பாராட்டிலக்கணம்

நேசனைக் காணா இடத்தில் நெஞ்சு ஆரவே துதித்தல்

ஆசானை எவ்விடத்தும் அப்படியே, வாச

மனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தமை நெஞ்சில்

வினையாளை வேலை முடிவில்

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: ஔவையார்

நம் மனத்துக்குப் பிடித்த ஒரு நண்பனை அவன் கண்ணெதிரே பாராட்டினாலும் சரி, பாராட்டாவிட்டாலும் சரி, அவன் இல்லாத இடத்தில் யாரேனும் அவனைப் பற்றிப் பேசினால், நாம் உடனே அவனை நெஞ்சாரப் பாராட்டிப் பேசவேண்டும்.

நம்முடைய ஆசிரியரை எங்கே பார்த்தாலும் உடனே போற்றவேண்டும்.

வாசனையான கூந்தல் கொண்ட மனைவியைப் படுக்கையில் பாராட்டவேண்டும்.

பிள்ளைகளை மனத்துக்குள்(மட்டும்?) பாராட்டவேண்டும். வெளிப்படையாகப் பாராட்டினால் அவர்களுக்குக் கர்வம் உண்டாகிவிடக்கூடும்.

நம்முடைய வேலைக்காரர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்து முடித்தவுடன் பாராட்டவேண்டும்.

துக்கடா

 • மற்ற வரிகள் கிடக்கட்டும், ஔவையின் அந்தக் கடைசி வரியைப் பல ’இந்தக்கால மேனேஜர்’களுக்குப் பாடமாகவே வைக்கலாம், வாயைத் திறந்தால் முத்து உதிர்ந்துவிடுமோ என்பதுபோல் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்கள் 😉
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம் கொஞ்சம் உதைக்கிறது, ஒருமாதிரியாகச் சரி செய்திருக்கிறேன், விவரம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது:
 • நேசானைக்கா நாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்
 • ஆசானை எவ்விடத்தும் அப்படியே, வாச
 • மனையாளைப் பஞ்சணையில் மைந்த(ர்)தமை நெஞ்சில்
 • வினையாளை வேலைமுடி வில்

214/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஔவையார், தனிப்பாடல், வெண்பா. Bookmark the permalink.

11 Responses to பாராட்டிலக்கணம்

 1. amas32 says:

  “பிள்ளைகளை மனத்துக்குள்(மட்டும்?) பாராட்டவேண்டும். வெளிப்படையாகப் பாராட்டினால் அவர்களுக்குக் கர்வம் உண்டாகிவிடக்கூடும்.”
  இது இந்த காலத்துக்கு சரியா வருமா என்று தெரியவில்லை. குழந்தைகளை பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டி வளர்த்தால் தான் அவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். போட்டி மிகுந்த இந்த சமுகத்தில் வாழ்க்கை போடும் கூக்ளிக்களை சமாளிக்க தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அது நாம் குழந்தைகளுக்குத் தரும் உற்சாகத்தில்/பாராட்டுதலில் தான் வருகிறது.
  நண்பர்கள் பற்றிய பாராட்டிலக்கணம் அருமை. உண்மையாகவே நாம் நம் நண்பர்களை பிறர் முன் விட்டுக் கொடுக்கவேக் கூடாது. பல சமயம் இன்னொருவரை திருப்திப் படுத்த நண்பர் தான் அங்கு இல்லையே என்று புறம் பேசும் பழக்கம் நம்மிடம் உள்ளது. ஔவ்வையார் சரியாக அதை சுட்டிக் காட்டியுள்ளார்.
  அருமையான பாடல், நன்றி சொக்கரே 🙂
  amas32

 2. PVR says:

  Thank you. A thought occurred to me, even as I was going through the verse and your explanation – then – I saw you have mentioned the same thought – your very first in thukkada is //மற்ற வரிகள் கிடக்கட்டும், ஔவையின் அந்தக் கடைசி வரியைப் பல ’இந்தக்கால மேனேஜர்’களுக்குப் பாடமாகவே வைக்கலாம், வாயைத் திறந்தால் முத்து உதிர்ந்துவிடுமோ என்பதுபோல் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்கள்// Brilliant.

  And about praising our children:
  I think we must praise – BUT – with a specific reference to a specific process adopted or an action done by the son/ daughter, which stands up to good practices and ethical standards!!

 3. PVR says:

  A small clarification reg. time stamp. This seems to be GMT and not GMT+5.30 Any spl reason? 🙂

 4. Samudra says:

  இந்தக் காலத்துக்கு :-நண்பனை பார்க்கும் போது தான் புகழனும்.
  மனையாளை சமையலறையில்
  மைந்தரை எப்போதும் ( !)
  வினையாளை வேலை செய்யும் முன்பே புகழனும்
  (நீ நல்லா செய்வன்னு தெரியும்)
  ஆசானைஎல்லாம் ஸ்கூலில் அவர் வரும் போது எந்திரித்து
  நின்றதே போதும்..

  • amas32 says:

   Loved your comment, Samudra. So very true 🙂
   amas32

   • பாலா அறம்வளர்த்தான் says:

    சும்மா ஜாலிக்காக:

    நேசனைக்கா ணுமிடத்திலும் நெஞ்சாரவே துதித்தல்

    ஆசானை அவ்விடத்தில் நின்றுமட்டும் – வாச

    மனையாளைய டுப்படியில் மாந்தரை என்றென்றும்

    வினையாளைவே லைதுவங்கு முன்பு 🙂

 5. பாலா அறம்வளர்த்தான் says:

  வெண்பா இலக்கணம் சரிதான் Boss!!!

 6. பாலா அறம்வளர்த்தான் says:

  இப்பொழுதுதான் கவனித்தேன். முதல் அடி மட்டும்கொஞ்சம் மாற்ற வேண்டும்:

  நேசானைக்கா நாவிடத்தில்

  நே + சா + னைக் + கா என்று நான்கு சீர்கள் வருகிறது. இப்படி மாற்றிக் கொள்ளலாம் (எதுகை கொஞ்சம் தட்டினாலும்) நேசனைக்கா ணாவிடத்தில்

 7. பாலா அறம்வளர்த்தான் says:

  மேலே சொன்னதில் ‘நான்கு சீர்கள்’ என்பதை ‘நான்கு அசைகள் கொண்ட சீர்’ என மாற்றிப் படிக்கவேண்டுகிறேன் 🙂 (இலக்கணப் படி நான்கசைச் சீர் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை)

 8. Subramaniam Jaganathan says:

  வெண்பாப் போன்ற பாக்களைப் பாடும் போது சந்தி பிரிக்காமற் பாடக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அது சரியாக வரும்.
  நேசனைக்கா ணாவிடத்தி னெஞ்சார வேதுதித்த
  லாசானை யெவ்விடத்து மப்படியே – வாச
  மனையாளைப் பஞ்சணையின் மைந்தர்தமை னெஞ்சில்
  வினையாளை வேலைமுடி வில்.
  ஐயம் வேண்டாம் இது அசல் வெண்பா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s