கை காலெல்லாம் பாதிக்கப்படும் என்று பார்த்திருக்கிறோம், இந்தப் பாடலில் யாழின் நரம்புகள் கோளாறாகி இசை கெட்டுப்போனதாகச் சொல்கிறார்கள். இங்கே வீணையோ வயலினோ வேறு நரம்புக் கருவிகளோ வாசிக்கத் தெரிந்தவர்கள் இருந்தால் உறுதிப்படுத்தவும்
 • anyway, யாழின் நரம்புகளைச் சரி செய்யும் சூட்சுமம் அந்த ஆடல் மகளிருக்குத் தெரிந்திருக்கிறது. தங்கள் உடல் வெப்பத்திலேயே அதனை ரிப்பேர் பார்த்துவிடுகிறார்கள். பலே!

238/365

Advertisements
This entry was posted in நாடகம், புறம், வர்ணனை. Bookmark the permalink.

11 Responses to ஆடல் மகளிர்

 1. Samudra says:

  Does weather affect string instruments என்று கூகிளில் தேடினேன்.Yes என்று தான் சொல்கிறார்கள். கோடையில் உலோகங்கள் நீட்சி அடையும். ஆனால் வாத்தியங்களை room temperature -இல் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்திருப்பதால் பெரிதாக பாதிக்காது.கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் சரியாகி விடும்.உடம்பில் வைத்தால் சரியாகுமா என்று தெரியவில்லை.இந்தப் பாடல் பெண்களின் அங்கங்களை வேண்டுமென்றே வர்ணிக்க ஏற்பட்ட கற்பனை. அவ்வளவே ..

  கம்பியின் இழுவிசைக்கும் அது அளிக்கும் அதிர்வெண்ணுக்கும்
  உள்ள தொடர்பு :-

  frequency produced by a string = f = 1/2L * sqrt(T/μ )
  L கம்பியின் நீளம்
  T கம்பியின் இழுவிசை (tension)
  μ அடர்த்தி (mass per unit length)

  வயலினில் ஸா வாசிக்கும் போது வெறுமனே போ போடுகிறோம்.
  ரிஷபத்தைப் பிடிக்க கொஞ்சம் கீழே அழுத்துகிறோம் அல்லவா?
  Frequency of Ri > frequency of Sa. Higher the tension, higher the frequency.எனவே tension
  அதிகமாக இருந்தால் base ஸா வின் சுருதி அதிகமாகக் கேட்கும் என்று
  நினைக்கிறேன்.

  ஆனால் மனதில் டென்ஷன் இருந்தால் சங்கீதம் கர்ண கடூரமாகக் கேட்கும்..

  • anonymous says:

   //இந்தப் பாடல் பெண்களின் அங்கங்களை வேண்டுமென்றே வர்ணிக்க ஏற்பட்ட கற்பனை. அவ்வளவே ..//

   மன்னிக்கவும் சமுத்ரா சார்! அப்படி அல்ல!
   சங்கத் தமிழ் மரபும் அதுவல்ல!

   ஏதோ பெண் அங்கத்தை வர்ணிக்க வேணுமே-ன்னு, யாழிசை மேல் ஏற்றி, நக்கீரர் இந்தப் பாட்டைப் பாடலை!

   வர்ணிக்க வேண்டிய சூழல் வந்தால், பெண்ணின் அங்கங்களை/ ஆணின் அங்கங்களை நேரடியாவே வர்ணிப்பது சங்கத் தமிழில் உண்டு!
   முலை, அல்குல்-ன்னு நேரடிப் பேச்சு தான்! உடல் உறுப்புகள் மேல் அசூயை இல்லை!
   —–

   யாழ் is extinct today!
   But வீணை போல basic அமைப்பு தான்!

   Cycle Brake Wire பார்த்து இருக்கீங்களா? வெளியவே தெரியும்!
   குளிர்ப் பிரதேசங்களில், அதுக்கு மெழுகு தடவுவாங்க! அப்போ தான் இறுக்கமாப் பிடிக்கும்!
   All metals expand on heat & contract on cold! யாழ்/வீணையின் தந்தி is finely drawn wire metal! அதுக்கும் அப்படியே!

   கச்சேரியில், வீணையின் தந்தியை, ஒரு மெழுகுப் பிரடை வச்சித் தேய்ப்பாங்க – பாத்து இருக்கீங்களா?
   அதே தான்! தட்ப வெப்பத்துக்குத் தான் அப்படிப் பண்ணுறது!
   —–

   வீணை எனக்கு ஒப்புக்கு வாசிக்கத் தெரியும்:) – தங்கை நடனப் பள்ளியில் சும்மா ஓசில கத்துக்கிட்டேன்:)
   அதனால் சொல்லுறேன்; தந்திகளுக்குத் தட்பவெட்ப பராமரிப்பு உண்டு!

   அண்மையில், வடபழனிக்கு அருகே ஒரு அம்மா வீட்டில், அழகிய வீணையைக் கண்டேன்! அவங்க தாயார் பயன்படுத்தியது போல! Old one!
   லேசா மீட்டணும் போல இருந்துச்சி! அம்மாவும் சரி-ன்னு தான் சொன்னாங்க! But sentimental reasons…மீட்டாமயே வந்துட்டேன்!

  • anonymous says:

   பெண்கள் மார்பில், யாழின் தந்தியை ஒத்தியெடுப்பது, ஏதோ “ஜில்பான்ஸ்”க்காக சங்கக் கவிஞர் பாடலை!

   “பெண்களின் அங்கங்களை வேண்டுமென்றே வர்ணிக்க ஏற்பட்ட கற்பனை”-ன்னு அவசரப்பட்டு சொல்லிறாதீக!

   சென்னைப் புத்தகக் கண்காட்சியில்…
   * சிலப்பதிகாரம்-அரங்கேற்றுக் காதை: By Dr. Shah Jahan – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டாங்க! வாசிச்சிப் பாருங்க, தெரியும்!
   * (அல்லது) சிலப்பதிகாரத்தையே நேரடியாவும் படிச்சிப் பார்க்கலாம்!
   —-

   யாழுக்குத் தந்திகள் அதிகம்! கொறைஞ்ச பட்சம் 21 தந்தி – ஒவ்வொன்னும் ஒவ்வொரு நீளம்!
   வீணை போல சிறு சிறு மர மெட்டுக்கள் இல்லாததால், பல தந்திகள் Top to bottom தொங்கும் – as in a harp!

   But unlike veena, which is horizontal, yaazh is mostly vertical
   – so it can easily be hugged!
   அதைத் தான் இந்தப் பாட்டில் வரும் பெண்கள் செய்யுறாங்க!
   எப்படி வீணைக்கு மெழுகுப் பிரடை வச்சித் தேய்க்கறாங்களோ, அதே போல, மார்பில் உள்ள செம்பஞ்சிக் குழம்பில் லேசாத் தேய்த்து, தந்திகளை நீவி விட்டுக் கொள்வது வழக்கம்!

   குன்னக்குடி வயலின் வாசிக்கும் போது பாத்தீங்க-ன்னா, சின்ன டப்பியில் திரவம் வச்சிருப்பாரு; அப்பப்போ தொட்டு தந்தியைத் தடவிப்பாரு! அது போலத் தான்!
   So this sanga tamizh song is not just a கற்பனை for பெண் அங்க வர்ணனை!

  • anonymous says:

   நீங்க தியாகராஜ கீர்த்தனைகள் அறிந்தவர்-ன்னு நினைக்கிறேன்..
   “ஸ்ரீ நாரத நாத”-ன்னு கீர்த்தனை – நாரத மகரிஷி மேல!
   அதுல “வேத ஜனித வர வீணா – வதன தத்வக்ஞா”…ன்னு வரும்!
   வீணையை உடம்போட ஒப்பிடுவாரு!

   தியாகராஜர் “வேணும்-ன்னே அங்க வர்ணனை பண்றத்துக்கு பாடுறாரு”-ன்னு சொன்னாக் கஷ்டமாயிருக்கும்-ல்ல?
   அதே போலத் தான் சங்கத் தமிழும்!

   தங்கள் அன்பான புரிதலுக்கு என்றும் நன்றி!

 2. சுப இராமனாதன் says:

  டர்ட்டி சாங். லாட் ஆஃப் பேட் வோர்ட்ஸ். சீ சீ. Bad boy chokkan. 🙂

  • anonymous says:

   no no! whatta nice song! that too from rival nakkeerar, posted by chokkan:)
   sounds like kongu thEr vaazhkkai anchiRai thumbi…aaga…ithu paadal! good boy chokkan! 🙂

 3. amas32 says:

  ஆடல் பாடல் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களை பற்றிய பாடல் இது. அதனால் இந்த மாதிரி வர்ணனை வருகிறதா?

  இதையே ஒரு கற்புக்கரசியோ அல்லது கலைவாணியே வாசிப்பதாக வரும் பாடலில் குளிர்ச்சியினால் சுருதி சேரவில்லை என்றாலும் அக்னி தேவன் வந்து சூடு ஏற்றி இனிய நாதத்துக்குத் துணை புரிந்ததாகத் தான் கவிஞர்கள் பாடியிருப்பார்கள்!

  அல்லது அந்த ஆடல் மகிளிருக்கு எந்த சூழ்நிலையையும் தானே தனித்து சமாளிக்கும் திறன் இருந்தது என்றும் கொள்ளலாம்.

  amas32

  • anonymous says:

   இல்லைம்மா…
   ஆடல் பாடல் மூலம் வாழ்க்கை நடத்துபவர்கள் – ஆடல் மகளிர் – பாணன்/பாடினி க்கு மிகுந்த மதிப்பு இருந்தது!
   அவங்களது தான் ஆற்றுப்படை – பெரும்பாண்/சிறுபாண் ஆற்றுப்படை! திரு முருகாற்றுப்படை!

   கற்புக்கரசி-க்கு அக்னிதேவன் வந்து சூடேற்றுவான்! இவிங்க எல்லாம் இப்படித் தான் சூடேற்றிக்கணும்-ன்னு சங்கத் தமிழ் சொல்லவே சொல்லாது:))
   நீங்க சொன்னது தான் சரி! – “ஆடல் மகளிருக்கு எந்த சூழ்நிலையையும் தானே சமாளிக்கும் திறன் இருந்தது”

 4. …தடைஇ
  கருங்கோட்டிச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப

  என்று தடவுவதால் சூடேறுவது யாழின் நரம்புகள்தான், பார்ப்பவர்களின் உடல்நரம்புகளில் (கிளுகிளுப்பினால்) அல்ல என்று பாடல் தெளிவாகவே நிறுவிவிடுகிறது. 😉

 5. Banu venkat says:

  Semmanjukuzhambu enbathu, deepavali ganga snanatthukku munbaga, pengalin kaalgalil thadavum aarathi saandhu thane .. siriya vayadil, paatti thadaviyadu nyabagam ulladhu. 🙂

 6. ஆடல் மகளிரின் மார்பகங்கள் அவ்வளவு வெம்மை கொண்டவை என்றும் கொள்ளலாம்,

  வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும்
  ஏவனைய கண்ணார் இளமுலையும் – ஓவியமே
  மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில்
  இன்பாரும் சீதளமா மே

  என்ற நீதிவெண்பா இங்கே நினைவுக்கு வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s