உள்ளம் படர்ந்த நெறி

சுனைவாய்ச் சிறுநீரை எய்தா(து) என்று எண்ணிய

பிணைமான் இனி(து) உண்ண வேண்டிக் கலைமான் தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி.

நூல்: ஐந்திணை ஐம்பது (#38)

பாடியவர்: மாறன் பொறையனார்

(முன்குறிப்பு: இன்று வெறும் கதைதான். நடுவே ஆங்காங்கே உரையைப் பிடித்துக்கொள்ளுங்கள் 🙂 )

காட்டில் ஓர் ஆண் மான், ஒரு பெண் மான். இரண்டுக்கும் ரொம்ப தாகம்.

வழியில் ஒரு சுனை. ஆனால் அங்கே கொஞ்சம்தான் தண்ணீர் இருந்தது. இருவர் குடிப்பதற்குப் போதாது.

ஆகவே, ஆண் மான் சொன்னது, ‘நீ குடித்துத் தாகம் தீர்த்துக்கொள்.’

பெண் மான் சொன்னது. ‘வேண்டாம், என்னைவிட நீதான் அதிகத் தாகத்துடன் இருக்கிறாய். நீ இந்தத் தண்ணீரைக் குடி.’

இப்படி மாறி மாறிப் பேசியபின் மான்கள் இரண்டும் ஒரு முடிவுக்கு வந்தன. ‘சரி, இருவரும் ஒன்றாகக் குடிப்போம்.’

இரண்டு மான்களும் ஒரே நேரத்தில் சுனையில் வாய் வைத்தன. ஆனால் அந்த ஆண் மான் தண்ணீரைக் குடிக்கவில்லை. பெண் மானின் தாகம் தீரட்டும் என்று சும்மா பாவனைமட்டும் செய்தது.

அதுதான், காதல் மனம்!

துக்கடா

 • இந்தக் கதையை ஏதோ சினிமாவில் வசனமாகக் கேட்ட ஞாபகம். உங்களுக்கு நினைவிருந்தால், வீடியோ கைவசம் இருந்தால் அனுப்புங்கள்
 • இன்றைய அரிய சொல் : சுரம் = காட்டு வழி / காட்டுப் பாதை / கானக நிலம்
 • உதாரணங்கள்:
 • 1. செவ்வி உடைய சுர நெஞ்சே… : கார் நாற்பது
 • 2. வெம்முனை அருஞ்சுரம் நீந்தி… : அகநானூறு
127/365
Advertisements
This entry was posted in அகம், கதை கேளு கதை கேளு, காதல், நாடகம். Bookmark the permalink.

9 Responses to உள்ளம் படர்ந்த நெறி

 1. 🙂
  முருகா…இந்த மானாய் இருக்கணும்!

  • கள்ளத்தின் “ஊச்சும்” – ஊச்சும்-ன்னா என்ன?

   ஒரு வேளை, எழுத்துப் பிழையா? படி எடுக்கும் போது தப்பா எடுத்துட்டாங்களா?:)
   “உச்”சும்-ன்னு இருக்கணுமோ? காதல் உச், உச், உச் :))

  • பெண்களே பெரிதும் விட்டுக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்!
   ஆனா…சங்கத் தமிழில் பாருங்க…ஆண் மான் தான் விட்டுக் குடுக்குது! அதுவும் கள்ளத்தனமா!:) முருகா…நீ ஏன் இப்படி இருக்கக் கூடாது?:)
   ————

   உள்ளம் “படர்ந்த” நெறி!
   படர்ந்த என்ற சொல் மிக்க ஆழமானது! உள்ளத்தில் படரணும்? அப்படின்னா என்ன-ன்னு யாராச்சும் சொல்லுங்களேன்?
   கொடி தான் படரும்! நெறி எப்படி படரும்…உள்ளத்துல?

 2. GiRa says:

  காதல் வந்தாலே கள்ளத்தனம் வந்திருது. ஒன்னும் பண்ண முடியாது.

  பிணை கலைன்னு எடுத்துக் குடுத்து கள்ளத்தனம் மிகுந்தது ஆணா பெண்ணான்னும் சொல்லீட்டாரு புலவர் 🙂

  • உள்ளம் “படர்ந்த” நெறி = இதுவே!
   ————

   சொக்கன் அண்ணாவுக்கும், தெய்வத் தீந் தமிழை, தினமும் பருகும் 365பா அன்பர்கள் அனைவருக்கும்….என் நெஞ்சு நிறை வணக்கங்கள்!

 3. amas32 says:

  இங்கே கள்ளத்தனத்தை விட அன்பின் மிகுதி தான் தெரிகிறது. எடுத்துக்கொள்ளாததும் ஈகை தான்!
  amas32

 4. இந்தக் காட்சி நிறைய படங்கள்ல உண்டாச்சே! ஊட்யூப்ல தேடலாம்

 5. psankar says:

  விக்கிரமனோட படம்ன்னு நினைக்கிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s