சிராப்பள்ளிக் குன்றுடையான்

நன்று உடையானை, தீயது இல்லானை, நரை வெள் ஏறு

ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,

சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்

குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே!

நூல்: தேவாரம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நல்லவைகளைமட்டுமே தன்னுடைய குணங்களாக உடையவன்,

கெட்ட குணங்கள் எவையும் இல்லாதவன்,

மிகவும் வெண்மையான காளை ஒன்றைத் தன்னுடைய வாகனமாகக் கொண்டவன்,

உமை / பார்வதியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டவன்,

யாராலும் சென்று அடையமுடியாத சிறப்பைக் கொண்டவன்,

திருச்சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியிருப்பவன்,

அவன் புகழைப் பாடப் பாட, என் உள்ளம் குளிரும்!

துக்கடா

 • இந்தப் பாடலில் ஒரு விசேஷம், வரிக்கு வரி ‘யானை’, ‘ஆனை’ என்று மொத்தம் ஆறு யானைகள் வரும். ஆனால் இது விநாயகரைப் பற்றிய பாடல் அல்ல, சிராப்பள்ளி (’திரு’ என்கிற அடைமொழி சேர்த்தால் திருச்சிராப்பள்ளி) மலைக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் (தாயுமானவர்) பற்றியது
 • பேச்சாளர், எழுத்தாளர் சுகி சிவம் இந்தப் பாடலைப் பற்றி எழுதும்போது ‘திருச்சி மலைக்கோயிலைத் தொலைவில் இருந்து பார்த்தால் யானை வடிவம்போல் தெரியும். அதைக் குறிப்பிடும் வகையில் இந்தப் பாடலிலும் ஆறு யானைகள் வருகின்றன’ என்பார்
 • இன்றைய அரிய சொல் : ஏறு = காளை
 • உதாரணங்கள்:
 • 1. ஏறு தழுவுதல் : ’ஜல்லிக்கட்டு’ என நாம் இப்போது குறிப்பிடுகிற வீர (?) விளையாட்டின் பழந்தமிழ்ப் பெயர்
 • 2. கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும்… : கம்ப ராமாயணம்
130/365
Advertisements
This entry was posted in சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி, வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

5 Responses to சிராப்பள்ளிக் குன்றுடையான்

 1. ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று என்ற பாடலில் ஏறு மயிலேறி என்றால் தன் வாகனமாகக் கொண்டு ஏறும் மயிலின் மீது ஏறி விளையாடும் என்பதைத்தான் பொதுவான பொருளாகக் கொண்டிருக்கிறோம்.

  ஆனால் கட்டிளங்காளையாக முருகன் மயிலின் மீதேறி விளையாடும் பருவம் எனக் கொள்ளலாமோ?

  • GiRa says:

   ஒரு நல்ல கேள்வியத்தான் கேட்டிருக்கீங்க. கட்டிளங்காளையாக பறக்கும் மயில் மீதா முருகன் ஏறி விளையாடுவான்? 🙂 அது குழந்தைகள் செயல்.

   ஆனா காளை அப்படியில்ல. அத அடக்கனும். அப்பத்தான் சொல் பேச்சு கேக்கும். ஆகையால காளையை அடக்குவதுதான் காளைப் பருவம்னு நெனைக்கிறேன். 🙂

 2. இந்தப் பாடலில் ஒரு விசேஷம், வரிக்கு வரி ‘யானை’
  விசேஷம் என்ற சொல்லிற்குத் தமிழ்ச்சொல்லே கிடையாதா?

  • GiRa says:

   இந்த இடத்தில் விசேஷத்திற்குப் பொருத்தமான சொல் சிறப்பு. ஆங்கிலத்தில் எல்லாரும் uncleதான். தமிழில் அது பெரியப்பா, சித்தப்பா, பெரிய மாமா, சின்ன மாமான்னு போகும். அது மாதிரி சிறப்பு இந்த இடங்களுக்குப் பொருந்தி வரும்.

 3. மணி says:

  “சென்று அடையாத திரு உடையானை” என்பதற்கு “யாராலும் சென்று அடையமுடியாத சிறப்பைக் கொண்டவன்” என்றில்லாமல், “who has wealth unlike the wealth that people get as a result of their virtuous acts done in previous births” என்று பொருள் கொள்வது (from http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/VMS1_098.HTM#p1) பொருத்தமாயிருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s