குழலும் யாழும் இனிதில்லை

அகல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்

பகல் உடன் கரந்த, பல்கதிர், வானம்

இரும் களிற்று இனநிரை குளிர்ப்ப வீசி

பெரும்பெயல் அழிதுளி பொழிதல் ஆனாது

வேந்தனும் வெம்பகை முரணி, ஏந்து இலை

விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை

அடுபுகழ் மேவலொடு கண்படை இலனே,

அமரும் நம் வயின் அதுவே, நமர் என

நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி

யாங்கு ஆகுவள் கொல் தானே ஓங்குவிடைப்

படுசுவல் கொண்ட பகுவாய்த் தெள்மணி

ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப்

பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப

ஆர் உயிர் அணங்கும் தெள் இசை

மாரி மாலையும் தமியள் கேட்டே.

நூல்: அகநானூறு (#214)

பாடியவர்: வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

சூழல்: முல்லைத் திணை. காதலியைப் பிரிந்து போர்ப் பாசறையில் இருக்கும் காதலன் தன்னுடைய நெஞ்சுக்குச் சொன்னது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நெஞ்சே,

பெரிய வானம் முழுவதும் பரவிய மேகங்கள் சூரியனை மறைக்கின்றன. யானைக் கூட்டத்துக்கே குளிரும் அளவுக்குப் பெரிய துளிகளைப் பொழிகிறது மழை.

நம் அரசன் பெரிய வீரன். தன்னுடைய பகைவர்களை அழிப்பதற்கு உறுதி கொண்டுள்ளான். அதன்மூலம் கிடைக்கப்போகும் புகழை எண்ணித் தூங்காமல் போரிடுகிறான். அவனுக்குத் துணையாக, நிமிர்ந்த இலையைக் கொண்ட ஒளி நிறைந்த நீண்ட வேல்களை ஏந்தி நாங்களும் வந்திருக்கிறோம். பாசறையில் தங்கிப் போரிடுகிறோம்.

இந்தப் போரை நடத்துகிற பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, மழைக்காலம் தொடங்கிவிட்டாலும், இப்போது நான் வீடு திரும்பமுடியாது.

என் காதலி, அழகிய கூந்தலைக் கொண்டவள், எத்தனையோ உறவினர்கள் இருந்தபோதும், அவளுக்கு என்னைதான் ரொம்பப் பிடிக்கும். நான் பிரிந்து வந்துவிட்ட வேதனையில் தனியாகத் தவித்துக்கொண்டிருப்பாள்.

உயர்ந்த காளையின் கழுத்தில் கட்டிய பெரிய வாயைக் கொண்ட மணி தெளிவான சத்தத்துடன் ஒலிக்கும், பசுக்களை மேய்க்கின்ற ஆயர்கள் புல்லாங்குழல் ஊதுவார்கள், நல்ல யாழில் ’செவ்வழிப் பண்’ என்ற இசையை வாசிப்பார்கள், அந்த ஓசையெல்லாம்துணையைப் பிரிந்தவர்களுக்குத் துன்பம் தரும்.

இந்த மழை மாலையும், அந்த ஓசைகளும் சேர்ந்து என் காதலியை எப்படிச் சிரமப்படுத்துமோ! அவள் என்ன ஆவாளோ!

துக்கடா

 • இந்தப் பாடலின் மையக் கருத்தை அப்படியே மாடர்ன் சூழலுக்குக் கொண்டுவரலாம்: ’எனக்குக் கொடுத்த வேலை இன்னும் முடியலை, வீட்டுக்குப் போக நேரமாச்சு, ஆனா இந்த boss இவனும் ஆபீஸ்ல வேலை பார்த்துகிட்டிருக்கான், இவனே இங்கே இருக்கும்போது நான் எப்படி வீட்டுக்குப் போகமுடியும்? பாவம், என்னை விட்டு அவ தனியா என்ன பாடு படறாளோ!’
 • ஆனால், மூலப்பாடலுக்கும் இந்த வரிகளுக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசம், செறிவு. அந்த மணியோசையும், குழலும், யாழும், மழையும், மாலையும் எத்தனை நுணுக்கமாகப் பாடலில் பதிவாகியிருக்கிறது! நவீன சூழலில் அதை எப்படிக் கொண்டுவருவது? தொலைக்காட்சி ஒலியையும் செல்ஃபோன் சிணுங்குவதையுமா? 🙂

157/365

Advertisements
This entry was posted in அகநானூறு, அகம், ஆண்மொழி, காதல், நெஞ்சுக்குச் சொன்னது, பிரிவு, முல்லை. Bookmark the permalink.

3 Responses to குழலும் யாழும் இனிதில்லை

 1. 4sn says:

  First thanks for this blog 🙂 too late,huh? bt better late than never…

  I think today’s environment is no less to that day to make it poetic.. bt vry less ppl try to write poems in urban setup.. a poem with brilliant minute details with a village setup is more appreciated than urban setup..

  sorry for so unrelated comment to the post…

  Thanks again for this post and this blog..

 2. ஐயோ…இன்னும் கால் மணி நேரத்தில் அவன் பொறந்தநாளு…
  இந்த நேரம் பார்த்து, இந்த மாங்கொட்டை மடச்சி, நம்ம boss, இப்படி blade-u போடுறாளே! இவ பேசி முடிச்சிருவா தானே?

  நாம அமெரிக்காவில் இருந்து பெங்களூருக்குச் சரியா, அவன் நேரம் 11:59:50க்கு பேச ஆரம்பிக்கணும்!

  அவனுக்கு மிகவும் பிடிச்ச இசை = சுசீலாம்மா குரல் வர Trackஆ பாத்து Iphone-ல செட் பண்ணி வச்சிக்கிட்டு, Blackberry-ல கூப்பிடணும்…என்ன பாட்டு?
  ———-

  இன்னிக்கின்னு பார்த்து, இந்த ஏசி ஏன் இவ்ளோ சத்தம் போடுது? உர்ர்ர்ர்ர்-ன்னு? அவன் கோச்சிக்கும் போது விடும் மூச்சு போலவே இருக்கே!

  யாருடா அது? செல்பேசியில் Lady Gaga – Fame Fame Baby-ன்னு அலறுதே?
  டேய் வெள்ளைக்கார மண்டையா, Buddy, Take yr call man! I am tempted…அவனுக்கு லேடி காகா-ன்னாலே பிடிக்காது!

  Gosh! ஏய்…KeyBoard-ன்னா மெல்லத் தட்டணும்-டீ! இப்பிடியா குத்தாட்டம் போடுறாப் போல மேளங் கொட்டுறது?
  அச்சோ…இங்கிருந்து, அவன் கிட்ட பேச முடியாது போல இருக்கே!

  அப்பாடா…இந்த bossஐ, அவிங்க boss கூப்புடுறாரு! bossக்கு boss வையகத்தில் உண்டு!:) #Escape

  கிடுகிடு என்று lift பிடித்து,
  37 மாடி கீழே இறங்கி….
  அலுவலகத்தை ஒட்டிச் ஓடும் Hudson ஆற்றின் காத்து வீச…..BoardWalk படிகளில்….
  ———-

  11:59:48
  அலைபேசியில் அழைக்க ஆரம்பிக்க..
  நிம்ம டயல் மாடின நம்பரு, லைனு பிசியாகிதே, சொல்ப வெயிட் மாட்ரீ…
  ஐயோ, முருகா…இதென்ன சோதனைடா….

  Hello, ******* here…
  Heyyyy சொல்லு…நீ கூப்பிடுவே-ன்னு தெரியும்:)

  நியூயார்க் Hudson ஆறு, சல் சல் என்று கரையில் மோதி அலை ஓசையை பெங்களூரிலும் எழுப்ப…
  Iphone-இல் பாட்டை அழுத்த…சுசீலாம்மா…
  மெல்ல மெல்ல என்னைத் தொட்டு…..மன்மதன் உன் வேலையை
  காட்டு ஓ.. உன் பாட்டு! நீ தராததா நான் தொடாததா….
  11:59:59
  Happy Birthday Chellam! இச்….இன்ன்ன்ன்ன்னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :))
  ————-

  மேற்கண்ட அகநானூறு பாடல் காட்சி!
  //இந்தப் பாடலின் மையக் கருத்தை அப்படியே மாடர்ன் சூழலுக்குக் கொண்டுவரலாம்//
  கொண்டு வந்தாச்சே! :))))))))))))))

  Roles மட்டும் மாற்றிவிட்டேன்…இவள் இங்கே, காதலன் அங்கே-ன்னு!:)
  இந்த scene-ஐ, பேரிச் சாத்தனார் முல்லைத் திணைப் பாடலா, யாராச்சும் எழுதிக் குடுக்கறீங்களா?:)))

 3. amas32 says:

  பலரும் அனுபவிப்பதை தான் புலவர் எழுதியிருக்கிறார். சொன்ன நேரத்தில் நம் துணை வரவில்லை என்றால் நமக்கு படபடப்பாக இருக்கும். ஆனால், சொன்ன நேரத்தில் நாம் போய் சேரவில்லை என்றல் குற்ற உணர்வும் சேர்ந்து சோகம் இரட்டிப்பாகும். அவனின் துணைவியுடன் அந்த மழை காலத்தில் காளை மாடுகளின் மணியோசையுடன் இனிய புல்லாங்குழல் இசையையும் அனுபிவத்தவன், இப்பொழுது அந்த சூழலில் துணைவனை பிரிந்து அவள் துன்பப்படுவதை நன்குணர்ந்து வருந்துகிறான். எப்பொழுதும் சூழல் முக்கியம். நம் மூளையில் பதிந்துள்ள முன் நிகழ்வுகளை அவை தட்டிஎழுப்பும்.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s