குருநாதா!

அபகார நிந்தை பட்டு உழலாதே

….அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

….உனை நான் நினைத்து அருள் பெறுவேனோ!

இபமாமுகன் தனக்கு இளையோனே,

….இமவான் மடந்தை உத்தமி பாலா,

ஜெபமாலை தந்த சற்குருநாதா,

….திரு ஆவினன்குடிப் பெருமாளே!

நூல்: திருப்புகழ்

பாடியவர்: அருணகிரிநாதர்

முருகா,

யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, இமவான் என்கிற மலை அரசனின் மகளாகிய உத்தமி பார்வதியின் மகனே, எனக்கு ஜெபமாலையை வழங்கி அருள் செய்த குருவே, திரு ஆவினன் குடியில் வாழும் பெருமாளே,

நான் யாருக்கும் தீமைகளைச் செய்யக்கூடாது, அதனால் ஏற்படுகின்ற பழிக்கு ஆளாகக்கூடாது, வஞ்சர்களோடு சேர்ந்து பழகாமல் இருக்கவேண்டும், நீ எனக்கு உபதேசம் செய்த அந்த மந்திரப் பொருளையே எப்போதும் தியானம் செய்யவேண்டும், எந்நேரமும் உன்னையே நினைத்து உன் அருளைப் பெறவேண்டும். இந்த ஆசை நிறைவேறுமா?

துக்கடா

  • திரு ஆவினன்குடி என்பது பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலயம், இங்கேதான் அருணகிரிநாதருக்கு முருகன் ஒரு ஜெபமாலையைத் தந்து அருளியதாக நம்பப்படுகிறது

234/365

This entry was posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன். Bookmark the permalink.

5 Responses to குருநாதா!

  1. anonymous says:

    muruganaruL…
    after reading the suicidal poem of paari-kabilar, and too many lonely thoughts in this hostile camp…
    this song comes in as a conciliatory refresh!

    muruga! apakaara ninthai pattu uzhalaathe…
    from now on, should again go back to the quiet mode!
    —–

    the story of this song, arunagiri’s akka…is here = http://muruganarul.blogspot.com/2011/06/blog-post_14.html
    chendur moolavar only holds the japa maalai…
    but pazhani murugan hands it over to arunagiri

    pazhani (aavinankudi) has the largest number of thirupugazhs, incl the archanai=natha vinthu kalathi namo nama!
    —–

    muruga
    kuRa vaaNar kundril, uRai pEthai koNda
    kodithaana thunba mayal theera
    kuLir maalaiyin kaN, aNi maalai thanthu
    kuRai theera vanthu kuRugaayO?
    kuRai theera vanthu kuRugaayO?

  2. GiRa ஜிரா says:

    அருணகிரி மனம் பரவும் அருணை வளர் கம்பத்து இளையோனை வணங்குவோம்.

    இன்னைக்கு எல்லாக் கடவுளையும் சாமின்னு சொல்வோம். கந்தக் கடவுளைச் சாமிநாதன்னு சொல்வோம். அதுக்காக மற்ற கடவுள் குறைந்ததுன்னு பொருள் அல்ல. எல்லாம் ஒன்னுதான். நம்முடைய பாசம் எங்க அதிகமா இருக்கோ அங்க செல்லமும் அதிகமா இருக்கும்.

    அதான் சாமிநாதன் என்னும் பேரை முருகனுக்குக் குடுத்தது. அந்த முருகனைப் பாடிப் பணிந்து நமக்கெல்லாம் நல்லவழி காட்டியவர் அருணகிரிப் பெருமாள்.

    அவருக்கும் முருகனுக்கும் உள்ள உறவு அன்பு மயமானது. இங்க வா, அங்க வான்னு ஒருவ்வொரு ஊருக்கா கூப்பிட்டு திருப்புகழைப் பாட வைத்தார்.

    நல்லாப் பாடுனா ஆட்டம் வரும். பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும். ஆண்டவனுக்கே ஆடனும்னு தூண்டியிருக்குன்னா பாடுனவரு எவ்ளோ அழகாப் பாடியிருக்கனும்!

    திருப்புகழைச் சந்தத்தோடு அருணகிரி பாடப்பாட திருச்செந்தூரில் முருகனே ஆடினார். தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும் தன் கழல் சிலம்புடன் கொஞ்சவே ஆடினார்.

    இப்படி ஊரூருக்கு ஒன்னொன்னு செய்யும் போது ஆவினன்குடியில் ஜெபமாலை கொடுத்தார் முருகன்.

    ஒருத்தர் கேள்வி கேட்டாரு. ஆண்டவனையே பாத்தாச்சு. அப்புறமா ஜெபம் வேற பண்ணனுமா?

    சாப்பாட்டையே பாத்தாச்சுன்னு சாப்பிடாம இருக்கோமா? கண் கண்டதை நெஞ்சில் நிறுத்துவது ஜெபம். கேமராவுல படம் புடிச்சத ஆல்பத்துல சேமிச்சு வெச்சுக்கிற மாதிரி.

    படத்தை எடுத்துப் பாக்கும் போதெல்லாம் இனிய நினைவுகள் வரும். அது போல ஜெபத்தில் மனம் ஆண்டவனைக் கண்டு இன்பநிலை அடையும்.

    இதெல்லாம் அருணகிரிக்குத் தேவையில்லைதான். ஆனா நமக்குத் தேவையிருக்கே. அதுனால அருணகிரி வழியா திருவானினன்குடியில் முருகன் நமக்குச் சொல்றது “ஜெபம் பண்ணு”

    அருணகிரி அளவுக்கு நம்மால ஜபம் பண்ணமுடியுமான்னு எல்லாருக்கும் சந்தேகம் வர்ரது நியாயம்தான். அவரெங்கே? நாமெங்கே?

    சரி. அப்ப நாம என்ன செய்யனும்? ரெண்டு வேலை செய்யனும்.
    1. அபகார நிந்தை பட்டு உழலாதே
    2. அறியாத வஞ்சரைக் குறியாதே

    மொதல்ல அபகார நிந்தை பற்றிப் பார்ப்போம். நம்மை ஒருத்தர் குற்றம் சொல்ற மாதிரி வெச்சுக்கக் கூடாது. இதுல இன்னொரு மறைபொருள் இருக்கு. தீதும் நன்றும் பிறர் தர வாரா. பொதுவா நம்ம துன்பங்களுக்கு அடுத்தவங்களைக் காரணம் காட்டுவது பிடித்தமான செயல். நான் இதெல்லாம் செஞ்சும் அவன்/அவள் இப்படிச் செஞ்சா என்ன செய்றது! ஆனா அது உண்மையல்ல. நம்முடைய துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நாம்தான் காரணம். ஆகக் குற்றமான செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். அப்பதான் நம்ம மேல அபகார நிந்தை வராது.

    அடுத்தது அறியாத வஞ்சரைக் குறியாதே. நம்மோடு பழகுறங்கவளை எல்லாம் நல்லவங்களா நினைக்க முடியுமா? அப்படி இருந்தா எவ்வளோ நல்லாயிருக்கும்! ஆனா எந்தப் புத்துல எந்தப் பாம்பிருக்குன்னு யாருக்குத் தெரியும்! ”நல்லவன்னு நெனச்சுதான் வியாபாரத்துல பங்கு சேத்தேன். ஆனா மொத்தமா ஏமாத்தீட்டான் சார்” இந்த மாதிரி வசனங்களை நாம அங்கங்க கேள்விப்படுறோமே. அதுனால அந்த மாதிரியானவங்க கிட்ட இருந்தும் விலகி இருக்கனும்.

    இதெல்லாம் நாம உன்னிப்பாப் பாத்துப் பாத்துச் செய்ய முடியுமா? அப்படியே செஞ்சாலும் தப்பு வந்துருதே! என்னதான் பண்றது?

    ஆண்டவனைச் சரணடைய வேண்டும். அவனால் ஆகாதது இல்லை. அப்படியிருக்க உளமாற கேக்கனும். அதுவும் நல்லதாக் கேக்கனும். ரொம்பவும் குறிப்பாச் சொன்னா மேல சொன்ன இரண்டையும் கேக்கனும். அது கெடைச்சாலே நிம்மதி வந்து சேரும்.

  3. GiRa ஜிரா says:

    இன்னொரு தகவல் சொல்லியே ஆகனும். எல்லாருக்கும் திருமுருகாற்றுப்படை தெரியும். சங்க இலக்கியத்தில் உள்ள முதல் முழுமையான ஆன்மீக நூல்.

    அந்த நூலில் குறிப்பிடப்படும் பழநி/ஆவிநன்குடி என்னும் கோயில், இப்ப நாம எல்லாரும் போகும் மலைக்கோயில் அல்ல. அது மலையடிவாரத்துல இருக்கு.
    நாரதர் பழம் கொண்டு வந்தது, போட்டி நடந்தது, முருகன் பழநி மலை மேல் நின்றதெல்லாம் திருமுருகாற்றுப்படையில் கிடையாது.

    இன்னைக்குத் திருவானிவன்குடியைத் திரு+ஆ+இனன் குடி என்று பிரித்தும் ஒரு கதை சொல்வார்கள். அதுவும் திருமுருகாற்றுப்படையில் கிடையாது.

    மலை மேல் இருக்கும் கோயில் பின்னாளில் போகர் உருவாக்கியது. அது சித்தர்கள் பூசை செய்த கோயில். இன்றைக்கு? சரி. விடுங்க.

    அடுத்து பழநிக்குப் போறவங்க ஆவினன்குடி கோயிலுக்கும் போய்ட்டு வாங்க.

  4. amas32 says:

    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
    பொய்மை பேசாதிருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
    இது தான் என் தினசரி பிரார்த்தனை. ஆனால் இதை அருணகிரிநாதர் இறைவனிடம் கேட்பது விந்தை. அவர் இறைவனைப் பார்த்து, அவனின் பரிபூரண அருளைப் பெற்று, அவனை நெஞ்சுருக நினைத்து, வாய் மணக்கப் பாடி, அவனிடம் இருந்து ஜெபமாலையை பெற்ற பின்னும் இந்த பிரார்த்தனையை முன் வைக்கிறார்.

    ஆனால் முருகனே அவருக்கு ஜெப மாலையை கொடுத்து ஜெபம் பண்ணு என்று குறிப்பால் உணர்த்தியிருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்! இறைவன் அருளை பெற, அந்த இன்ப நிலையை அடைய இன்னும் முயற்சி எடுக்க வேண்டும்.

    யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, என்று முருகனை அழகாக அழைக்கிறார் அருணகிரிநாதர்.

    பழனி பதிவாழ் பால குமாரா
    ஆவினன் குடி வாழ் அழகிய வேலா
    என்று கந்த சஷ்டி கவசத்திலும் பாலன் தேவராயன் ஆவினன் குடியைக் குறிப்பிடுகின்றார்.

    amas32

    • Arvind says:

      “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
      உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்…”

      This was sung by Vallalar Swamigal on Chennai Kandha Kottam Murugan – 1st Thirumurai – Song 8.

      It is a very good prayer. Also, an explanation on Arunagirinathar’s requests to God: First, Thirupugazh was sung for the people at Murugan’s request. This is very clear in “Pakkarai Visitramani” Thirupugazh sung in Vayalur. This song is also featured in Movie Arunagirinathar. Second, Arunagirinathar already experienced the divinity with Murugan. Because Murugan wanted others to try the devotional path, he commanded Arunagirinathar to sing Thirupugazh. The ultimate meaning is: Whatever Arunagirinathar did, we are supposed to do to. The inner meaning is revealed in many Thirupugazh songs. Even the name Arunagirinathar was given by Murugan and even this information is one of the Thirupugazh songs.

Leave a comment