அலை எப்போது அடங்கும்?

பெரும் கால் ஆடிய சென்றார் ஒருங்கு உடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்று அற்றால்

இல் செய் குறைவினை நீக்கி அறவினை

மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு

நூல்: நாலடியார் (#332)

பாடியவர்: சமண முனிவர்கள்

சிலர் தான தர்மங்களே செய்யமாட்டார்கள். கேட்டால் ‘முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகளையெல்லாம் குறைவில்லாமல் முழுமையாகச் செய்து முடித்துவிடுகிறேன், அதன்பிறகுதான் மற்றவர்களுக்கு உதவி செய்ய நேரம் ஒதுக்கமுடியும்’ என்பார்கள்.

கடலுக்குக் குளிக்கச் செல்கிற ஒருவன் ‘அலை அதிகமாக உள்ளது, இந்த அலைகளெல்லாம் அடங்கியபின் குளித்துக்கொள்ளலாம்’ என்று கையைக் கட்டிக்கொண்டு காத்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்? அதுபோன்ற மடத்தனம்தான் இதுவும்!

அலைகளுக்கு நடுவே சமாளித்துக் குளிப்பதுபோல், இல்லறக் கடமைகளைக் கவனித்தபடி தன்னால் இயன்ற நன்கொடைகளை அளிப்பது, பொதுநலத்துக்காகப் பாடுபடுவதுதான் நல்லது.

துக்கடா

  • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
  • பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
  • ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றன்றால்
  • இற்செய் குறைவினை நீக்கி அறவினை
  • மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு

228/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், கொடை, நாலடியார், வெண்பா. Bookmark the permalink.

2 Responses to அலை எப்போது அடங்கும்?

  1. amas32 says:

    இக்காலத்திற்குத் தேவையான அறிவுரை தரும் பாடலை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி திரு.சொக்கரே 🙂

    நம்முடைய தேவைகள் அதிகமாகிப் போய்க் கொண்டே இருக்கின்றன. அவைகளை எப்போ தீர்த்து தானம் செய்ய ஆரம்பிப்பது! நம்முடைய முதல் செலவே தானமாகத் தான் இருக்க வேண்டும். காஞ்சி மகா பெரியவர், நாம் சமைக்க அரிசி எடுக்கும் போது, முதலில் ஒரு பிடி அரிசி எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காகத் தனியாகப் போட்டு வைக்கச் சொல்வார்.

    வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ இடர்பாடுகள் வருகின்றன. அந்தத் துன்பங்களை அனுபவிக்கும் போது, பிறரின் துன்ப சூழ்நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின், நம்மால் இயன்ற உதவியும் புரிய வேண்டும்.
    மனதால் நம் மற்றவர்களின் துன்பத்தை உணரும் போது செயலால் நிச்சயம் அவர்களுக்கு உதவ முடியும்!

    amas32

  2. Samudra says:

    நல்ல பாடல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s