சோதி!

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ

படிச்சோதி ஆடையொடும், பல்கலனாய், நின் பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே, கட்டுரையே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல்

பாடியவர்: நம்மாழ்வார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

திருமாலே,

ஒளி வீசும் உன்னுடைய முகம்தான் உனது முடியாக (கிரீடமாக) ஒளிர்கிறதோ?

உனது பாதங்களின் ஒளிதான் நீ நிற்கும் தாமரையாக மாறியதோ?

பசும்பொன்போன்ற உன்னுடைய தேகத்தில் மின்னும் பிரகாசம்தான் உனது ஆடைகளாக, ஆபரணங்களாக ஆனதோ?

இந்த அதிசயம் எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கிச் சொல்வாயா?

துக்கடா

 • இன்றைய அரிய சொல் : அலர்தல் = மலர்தல்
 • உதாரணங்கள்:
 • 1. அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த … : பெரிய புராணம்
 • 2. இராமன் திருமுகம் … அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா! : கம்ப ராமாயணம்

135/365

Advertisements
This entry was posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, வர்ணனை, விஷ்ணு, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சோதி!

 1. amas32 says:

  தேனில் ஊறிய பலாச்சுளைப் போல நம்மாழ்வாரின் பாசுரங்கள் அத்தனை இனிமையானவை. அவர் திருமாலின் அம்சமே ஆனதால் அவரால் தான் பெருமாளை அவ்வளவு அழகாக உணர்ந்து விவரிக்க முடியும். ஆனால் அவருக்கே புரியவில்லை விளக்கிச் சொல்ல முடியுமா என்கிறார்!இன்றைய காலைப் பொழுது நன்றே விடிந்தது 🙂
  amas32

 2. mbell1983 says:

  சோதி – ஜோதி – சுடர்
  சோதி – சரிபார்
  🙂

  பதிவின் தலைப்பில் சோதி யை பார்த்தபின் சோதிக்க சென்ற நான் ஜோதியை பார்த்தேன் !

 3. பிரகாசம்தான் = ஒளி
  ஆபரணங்களாக = அணிகலன்கள்
  வேற்று மொழியில்லாமல் தமிழில் விளக்கம் எழுதலாம்.
  நாஞ்சில் இ. பீற்றர்
  http://www.worldthamil.org

  • சொக்கரே…
   “திவ்ய பிரபந்தம்” என்று Label எழுதி வரும் அதே வேளையில்,
   அதன் உண்மையான பேரான, “அருளிச் செயல்” என்றும் எழுதி வரும் உங்கள் தனித்தமிழுக்கு என் வணக்கம்!

   நாஞ்சில் பீற்றர்…
   100% தூயதமிழ் என்பது மலை உச்சி! சிறிது சிறிதாகத் தான் ஏற முடியும் அல்லவா!:)
   தாங்கள் தான் ஒரு முறை சுட்டிக் காட்டி விட்டீர்களே…இயன்ற வரை, படிப்படியாக முயல்வோம்!

   எனக்கும் தூயதமிழ் (சுத்தத் தமிழ் அல்ல) தான் பிடிக்கும்! இதைக் கண்டீர்களா? http://pulveli.com கிரந்தம் கலவாத் தமிழ் முயற்சி!
   சொக்கனும் அப்படியே…இது படிப்படி முயற்சி!
   எனவே பொறுமை!
   பொறுத்துப் பாருங்கள்! பூமி ஆள்வோம்:)))

 4. GiRa says:

  இதில் நான் ரசித்தது இறுதியில் வரும் கட்டுரையே!

  உரை – உரைப்பாய்

  ஆனா அதென்ன கட்டு உரையே? எடுத்துச் சொல்லு. கதை கட்டி விடுறதுன்னு சொல்றோமே. இங்கே உரை கட்டி விடுறது.

  இதுக்கு வடமொழியில் வியாசம்னு பேர். புராணக்கதைகளைக் கட்டு கட்டுன்னு கட்டி விட்டவருக்கு வியாசர்னே பேரு.

  • அல்ல!
   வடமொழியில் வியாச = பகுப்பது! (Partitioning the database)

   ஒன்றாகப் பெருத்துக் கிடந்த வடமொழி வேதங்களை,
   4ஆக பகுத்துத் தந்ததால் (வியாசித்ததால்)…
   அவருக்கு = வியாசர் (பகுத்தவர்) என்று பட்டப் பேரு!

   “வியாசம்”, வசிஷ்ட நப்தாரம்…சக்தே பெளத்ரம் அகல்மஷம்
   பராசராத்மஜம் வந்தே….சுகதாதம் தபோ நிதிம்

   “வியாசாய” விஷ்ணு ரூபாய, “வியாச” ரூபாய விஷ்ணவே
   நமோ வை பிரம்ம நிதயே, “வாசிஷ்டாய” நமோ நம:

   அவிகாராய சுத்தாய….நித்யாய பரமாத்மனே
   சதைக ரூப ரூபாய, விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே….

  • இருங்க! Dettol ஊத்தி வாயைக் கழுவிக்கறேன் 🙂
   ஒரே கடாபுடா…நற்றமிழ்/தீந்தமிழ் போல் வருமா?
   யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது….

 5. மேலே சொக்கன் தந்த பாசுரத்துக்கு, ஒரு குட்டிக் கதை இருக்கு!
  இது மதுரைக் கள்ளழகர் பத்திய பாசுரம்…
  அதான் எந்தை கள்ள்ள்ள் அழகர் போலவே, அவ்ளோ அழகு!:)

  கள்ளழகர் சிலை…சில நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது! ஐம்பொன் சிலையாக இல்லாமல், 99% தூய அபரஞ்சிப் பொன்…
  பல மாதிரியாகச் சிலையை வளைக்கலாம்…விரல் நகங்கள் உட்பட…அத்தனை அழகு! அதான் கள்+அழகர் 🙂

  அதன் மேல் கண்ட தண்ணியும் கொட்டி நீராட்டினால் கருத்தும் போகும்!
  மேலே பழமுதிர்சோலை ராக்காயி அம்மனின் சிலம்பாற்றுத் தண்ணி மட்டுமே பயன்படுத்துவார்கள்!
  ———

  இப்படி அழகு ததும்புவதால், கள் அழகருக்கு ரொம்ப ஆபரணம்/அலங்காரம் அணி செய்வதில்லை!
  அவரு உடம்பே அலங்காரம் தானாம்!:)
  அவரு மேலே மாலை/நகை போட்டா, அது அந்த நகைக்குத் தான் அழகாம்!:)

  “ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்”
  “முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்”
  -ன்னு அவரைத் தூக்கிக்கிட்டு வரும்போது, விருது சொல்லிக்கிட்டே வருவாங்க!

  இப்படி, ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் ஆகையாலே….இந்தப் பாட்டிலே….(contnd)

 6. முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
  = உன் முக அழகே அப்படி டால் அடிக்குது!
  = அந்த முகமே, மேல்நீண்டு….மணி முடியாக மாறி விட்டதோ?

  அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
  = கீழே, உன் கால் அழகு, சும்மாச் செவ செவ-ன்னு மின்னுது!
  = அந்தக் காலே, தாமரைப் பூவாப் பூத்து விட்டதோ?
  —————

  படிச்சோதி ஆடையொடும், பல்கலனாய், கடிச்சோதி கலந்ததுவோ?
  = உன் உடம்பில் ஒவ்வொரு part-உம் சும்மாச் சுண்டி இழுக்குது:)
  = அந்தந்த part-ey ஆங்காங்கு அணி/ஆபரணம் ஆகி விட்டதோ?

  திருமாலே, கட்டுரையே!
  = கள்ளழகா, உன் பொன் மேனியை எப்படி உரைத்துப் பார்ப்பது? pon mEni…uruguthe :)))
  பொன்-ன்னா உரைத்துப் பார்க்கணும்-ல்ல? அந்த உரை, இந்தக் கட்டு+உரையே
  ———–

  உன் பொன் மேனியை உரைச்சிப் பார்க்கணும்-ன்னா. எதை வச்சி உரைப்பது? = உன்னை உன்னிலேயே உரைச்சிப் பாத்தால் தான் ஆச்சு!
  உன் கட்டான மேனி தான் உரைகல்! = கட்டு+உரையே, கட்டு+உரையே

 7. “கட்டுரைக்கில்” தாமரைநின் கண்பாதம் கை ஒவ்வா,
  “கட்டுரைத்த” நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது!
  ஒட்டுரைத்த இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
  பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ…..

  மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது,
  மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதி என்றாய்,
  மாசூணா வான்கோலத்து அமரர்க்கோன் வழிபட்டால்,
  மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதோ?

  இப்படிப் போகும் பாட்டு:)))
  ———————-

  பா+சுரம் = poem+tune
  இயல் தமிழ்+இசைத் தமிழ் = ஒருசேர இருப்பதால், பாசுரம் என்றே ஆழ்வார் பாடல்களுக்குப் பெயர்!

  மற்ற பாடல்கள் போல், வெளியில் இருந்து Tune போட வேணாம்! பாட்டிலேயே மெட்டு (பண்) அமைந்து விடும் சிறப்பு கொண்டதால் பா+சுரம்!

 8. Pingback: விழித்திடு பெண்ணே « தினம் ஒரு ’பா’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s