அருள்வாய் குகனே

உருவாய், அருவாய், உளதாய், இலதாய்,

மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்,

கருவாய், உயிராய், கதியாய், விதியாய்,

குருவாய், வருவாய், அருள்வாய் குகனே!

நூல்: கந்தர் அனுபூதி (#51)

பாடியவர்: அருணகிரிநாதர்

இந்த எளிய பாடலுக்கு உரை அவசியமில்லை. எனினும் ஒரு சாத்திரத்துக்காக இது:

முருகா,

உருவமாகவும், உருவம் இல்லாத அருவமாகவும், இருப்பவனாகவும், இல்லாதவனாகவும், மொட்டாகவும், மலராகவும், மணியாகவும், ஒளியாகவும், கருவாகவும், அது வளர்ந்து உருவாகின்ற உயிராகவும், எங்களுக்குக் கதியாகவும் விதியாகவும் இருக்கிறவனே, எங்களுடைய குருவாகவும் வந்து அருள் செய்.

துக்கடா

 • நேற்று திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம். அதை நினைவுபடுத்திய நண்பர் கேஆரெஸ் அதற்காக இந்தப் பாடலையும் தேர்வு செய்து கொடுத்தார். வாரியார் அவர்கள் தனது பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நிறைவாகப் பாடுகின்ற முத்தாய்ப்புப் பாடல் இது
 • இந்தப் பாடலுக்கு நேரடி விளக்கம் எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் ஆழமான தத்துவ விளக்கம் வேண்டுவோர் எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தப் பதிவை வாசிக்கலாம் : http://www.jeyamohan.in/?p=4003
 • கந்தர் அனுபூதி முழுமையாக உரையுடன் வாசிக்க இங்கே செல்லலாம், நம் #365paa பதிவுகளில் அழகிய, ஆழமான, ஆத்மார்த்தமான பின்னூட்டங்களை ஏராளமாகச் சேர்த்து அழகுபடுத்தியிருக்கும் நண்பர் இராகவன் கோபால்சாமி எழுதிய உரை இது : http://goo.gl/7u49J
 • இன்றைய பாடலை ஆடியோ வடிவமாகக் கேட்க:
 • 1. சூலமங்கலம் சகோதரிகள் குரலில் (5:40முதல்) : http://www.youtube.com/watch?v=Y7r4feMtdoM
 • 2. பித்துக்குளி முருகதாஸ் குழுவினர் குரலில் : http://www.muzigle.com/track/uruvai-aruvai
 • 3. டெல்லியைச் சேர்ந்த இஷ்விந்தர்ஜித் சிங் என்பவர் குரலில், இவருக்குத் தமிழ் தெரியாது, ஆனால் கந்தர் அனுபூதி முழுமையையும் மனப்பாடம் செய்து பாடியுள்ளார் (2:20முதல்) : http://www.youtube.com/watch?v=8u5TH8uryeA
 • 4. வாரியார் குரலிலும் இந்தப் பாடலைச் சேர்த்தால்தான் இந்தப் பதிவு முழுமை பெறும். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் nchokkan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள், உங்கள் பெயருடன் இங்கே சேர்த்துவிடுகிறேன் அதனை அனுப்பிவைத்த நண்பர்கள் @kryes , துரை, குணா மூவருக்கும் நன்றி : http://madhavipanthal2.podbean.com/2011/11/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/
 • இன்றைய அரிய சொல் : அனுபூதி = உணர்தல் (இது தமிழ் வார்த்தையா, வடமொழியிலிருந்து வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை)
125/365
Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், கந்தர் அனுபூதி, நண்பர் விருப்பம், பக்தி, முருகன். Bookmark the permalink.

15 Responses to அருள்வாய் குகனே

 1. amas32 says:

  ஞான குருவான சுப்பிரமணிய சுவாமிக்குச் சரணம். எவ்வளவு எளிமையாக நமக்கு இறைவனை துதிக்க, நினைக்க, அறியவைக்க இந்தப் பாடல் ஏதுவாக உள்ளது! All the links that you have provided are very useful and nice. Thanks.
  amas32

 2. திருமுருக மூச்சாய் வாழ்ந்த…
  திருமுருக வாரியார் நினைவுக்கு
  என் வந்தனம்! எங்கள் வந்தனம்!!

 3. முருகவா,,,,.
  நீ யாருடா?

  உருவாய் அருவாய்
  = ஒரே பொருள் எப்படி உருவமாயும் அருவமாயும் இருக்க முடியும்?
  * நீர் = கையால் எந்திக் குடிக்கும் போது = உருவம் (visible)!
  * நீர் = ஆவியாய் மேல் எழும் போது = அருவம்! (invisible)
  * நீர் = மறுபடியும் மழையாய்ப் பொழியுங்கால் = உருவம்!
  இது தான்டா, உன் சுழற்சி!
  ———————–

  உளதாய் இலதாய்
  = செல்லம், உன்னைச் சில பேரு “இல்லை”-ன்னு ஒதுக்கி வச்சிறலாம்! சில பேரு “உண்டு”-ன்னு ஏத்துக்கலாம்!
  ஒதுக்கி வச்சாத் தான் நீ ஒதுங்கிடுவாயா? ஒதுங்க முடியுமா உன்னால?

  உண்டென்றால் அது உண்டு!
  இல்லை என்றால் அது இல்லை!

  சிறுவர்கள் ஒளிஞ்சி விளையாடும் விளையாட்டில், ஒளிஞ்சிக்கிட்டு, “இருக்கியா”?-ன்னு கேட்டா, “இல்லை”-ன்னு பதில் சொல்வேனே!
  அதே போலத் தானே நீயும்?
  இல்லை என்பவர்க்கு, “இல்லை” என்றே நின்று, அவர்கள் உள்ளக் கிடக்கையையும் நிறைவேற்றுகிறாய்!

 4. முருகவா, நீ யாருடா?

  மருவாய், மலராய்
  = மலராய் இருக்க! அதனுள் மணமாவும் இருக்க!
  = உடம்பும் நீ தான்! அதுனுள் என் போகமும் நீ தான்!
  —————–

  மணியாய், ஒளியாய்,
  = மாணிக்க மணியாவும் இருக்க, அதில் வீசும் ஒளியாவும் இருக்க!
  = பொருளும் நீ தான்! அதனால் வரும் பயனும் நீ தான்!
  —————-

  கருவாய், உயிராய்
  = அருகம் புல் நுனியில் சின்ன பனித் துளி! அதை விடச் சிறியது விந்து/கரு!
  = அது எப்படி அவ்ளோ சின்ன கரு, இன்னிக்கி நான் இவ்ளோ பெருசா இருக்கேன்?
  = விந்தில் இருந்து வந்ததும் விந்தைத் தருகிறதே!
  —————

 5. குருவாய், வருவாய், அருள்வாய் குகனே!
  = ஒரு நல்ல குரு…சடங்கு, பணம், டாம்பீகம், ஆள் அரவம்-ன்னு அளப்பற விட மாட்டான்
  = இன்னிக்கி, தன்னைத் தானே “குரு”-ன்னு சொல்லுற எவனையும் நம்ப முடியுமா-ன்னு தெரியலை!

  = இவிங்க எல்லாம் எதுக்கு?
  நீ தான் ஒருத்தன் இருக்கியேடா! போதாதா? நீ தான் குரு!
  —————-

  குரு-ன்னா, மந்திரம் சொல்லி, மாலை உருட்டறவரா?
  இல்லை!
  அம்மா கிட்ட அன்பு, அப்பா கிட்ட வளர்ச்சி, மனைவி கிட்ட இன்பம்…ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு குடுப்பாங்க…
  ஆனா, அவிங்களால அந்த உணர்ச்சியின் வேரை ஆழ்ந்து பார்க்கத் தெரியாது! இயல்பு = அதை அப்படியே குடுக்குறாங்க! நாம திருப்பி அந்த உணர்ச்சியை வெளிக்காட்டலீன்னா, அவிங்களுக்கு ஏமாற்றம்!

  ஆனா நீ….= வாழ்க்கைத் துணை நலம்!
  Life long…Lives long…
  அம்மா, அப்பா, மனைவி-ன்னு எல்லா உணர்ச்சியும் ஒரு சேரக் குடுப்ப…நான் உன்னிடம் உணர்ச்சிகளைத் திருப்பி வெளிக்காட்டலீன்னாலும்….எனக்கே எனக்கா இருப்ப! அதன் வேர் என்ன என்பதை என்னையும் உணரச் செய்வ!
  = இது தான்டா குரு! உணரச் செய்யற பாரு….

  முருகவா…நீயே எனக்கு எந்நாளும்….குருவாய், வருவாய் அருள்வாய்…..என் இதயக் குகனே!

 6. கந்தர் அநுபூதி….
  51 பாட்டுக்கும் எளிய உரையை, முன்பு தோழன் இராகவன், இனியது கேட்கின்-இல் எழுதினான்! அதன் சுட்டி http://goo.gl/7u49J
  —————-

  கதியாய், விதியாய்

  இதை மட்டும் மேலே நான் avoid பண்ணிட்டேன்! என்னால சொல்ல முடியுமா-ன்னும் தெரியல!
  ஆனா ஒன்னு நிச்சயம்!
  விதி கதி ஆகாது! கதி விதி ஆகாது!

  எல்லாம் என் விதி-ன்னு நொந்துக்கறோம்! விதி கிட்ட போய், கேடு கெட்ட விதியே, எவ்ளோ துன்பம் வந்தாலும், நீ தான் என் கதி-ன்னு சொல்லுவோமா?
  விதியால் துன்ப/இன்பம் வந்தாலும், நாம கதி-ன்னு போய் நிக்குற இடம் வேற தான்!

  அப்பா, ஒழுக்க விதிகளை “விதி”ச்சாரு-ன்னா, அம்மா மடி தான் “கதி”!
  ஆபிசில் “விதி”கள் ரொம்ப வாட்டுச்சின்னா, மனைவி மடி தான் “கதி”!
  “கதி”யான மனைவியே அன்பில்லாம விரட்டினா, அப்போ அய்யோ நம்ம “விதி”!

  So, விதி கதி ஆவதில்லை! கதி விதி ஆவதில்லை!
  ——————-

  ஆனா என் முருகவா…..
  * நான் எந்தச் சென்மத்தில் என்ன பாவம் செஞ்சேனோ, யார் குடியைக் கெடுத்தேனோ….அதுக்கு உலக நீதி வழுவாத விதியும் நீ தான்!

  * இப்படி விதியால் வாடினாலும்…என்னை மறுதலிக்காது, உன் கையால் என்னை ஏற்றுக் கொள்ளும்…கதியும் நீ தான்…

  விதி கதி ஆவதில்லை! கதி விதி ஆவதில்லை!
  ஆனா முருகவா….
  எனக்கு விதி விதிச்ச நீயே….என் கதி!

  எந்தை மாயோன் வீட்டில் இருந்து வந்த என்னை….உன்னையே கதி என்று கைப்பிடித்தேன்….ஏற்றுக் கொள்! முருகா! முருகா!

 7. வாரியார் நினைவு நாள் – திருவுயிர் வானில் (விமானத்தில்) பிரிந்தது….
  என்னையும் அப்படியே……முருகா விரைவாய்!

  • விஜய்வீரப்பன் சுவாமிநாதன் says:

   திருத்தனி அல்லது திருச்செந்தூர் கோவில் அருகில் விமானம் பறக்கும் பொழுது உயிர் பிரிந்ததாக படித்தது.

  • amas32 says:

   நீவீர் வாழ்க பல்லாண்டு, வளர்க உம் தொண்டு. நான் உங்களை விட வயதில் பெரியவள். ஆனால் உங்கள் ஞானத்தைக் கண்டு நான் வியக்கிறேன். வாரியார் ஆசியோடு நீடுழி வாழ்க!
   amas32

 8. விஜய்வீரப்பன் சுவாமிநாதன் says:

  எனது பிறந்த நாளும், வாரியார் சுவாமிகள் அவர்களின் பிறந்த நாளும் ஒரே நாளே.. ஆகஸ்ட் 25.

  தமிழக எதிர்கட்சித் தலைவரின் பிறந்த நாளும் அதுவே 🙂

 9. psankar says:

  One of my personal favorites. I sang it in school in my 2nd or 3rd standard. Very lovely song.

 10. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
  அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/

  Please follow

  (First 2 mins audio may not be clear… sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s