மதி மயக்கம்!

பெண்ணிலே குழல்மொழிக்கு ஓர் பங்கு கொடுத்

…..தவர் கொடுத்த பிரமையாலே

மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றேன்

…..உனக்கு மதி மயக்கம்தானோ?

கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா

…..ருடன் கூடிக் காந்திக் காந்தி

விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண் இலாக்

…..கொடும் பாவி வெண்ணிலாவே!

நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்: குற்றாலநாதரைப் பார்த்துக் காதல் கொள்கிறாள் வசந்தவல்லி, அப்போது நிகழும் காட்சிகளில் ஒன்று இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வெண்ணிலாவே,

பெண்களில் ‘குழல்மொழி’ என்ற பெயரைக் கொண்டவர் உமாதேவி. அவருக்குத் தன்னுடைய உடலின் ஒரு பகுதியைக் கொடுத்தவர் சிவபெருமான் (திருக்குற்றாலநாதர்). அவர் கொடுத்த மயக்கத்தால் நான் இங்கே கிறங்கிக் கிடக்கிறேன்.

எனக்குதான் காதல், மதி மயங்குகிறேன், மதியே, உனக்கு என்ன மயக்கம்? நீ ஏன் உன்னுடைய வழக்கமான குளிர்ச்சியை மறந்து நெருப்பாகச் சுடுகிறாய்?

நெற்றிக்கண்ணில் நெருப்பை வைத்த அந்தச் சிவபெருமான் என்னைச் சுட்டு எரியச் செய்வது போதாதா? அவரோடு சேர்ந்துகொண்டு நீயும் விண்ணில் நெருப்பை வைத்து என்னை வேதனைப்படுத்தவேண்டுமா? கொடும் பாவி நிலாவே, கொஞ்சம் யோசி!

துக்கடா

 • கிட்டத்தட்ட இதேமாதிரியான ஒரு காட்சியை நாம் ஏற்கெனவே #365paa வரிசையில் பார்த்திருக்கிறோம். ராமரைப் பார்த்த சீதையின் நிலையைக் கம்பர் அழகாக விவரிக்கும் அந்தப் பாடல் இங்கே : https://365paa.wordpress.com/2011/11/06/123/

158/365

Advertisements
This entry was posted in காதல், சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பெண்மொழி. Bookmark the permalink.

3 Responses to மதி மயக்கம்!

 1. amas32 says:

  First congratulations on the new and improved look 🙂
  நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
  இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
  என்ற கண்ணதாசன் இயற்றி, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் தான் இந்த குற்றால குரவஞ்சியை படிக்கும்போது நினைவில் ஓலிக்கிறது 🙂
  கண்ணதாசனின் அடுத்த வரிகளும், எப்படி இந்தப் பாடலில் நெற்றிக்கண்ணால் சிவபெருமான் சுட்டெரிப்பது போல் உடல் சுடுகிறதே என்று காதலின் தாபத்தினால் வசந்தவல்லி எண்ணுவதற்கு இணையாக,
  கனிமொழிக்கென் மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கென் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது என்று எழுதியுள்ளார்! கவிகளுக்கு தான் எப்பேர்பட்ட கற்பனை வளம்! பெண்ணுக்கு காதலினால் வரும் வேதனையை திரிகூடராசப்பக் கவிராயரும் பின் வந்த கவியரசரும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
  amas32

 2. என்னமாக் கவிதை! ராசப்பக் கவிராயரு, கவிராயரு தான்!
  எத்தனையோ பள்ளு வந்தாலும் = முக்கூடற் பள்ளு!
  எத்தனையோ குறவஞ்சி வந்தாலும் = குற்றாலக் குறவஞ்சி! அம்புட்டுதேன்!:)
  ———–

  இந்தப் பாட்டுல நிலாவுக்கு மட்டுமா வசவு?
  சிவ பெருமானுக்கும் என்னமா வசவு குடுக்குறா இந்தப் பொண்ணு!:))

  //கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவாருடன் கூடிக் காந்திக் காந்தி// = எடுபட்ட பய; அவன் கூடச் சேர்ந்து சேர்ந்து தான் இவனும்…ன்னு ஊருல திட்டுறாப் போலவே இருக்கு-ல்ல?:))

 3. வூட்டுல ,அம்மா, அப்பாவை நேரடியாத் திட்ட முடியாது (அப்பிடின்னு நினைக்கிறேன்:))
  என்ன பண்ணுவாங்க? = என்னை மொத்துவாங்க!
  அந்த அடியெல்லாம் அப்பாவுக்குத் தான்!:) வலி மட்டும் தான் எனக்கு:(

  அவனைச் சுத்தி இருக்குறதையெல்லாம் திட்டி, அவனை indirectஆ திட்டும் technique:)
  அவரு கூட, அவரு தலையில் இருக்கும் நிலாவே, அவரு கூடக் காந்திக் காந்தி, விண்ணிலே நெருப்பை வைத்தாய் கொடும் பாவி வெண்ணிலாவே!:)

  கொடும்பாவி = நிலாவுக்கா, அவருக்கா?
  முருகா, நான் உன்னைய திட்டுறா மாதிரியே, இந்தப் பொண்ணு, உங்கப்பாரைத் திட்டுதுடா:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s