பிழை திருத்தம்

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்?

இழுகினானா காப்பது இல்லையே முன்னம்

எழுதினான் ஓலை பழுது

நூல்: பழமொழி நானூறு (#160)

பாடியவர்: முன்றுரையரையனார்

இந்த உலகம் மொத்தத்தையும் நமக்காகப் படைத்தவன் கடவுள். அவன்தான் பலவிதமான இன்பங்களை உருவாக்கினான், நாம் நன்றாக அனுபவிக்கிறோம்.

அதே கடவுள்தான் துன்பத்தையும் உருவாக்கினான், அதையும் அவனே தீர்க்கட்டும் என்று எண்ணி, அந்தத் துன்பத்தைப் போக்குவதற்கு நாம் சொந்தமாக எந்த முயற்சியையும் செய்யாமல் சும்மா கடவுளைக் கும்பிட்டுக்கொண்டே இருந்துவிடலாமா?

ஒரு கவிஞன் பனையோலையில் பாட்டு எழுதுகிறான். அதில் ஒரு பிழை ஏற்பட்டுவிடுகிறது. அந்தத் தவறை உணர்ந்தபின், அவன் சும்மா இருக்கமாட்டான், அதைத் திருத்திச் சரி செய்வான்.

அதுபோல, துன்பங்கள் எதிர்ப்பட்டால், நாமே முயன்று அவற்றைத் தீர்க்க முற்படவேண்டும். கடவுளை வணங்குவதுமட்டும் போதாது.

துக்கடா

 • இன்றைய பாடலைத் தேர்வு செய்து தந்தவர் நண்பர் ரெக்ஸ் அருள் (https://twitter.com/#!/rexarul) அவருக்கு நன்றிகள்
 • ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் ‘மெல்லினம்’ என்ற இதழின் சார்பில் திரு. சரவண கார்த்திகேயன் அவர்கள் சென்ற ஆண்டின் சிறந்த வலைப்பதிவாக நம் #365paa வலைப்பதிவைத் தேர்வு செய்துள்ளார், இந்தப் பாடல்களைத் தினமும் வாசிக்கிற, கருத்துச் சொல்கிற நண்பர்கள் எல்லார் சார்பிலும் அவருக்கு நன்றிகள் : http://www.writercsk.com/2012/02/2011.html
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • முழுதுடன் முன்னே வகுத்தவ னென்று
 • தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்?
 • இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
 • எழுதினா னோலை பழுது

211/365

Advertisements
This entry was posted in அறிவுரை, நண்பர் விருப்பம், பக்தி, பழமொழி நானூறு, வெண்பா. Bookmark the permalink.

2 Responses to பிழை திருத்தம்

 1. மிக்க நன்றி, நா.சொக்கன் அவர்களே. அருமையான விளக்கம். அக்காலத்தில் தமிழ்நாடு புத்தக நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தில் 7 அல்லது 8ஆம் வகுப்பில் தமிழில் படித்ததாக நினைவு. ஆங்கிலத்தில், “Pray to God,but keep rowing towards the shores” என்றும் கூறுவார்கள்.

  சென்ற வாரம், ஆனந்த விகடனில், நீங்கள் எழுதிய “பொம்மை” சிறுகதை கூட இப்பாடல் வரிகளுக்கு ஒப்புவமை கூறுவது போலுள்ளது அருமை.

  இப்பாடலில், இன்னொரு வகையான பொருள் என்னவென்று நாம் எடுக்கலாம் என்றால், “அதெல்லாம் அவனவன் விதி. கர்மவினை. தலையெழுத்து” என்று சமூகத்தின் ஒவ்வொரு அநியாயத்தையும் “கடவுளின்” பெயரால் நிறைய அக்கிரமக்காரர்கள் செய்யும் அக்கிரமங்களை வெகுண்டு தலைமேல் ஒரு போடு போட்டு, “அட பசங்களா, தவறுகளை கடவுளே அருளியிருந்தாலும், எல்லாம் அவன் வெதச்சதுனு இல்லாம, உங்களால ஆனத செய்யுங்கப்பா”னு சமூக சீர்திருத்தமாகச் சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

  பழமொழிகள் மீது ஒரு இனம் புரியாத காதல் உண்டு. தமிழிலும் சரி, மற்ற மொழிகள், கலாச்சாரங்களிலும் சரி, அவை கூறவரும் கருத்துக்கள் கண்டிப்பாக சிந்திக்க வைக்கக் கூடியவை.

  மிக்க நன்றி, நண்பரே! வாழ்த்துக்கள். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 2. amas32 says:

  எல்லாம் இறைவன் செயல் என்று இருந்து விடாமல் நாமும் நம் முயற்சியால் தடைகளை உடைத்தெறிந்து, இன்னல்களை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் நல்ல பாடல் இது.
  அதனால் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று இருந்து விடக் கூடாது!
  ஒன்று, இன்பத்தையும் துன்பத்தையும் இறைவனே கொடுக்கிறான் என்று இருக்க வேண்டும். அல்லது இரண்டுக்கும் நாமே காரணம் என்று இருக்க வேண்டும். இது வேறு ஒரு thought. இன்பம் அவன் கொடுக்கிறான். துன்பம் வரும்போது நாம் முயற்சி எடுத்து அதை மாற்றிக் கொள்ள வேண்டும் 🙂 ஆனால் இது தான் வாழ்வில் உண்மையாக நடக்கிறது 🙂
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s