பாட்டுப் பாடத் தெரியுமா?

கடந்து அடு தானை மூவிரும் கூடி

உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே.

முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு,

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,

யாமும் பாரியும் உளமே,

குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.

நூல்: புறநானூறு (#110)

பாடியவர்: கபிலர்

சூழல்: நொச்சித் திணை, மீதி விவரம் ‘முன்கதை’யில் காண்க

முன்கதை

பறம்பு மலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அரசன் பாரி. அவனுடைய நண்பர், புலவர் கபிலர்.

சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களுக்கும் பாரிமீது கோபம். அவனை எதிர்த்துப் படையெடுத்து வந்தார்கள்.

ஆனால், பல நாள் முற்றுகைக்குப்பிறகும், அவர்களால் பாரியை வெல்லமுடியவில்லை. கடுப்பாகி உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது, கபிலர் அவர்களைப் பார்க்கச் சென்றார். இந்தப் பாடலைப் பாடினார்.

உரை

மூவேந்தர்களே,

நீங்கள் நிஜமான வீரர்கள்தான். உங்களை எதிர்த்து நிற்கும் பகைவர்களை நீங்கள் வஞ்சகம் செய்து தோற்கடிப்பதில்லை. உண்மையிலேயே பெரும் படை திரட்டி வீரத்துடன் போரிட்டுதான் வெல்கிறீர்கள்.

ஆனால், எங்கள் பாரியைமட்டும் நீங்கள் அப்படிச் சுலபமாக ஜெயித்துவிடமுடியாது. குளிர்ச்சி நிறைந்த இந்தப் பறம்பு மலையைக் கைப்பற்றிவிடமுடியாது.

அப்படி உங்களுக்குப் பாரியை ஜெயிக்கிற ஆசை இருந்தால், நான் ஒரு பிரமாதமான யோசனை சொல்கிறேன், கேளுங்கள்.

பாரிக்குச் சொந்தமான இந்த நல்ல நாட்டில் மொத்தம் முன்னூறு ஊர்கள் இருந்தன. அத்தனையையும் அவன் தன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்கள், பாணர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டான். இப்போது மிச்சமிருப்பது, நான், பாரி, இந்தப் பறம்பு மலை, மூன்றும்தான்.

ஆகவே, நீங்களும் பாரி முன்னால் வந்து அவனைப் பாராட்டிப் பாடுங்கள். அவனாகப் பார்த்து ஏதாவது ’போட்டுக் கொடு’ப்பான் 😉

துக்கடா

 • படை பலம் நிறைந்த மூவேந்தர்களுக்கு முன்னால் அவர்களையே கிண்டலடித்து இப்படி நக்கலாக ஒரு பாட்டுப் பாட இந்தப் புலவருக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்? தமிழ் தந்த வீரம்தான்போல!
 • மூவேந்தர்களுக்கும் பாரிமீது அப்படி என்ன கோபம்? அவர்களுக்குப் பாரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ள ஆசை, இவன் மறுத்துவிட்டான், அதான் சண்டை போட வந்துவிட்டார்கள்
 • அப்புறம் என்னாச்சு? அது பெரிய சோகக்கதை. இன்னொரு நாள் பேசுவோம்

233/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, கபிலர், கிண்டல், புறநானூறு, புறம், வீரம். Bookmark the permalink.

15 Responses to பாட்டுப் பாடத் தெரியுமா?

 1. Naanjilpeter says:

  இந்தக் காட்சியை நாங்கள் நாடகமாக அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் நடத்தியிருக்கிறோம்.

 2. anonymous says:

  எம்பெருமானே….இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் உடம்பு நடுங்குது!
  பாரியின் உயிரைக் காவு குடுத்த பாட்டு இது!

  ஆருயிர் நண்பரான கபிலரே, தெரியாத்தனமா வாய் குடுத்து, பாரியின் சாவுக்குக் காரணம் ஆகி விட்டார்:((

  இந்தப் பாட்டில் கபிலர் சொன்ன உத்தியைப் பயன்படுத்தியே, கருணை வீரனான ஒரு பாரியைக் கொன்னுட்டாங்க!
  போதாது-ன்னு அவன் அன்புப் பெண்கள், மருமகன், நண்பர்-ன்னு வரீசையா இறந்தார்கள்!

  கபிலா….
  சங்கத் தமிழை முற்றும் ஓதிய நீ….வள்ளுவத்தை மறந்தது ஏனோ?
  உன் காலத்தில் வள்ளுவம் இல்லை என்பதால் அறியாமல் போனாயோ?

  கடன் அறிந்து, காலம் கருதி, இடன் அறிந்து
  எண்ணி உரைப்பான் தலை
  மூவேந்தர்களிடம் இப்படியாப் பேசுவது? தமிழ்க் கவிஞன் வீரமாப் பேசலாம், ஆனால் விவேகம் இல்லாமப் பேசலாமா?

  முருகா, ஆருயிர்த் தோழனுக்காக, தற்கொலை செய்து கொண்டு ஒடுங்குதல் தான் உன் அருளா?
  இந்த ஒரு பாட்டால், கபிலன் தொடர்ந்து வாழ்விலே பட்டுப் பட்டு, கடேசியில் தற்கொலையில் மாண்டே போனான்!:(

 3. anonymous says:

  பறம்பு மலை பாரியின் கதை – தமிழில் ஒரு பேரிலக்கியமாவே எழுத வேண்டியது!
  சிலப்பதிகாரம், மணிமேகலை…..போல ஐம்பெரும் காவியமா அமைய வேண்டிய கதை – அமையாமலேயே போய் விட்டது!:(

  ஏன், எந்தக் கவிஞரும், இதை, இதுநாள் வரை முயலவில்லை-ன்னு தெரியல!
  கம்பன், இந்தக் களத்தை எடுத்திருக்கலாமோ?

  அங்கொன்னும் இங்கொன்னுமா, சங்க இலக்கியத்தில், இந்தக் கதை 20-25 பாடல்களா விரவி இருக்கு!

  *காதல், வீரம், கற்பு, நட்பு, ஈகை
  *முல்லைக்குத் தேர்
  *மக்கள், உணவு, கலை, ஆடல், பாடல், இசை
  *சதி, போர், முற்றுகை, வரலாறு
  -ன்னு ஒரு பேரிலக்கியத்துக்கு வேண்டிய அத்தனை கதையம்சமும் இதில் இருக்கு! ஆனா யாருமே முயலவில்லை!

  மாறாக அங்கவை-சங்கவை -ன்னு சினிமாவில் கேலி/குசும்பு பேசுகிறோம்:(
  பட்ட காலிலே படும், அடித்த இடத்திலேயே அடிக்க….பாவம் பாரிக்குத் தாங்க, இதுக்கு மேல வலுவு இல்ல!
  ——

  பாரியின் காவியத்தை, உரைநடையில், சங்கத் தமிழ்ப் பாடல்களும் சேர்த்துக் குடுத்து……..ஒரு நல்ல கதை நூலா எழுதணும்!
  பறம்பதிகாரம் – சிலப்பதிகாரத்துக்கு இணையான காப்பியம்!

 4. amas32 says:

  கபிலர் மூவேந்தர்கள் முன் சொன்னதை படிக்கும் போது உடல் சிலிர்க்கிறது. இப்படி பாடிய பின் நல்லபடியாக ஊர் போய்ச் சேர்ந்தாரா? அறிஞர்களுக்கே உள்ள ஞானச் செருக்கையும் இவர் பேச்சில் காணலாம்.

  புலவர்களை கொண்டாடிய பாரியின் குணம் தான் என்னே! இவர் போன்ற அரசர்களால் தான் கலையும் வாழ்ந்தது கலைஞனும் வாழ்ந்தான்!

  இப்போது மீதமிருப்பது தானும் பாரியும் பறம்பு மலையும் தான், என்று சொல்வதிலிருந்தே கபிலர் எப்படி தன்னையும் பாரியின் சொத்தாகக் கருதுகிறார் என்று தெரிகிறது.

  amas32

  • anonymous says:

   பாட்டில், சரியான இடத்தைக் கவனிச்சி நோக்கியிருக்கீக-ம்மா!
   //யாமும் பாரியும் உளமே//
   கபிலர் = பாரியின் சொத்து;

   கபிலர் என்ன ஜடமா? அஃறிணையா? சொத்து-ன்னு நினைச்சிக்க?
   பாரி அப்படிக் கருத மாட்டான்…
   ஆனா கபிலர் தன்னைத் தானே அப்படிக் கருதிக்கறாரு!

   நட்பு ரொம்ப ஆழப்பட்டுப் போச்சுன்னா இப்பிடித்தான்…
   தன்னை முன்னிறுத்திக்கத் தோனாது, எப்பமே அவனையே முன்னிறுத்தும்!

   சந்தனம் பூசிக்கறோம், அது கிட்ட பூசிக்கட்டுமா-ன்னு கேட்டாப் பூசிக்கறோம்?
   அது போல, அவன் தன்னைக் கேட்கவும் தேவையில்லை! அவனே என்னை எடுத்துப்பான்…

   அவன் உள்ள உகப்புக்கு-ன்னே இருக்கும் இன்பம் இருக்கே….சொல்லில் மாளாது…
   ஒரு துன்பமான கட்டத்திலும், அவன் நம்ம கிட்ட அனுமதி கேட்டா, ஏன் என்னைக் கேக்குற, நீயா எடுத்துக்க மாட்டியா?-ன்னே பேச வைக்கும்!

 5. anonymous says:

  //யாமும் பாரியும் உளமே
  குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே//
  -ன்னு பாடுவதற்குப் பதிலா….

  //யாமும் பாரியும் உளமே//
  -ன்னு மட்டும் பாடி நிறுத்தி இருக்கக் கூடாதா?

  //நீர் பாடினிர் செலினே//-ன்னு பாட,
  அதே போல, பாடுற தமிழ்ப் புலவர்களாய்/பாணர்களாய் வேடமிட்டுச் சென்றல்லவோ, பாரியை ஒழித்துக் கட்டினார்கள்!
  தமிழ்த் தோல் போர்த்திய புலிகள்….ச்சே….

  இந்தப் பாட்டை, ஏன் போட்டீங்க சொக்கரே?
  யாருமில்லா ஆப்பிரிக்க முகாமில்….நட்ட நடு ராத்திரி முழிச்சிக்கிட்டு….எதையெதையோ எண்ணிக் கலக்கமா….பின்னூட்டம் எழுதிக்கிட்டு இருக்கேன்….
  எழுதக் கூடாது-ன்னு ஒதுங்கி இருந்தாலும்…ரெண்டு மூனு நாளாச் சில பாடல்கள் எழுத வைக்குது:(

 6. anonymous says:

  //குன்றும் உண்டு//

  பறம்பு மலை, இன்னிக்கி பிரான்மலை-ன்னு சொல்லப்படும் ஊரு!
  சிவகங்கை மாவட்டம், பொன்னமராவதி கிட்டக்க!
  பள்ளித் தோழனோடு, அவங்க ஊரில் இருந்து முதல் முதலாத் தனியாப் போன இடம்…வீட்டில் அனுமதி வாங்கிக்கிட்டு!

  மேலே சிவன் கோயில் இருக்கு! இந்த முருகனை அருணகிரி பாடி இருக்காரு!
  சம்பந்தரும் பாடி இருக்காரு-ன்னு நினைக்கிறேன், சரியா நினைவில்லை!

  ஆனா, பாரி-க்குன்னு நினைவுச் சின்னம் எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல!
  அந்த முல்லைக்குத் தேர் குடுக்கும் காட்சி மட்டும் சும்மாச் செஞ்சி வச்சிருக்காங்க!
  கோட்டை, அகழி எல்லாம் பின்னாள் மருதுபாண்டியர் கட்டினது-ன்னு நினைக்கிறேன்!

  //முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு//

  பறம்புதல் = உழுத நிலத்தைச் சமன்படுத்தல்
  அதாச்சும் விதைச்சாப் பிறகு, அப்படியே விட்டுட்டோம்-ன்னா, எலி வந்து விதைநெல்லை (அ) கிழங்கைத் தின்னுரும்!
  அதுக்காக, புரட்டிப் போட்ட மண்ணை, புரட்டாமல் சமன்படுத்துவாங்க!

  ‘ஒழுங்காப் பரம்புடா! பரம்பாதவன் தட்டுல நிரம்பாது’-ன்னு எங்கூருல சொல்லுற வழக்கம்! அதான் “பறம்பு” மலை!

  விவசாயத்தை அடிப்படையாக் கொண்ட வேளிர் குடிகள்! அவங்களுக்குள்ள ஒரு சிறு மன்னன்! அவனைப் போயி “பாரி பாரி-என பலரும் ஏத்தி”…

 7. anonymous says:

  நொச்சித் திணை:

  முன்பே சொன்ன ஞாபகம்! என்ன தான் மண்ணாசை பிடிச்சாலும், பண்டைத் தமிழ் முறையில், போர் என்பது ஒரு அறத்துக்கு உட்பட்டே இருக்கும்!
  தீ வைப்பது, சூறையாடுவது, ஊரின் மேல் ஒட்டுமொத்தமாக் குண்டு போடுவது எல்லாம் இருக்காது!

  * வெட்சி x கரந்தை = மாடு மனைகளை போரின் உக்கிரத்தில் இருந்து காக்க, முன்பே ஓட்டிச் செல்வது, அதைத் தடுப்பது
  * வஞ்சி x காஞ்சி = போர் நடை நடத்தல், எல்லையில் தடுத்து நிறுத்தல்

  * உழிஞை x நொச்சி = மதிலை வளைத்துக் கொள்வது (முற்றுகை), அதைத் தடுத்துப் போர் செய்வது
  * தும்பை = நேருக்கு நேர் போர்
  * வாகை = வெற்றி!

  இந்தப் பாட்டு = நொச்சித் திணை
  பறம்பு மலைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்ட மூவேந்தர்களை, பாரியின் வீரர்கள் தடுத்து நிறுத்தும் காட்சி! அகழி, மலை அரண் போன்ற போர் உத்திகள்!

  நொச்சி என்பது ஒரு பூ!
  Military Uniform போல் அதை மாலையாச் சூடிக் கொண்டு, போராடுவது=நொச்சித் திணை!

  நொச்சிப்பூ Violet கலர்-ல இருக்கும்! ஏனோ, எனக்கு இந்த வண்ணம் மேல ஒரு மோகம்!
  டிசம்பர் பூப்போல இருக்கும்! ஆனா வாசம் உண்டு! மயிலாட்டிப்பூ ன்னும் சொல்லுவாய்ங்க!
  http://www.flowersofindia.in/catalog/slides/Peacock%20Chaste%20Tree.html

  • amas32 says:

   I also love the colour violet. It was very sad to know the rest of the story. என்ன நயவஞ்சகத்தனம்! நல்லவர்களுக்கு இப்படி ஒரு கேடா? பெருமையாகப் பேசியது பேரழிவுக்கு வழிக்காட்டிவிட்டதே. எல்லா தகவலுக்கும் நன்றி. Please take care.
   amas32

   • anonymous says:

    :))
    sure ma, will take care!
    பயந்த தனி வழி-க்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

  • வல்லான் வகுத்ததே வாய்க்கால் மட்டும்மல்ல வரலாறும் கூட போல. மூவேந்தர்களின் இன்னும்மொரு பக்கம் பாரி-கபிலர் இன்றி தெரியாமல் போயிருக்கும். பிசிராந்தையார், கோபெருஞ் சோழன் நட்பை காட்டிலும் பாரி-கபிலர் நட்பு சிறந்ததாய் தெரிகிறது.

   தகவலுக்கும், பாடலுக்கும் நன்றி.

 8. anonymous says:

  முழுக் கதையும் இன்னும் சொல்லவில்லை:)

  தமிழ் அறிஞர்கள் போல் வேடம் போட்டுச் சென்ற தமிழ் வறிஞர்கள் – மூவேந்த படைத் தலைவர்களுக்கு, பாரியின் கோட்டைக் கதவு இனிதே திறந்தது! சூழ்ந்து கொண்டு வெட்டினார்கள்! பாரி ஒழிஞ்சான்!

  கபிலர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
  மனசால் பாதி, அப்பவே செத்துட்டாரு!
  ஆனா, பாரி மகளிருக்காக, கோட்டை விட்டு வெளியேறினாரு!

  இதுக்கப்பறம், பாரி மகளிரை மூவேந்தர்களும் கண்டுக்கல! கண்ணால ஆசையெல்லாம் சும்மா! காதல் இருந்துச்சின்னா, தூய அன்பு, தன்னை அழிச்சிக்குமே தவிர, இது போல் அடுத்தவங்களை அழிக்காது!

  மற்ற சிற்றரசர்களும் பயந்துக்கிட்டு கண்ணாலம் பண்ணிக்கலை! போகுது, யாருக்கு வேணும் கல்யாணம்?
  ஆனா, பாரியின் so called நண்பர்கள் இன்னும் சூப்பர்! தங்க இடம் கூடக் குடுக்காது ஒதுக்கினாங்க! வீடேறி வந்தவர்களைப் “போ போ”!!

  பொது சபையில் அத்தனை பேர் முன்னும் மறுதலிப்பு:(
  —-

  கடேசியில் திருக்கோயிலூர் மலையமான், காரி என்னும் அழகன், துணிஞ்சி முன் வந்து அங்கவையை மணம் புரிந்தான்!
  ஆனா அவனைச் சூழ்ந்து கொன்னாங்க! அங்கவை தீக்குளிச்சா!

  சங்கவையைச் சொந்தக்காரர்களிடம் ஒப்படைச்சிட்டு, அதே திருக்கோயிலூரில், கபிலர் வடக்கிருந்து தற்கொலை செய்து கொண்டார்!
  இன்னிக்கும் தென்பெண்ணை ஆற்றங்கரையில், கபிலர் குன்றைக் காணலாம்!

  அங்கவை-சங்கவை வெறும் பேதைப் பெண்கள் அல்ல! அறிவுள்ள பெண்கள்! புலவர்கள்! – சங்கப் பாட்டும் எழுதி இருக்காங்க!
  அப்பா பாரியோடு சேர்ந்து, மலை வளம் பெருக்க, மக்களுக்கு மழை நீர் சேமிக்க ஐடியா எல்லாம் குடுத்த பொண்ணுங்க!
  சிவாஜி படத்தில் வருவது போல், கருப்பிகள், மாப்பிள்ளைக்கு அலையும் கேசுகள் அல்ல இந்தப் பெண்கள்:( – அங்கவை சங்கவை!

  முருகா….எத்தனை அசிங்கம் சுமப்பது ஒருவர் வாழ்வில்!

 9. anonymous says:

  கபிலர், பாரி இறந்த அன்னிக்கே பாதி இறந்துட்டாரு!
  அப்பவே அவருக்குத் தற்கொலை எண்ணம் துளிர் விட்டுப் போச்சி!
  Can u imagine the life of a person, who has this in the back of his mind, but carrying out routine work outwardly – for the sake of lil’ girls?

  What is between kabilar & paari ?
  = affection? friendship? call it whatever..

  A tamizh lover, A nature lover – whose songs are the maximum in sanga tamizh!
  He was driven away like a beggar, in the courts of his previous friends!
  Not driven by hands, but by words…more powerful to hurt!

  Still, He carries on life with thoughts of end!
  Thatz kabilar for paari!! – failure of unfailing love!

  • amas32 says:

   சோதனை மேல் சோதனை என்று எத்தனை சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கியுள்ளார் கபிலர். பாரியின் மகள்கள் இளவரசிகளாய் வாழ்ந்து பின், வறுமையில் உழன்று, இருக்க இடமுமில்லாமல் தவித்தது பெரும் கொடுமை.
   amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s