இருப்பள்

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை .. தூய

உருப் பளிங்குபோல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள், இங்கு வாராது இடர்.

*

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரைபோல் கையும் .. துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி.

நூல்: சரசுவதி அந்தாதி

பாடியவர்: கம்பர்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

ஆராய்ந்து அறியவேண்டிய அறுபத்து நான்கு கலைகளையும் தெளிவாக உணரச் செய்கிறவள், தூய்மையான பளிங்குபோன்ற உருவத்தைக் கொண்ட என் தாய் கலைமகள், அவள் என்னுடைய உள்ளத்தின் உள்ளே இருப்பதால், எனக்கு எப்போதும் துன்பம் இல்லை.

*

படிகம் போன்ற நிறம், பவளம் போல் சிவந்த வாய், மணக்கும் தாமரை மலரைப் போன்ற கையும், உடுக்கை போன்ற சிறு இடையும் கொண்ட அந்தக் கலைமகளைக் காலை, மாலை என எந்நேரமும் வணங்கினால், சாதாரணக் கல்கூடக் கவி பாடாதோ!

துக்கடா

 • இந்த இரு பாடல்களையும் ’டூயட்’ என்ற படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பி. சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை எழுதியது கம்பர் என்று எனக்கு நேற்றுவரை தெரியாது. மிச்சப் பாடலை எழுதிய வைரமுத்துதான் இந்தத் தொகையறாவையும் எழுதினார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!
 • கலைமகளைப் போற்றும் அந்த ‘டூயட்’ பாட்டு : http://www.raaga.com/play/?id=292
 • இன்றைய அரிய சொல் : துடி = உடுக்கை (துடி இடை என்பது, hourglass figure என்கிறார்களே, அதற்கான பழந்தமிழ் உவமை!)
 • உதாரணங்கள்:
 • 1. துடி இடை நுடங்க … : திருப்புகழ்
 • 2. துடி கைக் கொண்டார்… : தேவாரம்
128/365
Advertisements
This entry was posted in கம்பர், சினிமா, பக்தி, வர்ணனை. Bookmark the permalink.

3 Responses to இருப்பள்

 1. GiRa says:

  கம்பர் ராமகாதை மட்டுமல்லாது ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி,… இன்னுமிருக்கு. பேர்கள் நினைவில்லை.

  இந்தப்பாடல் சரசுவதி அந்தாதியில் கடவுள் வாழ்த்து.

  ரகுமான் இசையில் பி.சுசீலா பாடியது போல அம்பிகாபதியில் ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ் பாடியிருக்கிறார்.

 2. mbell1983 says:

  Hour Glass figure -ஐ இன்று தான் தெரிந்து கொண்டேன்! – மேலதிக விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Female_body_shape 🙂

 3. GiRa says:

  கண்டுபிடித்து விட்டேன். இதோ இருக்கிறது டி.எம்.எஸ் பாடிய பாடல். அம்பிகாபதி படத்திற்காக ஜி.ராமநாதன் இசையமைப்பில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s