கொக்கொக்கக் காக்கைக்கு…

காக்கைக்காகா கூகை, கூகைக்காகா காக்கை,

கோக்குக் கூ காக்கைக்குக் கொக்கொக்க, கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பகல் நேரத்தில் காக்கைதான் பலம் வாய்ந்தது. அப்போது ஆந்தையால் காக்கையை வெல்லமுடியாது.

ஆனால் இரவு நேரத்தில் ஆந்தையின் பலம் அதிகரித்துவிடும். அப்போது காக்கையால் ஆந்தையை வெல்லமுடியாது.

ஆக, நேரம் பார்த்து எதிரியுடன் மோதுவது முக்கியம்.

ஓர் அரசனின் கடமை, உலகத்தை (தன்னுடைய மக்களைக்) காப்பாற்றுவதுதான். ஆனால் அதற்காக அவன் அவசரப்படக்கூடாது. மீன் வரும்வரை ஆற்றங்கரையில் காத்திருக்கும் கொக்கைப் போலப் பொறுமையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களை ஜெயிப்பது சிரமம்.

துக்கடா

 • இன்றைய பாடல் முழுவதும் ‘ககர’ வரிசையில் அமைந்தது. ஏற்கெனவே இதேபோல் ‘தகர’ வரிசையில் காளமேகம் எழுதிய பாடலை #365paa வரிசையில் பார்த்திருக்கிறோம் : https://365paa.wordpress.com/2011/07/14/009/
 • இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துத் தந்தவர், நண்பர் கபிலன். அவருக்கு நன்றிகள்
 • இன்றைய பாடலில் அரிய சொல் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது, மொத்தப் பாடலும் அரியதுதான். ஆகவே வார்த்தைகளைத் தனித்தனியே பிரித்துப் பார்த்துவிடலாம்:
 • காக்கைக்கு ஆகா கூகை (ஆந்தை)
 • கூகைக்கு ஆகா காக்கை
 • கோ(அரசன்)க்குக் கூ (உலகம்) காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு)
 • கொக்கு ஒக்க (கொக்கைப் போல)
 • கைக்கைக்கு (பகைவர்களை எதிர்ப்பதற்கு)
 • காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு)
 • கைக்கு ஐக்கு ஆகா (சரியான நேரம் அமையாமல்போனால்)
121/365
Advertisements
This entry was posted in காளமேகம், தனிப்பாடல், நண்பர் விருப்பம், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

5 Responses to கொக்கொக்கக் காக்கைக்கு…

 1. ஜில் says:

  @கிரி.,
  சியர்ஸ்:-))))
  @சொக்கன் நைஸ்:-)

 2. surya says:

  soll varthaigale illai. kavi pulamai (mozhi)

 3. amas32 says:

  இதை வடக்கிலிருந்து நடிக்கவரும் நடிகைகளுக்கு சொல்லிக் கொடுத்துத் தமிழை வளர்க்கலாம்:)
  புலவரின் வார்த்தை விளையாட்டு மிகவும் அருமை! இந்தப் பாடலுக்கு நன்றி.
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s