எண்ணிப் பார்

இத்தாழ் பணையில் இரும் தான்றிக் காய் எண்ணில்

பத்தாயிரம் கோடி பார் என்ன … உத்ததனில்

தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சபை நடுவே

தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான்

நூல்: நளவெண்பா

பாடியவர்: புகழேந்தியார்

சூழல்: ருதுபன்னன் என்ற அரசனுக்காகத் தேர் ஓட்டுகிறான் நளன். அப்படி ஒரு பயணத்தின்போது நடக்கும் காட்சி இது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

சுயம்வர மண்டபத்தில் எத்தனையோ தேவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் தமயந்தியின் மாலை நளனின் கழுத்தில்தான் விழுந்தது.

அப்பேர்ப்பட்ட சிறப்பு உடைய நளன், இப்போது ருதுபன்னனுக்காகத் தேர் ஓட்டிச் சென்றான். வழியில் ஒரு பள்ளமான நிலம் வந்தது. அங்கே ஒரு பெரிய தான்றி மரம்.

அந்த மரத்தைப் பார்த்த மறுவிநாடி, ‘இதில் பத்தாயிரம் கோடி காய்கள் உள்ளன’ என்றான் ருதுபன்னன். ‘சந்தேகமிருந்தால் நீயே எண்ணிப் பார்த்துக்கொள்.’

நளனுக்கு ஆச்சர்யம். மரத்தின் அருகே தேரை நிறுத்தினான். எண்ணிப்பார்த்தான்.

துக்கடா

 • ஒரு மரத்தில் பத்தாயிரம் கோடிக் காய்கள் இருப்பது சாத்தியமா? அப்படியே இருந்தாலும் அவற்றை எண்ணுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு விநாடிக்கு ஒரு காய் என்று வைத்துக்கொண்டால்கூட, மூன்றாயிரத்துச் சொச்ச வருடங்கள் ஆகும் 😉 … இப்படியெல்லாம் கணக்குப் போட்டால் பாடலை ரசிக்கமுடியாது காணீர் :>
 • இங்கே நாம் கவனிக்கவேண்டிய விஷயம், ருதுபன்னனுக்கு ஒரு மரத்தைப் பார்த்தவுடன் அதில் உள்ள காய்களைச் சட்டென்று எண்ணும் கலை தெரிந்திருந்தது. அதை நளனிடம் நிரூபித்துப் பந்தா அடித்துக்கொள்கிறான். எதற்கு?
 • நளன் அதிவேகமாகத் தேரை ஓட்டுகிறானே என்று ருதுபன்னனுக்கு ஆச்சர்யம். அவனிடமிருந்து தேர் ஓட்டும் கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். பதிலுக்குத் தானும் அவனுக்கு ஒரு கலையைக் கற்றுத்தரவேண்டாமா? அதற்காகதான் இந்தப் பந்தா நாடகம் 🙂
 • வெண்பா பிரியர்களுக்காக, வார்த்தை பிரிக்காத பாடல் இங்கே:
 • இத்தாழ் பணையி லிருந்தான்றிக் காயெண்ணிற்
 • பத்தாயிரங் கோடி பாரென்ன … உய்த்ததனில்
 • தேர்நிறுத்தி யெண்ணினான் தேவர் சபைநடுவே
 • தார்நிறுத்துந் தோள்வேந்தன் றான்
 • இன்றைய அரிய சொல் : பணை = வயல்
 • உதாரணங்கள்:
 • 1. பூம்பணை சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில் கொண்டாயே : தேவாரம்
 • 2. நதி நீரினைப் பணையெங்கும் நிறைத்தல்போல்… : நீதி நூல்

141/365

Advertisements
This entry was posted in நளவெண்பா, நாடகம், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to எண்ணிப் பார்

 1. natbas says:

  சார், ஒரு சின்ன டவுட்.

  தேவர்களைவிட உயர்ந்தவர்களாக இருந்தாலும் தாழ்ந்த கதிக்கு வந்தால் நமக்கு மேல் நிலையில் இருப்பவர்கள் எப்பேர்ப்பட அபத்தங்களைச் சொன்னாலும் அவற்றைப் பொருட்படுத்தத்தக்கவையாக பாவித்து அவற்றுக்கேற்ற மாதிரி பாவலா செய்ய வேண்டி வருகிறதே என்று நொந்து கொள்ளும் இல்லற மற்றும் அலுவலக தருணங்களில் பாழும் மனதைத் தேற்றிக் கொள்ள இந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்ளலாமா?

 2. மிக நல்ல பாடல். இலக்கிய சுவை பற்றி நான் பேச போவது இல்லை. எனக்கு கொஞ்சமே கொஞ்சம் தெரிஞ்ச கணக்கு பற்றி:

  நொடியில் கணக்கிடுவது (உண்மையில் உத்தேசிப்பது) கூட கடினமான கலை தான் (art of approximation). சில நேரங்களில், பனியின் ஒரு பகுதியாக வேலை பளுவை உத்தேசிக வேண்டியிருக்கும். நிறைய நிரூபிக்கப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட அறிவியல் முறைகள் அதற்கு உள்ளன. ஆனாலும், பல வேளைகளில், அன்றாட வேளைகளில் உத்தேசிப்பது கைவர முடிவது இல்லை. மரத்தில் உள்ள காய், இலைகளை எண்ணுவது. இன்னும் நிறைய: இந்த கலையை கற்க இதோ இது கொஞ்சம் உதவும்: http://web.mit.edu/newsoffice/2010/street-fight-0329.html

 3. amas32 says:

  நீங்கள் வெண்பாவை பிரித்து எழுதுவது தான் என் போன்றோருக்கு எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது, நன்றி! எப்பேர்பட்ட நள மஹாராஜா, ஒரு சமயம் தேரோட்டியாகவும் இருக்க நேரிடுகிறது! வாழ்க்கை ஒரு வட்டம் தான். ஆனால் ருதுபன்னன் நளன் எண்ணுவதற்குப் பொறுமையாகக் காத்து நிற்கிறானே, அதுவும் அரசனுக்கொரு ஒரு நற்குணம் தான் 🙂
  amas32

 4. பணை – மருத நிலம்.

  பண்ணையார் என்பது பணைகளை உடையவர் என்ற பொருளில்தானா?

 5. PVR says:

  We use surveys with pre-defined sample size, dependability factor etc. Then make sweeping assertions like “3.7% of the males do/ do not…” etc. Possibly naLan was the inventor of the system.

  India and Tamil nadu can be proud that we gave to the word ‘ZERO’; “Survey”… 🙂

 6. குடந்தை மணி says:

  இருக்கலாம்! ஆனால் பனையை விட தென்னையை அதிகம் கொண்டவர்கள் தான் பண்ணையார்களாக இருந்துள்ளனர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s