ஆடுகிறோம், பாடுகிறோம்!

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே,

….அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே,

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே,

….உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே,

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே,

….பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே,

காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே,

….காண்பார் ஆர் கண் நுதலாய் காட்டாக்காலே?

நூல்: தேவாரம்

பாடியவர்: திருநாவுக்கரசர்

நெற்றியில் கண் கொண்ட சிவபெருமானே,

நீ ஆட்டிவைத்தால் ஆடாதவர்கள் யார்? அடக்கிவைத்தால் அடங்காதவர்கள் யார்? ஓடவைத்தால் ஓடாதவர்கள் யார்? உருகவைத்தால் உருகாதவர்கள் யார்? பாடவைத்தால் பாடாதவர்கள் யார்? பணியவைத்தால் பணியாதவர்கள் யார்? காண்பித்தால் காணாதவர்கள் யார்?

எல்லாம் நிகழ்த்துகிறவன் நீதான், உன் விருப்பப்படி நாங்கள் ஆடுகிறோம், நீ காண்பிக்காவிட்டால் இந்த உலகத்தை நாங்கள் எப்படிக் காணமுடியும்?

துக்கடா

 • இந்தப் பாடலின் முதல் வரியை மிக அழகாகவும் பொருத்தமாகவும் ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார் கண்ணதாசன், அந்தப் பாடல் மொத்தமுமே எளிய வாழ்வியல் இலக்கியம், அதை இங்கே கேட்கலாம், வாசிக்கலாம்: http://www.inbaminge.com/t/a/Avandhan%20Manidhan/Aattuviththaal%20Yaaroruvar.eng.html

208/365

Advertisements
This entry was posted in சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பக்தி. Bookmark the permalink.

7 Responses to ஆடுகிறோம், பாடுகிறோம்!

 1. amas32 says:

  இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாக உண்டு. எல்லாமே இறைவன் செயல் என்றால், அப்போ எதுவும் நம் கையில் இல்லை என்பதே பொருள். இல்லையா? நாம் வெறும் கருவி. அதை செயல் படுத்துபவன் அவன்.

  “நீ காண்பிக்காவிட்டால் இந்த உலகத்தை நாங்கள் எப்படிக் காணமுடியும்?” என்கிறார் திருநாவுக்கரசர்! நீ ஆடச் சொன்னாள் ஆடுகிறோம், அடங்கச் சொன்னாள் அடங்குகிறோம். இது தானே அவர் சொல்ல வந்த இறை தத்துவம்?

  எல்லாமே இறைவன் செயல். அப்பொழுது நம் செயல் எதுவுமே இல்லையா? ஆனால் வினைப் பயன் தான் நம் இன்னல்களுக்கும் காரணமாக உள்ளது. அந்த வினை நாம் ஆற்றிய செயலால் வந்ததாகத் தானே கொள்ளப்படுகிறது. அப்பொழுது பொறுப்பு நமக்கு வந்து விடுகிறதே!
  It is a tricky matter. We are also given the power of discrimination, which we are supposed to exercise. அதனால் நாம் செய்யும் தவறான/நல்ல செய்கைகளின் பலனை அனுபவிக்கிறோம் என்று கொள்ளவேண்டும் இல்லையா? கர்ம வினை எங்கே இருந்து வருகிறது? இது இன்னும் எனக்கு புரிந்தும் புரியாத புதிர் தான்.

  Missing KRS
  amas32

 2. GiRa ஜிரா says:

  திருநாவுக்கரசர். சொல்லவே இனிமையான பெயர். திரு நாவுக்கு அரசர்.

  சைவத்துல பாத்தா சமயக்குரவர் நால்வர். மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், மற்றும் சுந்தரர்.

  இதுல நாவுக்கரசரைத் தவிர எல்லாருக்கும் ரெண்டு பேருதான். இயற்பெயர் ஒன்னு. பட்டப்பெயர் ஒன்னு.
  மாணிக்கவாசகர் – திருவாதவூரார்
  ஆளுடைப்பிள்ளையார் – திருஞானசம்பந்தர்
  நம்பி ஆரூரன் – சுந்தரர்

  ஆனா திருநாவுக்கரசருக்கு மட்டும் நாலு பேர்கள். இது பெருமையான்னு கேக்குறத விட, செய்தின்னு புரிஞ்சிக்கோங்க.
  பிறக்கும் போது அவருக்கு வெச்ச பேர் மருள் நீக்கியார்.
  அப்புறம் சமண சமயத்துக்கு மாறி பாடலிபுத்திரம் வரைக்கும் போய் புத்தர்களை வாதில் வென்றதால் தருமசேனன் என்று பட்டப் பெயர். சமண புத்தச் சண்டையும் அப்ப இருந்திருக்கு.
  சூலைநோயால் ஈசன் ஆட்கொண்ட பிறகு திருநாவுக்கரர் என்றும் அப்பர் என்றும் பெயர்கள்.

  இதுல ஒன்னு கவனிக்கனும்.
  அந்தச் சிவனையே “அப்பன் நீ அம்மை நீ”ன்னுதான் தேவாரத்துல நாவுக்கரசர் பாடியிருக்காரு. நாமும் அப்படித்தான் பாடுறோம். ஆனா நாவுக்கரசரை அப்பர்னு மதிப்போட அழைக்கிறோம்.

  தொண்டு ஒருவருக்குப் பெற்றுத் தரும் சிறப்பு அது.

  அதுவுமில்லாம இந்த நாலு பேர்லயும் ரொம்ப வயசு வரைக்கும் இருந்தவர் திருநாவுக்கரசர்தான். மாணிக்கவாசகர் 32ல் இறையடி சேர்ந்தார்.
  திருஞான சம்பந்தர் கல்யாணத்தன்னைக்கே குடும்பத்தோட காணாமப் போனார்.
  சுந்தரரும் இளம் வயசுலயே கைலாயம் சேர்ந்தார்.

  இப்படி நிறைய வகைல மத்த சமயக்குரவர்களை விட ரொம்பவும் வேறுபடுகிறார் திருநாவுக்கரசர்.

  இவரு சமணரா இருந்து சைவரா மாறுனப்போவும் நிம்மதியா இருக்க விட்டாங்களா? மதம் மாறீட்டாருன்னு மகேந்திரப் பல்லவனை ஏவி அவரைச் சுண்ணாம்புக்காளவாயில் இட்டாங்க. கல்லில் கட்டிக் கடலில் போட்டாங்க. நஞ்சு குடுத்தாங்க. ரெண்டு பக்கமும் அடி வாங்கிய மத்தளம் திருநாவுக்கரசர்.

 3. GiRa ஜிரா says:

  amas32 ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க. நல்ல கேள்வி. எல்லார் மனசிலும் வர வேண்டிய கேள்வி. எனக்கும் அடிக்கடி வரும் கேள்வி.

  ஆண்டவன் தான் எல்லாத்துக்கும் காரணமா? நமக்குன்னு ஒன்னும் கெடையாதா? அப்போ நல்லது கெட்டதுக்கெல்லாம் ஆண்டவன் தானே பொருப்பு. நம்ம ஏன் அதுக்கான பலனை அனுபவிக்கனும்?

  இந்தக் கேள்விகளுக்கு விடை இருக்கா? தெரியாதுங்குறதுதான் சரியான விடைன்னு நான் நினைக்கிறேன்.

  அதச் சொல்ல முடியாமத்தான் “கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்”னு பெரியவங்க சொல்லி வெச்சாங்களோ!

  இதப் பத்திய எண்ண ஓட்டங்களைத் தட்டி விட்டேன். அதுல தோணுனத இங்க சொல்றேன். தப்பிருந்தா பொறுத்துக் கொள்க.

  ஒரு உண்மையச் சொல்றேன். அது சரியான்னு யோசிச்சுப் பாருங்க.

  நம்ம உணர்ச்சிகளையே நம்மால் சரியாச் சொல்ல முடியாது. இதுதான் அந்த உண்மை.

  ஒரு கெட்ட செய்தியைக் கேட்டதும் “இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது”ன்னு சொல்றோம். அது உண்மையா? இல்லையே. நம்முடைய சாதாரண உணர்ச்சியை அப்படியே உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லி விளக்கும் திறம் நமக்கில்லை.

  இது நம்மளுடைய குறைபாடு. இந்தக் குறைபாடு இருக்குறப்போ ஆண்டவனின் செயல்களைப் புரிஞ்சிக்க முடியுமா? புரிஞ்சாலும் சொல்ல முடியுமா? சொன்னாலும் கேக்குறவங்களுக்குப் புரியுமா?

  ஒரு பேச்சுக்கு கொஞ்ச நேரம் நம்மையெல்லாம் மாடா நெனச்சுக்கோங்க. அட! பயப்படாம நெனச்சுக்கோங்க. அப்பதான் என் மண்டைக்குள்ள என்ன ஓடுச்சுன்னு புரிய வைக்க முடியும். 🙂 என்னது? என்ன மாடுன்னு சொல்லலையா? பெண்கள்ளாம் பசுன்னும் ஆண்கள்ளாம் காளைன்னும் நெனச்சுக்கோங்க. (அடப்பாவின்னு மனசுக்குள்ள திட்டுறது எனக்குக் கேக்குது)

  இந்த மாடோட உலகம் எவ்வளவு பெருசு? அதைக் கட்டிப் போட்டிருக்கும் எடந்தான் அதோட உலகம். ஒரு குறிப்பிட்ட எடத்துக்குள்ள அதைக் கட்டியிருக்குற கயிறோட நீளத்தப் பொருத்து நடந்துக்கலாம். அவ்வளவுதான். வீட்டுக்குக் காள மாடு வரும். அதுக்கு வைக்கோல் வைக்கனும்னு எல்லாம் பசுவுக்குக் கவலை இல்லை. கட்டிப் போடப்பட்டிருக்கும் தொழுவத்தைத் தாண்டி மாடுகளால் சிந்திக்க முடியவில்லை.

  நம்மளும் அந்த மாடு மாதிரிதான். நமக்குன்னு சில உறவுகள். சில அதுகள். சில இதுகள். அதுக்குள்ள யே சுத்திச் சுத்தி வர்ரோம். இத்தனைக்கும் நமக்கெல்லாம் ஆறறிவுன்னு பெருமை வேற.

  கட்டப்பட்டிருக்கும் மாட்டோட கயிறு அந்து போகுது. இப்ப அது இன்னும் நாலஞ்சு எடங்கள் சுத்திப் பாக்கலாம். நம்மளும் பந்தபாசக் கயிறை அத்து விட்டா கொஞ்சம் சுத்திப் பாக்கலாம். ஆனாலும் எல்லாத்தையும் பாக்க முடியாது.

  அப்படி அந்தத் தொழுவத்திலேயே மாடு இன்பமா இருக்குற மாதிரி நாம் இருக்கோம். அந்த நேரத்தில் அனுபவிக்கும் இன்பம் துன்பம் எல்லாம் உண்மை. அதுனால நாமளும் அதுதான் நம்முடையதுன்னு அதுக்குள்ள இருக்கோம்.

  நம்ம மண்டைக்கு இவ்வளவுதான் புரியுது. இவ்வளவு புரிஞ்சதை வெச்சி என்ன செய்யலாம். நல்லவனா இருக்க முயற்சி செய்யலாம். நல்லவனாகவும் இருக்கலாம்.

  இதுக்கு மேல நாம தெரிஞ்சிக்கனும்னா நம்ம(மாடு) தொழுவத்தை விட்டு வெளிய வரனும். ஆனா அது எல்லாருக்கும் தேவையில்லை.

  இன்னும் எளிமையாப் பாப்போம். தொழுவத்துல நல்லா வசதியா இருந்த மாடு ஊரெல்லாம் சுத்தீட்டு திரும்பத் தொழுவத்துக்கே வருது. அப்ப அதுக்குக் கொஞ்சம் அறிவு விரிவடைஞ்சிருக்கு. அப்பப் பால் கறக்க முதலாளி வர்ராரு. தனக்கு சாப்பாடு போட்டு, தங்க எடம் கொடுத்த முதலாளி மேல மாட்டுக்கு மிகுந்த நன்றி. உடனே அந்த மாடு தன்னோட மாட்டு மொழியில் இப்படிப் பாடுது.
  வைக்கோல் இட்டால் எம் மாடு தின்னா மாடே
  கழுநீர் ஊற்றினால் எம் மாடு குடியா மாடே
  மேய்த்து வித்தால் எம் மாடு மேயா மாடே
  பால் கறந்தால் எம் மாடு சுரக்கா மாடே
  ஏரில் பூட்டுவித்தால் எம் மாடு உழா மாடே (இது காளை மாட்டுக்கான வரி)
  தொழுவத்தில் கட்டாவிடில் யார் கட்டுவரே!

  இதைத்தானே மாடு பாட முடியும். இந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம். வைக்கோல் போடுறது, பால் கறக்குறது மட்டுந்தான் முதலாளியோட வேலையா? இல்லையே. மாட்டுக்குத் தெரியாத புரியாத நிறைய விஷயங்கள் முதலாளி கிட்ட இருக்கு. அது போல ஆண்டவன் கிட்ட நாம் புரிந்து கொள்ள முடியாதவை நிறையவே உண்டு.

  ஆகையால ஆண்டவனைப் புரிஞ்சிக்கிறதை விட தொண்டு செய்வதையும் நல்லறத்தோடு வாழ்வதையும் புரிஞ்சிக்கனும்.

  என்னடா, மாட்டுப் பாட்டு எழுதீட்டானேன்னு யாரும் சண்டைக்கு வராதீங்க. அப்பர் மேல் எனக்கு மதிப்பும் அன்பும் உண்டு. ஆனால் இறைவன் மிகப் பெரியவன். எவ்வளவு கேட்டாலும் முழுதும் விளங்காது. எவ்வளவு சொன்னாலும் முழுதும் முடியாது..

  இதுனாலதான் கிருஷ்ணர் ஏசுநாதர் போன்ற கடவுள்களை மேய்ப்பர்களாக உருவகப்படுத்துகிறார்கள்.

  கவியரசர் கண்ணதாசன் ஒரு அருமையான பாடல் எழுதியிருக்காரு. அதுக்கு நடுவுல சில வரிகள்.
  மேய்ப்பவன் அவனே
  ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
  மன்னன் அவனே
  மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
  மேரிமாதா தேவமகனைக் காப்பது எப்படியோ
  தேவதூதன் நம்மையெல்லாம் காப்பது அப்படியே

 4. ஆனந்தன் says:

  மீண்டும் வந்திருக்கும் ஜி.ரா. வருக.
  KRS எங்கே காணோம்? கல்லைக் கண்டா நாயைக் காணோம்; நாயைக் கண்டா கல்லைக் காணோம் என்பதைப் போல் இருக்கிறது!

 5. ஆனந்தன் says:

  எனது செயல்கள் யாவும் என் எண்ணப்படி.
  ஆனால், எல்லா முடிவும் இறைவன் எண்ணப்படி.
  அதனால், எல்லாப் புகழும் இறைவனுக்கே.

  நடிப்பது என் கடமை.
  ஆனால், நாடக்த்தின் முடிவுக்கு அவன் தான் பொறுப்பு.
  அதனால், “நீ நடத்தும் நாடகத்தில் நானும் ஒன்று” என்ற தெளிவு வந்து விட்டால், ‘அவன் தான் மனிதன்’.

  இன்று வரை, பல பிறவிகளிலும் நான் எண்ணிய எண்ணங்களின் பலனே எனது விதி – ஒரு நதியின் ஓட்டம் போல.
  இனிமேல் நான் எண்ணப் போகும் எண்ணங்கள், அதனால் செய்யப் போகும் செயல்கள் எல்லாம் ஒரு படகோட்டியின் முயற்சியைப் போல.

  விளைவு என் கையில் மட்டும் இல்லை. அதேசமயம், இல்லாமலும் இல்லை.

  எனது வினைப் பயன் என்னும் ஆற்றைக் கடப்பதற்கு, எனது வினை என்னும் படகால் முயன்று, எண்ணங்களில்லாக் கரையை அடைவதே வீடுபேறு.

  இப்படித்தான் எனது வாத்தியார் சொல்லிக் குடுத்தாக. (அல்லது, நான் புரிஞ்சிக்கிட்டது இப்படித்தான்)

  இதெல்லம் ஒரு Theory தான். அவனுக்குத் தான் தெரியும், ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்.

 6. ஆனந்தன் says:

  .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s