ஆசைப்பட்டேன்

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு

எய்யாது என் தன் தலைமேல் வைத்து ’எம் பெருமான், பெருமான்’ என்று

ஐயா என் தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப

ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே!

நூல்: திருவாசகம் (ஆசைப்பத்து #8)

பாடியவர்: மாணிக்கவாசகர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

என் தலைவனே, திருவையாற்றில் எழுந்தருளிய இறைவனே, சிவபெருமானே,

வீரக் கழல் அணிந்த உன்னுடைய திருவடிகளை என் கையால் வணங்கவேண்டும், அப்படியே கட்டித் தழுவிக்கொள்ளவேண்டும், அந்தப் பாதங்களை எந்நேரமும் என் தலைமீது சுமந்துகொண்டு ‘எம்பெருமானே, பெருமானே’ என்று வாய் நிறையச் சொல்லவேண்டும், அப்படியே தீயில் பட்ட மெழுகுபோல் உருகவேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்பட்டேன், அருள் செய்!

துக்கடா

 • இன்றைய அரிய சொல் : கழல் = ஆண்கள் காலில் அணிகின்ற ஒரு நகை
 • உதாரணங்கள்:
 • 1. கழல் ஆர் கமலத் திருவடி : திருமந்திரம்
 • 2. அதிரும் கழல், பொருதோள்… : நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்

146/365

This entry was posted in சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

4 Responses to ஆசைப்பட்டேன்

 1. கை = அதை வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்?
  பலதும் செய்யலாம் = காமம், வீரம், களவு, தானம், கல்வி….இன்னும் என்னென்னமோ…
  தானம் குடுக்கும் அதே கை தான் களவும் ஆடுது:)

  மனித மனம் உள்ளுக்குள் நினைப்பதை….வெளியே செய்து முடிப்பது பெரும்பாலும் கைகளே!
  மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ…

  மனிதனுக்கும், விலங்குகளில் யானைக்கு மட்டுமே=கை!

  அந்தக் கையை….மாணிக்கவாசகர்…எதற்கோ பழக்கி வைக்கிறார்! எதற்கு?
  = அவன் கால்களைத் தழுவிக் கொள்ள!

  அட, கையால் காலைத் தழுவிக் கொள்வதா? நல்லாவா இருக்கு?
  —————

  கையால் தொழுது = கை, துவக்கத்தில் தொழும்!
  ஆனால் நாள் செல்லச் செல்ல…கோயிலுக்குப் போனா…அந்தக் கை, கையெடுத்து கும்பிடாது!
  மாறாக, அன்பினால், மனதுக்குள்ளேயே, அவனைத் தழுவிக் கொள்ளும்!

  அவன் காலைத் தலை மேல் வைத்துக் கொள்வது… = இதெல்லாம் அடிமைப் புத்தி அல்லவா?:))
  ஆமா! Public-aa பலர் பார்க்கணுமே என்பதற்காக, தலைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தா அடிமைப் புத்தி தான்!

  ஆனால் பிறர் பார்க்கணுமே என்ற வேடம் போடாது, குழந்தையைக் கொஞ்சும் போது, அது உதைக்கும் காலை, தலை மேல் வச்சி, உச்சி முகர்வது = அடிமை அல்ல, அன்பு!
  = எய்யாது என் தன் தலைமேல் வைத்து ’எம் பெருமான், பெருமான்’ என்று….

 2. இரண்டு விடயங்களை அடக்கினாலே போதும்
  1. கை
  2. வாய்
  மனமும், தானே அடங்கி விடும்!

  யாரும் கண்ணை அடக்கு, காலை அடக்கு-ன்னு சொல்லுறது இல்ல!
  கையைக் கட்டு, வாயைக் கட்டு-ன்னு தான் சொல்லுறோம்!:)

  மனசு நம்மள பிடிச்சி உந்த உந்த, கை தான் உடனே செயலாக்கத் துடிக்கும்!
  கையால் உடனே செய்ய முடியலீன்னா, வாய் கண்டதையும் பேசி, நமக்கு நாமே சப்பைக் கட்டு கட்டுவோம்!

  அதான் மாணிக்கவாசகர், முதலில் கையைக் கட்டி, பின்னர் வாயைக் கட்டுகிறார்!
  * கையால்= உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
  * வாயால்= எம் பெருமான், பெருமான், ஐயா என்று அரற்றி….
  —————-

 3. கழல் = ஒரு வகையான காலணி/நகை மட்டுமல்ல! அது வீரக் கழல்!
  எல்லாரும் கழல் பூட்டிக் கொள்ள முடியாது!
  அது விருதாக ஒருத்தருக்குத் தரப்பட்டு, பின்னரே காலில் பூட்டிக் கொள்ளப்படும்!

  அதிரும் கழல்! குலுங்கும் சதங்கை! = முன்னது ஆண்! பின்னது பெண்!
  ——–

  ஐயாறு = திருவையாறு
  காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, வடவாறு-ன்னு ஐந்து கிளை ஆறுகளாக ஓடுவதால் = ஐ+ஆறு!
  அப்பர் பெருமான் மிகவும் விரும்பிய இடம்! காவிரி கொஞ்சி விளையாடும் ஊர்!
  சங்கீத மும்மூர்த்திகளுள் முதல்வரான திருவையாறு தியாகராஜ ஆராதனை அனைவருக்கும் தெரியும்!

 4. amas32 says:

  இறை பக்தி வருவதற்கும் இறை அருள் தேவை. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று தானே சிவ புராணம் கூறுகிறது! நம் ஆசையை அவனிடம் தானே சொல்ல வேண்டும், அதையும் அவன் தான் நிறைவேற்றித் தர வேண்டும். இறைவனைத் தாயாகத் தந்தையாகத் தோழனாக, எப்படி நினைத்தாலும் அவனை உரிமையோடு தழுவிக் கொள்ளலாம், அந்த சுதந்திரம் நமக்கு இருக்கு 🙂
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s