பொய்ம்மையும் வாய்மையிடத்த

வேங்கை நறு மலர் வெற்பு இடை யாம் கொய்து,

மாந்தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்

பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்

சேந்தனவாம் சேயரிக் கண் தாம்.

நூல்: ஐந்திணை ஐம்பது (#15)

பாடியவர்: மாறன் பொறையனார்

சூழல்: குறிஞ்சித் திணை. வெளியே சென்ற காதலி தன்னுடைய காதலனைச் சந்தித்துத் திரும்புகிறாள். அப்போது அவளுடைய கண்கள் சிவந்திருக்கின்றன. இதைப் பார்த்த அவளுடைய தாய் ’என்ன ஆச்சு?’ என்று விசாரிக்கிறாள். இதற்குப் பதில் சொல்லத்தெரியாமல் அவள் விழிக்க, சட்டென்று எதையோ சொல்லிச் சமாளிக்கிறாள் அவளுடைய தோழி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தாயே,

மலையில் உள்ள வேங்கை மரத்தின் நறுமலர்களை நாங்கள் ஒவ்வொன்றாகப் பறித்தோம். அதனால் எங்களுடைய மாந்தளிர் போன்ற மேனி வியர்த்தது. ஆகவே, அங்கிருந்த அருவிகளில் எல்லாம் பலமுறை குளித்தோம். அதனால்தான், மென்மையான சொற்களைப் பேசும் என் தோழியின் செவ்வரி படர்ந்த கண்கள் சிவந்துவிட்டன.

துக்கடா

 • உண்மையில் அந்தக் காதலியின் கண்கள் சிவந்தது ஏன்? அதை நம் கற்பனைக்கு விட்டுவிடுகிறது இந்தப் பாடல் 😉
 • ஏனோ, இதைப் படித்தவுடன் ’கன்னத்தில் என்னடி காயம்?’ என்ற சினிமாப் பாட்டு ஞாபகம் வருகிறது :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
 • மாந்தளிர் மேனி வியர்ப்பமற் றாங்கனைத்தும்
 • பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச்
 • சேந்தனவாம் சேயரிக்கண் தாம்
152/365
Advertisements
This entry was posted in அகம், காதல், குறிஞ்சி, சினிமா, தோழி, நாடகம். Bookmark the permalink.

7 Responses to பொய்ம்மையும் வாய்மையிடத்த

 1. amas32 says:

  தலைவனிடம் தூது செல்ல மட்டுமல்ல தாயிடம் பொய் சொல்லவும் தோழி தேவைப் படுகிறாள்! அந்த காலம் முதல் காதல் என்பது ஏன் எப்பொழுதும் மறைக்கப்பட வேண்டிய விஷயமாகவே உள்ளது? நாயகி மென்மையான சொற்களை பெசுபவளாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதால் தான் தோழி சரளமாகப் போய் சொல்கிறாள் என்று நினைக்கிறேன்.பறித்த மலர்கள் எல்லாம் எங்கே என்று அந்த ஏமாந்த தாய் கேட்கவில்லை போலும் 🙂
  amas32

  • //.பறித்த மலர்கள் எல்லாம் எங்கே//

   தோடா….அம்மா roleஇல் என்னமாக் கேள்வி கேக்குறாக! நம்ம காதலுக்கு இவுங்க தான் நக்கீரரோ?:)))
   பறித்த மலர்கள் எல்லாம் அங்கேயே தொடுத்து அந்த “முருகனுக்கு” கொடுத்தாச்சும்மா:)))

 2. PVR says:

  I remember Kannadasan’s description. In Kambaramayanam, there is a phrase தாமரை கண்ணினால்… CN Annadurai’s ஆரிய மாயை questioned Seethai’s virtues… ‘thaamaraikkaaN = half red eyes = lust/ drinks” etc.

  Kannadaasan said, it is not ‘தாமரைக்கண்”, கற்புடைடைய மங்கையர்தம்மின் ‘அரைக்கண்’. வெட்கப்பார்வை.

 3. பொய்ச் சொல்லத் தெரியாதவங்க பொய் சொன்னா இப்படித் தான் இருக்கும்!
  படபடப்புப் பொய்கள்! இலகுவா கண்டுபுடிச்சிறலாம்:) இனிமையான பொய்கள்:))

  பொய்#1: வேங்கை நறு மலர் யாம் கொய்து = வேங்கை மரம் ரொம்ப உசரமா இருக்கும்! அதுல எப்படி இதுங்க பூ “கொய்து”ச்சிங்க?:) உலுக்கிய பூவை எடுத்தோம்-ன்னு சொன்னாலும் பரவாயில்லை!:)

  பொய்#2: மாந்தளிர் மேனி வியர்ப்ப = இதுங்களே உளறிவிட்டன – மாந்தளிர் பசலை உடம்புல படருது-ன்னு:)

  பொய்#3: சேந்தனவாம் சேயரிக் கண் = குளிச்சாக் கண்ணு சிவப்பாவுமா? அதுவும் குளிர் மலை அருவியில்?:))
  ——–

  அய்யோ…காதலிக்கறவங்க எல்லாருக்கும் Excuse பொய்கள் சொல்வது எப்படி-ன்னு கத்துக்கணும்! எங்களுக்கு….யாராச்சும் கத்துக் குடுங்களேன்:)) #365paa Owner @chokkan help please :)))

  • amas32 says:

   பல நாள் திருடன் (பொய் சொல்பவன்) ஒரு நாள் அகப்படுவான்! ஏன் பொய் சொல்லணம், உண்மையே பேசுங்க 🙂 அம்மா நல்லவங்க!
   amas32

  • பொய்#3: சேந்தனவாம் சேயரிக் கண் = குளிச்சாக் கண்ணு சிவப்பாவுமா? அதுவும் குளிர் மலை அருவியில்?:))/// இது பொய்யில்லையே முருகா..

   அருவியில் நீண்ட நேரம் குளிச்சா கண்டிப்பா கண் சிவக்கும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s