அமிழ்தினும் இனிது

அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்

சிறு கை அளாவிய கூழ்.

*

மக்கள் மெய்தீண்டல் உட(லு)க்கு இன்பம்; மற்று அவர்

சொல் கேட்டல் இன்பம் செவிக்கு.

*

’குழல் இனிது, யாழ் இனிது’ என்ப, தம் மக்கள்

மழலைச் சொல் கேளா தவர்.

நூல்: திருக்குறள் (அறத்துப்பால், ’மக்கள் பேறு’ அதிகாரம்)

பாடியவர்: திருவள்ளுவர்

குழந்தைகள் தங்களுடைய பிஞ்சுக் கைகளால் தொட்டுத் துழாவிய கூழ், அமுதத்தைவிட இனிமையானது.

*

குழந்தைகள் நம்மைத் தொட்டுச் செல்லும்போது உடலுக்கு மகிழ்ச்சி, அவர்களுடைய மழலை மொழிகளைக் கேட்கும்போது காதுக்கு மகிழ்ச்சி.

*

புல்லாங்குழல் இசையையும், யாழ் இசையையும் ‘இனிமையானது’ என்று சொல்பவர்கள், தங்களுடைய குழந்தைகளின் மழலைச் சொல்லை ஒருமுறை கேட்டுப் பார்க்கட்டும்.

துக்கடா

  • அனைவருக்கும் இனிய ‘குழந்தைகள் தின’ வாழ்த்துகள்!
  • இன்றைய தினத்துக்குப் பொருத்தமான இன்னொரு சங்கப் பாடல் : https://365paa.wordpress.com/2011/09/06/063/
131/365
Advertisements
This entry was posted in திருக்குறள், வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

One Response to அமிழ்தினும் இனிது

  1. amas32 says:

    So appropriate for today! நீங்கள் தேர்ந்தெடுத்த மூன்று குரள்களுமே மழலை இன்பத்தின் முக்கிய செயல்களை எடுத்து காட்டுகின்றன. பிஞ்சு விரல்களால் ஒரு குழந்தையின் தொடுதலுக்கு ஈடு இணை இல்லை! I just love children!
    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s