சேர நாடு

வடக்குத் திசை பழனி, வான் கீழ் தென்காசி,

குடக்குத் திசை கோழிக்கோடாம், கடல் கரையின்

ஓரமோ தெற்கு ஆகும் உள் எண்பதின்காதம்

சேர நாட்டு எல்லை எனச் செப்பு

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: கம்பர்

மொத்தம் எண்பது காதம் பரப்பளவைக் கொண்டது சேர நாடு. அதன் எல்லைகள் இவை:

 • வடக்கே பழனி
 • கிழக்கே தென்காசி
 • மேற்கே கோழிக்கோடு / கள்ளிக்கோட்டை
 • தெற்கே கடற்கரை

துக்கடா

 • ’வெண்பாவில் எதையும் எழுதலாம்’ என்று நண்பர் இலவசக் கொத்தனார் அடிக்கடி சொல்வார். அதற்கு இந்தப் பாடல் ஒரு சாட்சி. கம்பர் வெண்பாவில் surveyor’s report எழுதுகிறார்!
 • சேர நாட்டுக்குமட்டுமில்லை, இதேபோல் சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாட்டுக்கும் தனித்தனி வெண்பாக்களில் எல்லை வகுத்துப் பாடியிருக்கிறார் கம்பர்
 • போகட்டும், ‘தெற்கே கடற்கரை’ என்கிறாரே, எந்தக் கடல்? Guess 😉
 • நவயுக மென்னுலகத்தோரே, நீங்கள் ஏன் வெண்பாவில் ஒரு Project Status Report எழுதக்கூடாது? 😉
 • வெண்பாவில் வேறு என்னவெல்லாம் செய்யலாம்? கீழே பின்னூட்டத்தில் உதாரணம் சொல்லுங்கள், மிக நல்ல ஒரு வெண்பாவுக்குப் புத்தகப் பரிசு கொடுக்கலாம் என்று உத்தேசம் :> (இதில் இலவசக் கொத்தனார் கலந்துகொள்ளக்கூடாது, அவரது அனுமதி இன்றியே அவரை நடுவராக்கிவிட்டேன் :>>>)
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வடக்குத் திசைபழனி; வான்கீழ்தென் காசி;
 • குடக்குத் திசைகோழிக் கோடாம்; கடற்கரையின்
 • ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
 • சேரநாட்டு எல்லையெனச் செப்பு

180/365

Advertisements
This entry was posted in கம்பர், தனிப்பாடல், போட்டி, வெண்பா. Bookmark the permalink.

14 Responses to சேர நாடு

 1. கேடர்பில்லர் வண்டிகளை வெண்பாவில் அறிமுகம் செய்யட்டுமா?

  கரியைச் சுரண்டிக் குழியாக்கி வைத்து
  சரியாய் சமனம் செய்து – பரிபோலே
  லாடமும் இன்றி விரைவாய்ப் பறக்குமே
  லோடராம் அவ்வண்டி பேர்.

  டிப்பரென்று சொல்வார் தெரியா சிலபேர்
  தப்பாகச் சொல்லுவார் லாரியென்றும் – மப்போடு
  வம்பர் பகரும் வார்த்தையை நம்பாதே
  டம்பராம் அவ்வண்டி பேர்.

  மேடும் குழியும் இருக்கலாம் வாழ்க்கையில்
  ரோடும் இருந்தால் தாங்குமா? ஓடி
  சிரேஷ்டமாய் சாலையைச் சீராய் அழுத்தும்
  கிரேடர் அவ்வண்டி பேர்.

  தடைகள் அகற்றித் தனதுபாதை போட்டு
  உடைக்கும் உருள்பெரும் பாறை – கதைக்குள்ளே
  நாசவேலை மட்டுமே செய்துநீ பார்த்திருப்பாய்
  டோசராம் அவ்வண்டி பேர்.

 2. இப்போது படங்களுக்கான லிங்குடன்:

  கரியைச் சுரண்டிக் குழியாக்கி வைத்து
  சரியாய் சமனம் செய்து – பரிபோலே
  லாடமும் இன்றி விரைவாய்ப் பறக்குமே
  லோடராம் அவ்வண்டி பேர்.

  டிப்பரென்று சொல்வார் தெரியா சிலபேர்
  தப்பாகச் சொல்லுவார் லாரியென்றும் – மப்போடு
  வம்பர் பகரும் வார்த்தையை நம்பாதே
  டம்பராம் அவ்வண்டி பேர்.

  மேடும் குழியும் இருக்கலாம் வாழ்க்கையில்
  ரோடும் இருந்தால் தாங்குமா? ஓடி
  சிரேஷ்டமாய் சாலையைச் சீராய் அழுத்தும்
  கிரேடர் அவ்வண்டி பேர்.

  தடைகள் அகற்றித் தனதுபாதை போட்டு
  உடைக்கும் உருள்பெரும் பாறை – கதைக்குள்ளே
  நாசவேலை மட்டுமே செய்துநீ பார்த்திருப்பாய்
  டோசராம் அவ்வண்டி பேர்.

 3. பத்மா says:

  சினத்தினைக் குறைத்து சிரிப்பைத்தான் கூட்டி
  மனதினை ஒருமுகப்படுத்தி அன்புடன் -அளவான
  அருஞ்சுவை உணவுடன் நடையும் பழகுதல்
  குறையில்லா வாழ்வென்று கொள்.

 4. பத்மா says:

  பாலுடன் பரிவையும் பரிவோடு பகிர்ந்தளித்து
  நாலுபேர் மத்தியில் நலமாக வளர்த்தின்று
  டார்ம்க்கு தனியாய் புறப்படும் பிள்ளைக்கு
  பார்த்தனே இருப்பான் துணை.

 5. Sathia says:

  இந்த பாட்டை உடனடியாக இருட்டடிப்புச் செய்யவும். தென்காசிவரைக்கும் இன்றை
  ‘சேர’ நாட்டுக்கு என்றால் இன்னும் நிறையப் பிரச்சனைகளை ஆரம்பிச்சிருவாங்க. தெற்கே திருவனந்தபுரமே கடற் கரை ஓரம் தான் அதனால அதையை அரபிக் கடலாவே வச்சுக்கலாம்.

  அப்பால வெண்பா்க் கேள்வி. எல்லாத்தையும் எழுதலாம்
  அப்பால ஒரு மொழி எடுத்துப்போம், சி, சி++ மாதிரி தமிழுக்கு நன்னூல் மாதிரி இலக்கணப்புத்தகம் போடலாமே. என்ன கொஞ்சம் ஆங்கிலம் கலந்து எழுதவேண்டும் ;-)).

  கண்டிஷன் போடுகையில் கண்ணாகக் கவனித்து
  கண்டிப்பாய் பிராக்கெட் போடு

 6. ஜனவரி மாத தென்றல் இதழில், வாஞ்சிநாதன் அவர்களின் குறுக்கெழுத்துக் குறிப்பு-

  ஏதிலார் மெய்துறந்தார் கெட்டபின் ஈந்ததுவோர்
  தீதிலா நீதிநூலாம் தேர்.

 7. Raghavan says:

  இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வெண்பாவை வைத்து என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஐந்து ஆண்டுகளாக தேடி வருகிறேன். என்ன செய்யவில்லை என்ற வியப்பு தான் மிச்சம்.நேரில் சந்திக்கும் போது இது பற்றி சொல்கிறேன். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் இங்கே : http://youtu.be/AbLZnEYt2ro ஒலி நூறு, ஒளி நூறு என்று இரண்டு புத்தகங்கள் Concepts of Light & Sound in Physics பற்றி கொண்டு வந்திருக்கிறார். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s