நான்மாடக் கூடல்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்

புலவர் புலக்கோலால் தூக்க … உலகு அனைத்தும்

தான் வாட, வாடாத தன்மைத்தே தென்னவன்

நான்மாடக் கூடல் நகர்.

நூல்: பரிபாடல் திரட்டு (#6) / புறத்திரட்டு

பாடியவர்: தெரியவில்லை

(இது உரை அல்ல. கதைக்கு நடுவே உரையைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்!)

முன்பு ஒருநாள், புலவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம். ‘இந்த உலகிலேயே அதிகப் புலமை வாய்ந்த நகரம் எது?’

இதைத் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் ஒரு பிரமாண்டமான தராசைத் தயாரித்தார்கள். கஷ்டப்பட்டு அதைத் தூக்கிப் பிடித்து நின்றார்கள்.

அந்தத் தராசின் ஒரு பக்கத்தில், உலகத்து நகரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டன. இன்னொரு பக்கத்தில், பாண்டியனின் நகரமாகிய நான்மாடக் கூடல் (மதுரை) வைக்கப்பட்டது.

மறுவிநாடி, மதுரைத் தட்டு கீழே இறங்கியது, மற்ற நகரங்களெல்லாம் மேலே போய்விட்டன.

துக்கடா

 • உண்மையில் உலக நகரங்களை இப்படி எடை போடுவது சாத்தியம் இல்லை. மதுரையின் சிறப்பைச் சொல்வதற்காகப் புலவர் மிகைப்படுத்திக் கதை சொல்கிறார். ஆகவே இது ‘உயர்வு நவிற்சி அணி’ வகையைச் சேர்ந்த பாடல்
 • வெண்பாப் பிரியர்களுக்காக, அசை பிரிக்காத பாடல் இங்கே :
 • உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
 • புலவர் புலக்கோலால் தூக்க … உலகனைத்தும்
 • தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
 • நான்மாடக் கூடல் நகர்
 • இன்றைய அரிய சொல் : புலக்கோல் = புலமையை அளவிடும் தராசு
144/365
Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உயர்வு நவிற்சி அணி, கதை கேளு கதை கேளு, பரிபாடல், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to நான்மாடக் கூடல்

 1. amas32 says:

  பாண்டியன் தவறு இழைத்ததால் கண்ணகியால் மதுரையும் எரிந்தது! அதே மதுரை தமிழ் சங்கம் வைத்துத் தமிழைக் கொண்டாடி, புலவர்களால் ஏனைய நகரங்களை விட சிறப்பு வாய்ந்தது என்றும் போற்றப்பட்டிருக்கிறது! We are proud of the fact that Chennai is a knowledgeable crowd in sports, like that Madurai is famous for wisdom!
  amas32

 2. GiRa says:

  பரிபாடல். சற்று வில்லங்கமான பெயர். காரணம் இன்றைக்குக் கிடைத்திருக்கும் பாக்களும் அவைகளில் உள்ள இடைச்செறுகல்களும்.

  பரிபாடல் தொகுப்பு ஒன்று முற்றிலும் காணாமல் போனதாகவும் ஒரு செய்தி சொல்கிறது. இப்பொழுது பரிபாடல் என்று சங்க இலக்கிய வரிசையில் எட்டுட்தொகை நூல்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும் பரிபாடல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

  எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்டவை என்பது நாம் அறிந்தது. முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகை என்று உ.வே.சா அவர்களும் மற்ற தமிழறிஞர்களும் நன்கு ஆய்ந்து தோய்ந்து ஒப்புக்கொள்கிறார்கள்.

  அப்படித் தொகுக்கப்பட்ட நூல்தான் பரிபாடல். நாம் செய்த நற்பயனால் மற்ற நூல்கள் முழுதும் கிடைத்தன. பிரதிபேதங்களைக் கண்டு திருத்தி வெளியிடும் அளவிற்குச் சுவடிகள் கிடைத்தன.

  ஆனால் பரிபாடலின் நிலைமை அப்படியல்ல. பரிமேலழகர் பின்னாளில் செய்த உரையில் கொஞ்சம் ஓலைகள் மிச்சமிருந்து எப்படியோக் கிடைத்தன.

  ஒரு பழைய வெண்பாவின் படி,
  திருமாலுக்கு – 8
  செவ்வேளுக்கு (முருகன்) – 31
  காடுகாண் கிழாருக்கு – 1 (காட்கோள் என்றும் பிரதிபேதம் உண்டு)
  வையை (வைகை அல்ல) – 26
  மதுரைக்கு – 4
  இத்தனை பாடல்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இருப்பது வெறும் 22தான்.

  இதில் வையை ஆற்றை வைகை அல்ல என்று சொன்னதற்கும் காரணம் உண்டு. வையை என்பதே உண்மையான பெயர். எப்பொழுது வைகை ஆனதென்று தெரியவில்லை.

  மற்ற சங்கநூல்களை விட பரிபாடலில் புராணத்தனமான வரிகளும் கதைகளும் வருவதால் இடைச்செருகல் மிகுந்ததென அறிஞர்கள் கருதுகிறார்கள்.

  பின்னாளிலும் பல பரிபாடல்கள் வந்ததால் சரியாகக் கணிக்க முடியாத அளவுக்குச் சுவடித் தரவுகள் கிடைக்கவில்லை. சரி. இருப்பவைகளைப் பார்ப்போம்.

  நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் பாடலைப் பார்த்ததும் இது சங்கப்பாடல் அல்ல என்று எளிதாகக் கூறிவிடலாம். பரிபாடல் என்பது வெண்பாவைச் சார்ந்ததுதானே.

  மேற்கூரிய காரணங்களால்தான் பொதுவாகவே பரிபாடலில் இருந்து எடுத்தாள்வது குறைவு.

  • பரிபாடல் வேறு, பரிபாடல் திரட்டு வேறு…
   இங்கு சொக்கன் இட்ட பாடல்=பரிபாடல் ‘திரட்டு’! அவரும் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்!:)

   // பரிபாடல் என்பது வெண்பாவைச் சார்ந்ததுதானே//
   பரிபாடல் = வெண்பாக்களால் ஆனவை அல்ல! அவை இசைப்பாக்கள்; அகவற்பாக்கள் அல்ல!

   பரிபாடல் திரட்டு எப்படீன்னா….பல உரையாசிரியர்கள் அவ்வப்போது எடுத்தாண்ட சில பரிபாடல்களை, கிடைச்ச வரைக்கும் உரைகளில் இருந்து “திரட்டி”, அதை ஆவணப்படுத்தி வைப்பது!
   தலையும் புரியாது, வாலும் புரியாது…ஆனா உரைகளில் சிறு பகுதி இருப்பதால், அதைச் சும்மானாத் திரட்டி வைத்துள்ளார்கள்! அவ்வளவே!!

   அதற்காக பரிபாடல் எல்லாமே “செருகல்” என்று சொல்லிட முடியாது! தமிழிசைக்கான கருவே பரிபாடலில் தான் இருக்கு!
   எது “செருகல்”, எது மூலம்…என்பதைப் பரிதிமாற் கலைஞர், ஞா.தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் தெளிவாக விளக்கி இருப்பார்கள்!

 3. பிரமனுக்கு புலவன் என்றொரு பெயர் உண்டு. பிரமன் பிடித்த தராசில் வாடாமல் நின்றது எங்கள் மதுரை என்று இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்வதும் உண்டு.

 4. புராணத்தரவுகள் இருப்பவை எல்லாம் இடைச்செருகல் என்று சொல்வது எந்த அடிப்படையில்? சங்கம் மருவிய காலத்தது என்று சொன்னாலாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இடைச்செருகல் என்று சொன்னால் ஏதோ யாரோ வேண்டுமென்றே யாரையோ ஏமாற்ற எழுதி வைத்தவை என்று குற்றம் சாட்டுவது போலிருக்கிறது.

  அண்மையில் ஈழ அறிஞர் கார்த்திகேசு ஐயாவின் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும், எட்டுத்தொகையில் குறுந்தொகையும் பரிபாடலும் பிற்காலத்தவை; சங்க காலத்தவை (கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை) இல்லை; சங்கம் மருவிய காலத்தவை (கி.பி. மூன்றாம்/நான்காம் நூற்றாண்டு) என்கிறார். திருக்குறளையும் அங்கே தான் வைக்கிறார். சிலம்பு அதற்கும் பின்னால் வந்தது என்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s