வேலான குழல்

தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை

ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால்

சிறு குழல் ஓசை, செறிதோடி! வேல் கொண்டு

எறிவது போலும் எனக்கு

நூல்: ஐந்திணை ஐம்பது

பாடியவர்: மாறன் பொறையனார்

சூழல்: முல்லைத் திணை, காதலனைப் பிரிந்திருக்கும் காதலி, மாலை நேரம் தன்னை மிகவும் வருத்துவதைச் சொல்கிறாள்

செறிந்த வளையல்களை அணிந்த தோழியே,

தினந்தோறும் காலையில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வருகிறான், மாலை ஆனதும் திரும்பிச் செல்கிறான், மலைப்பக்கமாகச் சூரியன் மறைந்தவுடன் வானம் சிவக்கிறது. மேயப் போன பசுக் கூட்டங்கள் திரும்பி வருகின்றன. அவற்றை ஓட்டியபடி வரும் இடையர்கள் மகிழ்ச்சியுடன் புல்லாங்குழலை ஊதுகிறார்கள்.

அந்த இசை இனிமையானதுதான். ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற என்னை அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது. யாரோ வேலால் என்னைத் தாக்குவதுபோல் துயரம் தருகிறது.

துக்கடா

 • அற்புதமான இந்தப் பாடலைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சினிமாப் பாட்டு ஞாபகத்துக்கு வரும். உங்களுக்கு எந்தப் பாட்டு நினைவுக்கு வருகிறது? பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் நினைத்த அதே பாட்டை முதலில் சொல்பவருக்கு புத்தகப் பரிசு உண்டு :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
 • ஊரான்பின் ஆயன் உவந்தூதும் சீர்சால்
 • சிறுகுழல் ஓசை செறிதோடி வேல்கொண்
 • டெறிவது போலும் எனக்கு

217/365

This entry was posted in அகம், காதல், சினிமா, பிரிவு, முல்லை, வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

12 Responses to வேலான குழல்

 1. Raghavan says:

  இந்தப் பாடலை படித்த உடனேயே எனக்கு “எவனோ ஒருவன் வாசிக்கிறான்” (அலைபாயுதே) பாடல் காட்சி கண் முன் விரிகிறது. அதே பாடல் தான் உங்களுக்கும் ஞாபகம் வருகிறதா தெரியவில்லை.

 2. Rajmohan Srinivas says:

  Chinna Kannan Azhaikkiraan from Kavikuyil?

 3. GiRa ஜிரா says:

  தூண்டிற் புழுவினைப் போல் பாட்டு எனக்கு மொதல்ல நினைவுக்கு வந்தது.

  காரணம்?

  ”கோலக்கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடி” என்ற வரி.

  ஆனா இது திரைப்படப் பாடலான்னு தெரியலையே. … திரைப்படப் பாடல்தான். நாம் இருவர் படத்துல வரும். டி.ஆர்.மகாலிங்கம் நடிச்சது. 🙂

  பி.கு – நீங்க நெனச்ச பாட்டு இது இல்லைன்னா, பாட்டு ஒற்றுமைக்காக ஏதாச்சும் ஆறுதல் பரிசு உண்டா? 🙂

 4. GiRa ஜிரா says:

  இன்னொரு பாட்டும் தோணுது.

  சந்திரனப் பாத்தா சூரியனாத் தெரிகிறது
  செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது
  பச்சைக்கொடி…. பக்கம் வந்தால்… பாம்பாய்த் தெரிகிறது (சந்திரனப் பாத்தா)

  படம் – பிரம்மச்சாரிகள்
  பாடியவர் – ராஜ்குமார் பாரதி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பி.கு – இந்தப் பாட்டு ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்குமான்னு தெரியலை. இருந்தாலும் வேனெல்லாம் வெச்சிக் கடத்தியிருக்கோம். பாத்துப் போட்டுக் குடுங்க 🙂

 5. GiRa ஜிரா says:

  அடுத்து தோணும் பாட்டு

  குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா குக்கூ குக்கூ

 6. ஆனந்தன் says:

  யமுனா நதி இங்கே
  ராதை முகம் இங்கே
  கண்ணன் போனதெங்கே?
  கொஞ்சும் மணி இங்கே
  கோவை கிளி இங்கே
  மன்னன் போனதெங்கே?

  ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது
  அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது
  ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ?
  பாருங்களேன் கண்களை!

  பரிசை என்க்கே த்ருமாறு மன்னரைக் கேட்டுக்கொள்கிறேன்…

 7. amas32 says:

  தன் காதலனை பிரிந்தத் துயரினால், செவ்வானம் பூத்த மாலை வேளையில், இடையர்கள் வாசிக்கும் இனிமையான குழலோசை அவளுக்கு வேலைக் கொண்டு துளைப்பது போல துன்பத்தைத் தருகிறது என்கிறாள் தலைவி.
  So poignant! குழலோசைக்கே ஒரு melancholy mood ஐ வரவழைக்கும் தன்மை உண்டு. அதைத் தான் அவள் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள். அருமையான பாடல்.
  குழலூதும் கண்ணனுக்கு எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். ஆனால் இங்கே வரும் சோக ரசத்தை பிரதிபலிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
  நீங்கள் இட்டிருக்கும் இந்தப் பாடலினால் நான் அந்தப் பாடலை இப்பொழுது இரு முறை கேட்டு விட்டேன் 🙂
  amas32

 8. R.sezhiyan says:

  நாளை இந்த வேளை பார்த்து,ஓடி வா நிலா
  இன்று எந்தன் தலைவன் இல்லை,சென்று வா நிலா
  தென்றலே என் தனிமை கண்டு,நின்று போய் விடு….
  எனக்கு இந்த பாடல்தான் நினைவுக்கு வருது…உங்களுக்கு ???

 9. Keerthi Narayan says:

  Maalai en vedhanaiyai kootudhadi- Sethu: padam, Ilayaraja: isai

 10. Pingback: ஞாபகங்கள் நீரூற்றும்! | தினம் ஒரு ’பா’

 11. Pingback: காற்றில் வரும் கீதமே | நாலு வரி நோட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s