பொறுமை பெரிது!

அடக்கம் உடையாரை அறிவிலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா .. மடைத்தலையில்

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.

நூல்: வாக்குண்டாம் (#16)

பாடியவர்: ஔவையார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தண்ணீருக்கு நடுவே ஒரு கொக்கு வாட்டத்துடன் நின்றுகொண்டு இருக்கிறது. அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தக் கொக்கு அவற்றைக் கவ்வித் தின்பதில்லை.

ஏன்? அந்தக் கொக்குக்கு மீன் பிடிக்கத் தெரியாதா?

ம்ஹூம், இல்லை. தன் பசியைத் தீர்க்கக்கூடிய பெரிய மீன் வரும்வரை அந்தக் கொக்கு பொறுமையாகக் காத்திருக்கும். அவசரப்படாது.

அதுபோல, ஒருவர் பணிவாகப் பேசுகிறார், பழகுகிறார் என்பதற்காகமட்டும் அவரைத் திறமை இல்லாதவர், சுலபமாக ஊதித் தள்ளிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.

துக்கடா

 • இன்றைய அரிய சொல், மடை = ஓடை / தண்ணீர் மதகு
 • உதாரணங்கள்:
 • 1. மடை திறந்து தாவும் நதி அலை நான் : திரைப்படப்பாடல்
 • 2. புதுப்புனல் போல் மடை உடைப்ப… : தேவாரம்
133/365
Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், ஔவையார், வாக்குண்டாம். Bookmark the permalink.

5 Responses to பொறுமை பெரிது!

 1. nvaanathi says:

  ஐயையோ.. ”மடை” இப்போ அரிய சொல் லிஸ்ட்ல வந்துடுச்சா??? 😉

  • சுந்தரவடிவேலு says:

   எனக்கும் அதுதான் ஆச்சரியமா இருக்கு..? தமிழ் இனி வேகமாய் சாகுமோ..!

   • GiRa says:

    மடை அரிய சொல்தான். சொக்கன் சொன்னது போல சென்னையில் மடை என்றால் என்னவென்று பத்து பேரிடம் கேட்டால் ஒருத்தர் விளக்கம் சொன்னாலே பெரிது. அதுதான் உண்மை. ஆனால் சென்னை தவிர்த்த ஊர்களில் நிலமை உறுதியாக அப்படியில்லை. பத்துக்கு ஏழெட்டு பேர் சரியாகச் சொல்வார்கள் என்றே நான் நம்புகிறேன்.

 2. amas32 says:

  “ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
  வாடி இருக்குமாம் கொக்கு”. பொறுத்தார் பூமி ஆள்வார் மாதிரி this is an often repeated quote. ஔவையார் மாதிரி எளிமையா நல்ல கருத்துக்களை கூற யாரால் முடியும்?
  amas32

 3. GiRa says:

  மிகமிக நல்ல பாடல். எளிய வரிகளில் அரிய கருத்து.

  அதென்ன வாடி நிற்குமாம் கொக்கு? தண்ணியிருந்தாலே பயிரெல்லாம் பச்சையாச் செழுமையா இருக்குறப்போ தண்ணிக்குள்ள இருக்குற கொக்கு ஏன் வாடனும்? ஒரு வேளை தண்ணிக்குள்ளயே நிக்குறதால குளிர்காய்ச்சல் வந்துச்சுன்னு சொன்னா சரியா இருக்கும். ஏன் வாடனும்?

  ஏன்னா… கொக்கு தண்ணிக்குள்ள இருந்தாலும் மேல வெயில் காயுது. அப்படி வெயில்ல காஞ்சாலும் நல்ல வாய்ப்புக்குக் காத்திருந்து வெற்றி பெருவதுதான் அறிவுடையார் செயல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s