சுரக்கும் அருளே

முன் இக் கடலைச் சுருக்கி, எழுந்து, உடையாள்

என்னத் திகழ்ந்து, எம்மை ஆள் உடையாள் இட்டு இடையின்

மின்னிப் பொலிந்து, எம் பிராட்டி திரு அடிமேல்

பொன்னம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம்

என்னச் சிலை குலவி, நம் தம்மை ஆள் உடையாள்

தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு

முன்னி, அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே

என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!

நூல்: திருவெம்பாவை (#16) திருவாசகம்

பாடியவர்: மாணிக்கவாசகர்

சூழல்: வானில் கருமேகம் சூழ்ந்து மின்னல் வெட்டுகிறது, இடி இடிக்கிறது, மழை பொழிகிறது, வானவில் தோன்றுகிறது, அதைப் பார்த்துப் பாடுவதுபோல் இந்தப் பா அமைந்துள்ளது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

மேகமே,

நீ முதலில் இந்தக் கடலைக் குடித்துச் சுருக்கினாய்,

பிறகு மேலே எழுந்தாய், உமையின் நிறத்தைப் பெற்றுத் திகழ்ந்தாய். (கருமேகம்)

அடுத்து,எங்களை ஆளும் உமையின் சின்ன இடையைப்போல் அழகிய மின்னல்களை வெட்டினாய்.

உமையின் பாதங்களில் உள்ள தங்கச் சிலம்பைப்போல் இடிச் சத்தம் செய்தாய்.

நீ வரையும் பல வண்ண வானவில், உமையின் அழகிய புருவத்தைப்போல் தோன்றுகிறது.

எங்களை ஆட்கொள்ளும் அந்த உமையவளைஎப்போதும் பிரியாதவன் சிவபெருமான். அந்தச் சிவனுடைய அன்பர்கள் கேட்பதற்கு முன்பாகவே உமை அள்ளி அள்ளித் தருகின்ற அருளைப்போல, நீயும் மழையாகப் பொழிகிறாய்!

துக்கடா

 • வானில் மழை பொழிவது ஓர் இயல்பான விஷயம். அதன்மீது மாணிக்கவாசகர் தனது கற்பனைகளை ஏற்றிவைத்துப் பாடுவதால், இந்தப் பாடல் ‘தற்குறிப்பேற்ற அணி’ வகையைச் சேரும்
 • திருவெம்பாவை முழுவதையும் இங்கே ஒலி வடிவத்தில் கேட்கலாம் : http://www.shaivam.org/gallery/audio/pavai.htm

165/365

Advertisements
This entry was posted in சிவன், தற்குறிப்பேற்ற அணி, திருவாசகம், திருவெம்பாவை, பக்தி, பாவைப் பாட்டு, மாணிக்கவாசகர், வர்ணனை. Bookmark the permalink.

7 Responses to சுரக்கும் அருளே

 1. திருவெம்பாவை கலக்கல்!
  வெறும் வாசகமா? “மாணிக்க” வாசகம் ஆச்சே!
  Actually, இதுவும் திருவாசகத்தைச் சேர்ந்தது தான்! திருவாசகத்தில் ஏழாம் பதிகம் = திருவெம்பாவை!
  ————-

  இதுக்கு முன்னாடி வரும் பதிகம் எல்லாம் ஒரே தத்துவமா வரும்! அவையெல்லாம் “சிவனை வியந்தது”!
  நீத்தல் விண்ணப்பம், அண்டம்-ன்னு ஒரே தத்துவ மயம்! சட்டுனு பிடிபடாது!

  ஆனா, மாணிக்க வாசகர் எங்கூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலைக்கு வந்தாலும் வந்தார்! Track மாத்தி, “சக்தியை வியந்தது”-ன்ன்னு பாடத் துவங்கிட்டாரு:))
  மனசைப் பெண் ஆக்கிக்கிட்டாலே, ஒரே விளையாட்டும் குதூகலமும் தான்!:))

  எம்பாவை
  அம்மானை
  பொற்சுண்ணம்
  கோத்தும்பீ
  தெள்ளேணம்
  -ன்னு, ஒரே பெண்கள் விளையாட்டாத் தான் இனிமே வரும்!:) Jolly-O-Jolly:))

 2. திருக்குறளில் 1. கடவுள் வாழ்த்து, 2. வான் சிறப்பு
  அதே போல, திருவெம்பாவையைப் பாருங்க…
  1. ஆதியும் அந்தமும் இல்லா = கடவுள் வாழ்த்து
  2. முன்னிக் கடலைச் சுருக்கி = மழைச் சிறப்பு!

  அன்னிக்கி Twitter, Internet, Library-ன்னு ஒன்னும் இல்லீன்னாலும், சான்றோர்கள் மனம் ஒன்னு போலவே சிந்திக்கிறது பாருங்கள்!
  ——

  ஆண்டாளும் வான் சிறப்பைப் பாடுறா! ஆழி மழைக் கண்ணா என்னும் பாசுரம் கொஞ்சம் எளிமையா இருக்கு! அதனால் மிக்க பிரபலம்!
  மாணிக்க வாசகர் பாடல் சற்று நடை கடினம் என்பதால், இந்த மழைப் பாட்டு அதிகம் வெளியில் தெரியாமலேயே போய் விட்டது:(

  மாணிக்க வாசகர் காலம் அப்படி! சமய குரவர்கள் மூவருக்கும் முற்பட்டவர் மாணிக்க வாசகர்! அப்பர் பெருமானே, தமது பாடலில், பரியை நரியாக்கிய நிகழ்வைப் பாடுகிறார்!
  ஆனா, ஏனோ தெரியலை, மாணிக்க வாசகர் காலத்தை, சைவப் பெருமக்கள் பின்னுக்குத் தள்ளி விட்டனர்!
  அவரை 63 நாயன்மாருள் ஒருவராகவும் வைக்கவில்லை:((

  மாணிக்க வாசகர், திருமாலைப் பாடியது போல், வேறெந்த குரவரும் பாடவில்லை!
  ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? -ன்னு இதே திருவெம்பாவையில் கேப்பாரு!
  திருமால், ஈசன் மேல் வைத்திருக்கும் அன்பில், கால் பங்காச்சும் நீ வச்சிருக்கியா?-ன்னு ஒருத்தியை இன்னொருத்தி கேட்பதாய் பாட்டு! அவ்வளவு இனிமை!

  • இந்தப் பாடல்…திருவெம்பாவையில் மிகவும் பின்னால் வரும் பாடல், 15th or 16thன்னு நினைக்கிறேன்! பல புத்தகங்களிலும் அப்படித் தான் இருக்கும்!

   தொகுக்கும் போது ஏற்பட்ட தவறா-ன்னு தெரியல!

   ஆனா சில நுட்பமான சைவ அறிஞர்கள் (குன்றக்குடி அடிகளார்), இப்பாடலே இரண்டாம் பாடல் என்றும், பாவையில், பல பாடல் வரிசையை மாற்றியும் தந்துள்ளனர்!
   சொக்கன், இதை இரண்டாம் பாடலாகத் தந்தது, மேலும் எனக்கு வியப்பூட்டுகிறது!

 3. ஒரு பாயிண்ட் மட்டும் இடிக்குது. கடல் தண்ணி வற்றி மேகமாகும். அது மழை பொழிவதற்கு முன்னாடி கருமையானதாய் இருக்கும். மின்னல் வரும், இடி வரும். சரி. ஆனா மழை பெய்யலை. அதுக்கு முன்னாடி எப்படி வானவில்? அந்த ஆர்டர் கொஞ்சம் உதைக்குதே. அவ்வளவு கரெக்ட்டா மின்னல் முதலில் வரும் அப்புறம்தான் இடின்னு போட்டவரு இப்படி மாத்தி இருப்பாரா?

  எல்லா உரைகளிலும் இப்படித்தான் போட்டு இருக்காங்க. எல்லாரும் இப்படியே படிக்கிறோம். ஆனா இவ்வளவுதானா? வேற மாதிரி யோசிக்கக் கூடாதா?

  /பொன்னம் சிலம்பில் சிலம்பி, திருப் புருவம் என்னச் சிலை குலவி, /

  இதுதானே சொல்லி இருக்காரு. கொஞ்சம் மாத்தித்தான் யோசிச்சுப் பார்க்கலாமே. சிலைன்னா வானவில் மட்டும் இல்லை. ஒலி என்ற ஒரு பொருளும் உண்டு. நான் பேசறேன், நீங்க கேட்கறீங்க. அப்போ கொஞ்சம் ஆச்சரியமோ, ஐயமோ வந்தா உடனே என்ன ஆகும்? உங்க புருவம் அப்படி மேல போகும். குலவு அப்படின்னா வளை (வளைதல்) என்ற பொருளும் இருக்கு.

  உமையின் நிறம், உமையின் இடை, உமையின் சிலம்பு எனச் சொல்லியாச்சு. அதே டாபிக்கில் உமையின் புருவம்ன்னு சொல்லறோம். எப்படி புருவமானது உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாக வளையுதோ அது மாதிரி இடிக்கு எதிரொலியும் கேட்குதுன்னு சொல்லலாமா?

  அப்படி வெச்சுக்கிட்டா கருமேகம், மின்னல், இடி, எதிரொலி, மழைன்னு கொஞ்சம் ஆர்டரா வருது. சும்மா வேற ஒரு இண்டர்ப்ரெடேஷன். தப்பா இருந்தா மன்னிச்சு விட்டுடுங்க.

 4. பாட்டின் வீச்சைப் பாருங்க…

  கடலைச் சுருக்கி,
  எழுந்து,
  மின்னிப் பொலிந்து,
  சிலம்பில் சிலம்பி,
  சிலை குலவி,
  முன்னி,
  என்னப் பொழியாய்,
  மழை ஏல் ஓர் எம்பாவாய்!

  அப்பிடிப் பொழியுதாம் மழை!
  “சொல் அடர்த்தி”, பாடலுக்கு எவ்ளோ முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

  மாணிக்க வாசகர் திருவடிகளே சரணம்!
  திருச்சிற்றம்பலம்!

 5. //ஏல் ஓர் எம்பாவாய்!//

  சொக்கனும் என்னையப் போலவே, ஏல் ஓர் எம்பாவாய்!, ஏல் ஓர் எம்பாவாய்! -ன்னு பிரிச்சிப் பிரிச்சித் தான் எழுதறாரு! I like it:)
  இப்பிடி எழுதக் கூடாது-ன்னு சில வைணவர்கள் என் கிட்டே முன்பு சண்டைக்கு வந்தாங்க:))

  அது என்ன ஏல் ஓர்? – சொல்லுங்க பார்ப்போம்:)

  ஏல் = ஏற்றுக் கொள்
  ஓர் = ஆய்வு செய்

  அது எப்படி-ய்யா? ஆய்வு செஞ்சிட்டுத் தானே ஏத்துக்க முடியும்? அதானே பகுத்தறிவு?
  ஆண்டாளும், மாணிக்கவசகரும் = First Accept, Then Analyze!-ன்னு மாத்திப் பாடுறாங்களே! இடிக்குதே-ன்னு பாக்குறீங்களா?:))

  விளக்கம் இங்கே = http://madhavipanthal.blogspot.com/2008/12/09-1st-accept-then-analyze.html

 6. amas32 says:

  அம்பாளின் கருணையை வான் மழைக்கு ஒப்பிடுகிறார் மாணிக்கவாசகர். இடியோ, மின்னலோ அல்லது அழகிய வானவில்லோ எல்லாமே அவருக்கு அன்னையின் தோற்றத்தையே எண்ண வைக்கிறது! பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று பாரதியார் சொன்னதை போல இயற்கை நிகழ்வுகள் எல்லாம் மாணிக்கவாசகருக்கு உமையவளின் கல்யாண குணங்களையே நினைவு படுத்த்கின்றன. தந்தையிடம் எதுவுமே கேட்டு தான் பெறமுடியும். ஆனால் தாய் குறிப்பறிந்து செய்வாள். அதுதான் அன்னை நமக்கு, கேட்காமலேயே அருள் மழை பொழிகிறாள் என்று சொல்கிறார் மாணிக்கவாசகர்.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s