நெல் வகைகள்

சித்திரக் காலி, வாலான், சிறை மீட்டான், மணல் வாரி

…..செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச் சம்பா,

முத்து விளங்கி, மலை முண்டன், பொற் பாளை, நெடு

…..மூக்கன், அரிக்கிராவி, மூங்கில் சம்பா,

கத்தூரி வாணன், காடைக் கழுத்தன், இரங்கல் மீட்டான்

…..கல்லுண்டை, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை,

புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பாவும் இரு

…..பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆண்டே!

நூல்: முக்கூடற்பள்ளு (#108)

எழுதியவர்: தெரியவில்லை

சூழல்: வயலில் வேலை செய்த பள்ளன் தன்னுடைய முதலாளியாகிய பண்ணையாரிடம் Status Update கொடுக்கிறான்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பண்ணைக்காரரே,

உங்களுடைய வயல்களில் இரண்டு போகங்களுக்காக இந்த நெல் வகைகளை விதைத்துமுடித்துவிட்டேன்:

 • சித்திரக்காலி
 • வாலான்
 • சிறைமீட்டான்
 • மணல்வாரி
 • செஞ்சம்பா
 • கருஞ்சூரை
 • சீரகச்சம்பா
 • முத்துவிளங்கி
 • மலைமுண்டன்
 • பொற்பாளை
 • நெடுமூக்கன்
 • அரிக்கிராவி
 • மூங்கில் சம்பா
 • கத்தூரிவாணன்
 • காடைக் கழுத்தன்
 • இரங்கல் மீட்டான்
 • கல்லுண்டை
 • பூம்பாளை
 • பாற்கடுக்கன்
 • வெள்ளை
 • புத்தன்
 • கருங்குறுவை
 • புனுகுச் சம்பா
துக்கடா
 • 23 நெல் வகைகள்! இப்போது இதில் எத்தனை பயிரிடப்படுகிறது? சீரகச் சம்பாதவிர வேறெதையும் நான் கேள்விப்பட்டதில்லை, ஒருவேளை மாற்றுப் பெயர்களில் இருக்குமோ?
 • இந்த நெல் வகைகளுக்கெல்லாம் எப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று யோசித்தால் மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது. உதாரணமாக, ‘காடைக் கழுத்தன்’, ‘நெடுமூக்கன்’… செல்லப் பிராணிகளுக்குப் பெயர் வைப்பதுபோல் செல்லப் பயிர்களோ? ‘புத்தன்’ என்ற பெயர் எப்படி / ஏன் வந்திருக்கும்? ‘வெள்ளை’?
 • விவசாயம் தொடர்பான பல பழந்தமிழ்ப் பெயர்களை இங்கே தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, ‘வம்பு’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? 😉  : http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314662.htm
 • இன்றைய அரிய சொல் : பூ = போகம் / விளைச்சல்
126/365
Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், பட்டியல், பள்ளு. Bookmark the permalink.

7 Responses to நெல் வகைகள்

 1. மணல்வாரி, செஞ்ச்சம்பா புனுகுச் சம்பா கேள்விபட்டிருக்கேன்.. மத்ததெல்லாம் புதுசுதான்..!

 2. amas32 says:

  விவசாயத்திற்கு முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகின்ற இந்நாளில் நல்ல ஒரு பாடலை தேர்ந்து எடுத்து இருக்கீறீர்கள். நஞ்சை நிலங்கள் எல்லாம் தற்போது வீட்டு மனைகளாகின்றன. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது என்னமோ உண்மை தான். நீங்கள் கேட்டது போல, இன்றைய கால கட்டத்தில் எத்தனை வகை நெல் வகைகள் உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆசை.
  amas32

 3. சில நிர்ப்பந்தங்கள் தடுத்தாலும்….இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்….காரணம் = முக்கூடற் பள்ளு!

  உள்ளத்தில் ஊசலிடும் உல்லாசப் பார்வைவிழிக்
  கள்ளத்தினால் இரும்பும் கல்லுங் கரையாதோ?
  வெள்ளத்திலே துயில் மெய்யழகர் முக்கூடற்
  பள்ளத்தியார் அழகு பார்க்க முடியாதே!!

  நேயர் விருப்பம்:
  எப்பவாச்சும்….ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி….பாட்டை இடறீங்களா?
  கிராமிய மணம் கமழும் எளியோர் இலக்கியம் இது! ரொம்பப் பிடிக்கும்!
  —————

  //சீரகச் சம்பா தவிர வேறெதையும் நான் கேள்விப் பட்டதில்லை//

  என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? வயலும் வாழ்வும், றேடியோ கேட்டதில்லையா? மாணாவாரிச் சாகுபடி-ன்னு வருமே….
  * மாணாவாரி = மணல்வாரி

  * செஞ்சம்பா = புட்டரிசி
  செந்நெல் = ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள….ன்னு திருப்பாவை…ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!

  * மூங்கில் சம்பா = மூங்கில் அரிசி
  * கருங்குறுவை = கார் அரிசி
  ——————

  சம்பா, காரரிசி நெல்லைக் கலந்து, மணலில் வறுத்து….நெற்பொரி செஞ்சித் தருவாங்க ஆயா! (பாட்டி)…ரொம்ப நல்லா இருக்கும்!
  முருகா….இதெல்லாம் ஒனக்குச் செஞ்சித் தரணும்-ன்னு ரொம்ப ஆசை:)

  • Sethu says:

   நெல் வகைக்கான பெயர் காரணங்கள் ஆச்சர்யம். அவரவர் விட்டு வயல்களுக்குப் பெயர் இருந்திருக்கிறது தெரியுமா? எங்களுக்கு வாமனன் என்றொரு வயலும் மணியன் கொல்லை என்னும் தோட்டமும் இருந்தது.

  • Sethu says:

   சம்பா வகை நெல் இன்றும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கேன். பல வகை நெற் பயிர்களை திருவாளர் சுவாமிநாதன் (தென்கச்சி அல்ல..எம்.எஸ் சுவாமிநாதன்) பல உலக நாடுகளுக்கு வித்துவிட்டதாக பசுமை புரட்சியாளர்கள் சொல்ல கேட்டிருக்கேன்

 4. mbell1983 says:

  பள்ளு இலக்கியம் என்பதால் பள்ளன் பண்ணையாரிடம் தெரிவிப்பதாக எழுதியிருக்கீறீர்களா??

 5. padma says:

  நெல்லும் அரிசியும் கண்டது மட்டும் தான் உண்மை.
  இந்த சொல் களஞ்சியத்தி தான் எத்தனை வகை நெல்லும் … அதன் பி விளக்கமும் அருமை நண்பரே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s